அற்புத மருத்துவ குணம் கொண்ட நோய் தீர்க்கும் ஆளிவிதையைத் தினமும் சாப்பிடுங்க...படிங்க...

அற்புத மருத்துவ குணம் கொண்ட நோய் தீர்க்கும்   ஆளிவிதையைத் தினமும் சாப்பிடுங்க...படிங்க...
X

அற்புத மருத்துவ குணங்கள் கொண்ட ஆளிவிதை  (கோப்பு படம்)

flax seeds in tamil name மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய நோய் வகைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.உங்களுடைய ஆரோக்யத்தைப் பாதுகாக்க ஆளி விதைகளைச் சாப்பிடுங்க...படித்து பாருங்க...

flax seeds in tamil name

உயிரியில் வகைப்பாட்டின் படி இது தாவர வகையினைச் சார்ந்ததும் மால்பிகேல்ஸ் வரிசையில் மேக்னோலியோப்சிடா வகுப்பினைச் சார்ந்த பூக்கும் தாவரப் பிரிவில் ஆளிச் செடியானது அமைந்துள்ளது.இத்தாவரமானது லினாசீ குடும்பத்தினைச் சார்ந்தது. லினம் என்ற பேரின வகையினைச் சார்ந்தது. லினம் உசிட்டேட்டிசிமம் என இரு சொற் பெயரிடப்பட்டுள்ளது.

ஆளி விதையின் ஊட்ட மதிப்பீடு 100கிராம் -இதில் உள்ள ஆற்றல் 2,234 கிஜூல் -534 கிலோ கலோரிகள்.கார்போஹைட்ரேட் 28.88 கிராம், சீனி 1.55 கி,நார்ப்பொருள் 27.3 கிராிம், கொழுப்பு 42.16 கிராம், புரதம், 18.29 கிராம்,உயிர்ச்சத்துக்களான தயமின் (பி1) 1.644 கி,ரிபோஃப்ளேவின்(பி2) 0,161 மி.கி, நியாசின்(பி3)3.08 கி,பான்டோதெனிக் அமிலம் (பி5) 0.985 மிகி.உயிர்ச்சத்து (பி6) 0.473 மி.கி, இலைக்காடி (பி9) 0 சதவீதம், உயிர்ச்சத்து சி 0.6 கி,கால்சியம், 255 மி.கி, இரும்பு 5.73 மி.கி, மக்னீசியம் 392 மி.கி, பாசுபரஸ் 642 மி.கி, பொட்டாசியம் 813 மி.கி, துத்தநாகம் 4,34 மி.கி.

flax seeds in tamil name


flax seeds in tamil name

ஆளிச்செடி (ப்ளாக்ஸ்) விதைக்காகவும் நாருக்காகவும் சாகுபடி செய்யப்படும் ரு செடியாகும். இதன் அறிவியல் பெயரானது லைனம் யுசிட்டாட்டிசிமம் என்று அழைக்கப்படுகிறது. இது ஆதியில் கருங்கடலுக்ம், காஸ்பியன் கடலுக்கும் இடையிலுள்ள பகுதியில் முதன் முதலாக வளர்ந்திருந்தது எனக் கருதப்படுகிறது.

விவரங்கள்

இந்த ஆளிச்செடியானது 120 செ.மீ. உயரத்தண்டு வகையான தாவரம் நீண்டு வளரும் பண்பை உடையது. மெல்லிய ஊசி வடிவில் 2-4 செ.மீ. நீளமும், 3 மி.மீ அகலமுள்ள நீலப்பச்சை நிற இலைகளைக் கொண்டதாகும். 5 நீல நிற இதழ்களைக் கொண்ட மலர். உருண்மையான வறண்ட வில்லை வடிவில்வறண்ட வில்லை வடிவில் 5-9 மிமீ விட்டமும் 4-7 மிமீ நீளமும் உள்ள விதைகள் கொண்ட காய்.ஆளிச்செடியிலிருந்து கிடைக்கப்படும் நாரினைக் கொண்டுதான் சணலானது தயாரிக்கப்படுகறிது.

ஆளிச்செடி பூ பயன்கள்

மருத்துவ குணங்களைக் கொண்ட விதைக்காகவும் நாருக்காகவும் ஆளிச்செடியானது வளர்க்கப்படுகிறது. செடியின் நார், சாயம், மருந்துகள், மீன்வலைகள் மற்றும் சவர்க்காரம் தயாரிக்கவும் இது பயன்படுகிறது. பூங்காக்களில் ஆளிச்செடிதான் நல்லஅழகான தோற்றத்தைக் கொண்டதாக இருக்கும். ஒரு சில பூக்கள் நீல நிறத்தைக்கொண்டது. கருஞ்சிவப்பும் நீல நிறப்பூக்களில் இழையோடும்.

flax seeds in tamil name


ஆளி விதையும், விதையில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெயும் (கோப்பு படம்)

flax seeds in tamil name

ஆளி விதை(ப்ளெக்ஸ் சீட்ஸ்)

ஆளி விதை ஈட்டும் எண்ணெய் பலஆண்டுகளாகவே வண்ணச்சாயங்களில் மெருகெண்ணெய்களிலும் உலரவைக்கும் பொருளாக பயன்படுத்தப்படுகின்றது விதைகளை உணவாகவும் விதைகளில் இருந்து குளிர்ந்த நிலையில் எடுக்கப்படும் லின்சீட் ஆயில் உணவுப்பொருள்களில் சேர்த்துக்கொள்ளலாம்.

ஆளி விதைகளில் இரு வகைகள் உள்ளன. காவி மற்றும் மஞ்சள் நிறத்தில் இவை காணப்படும். ஆளி விதைகள் ஆயிரம் ஆண்டுகளாக உணவாக இருந்து வருகிறது. மேலும் இது சாயம்,கால்நடைத்தீவனம், மற்றும் சாயத்தில் ஓர் உள்ளடங்கு பொருளாகத்தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.காவி ஆளியும் மஞ்சள் ஆளியும் ஒரே மாதிரியான ஊட்டச்சத்து மதிப்புள்ளதாகவும், சம அளவு குறுஞ்சங்கிலி ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் கொண்டதாகவும் திகழ்கின்றன. இந்த விதிகளிலிருந்து விதிவிலக்கானது சாலின் என்று பெயர் பெற்ற மஞ்சள் ஆளி. ஒமேகா 3 ஆனது இதில் குறைவாக உள்ளது. முற்றிலும் வேறுபட்ட ஆர்கானிக் ஸ்ட்ரக்சுரல் புரோபைலைக்கொண்டது.

உணவு அதிகம் சாப்பிடாதவர்கள் ஒமேகா-3 கொழுப்புச் சத்தைப் பெறுவதற்கு ஆளியை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு தேக்கரண்டி ஆளி விதையின் மாவுடன் 3 தேக்கரண்டி நீர் சேர்த்தால், அது கேக் மற்றும் ரொட்டி சுடுவதற்கு, முட்டைக்கு பதிலான கெட்டிப் பொருளாகும். ஆளிவிதையின் எண்ணெய், பால் சுரப்பதைக் கூட்டும் பொருளாகப் பரிந்துரைக்கப்படுகின்றது .

இதய நோய்க்கு காரணமான கொலஸ்ராலையும் இரத்த அழுத்தத்தையும் குறைப்பதோடு ரத்தக் குழாய்களில் அடைப்புகள் ஏற்படாமல் தடுத்து, உடல் நலம் பேண ஒமேகா-3 உதவுகின்றது.

ஆளி விதையை தினமும் சாப்பிட்டு வந்தால், கண்களில் ஏற்படும் வறட்சியைக் குறைக்கும். மேலும் ஆளி விதையில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளதால், கண் நரம்புகளில் பாதிப்பை ஏற்படுத்தும் நோய்களுள் ஒன்றான மாகுலர் திசு சிதைவு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும்.

ஆளி விதை எண்ணெய் முகப்பரு, சொரியாசிஸ் போன்ற சரும பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது. பாதிக்கப்பட்டப் பகுதியில் ஆளி விதை எண்ணெயை தினமும் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கிறது.

flax seeds in tamil name



உடல் எடையைக் குறைக்க ஆளிவிதை பயனளிக்கிறது (கோப்பு படம்)

flax seeds in tamil name

ஆரோக்கியம் மேம்பட

ஆளி விதையில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் இரண்டுமே வளமான அளவில் உள்ளது. இதனால் செரிமான பிரச்னையை எளிதில் தீர்க்கும், மலச்சிக்கலைப் போக்கும்.ஆளி விதையில் வளமான அளவில் டயட்டரி புரோட்டீன்கள் மற்றும் அமினோஅமிலங்களும் நிறைந்துள்ளன. தினமும் ஆளிவிதையைச்சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான புரோட்டீன் கிடைக்கும்.ஆளி விதையில் உள்ள ஆல்பா-லினோலினிக் அமிலம் மற்றும் லிக்னன்கள், உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி, உங்களைப் பாதுக்காக்கும்.

உடல் எடை குறைய:

ஆளி விதையை தினமும் சாப்பிட்டு வந்தால் இதில் உள்ள லிக்னன்ஸ் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.

Tags

Next Story