தாய்ப்பாலின் மகத்துவம் பற்றி தெரியுமா?

Benefits Of Breast Milk- பத்து மாதம் சுமந்து பெற்றெடுக்கும் தாய்க்கு குழந்தை பெறுவது முதல் சுகம் என்றால் இரண்டாவது சுகம் என்னவென்றால் தாய்ப்பால் கொடுப்பதைத்தான் சொல்லலாம்.
ஆனால் தற்போதுள்ள நாகரிக உலகில் பெற்ற குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதிலும் நாகரிகம் தலைதுாக்க ஆரம்பித்துள்ளதைப் பார்க்கும்போது மனது பதைக்கிறது.உண்மையில் சொல்லப்போனால் அந்த காலத்தில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் அதிக நாட்கள் கொடுத்ததினால் குழந்தையானது எந்தவித நோய்களுக்கும் ஆட்படாமல் மிக ஆரோக்யமாக வளர்ந்தது என்று கூட சொல்லலாம். ஆனால் நிலைமையானது தலைகீழாக மாறிவிட்டதென்று சொல்லமுடியும். காரணம் தற்போதைய சூழ்நிலையில் பெண்களும் அதிக அளவில் வேலை பார்ப்பதால் அவர்களால் தம் குழந்தையின் தேவை களை நிறைவேற்ற முடியவில்லை என்று சொல்லலாம்.
வளரும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் இன்றியமையாதது. தாய்ப்பாலானது நோய் எதிர்ப்புசக்தியினை அளிக்ககூடிய கலப்படமில்லாத சத்து மிகுந்த ஆகாரம். அதனைத் தவிர்க்கலாமா? தவிர்க்க கூடாது ஏனெனில் போதிய கால அளவிற்கு குழந்தைகளுக்கு தாய்ப்பால் குடிக்காமல் விட்டுவிட்டால் பல பிரச்னைகளும் நோய்களும் அவர்களைத் துரத்துகின்றன.
எனவே குழந்தை பிறந்ததும் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி பெற்று ஆரோக்யமாக வளர ஒரு குழந்தைக்கு தேவையானது தாய்ப்பால் மட்டுமே. குழந்தை பிறந்த உடனே சுரக்கும் தாய்ப்பால் சீம்பால் என்று சொல்லப்படும். இதை குழந்தைகளுக்கு கட்டாயம் கொடுத்தால் ஆகாது என்று சொல்வது தவறு.,சீம்பால் மூலம் தான்குழந்தை நோய் எதிர்ப்பு சக்தியை பெறுகிறது. சீம்பாலில் புரதம் மற்றும் வைட்டமின் ஏ சத்து அதிகமிருக்கிறது. குழந்தையின் ஆரோக்யத்துக்கும் வளர்ச்சிக்கும் தேவையான அனைத்தும் தாய்ப்பாலில் அடங்கியுள்ளன.
குழந்தை பிறந்த முதல் இரண்டு மூன்று வாரங்களுக்கு அடிக்கடி குழந்தையைப் பால் குடிக்க வைப்பதால் தாய்ப்பால் சுரப்பது அதிகரிக்கும். குழந்தை வளர்வதற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் தாய்ப்பாலின் சரியான விகிதத்தில் இடம் பெற்றுள்ளன. குழந்தை உணவான தாய்ப்பால் நோய்க்கிருமிகள் இல்லாதது சுலபமாக கிடைக்க கூடியது .சுத்தமானது. வயிற்றுப்போக்கு போன்ற தொற்று நோய்கள் வராமல் தடுக்கவல்லது. தாய்ப்பால் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, போன்றவை இருக்கும்போது தாய்ப்பால் கொடுப்பதால் ஒரு கெடுதலும் வராது. தாயின் அன்பு, அரவணைப்பு, பாசம், எல்லாவற்றையும் தாய்ப்பால் மூலம் குழந்தை பெறுகிறது.
தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளிடையேதான் அன்பு, பாசம், பிணைப்பு, அதிகம் காணப்பபடுவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.அதிக நாட்கள் தொடர்ந்து தாய்ப்பால் கொடுப்பதால் அடுத்த கர்ப்பம் ஏற்படுவதை தள்ளிப்போடவும் வாய்ப்பு இருக்கிறது. குழந்தைகளிடையே போதுமான இடைவெளி தரவும் உதவுகிறது. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தையும் உணர்வையும் கருவுற்ற காலத்திலிருந்தே தாய் தன்னுள்ளே வளர்த்துக்கொள்வது இயல்பு என டாக்டர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu