வெல்லம் சாப்பிடுங்க... நல்லா இருப்பீங்க!

வெல்லம் சாப்பிடுங்க, ஆரோக்கியமா இருக்கலாம்.
இந்தியாவில் குறிப்பாக, தென்னிந்தியாவில் திருமண விழாக்கள், புதுமனை புகுவிழா போன்ற முக்கிய விசேஷ நாட்களில் தடபுடலாக விருந்து நடக்கும். அறுசுவை உணவை தயாரித்து, வரும் விருந்தினர்களுக்கு வழங்கி அசத்திவிடுவர். இதில் கூட்டு, பொரியல் என பல வகை கூட்டுகளும், பருப்பு, சாம்பார், ரசம் என பல வகை குழம்புகள் வைத்தாலும், இறுதியில் சர்க்கரை பாயசம் நிச்சயமாக இருக்கும். இந்த சர்க்கரை பாயசம், சாப்பிட்ட உணவுகள், எளிதில் ஜீரணம் ஆவதற்காக வைக்கப்படுகிறது. இதில், சர்க்கரை பதிலாக வெல்லம் பயன்படுத்தியும் பாயசம் வைக்கலாம்.
வெல்லம் மற்றும் நெய் உணவில் எடுத்துக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் அறிவது மிக முக்கியம்; வெல்லம் உட்கொள்வதால், உடலுக்கு கிடைக்கும் நன்மைகளை அறிந்தால், வியப்பு ஏற்படும். சர்க்கரை நோய் என்ற பாதிப்பு வந்த பிறகு, இனிப்பை பார்த்தாலே தெறித்து ஓடும் அளவுக்கு, மக்கள் பயந்து போயுள்ளனர். ஆனால், இனிப்பான வெல்லம் கண்டு பயப்படத் தேவையில்லை. அது,,சிறப்பான செரிமானத்துக்கு மிகவும் உதவுகிறது.
உணவு உட்கொண்ட பின் செரிமானத்திற்கு நல்லது என்பதால், பழங்காலம் தொட்டே உணவுக்கு பிறகு, வெல்லம் சாப்பிடுவது ஒரு பழக்கமாக இருக்கிறது.
வெல்லத்தில் அதிகளவு கால்சியம் மற்றும் இரும்பு சத்து உள்ளதால் எலும்புக்கு வலு சேர்க்கும். வாதம், பித்தம் மற்றும் கபம் போன்றவை உடலில் சமச்சீர் தன்மையுடன் இருப்பதற்கு உதவும். வெல்லத்தில் நார் சத்து உள்ளதால், உடலுக்கு தேவையான ஊட்ட சத்துக்கள் கிடைக்கும். ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, ரத்தத்தை சுத்தப்படுத்தும்.
வெல்லத்தில் பொட்டாசியம் இருப்பதால், எலக்ட்ரோலைட்டுகளை சமநிலையில் பராமரிக்க உதவும். இது சுவாச பிரச்னைகளான ஆஸ்துமா, நுரையீரல், உணவுக்குழாயில் ஏற்படும் பிரச்சனைகள் தடுக்கும்.
வெல்லம் கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும். வெல்லம் இயற்கையான மூலக்கூறுகளை கொண்டுள்ளதால் உடலில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும். வெல்லத்தை நெய்யுடன் உட்கொள்வதால், குடல் இயக்கத்திற்கு நன்மை செய்கிறது. உடலில் வெப்பத்தின் அளவை அதிகரிப்பதுடன், குளிர்ச்சியில் இருந்து பாதுகாக்கும்.
மூட்டு வலி உள்ளவர்கள் வெல்லம் உட்கொள்வதால், வெல்லத்தில் உள்ள பாஸ்பரஸ், மற்றும் கால்சியம் மூட்டுகளை பலப்படுத்துவத்துடன் வலி நிவாரணியாக செயல்படும். ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதுடன், ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.
வெல்லம், கரும்பு பாகில் இருந்து தயாரிப்பதால் இது ஒரு இயற்கை டையூட்ரிக்; இது சிறுநீரக பையின் வீக்கத்தை குறைப்பதோடு சிறுநீரின் சீரான ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
வெல்லத்தை நெய்யுடன் கலந்து, உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்:
வெல்லத்தில் இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் பி மற்றும் சி உள்ளன. நெய்யில், வைட்டமின்கள் ஏ மற்றும் ஈ மற்றும் வைட்டமின் டி ,கே உள்ளதால், எலும்புகள் கால்சியத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது.
உடலில் உள்ள நச்சுத்தன்மைகள் அகற்ற உதவுகிறது. உடலின் ஹர்மோனை சமநிலையில் வைக்கிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இது தோல், தோல், மற்றும் நகங்களை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu