பழங்களில் உள்ள சத்துக்கள் பற்றி தெரியுமா? குழந்தைகளுக்கு பழம் சாப்பிட பழக்குங்க...

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பழங்களில் உள்ள சத்துக்கள் பற்றி தெரியுமா?  குழந்தைகளுக்கு பழம் சாப்பிட பழக்குங்க...
X

பழங்களில் உள்ள சத்துக்கள் பற்றி தெரியுமா?

குழந்தைகளுக்கு பழம் சாப்பிட பழக்குங்க...

நாம் அன்றாடம் சாப்பிடக்கூடிய பழங்களில் என்னென் சத்துகள் உள்ளது என்பது பலருக்கு தெரிய வாய்ப்பில்லை.ஒவ்வொரு பழத்திற்கும் தனித்தனியே மருத்துவ குணங்கள் உண்டு. அந்த வகையில் பார்த்தால் முன்பெல்லாம் உடல்நலம் பாதிக்கும்போது மட்டுந்தான் அவர்களுக்கு பழ வகைகள் கொடுப்பார்கள்.. ஆனால் தற்போதுள்ள நாகரிக உலகில் அனைவருமே பழ வகைகளை சாப்பிட ஆரம்பித்துள்ளனர். உடலுக்குநோய் வருவதை முன்கூட்டியே தடுக்கும் வகையில் பழங்களை சாப்பிடுகின்றனர். பொதுவாகவே பழவகைகளில் நார்ச்சத்து உள்ளதால் அது பல வகை மருத்துவ குணங்களை உள்ளடக்கி உள்ளதால் உடல் நலத்துக்கு நன்மையினையே அளிக்கிறது.

பாதுகாத்த பழங்கள்?

தாவர கழிவு, விலங்குகளின் கழிவுகளும் தான்இயற்கை உரம். இதை அடிப்படையாக கொண்டு தான், காடுகளில் செடிகள் வளர்கின்றன. மண்ணில் குப்பை கொட்டுவதால் நுண்ணுாட்டல் பற்றாக்குறை ஏற்பட்டு, மரம், செடிகளுக்கு நோய் எதிர்ப்பு மங்கி, பழங்களில் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் ரசாயனம், கலந்து பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்கின்றனர். பழங்களை பல நாட்கள் பாதுகாத்து வைத்து விற்ககூடாது. இதனை தடுக்க நகரங்களில் பசுமை வளாகங்களை அமைத்துள்ளனர். இதன்படி அந்தந்த பகுதியில் உற்பத்தியாகும் பழங்களை அங்கேயே பாதுகாத்து தரமாக விற்கமுடியும்.

பிரிட்ஜ் பழம் சாப்பிடலாமா?

பாட்டில்களில் அடைத்து விற்பனையாகும் பழச்சாறுகளில் உள்ள புரோமினேடேட் ஆயில் தைராய்டு வீக்கம், கிட்னி பாதிப்பு,ஆண்மைக்குறைவை ஏற்படுத்தும். சிட்ரிக் ஆசிட் ஆஸ்துமாவை ஏற்படுத்தும். பிரிட்ஜில் 2 அல்லது 3 நாட்களுக்கு மேல் பழங்களை வைக்க கூடாது.

உரம்போடாமல் விளைவிக்க முடியுமா?

பழவகைகளில் ஹைபிரிட் இனங்கள் அனைத்திற்கும் உரம், மருந்து, தண்ணீர் அவசியம். ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் ஆப்பிள், அனைத்து வகை பழங்களிலும் நம் நாட்டில் பயன்படுத்தும் உரம், மருந்துகளின் அளவை விட கூடுதலாக பயன்படுத்தப்படுகிறது.எந்த உரமும், மருந்தும் பயன்படுத்தாமல் இருந்தாலும் பலா, மா, கொய்யா மரங்கள், பயன்தரும். தண்ணீர் இல்லாமல்கூட, இவை காய்க்கும் தன்மைபெற்றவை. சாதாரண கொய்யாகூடுதல் நாட்கள் கெடாமல் இருக்கும். இது போன்றுதான் அனைத்து வகை பழங்களும்,உரம் , மருந்து இல்லாமல் இயற்கை உரங்களைப்பயன்படுத்தி சாகுபடி செய்யும் முறைக்கு இப்போது முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் விவசாய, தோட்டக்கலைத்துறைகள், இவற்றிற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது இல்லை. காரணம், பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டியது கட்டாயமாகி வருகிறது.

மஞ்சள் வாழைப்பழம்

முன்பெல்லாம் பச்சை வாழைப்பழத்தினை அதிகமாக பார்க்க முடிந்தது. கால மாற்றம் விவசாய முறைகளின் மாற்றத்தினால் பச்சை பழத்தினை பார்க்கவே முடியவில்லை. இப்போதெல்லாம் ரோட்டோர வண்டிகளில் கண்களைக்கவரும் மஞ்சள் வாழைப்பழங்கள் விற்ப னை செய்யப்படுகின்றன. இதன்பெயர் ஜி-௯ (கிராண்ட்-௯).வாழைத்தார்களை வியாபாரிகள் மொத்தமாககொள்முதல் செய்கின்றனர். அதன் பின்னர் இவை தண்ணீர் மற்றும்காற்றினால் சுத்தம் செய்யப்படுகின்றது. சீப் ஆக தரம் பிரிக்கப்படுகிறது. அதன் பின் எத்தனால் காஸ் மூலம் பழுக்க வைப்பதற்காக இதற்கான பிரமாண்ட சேம்பரில் அடுக்கி வைக்கப்படுகிறது. காய்களின் தன்மையை பொறுத்து இந்த எத்தனால் காஸ் கம்ப்யூட்டர்மூலம் தேவைக்கு ஏற்ப செலுத்தப்படுகிறது.

இந்த முறையில் பழுக்க வைக்கும் பழங்கள் முதலில் மஞ்சள் நிறமாக , பின்னர் படிப்படியாக தங்கத்தின் நிறத்திற்கு வருகிறது. மற்ற பழங்களை விட பல நாட்கள் இது அழுகாமல் இருக்கும்.மாம்பழங்களை கார்பைட் கற்கள் மூலம் பழுக்க வைத்தால் குற்றம். ஆனால் எத்தனால் காஸ் மூலம் பழுக்க வைப்பதால் தவறு இல்லை என்கிறது சுகாதாரத்துறை. அதுபோல் வாழைப்பழத்தினையும்,எத்தனாலில் பழுக்க வைப்பது தவறு இல்லையாம்.

பளபளப்பாக இருப்பது ஏன்?

ஏற்றுமதி, இறக்குமதி, பழங்கள் தரமானவையா என மைசூரில் உள்ள மத்திய தரக்கட்டுப்பாட்டு மையம் ஆய்வு செய்து அனுமதி வழங்கும். இதன் பிறகே விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதில் வாஷிங்டன் ஆப்பிளில் மெழுகு கோட்டிங் கொடுக்கின்றனர். உடலுக்கு தீங்கானது இல்லை என மத்திய அரசு அனுமதி தந்துள்ளது. அதேபோல் பெரும்பாலான பழங்களில் பூச்சிக்கொல்லி மருந்து இருக்கத்தான்செய்யும். இதைநீரில் சுத்தப்படுத்தி சாப்பிடுவதால் எந்த பாதிப்பும் இல்லை என்கின்றனர் வியாபாரிகள்.

Updated On: 22 July 2022 11:27 AM GMT

Related News

Latest News

 1. விளையாட்டு
  ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை வென்றது இந்திய அணி
 2. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி கலெக்டர் தலைமையில் எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
 3. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி அருகே சிறுமியை கடத்திய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது
 4. திருச்சிராப்பள்ளி மாநகர்
  இளைஞர் அணி மாநாட்டையொட்டி திருச்சியில் தி.மு.க.வினர் சைக்கிள் பேரணி
 5. அரசியல்
  டிச. 4 துவங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 18 மசோதாக்கள்
 6. துறையூர்
  திருச்சி அருகே துறையூரில் அமைச்சர் நேருவின் காரை மறித்த...
 7. டாக்டர் சார்
  Health Benefits Of Amla நோய் எதிர்ப்பு சத்துள்ள நெல்லிக்காயைச் ...
 8. ஆன்மீகம்
  Sabarimala Ayyappan Temple- சபரிமலை அய்யப்பன் கோவிலில் படிபூஜை; வரும்...
 9. லைஃப்ஸ்டைல்
  Land And Building Approval மனைகள் வாங்க மற்றும் கட்டிடம் கட்ட ...
 10. அவினாசி
  அவிநாசி அருகே போத்தம்பாளையத்தில் சிறுத்தைகள் நடமாட்டம்; பொதுமக்கள்...