இந்த ஆறு விஷயங்களை 'பாலோ அப்' பண்ணுங்க... சிறுநீரகம் பாதுகாப்பா, பலமா இருக்கும்ங்க

மனிதனின் உடல் உறுப்புகளில் மிக முக்கியமான, உறுப்புகளில் ஒன்று சிறுநீரகம். சிறுநீரகம் பழுதுபடாமல், பாதுகாத்து கொண்டால் நீண்ட காலம் மகிழ்ச்சியாக உயிர் வாழலாம். கண்களை பாதுகாப்பதை போல, சிறுநீரகங்களையும் பாதுகாப்பது மிக அவசியம்.

HIGHLIGHTS

இந்த ஆறு விஷயங்களை பாலோ அப் பண்ணுங்க... சிறுநீரகம் பாதுகாப்பா, பலமா இருக்கும்ங்க
X

சிறுநீரகங்களை பாதுகாப்போம்.

உடல் உறுப்புகளின் செயல்பாட்டையும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நிர்வகிப்பதில் சிறுநீரகங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. ரத்த ஓட்டத்தில் கலந்திருக்கும் கழிவுகள், அதிகப்படியான நீர், உடலில் சேரும் நச்சுகள் உள்ளிட்டவற்றை வெளியேற்றுவது சிறுநீகரத்தின் முக்கியமான பணியாகும். இந்த கழிவு பொருட்கள் சிறுநீர்ப்பையில் சேகரிக்கப்பட்டு சிறுநீர் வழியாக வெளியேறுகின்றன. உடலில் பி.எச் அளவு, உப்பு, பொட்டாசியம் போன்றவற்றின் அளவை சம நிலையில் வைத்திருக்க சிறுநீரகங்கள் உதவுகின்றன. ரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்தவும், ரத்த சிவப்பு அணுக்களின் உற்பத்தியைக் கட்டுப்படுத்தவும் உதவும் ஹார்மோன்களை உற்பத்தி செய்வதற்கும் துணைபுரிகின்றன. ஆகையால் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்க சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை பேணுவது அவசியமானது.

சில நாட்களாக நீங்கள் அடிக்கடி சோர்வாக உணர்ந்து வருகிறீர்கள், அந்த சோர்வும் அதிகமாக இருக்கிறது என்றால் அதற்கு சிறுநீரகங்கள் சரியாக செயல்படாமல் இருப்பது காரணமாக இருக்கலாம். சிறுநீரகங்கள் சரியாக செயல்படாததால் உடலில் நச்சுகள் உருவாகி உடலின் மற்ற முக்கிய உயிரியல் செயல்பாடுகளை பாதிக்கலாம்.


மிகவும் முக்கிய உறுப்பான சிறுநீரகங்களை ஆரோக்கியமாக கவனித்து கொள்வது மிகவும் அவசியம். சிறுநீரகங்களில் சிக்கல் ஏற்பட்டுள்ளதை உணர்த்தும் பல அறிகுறிகள் இருக்கின்றன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக பலருக்கும் இது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால், காலம் கடந்த பிறகு சிறுநீரகங்களில் பிரச்சனைகள் இருப்பது கண்டறிப்படுகிறது.

மிக முக்கியமாக நம் உடலின் முழு ரத்தமும் நாளொன்றுக்கு சுமார் 40 முறை சிறுநீரகங்கள் வழியாக செல்வதால், சிறுநீரக செயல்பாடுகளில் ஏற்படும் சிக்கல்களை வெளிப்படுத்தும் அறிகுறிகளை விரைந்து கண்டறிவதும், சிகிச்சை எடுப்பதும் இன்றியமையாதது.

அடிக்கடி சோர்வு:

சில நாட்களாக நீங்கள் அடிக்கடி சோர்வாக உணர்ந்து வருகிறீர்கள், அந்த சோர்வும் அதிகமாக இருக்கிறது என்றால் அதற்கு சிறுநீரகங்கள் சரியாக செயல்படாமல் இருப்பது காரணமாக இருக்கலாம். சிறுநீரகங்கள் சரியாக செயல்படாததால் உடலில் நச்சுகள் உருவாகி உடலின் மற்ற முக்கிய உயிரியல் செயல்பாடுகளை பாதிக்கலாம்.

போதிய தூக்கமின்மை:

போதுமான தூக்கம் இல்லாததற்கு பல காரணங்கள் இருந்தாலும் கூட, பாதிக்கப்பட்ட சிறுநீரகங்களும் கூட இதற்கு சில நேரங்களில் காரணமாகின்றன. தூக்கமின்மை சிறுநீரக நோய்க்கான நுழைவாயிலாக இருக்க கூடும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஸ்லீப் ஆப்னியா கோளாறு அல்லது போதிய தூக்கம் இல்லாமல் அவதிப்படுவது சிறுநீரக நோய்களுடன் தொடர்புடையது என்பதால் எச்சரிக்கை அவசியம்.

வறண்ட மற்றும் அரிக்கும் சருமம்:

எந்த அலர்ஜியும் இல்லாமல் ஒருவரது சருமம் வறண்டு மற்றும் அரிப்பு நீடித்தால், உடனடியாக டாக்டரிடம் சென்று கிட்னி டெஸ்ட் செய்து கொள்வது முக்கியம். சிறுநீரகங்கள் ரத்தத்தில் இருந்து நச்சுகளை அகற்றும் போது ஆரோக்கியமான சருமம் உறுதி செய்யப்படுகிறது. இதில் இடையூறு ஏற்பட்டு உடலில் நச்சுக்கள் குவிவதால் சரும பாதிப்புகள் ஏற்படுகின்றது. சில நேரங்களில் சருமம் செதில் செதிலாக உறியக்கூடும்.

கை, கால் வீக்கம்:

சரியாக செயல்படாத சிறுநீரகங்கள் உடலில் சோடியம் குவிய காரணமாகிறது. அதிக அளவு சோடியம் பாதங்கள், கணுக்கால் மற்றும் கால்கள் வீங்க காரணமாகிறது. எனவே கால்களில் வீக்கம் ஏற்பட்டு, நீண்ட நாட்கள் நீடித்தால் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும்.

கண்களை சுற்றி வீக்கம்:

சிறுநீரகங்கள் சிறுநீரில் அதிக அளவு புரதத்தை வெளியிடும் போது, கண்களைச் சுற்றி வீக்கத்தை ஏற்படுத்தும். பலவீனமான சிறுநீரக செயல்பாட்டிலிருந்து நச்சுகள் குவிவதன் விளைவாக கண்களில் வீக்கம் ஏற்படுகிறது. எனவே கண்களை சுற்றிய வீக்கம் நீண்ட நாட்கள் இருந்தால் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும்.

தசைவலி:

சிறுநீரகச் செயல்பாட்டில் ஏற்படும் கடும் பாதிப்பு , வளர்சிதை மாற்றக் கழிவுகள் ரத்தத்தில் அதிக அளவில் உருவாக்கப்பட காரணமாகிறது. இதனால் தசைகள் மற்றும் நரம்புகளுக்கு ஏற்படும் சேதத்தால் தசை பலவீனம், பிடிப்புகள் மற்றும் வலி ஏற்படலாம்.

சுவாசிப்பதில் சிக்கல்:

சிறுநீரகத்தில் பிரச்சனை ஏற்படும் சிலரால் சரியாக சுவாசிக்க முடியாது. இதற்கு எரித்ரோபொய்டின் எனப்படும் ஹார்மோன் குறைபாடு காரணமாக இருக்கலாம். மற்றொரு காரணம் உடலில் உள்ள கூடுதல் திரவம் நுரையீரலில் சேர்வதால் மூச்சுத் திணறல் உண்டாகலாம்.

சிறுநீர் கழிப்பதில் மாற்றம்:

சில நாட்களில் வழக்கத்தை விட அடிக்கடி சிறுநீர் கழித்தாலோ அல்லது வழக்கத்தை விட குறைவாக சிறுநீர் கழித்தாலோ தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

வழக்கமான சுகாதார பரிசோதனைகள் எந்த ஒரு நோயையும் கண்டறிய சிறந்த வழி. ஆரோக்கியமான வாழ்க்கை முறை பழக்கங்களை பின்பற்றுவது சிறுநீரகங்களை பாதுகாக்கும்.சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு உதவும் பயனுள்ள விஷயங்களை பின்பற்ற வேண்டும்.

அதிகமான திரவ உணவு:

தினமும் எந்த அளவுக்கு திரவ உணவுகளை உட்கொள்கிறீர்களோ அந்த அளவுக்கு சிறுநீரகங்கள் நன்றாக செயல்படும். தண்ணீர் மட்டுமல்ல, இளநீர், பழ ஜூஸ் போன்ற ஊட்டச்சத்து பானங்களை பருகுவதும் சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். தினமும் குறைந்தது எட்டு டம்ளர் தண்ணீரைக் குடிப்பது உடலை நீரேற்றமாக வைத் திருக்க உதவும். உடலில் சேர்ந்திருக்கும் அதிகப்படியான சோடியம் மற்றும் நச்சுகளை வெளியேற்றும்.


தினமும் உடற்பயிற்சி:

தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்வது தொப்பை கொழுப்பை குறைக்க உதவும். சிறுநீரக நோய் ஏற்படுவதையும் தவிர்க்கும். ரத்த அழுத்த அளவை குறைக்கவும் வித்திடும். நடைப்பயிற்சி மட்டுமின்றி ஓட்டம் கூட சிறுநீரகங்களுக்கு சிறந்தது. எனவே தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தை பின்பற்றுங்கள்.
புகை, மதுப்பழக்கம் கூடாது:

புகைப்பிடிப்பது ரத்த நாளங்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும். இதனால் சிறுநீரகங்கள் உட்பட உடலின் முக்கிய உறுப்புகளுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தின் வீரியம் குறைந்துவிடும். சிறுநீரக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும். அதுபோல் மதுப்பழக்கமும் சிறுநீரகங்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும். அதிலிருக்கும் ஆல்கஹால் நீரிழப்பை ஏற்படுத்தும். அதனால் சிறுநீரகங் களின் செயல்பாடு பாதிப்புக்குள்ளாகும். இறுதியில் உடல் பருமன், கல்லீரல் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளால் அவதிப்பட நேரிடும்.

ஆரோக்கியமான உணவு:

அன்றாட உடற்பயிற்சியுடன், ஆரோக்கியமான உணவை உட்கொள்வதும் சிறுநீரகங்களுக்கு நன்மை பயக்கும். உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொள்ளாமல் சீராக உடல் எடையை பராமரிப்பது சிறுநீரக நோய் அபாயத்தை குறைக்க உதவும். பழங்கள், காய்கறிகளை அதிகம் உட்கொள்வது சிறுநீரகங்களின் ஆரோக்கியம் காக்க துணைபுரியும்.


அளவான உப்பு:

உண்ணும் உணவில் உப்பின் அளவை குறைப்பது சிறுநீரகங்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உடல் உறுப்புகளுக்கும் ஆரோக்கியமானது. உணவில் உப்பை அதிகம் சேர்த்துக்கொள்வது சிறுநீரக நோய்க்கு முக்கிய காரணமான உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக கல் அபாயத்தையும் அதிகரிக்கச் செய்யும். சிறு நீரில் உள்ள புரதத்தின் அளவு அதிகரிக்கக்கூடும். ஏற்கனவே சிறுநீரக நோய் இருந்தால் நிலைமை மோசமாகக்கூடும்.

அடிக்கடி பரிசோதனை:

சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கு சிறந்த வழி, அடிக்கடி பரிசோதனை மேற்கொள்வதுதான். குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து பரிசோதனை மேற்கொள்வதன் மூலம் சிறுநீரக நோய் பாதிப்பு இருந்தால் ஆரம்ப நிலை யிலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்துவிடலாம். ஏற்கனவே சிறுநீரக நோய் பாதிப்புக்குள்ளாகி இருப்பவர்கள் தவறாமல் சிறுநீரக பரிசோதனை மேற்கொள்வதும் அவசியமானது.

Updated On: 26 Sep 2022 9:45 AM GMT

Related News