/* */

ஆரோக்யத்தைப் பாதுகாக்க அவசியமான டாக்டர்- கேள்வி பதில்

Dr.question answers about health சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையமுடியும். அந்த வகையில் ஆரோக்யம் என்பது மிக முக்கியமானது. இதுகுறித்து டாக்டர் அளிக்கும் பதிலைக்கேளுங்கள்....

HIGHLIGHTS

ஆரோக்யத்தைப் பாதுகாக்க அவசியமான  டாக்டர்- கேள்வி பதில்
X

Dr.question answers about health

மனிதர்களுக்கு ஏற்படும் நோய்கள் தற்காலத்தில் புதுசுபுதுசாக உருவாகின்றன. மாறிவரும் உணவுப்பழக்கம், உடலுழைப்பின்மை, உடற்பயிற்சியின்மை, டென்ஷனான வாழ்க்கை முறை, உள்ளிட்ட காரணங்களால் நோய்கள் நாளொரு மேனியும் பொழுதொழு வண்ணமுமாக அதிகரித்து வருகிறது. ஒரு சில நேரங்களில் டாக்டர்களால் கூட இதனை உடனடியாக கண்டு பிடிக்க முடியாமல் பல கட்ட பரிசோதனைகளுக்கு பின்னரே இனங்கண்டு சிகிச்சையினை துவக்குகின்றனர்.

அப்படியே டாக்டரிடம் சென்றால் கூட நம் அனைத்து சந்தேகத்தினையும் அவரிடம் சொல்லி விளக்கம் பெற நேர அவகாசம் இடம்கொடுப்பதில்லை. இதனால் டாக்டரிடம் சில பிரச்னைகள் குறித்து கேள்வி கேட்டதற்கு அவர் அளித்த பதில்கள் மூலம்நம் சந்தேகங்களை நிவர்த்திசெய்து கொள்ளலாம். அந்த வகையில் டாக்டரிடம் கேட்ட கேள்விகளும் , பதில்களும் படிச்சு பாருங்க..

Dr.question answers about health


..Dr.question answers about health

கே: வாரத்திற்கு ஒரு முறை மட்டும் முடிகளுக்கு எண்ணெய் தேய்த்தால் பாதிப்பு ஏற்படுமா?

ப: தலைமுடிக்கு எண்ணெய் அவசியமானதுதான். தினமும் எண்ணெய் தேய்ப்பது நல்லது. இதனால் சில நன்மைகள் கிடைப்பது உண்மை. முடி வறண்டு போகாது. முயில் சிக்கல் உண்டாகாது. தலையில் அழுக்கு சேராது. தலைமுடி பளிச்சென்று பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அதே சமயம் தினமும் ஷாம்பூ தேய்த்துக்குளிப்பதாக இருந்தால் எண்ணெய் அவசியமில்லை. காரணம் எண்ணெயால் கிடைக்கின்ற நன்மைகள் எல்லாமே ஷாம்பூவால் கிடைத்துவிடும் அதனால்தான்.

கே: விரல் நகத்தில் வெள்ளைக்கோடு, கறுப்புப்புள்ளிகள் ஏற்படக்காரணம் என்ன? அதை நிவர்த்தி செய்வது எப்படி?

ப:வெள்ளைக்கோடுகள் உடலில் கால்சியம் பற்றாக்குறையைக் குறிக்கும். கறுப்புப் புள்ளிகள் நகத்துக்கடியிலுள்ள தந்துகிகள் சேதப்பட்டு ரத்தம் கசிந்ததால் ஏற்பட்டிருக்கலாம். டாக்டரைக் கலந்தாலோசித்து அவர் சொல்லும் மருந்துகளை மட்டும் வாங்கிச் சாப்பிடவும்.

கே: பெரியவர்களுக்கு காய்ச்சல், சளி, ஏற்படும்போது கொடுக்கப்படும் மாத்திரைகளைக் குழந்தைகளுக்கும் கொடுக்கலாமா?

ப:கொடுக்கக்கூடாது. பெரியவர்களுக்குத் தரப்படும் மருந்தின் அளவு அவர்களுடைய உடல் எடையையும் நோயின் தன்மையைப் பொறுத்தது. அதே மருந்தைக் குழந்தைகளுக்குத் தரும்போது அளவு அதிகமாகி விடும். அளவுக்கு மீறினால் அமிர்தமே நஞ்சாகும்போது மருந்து எம்மாத்திரம்? கிணறு வெட்ட பூதம் கிளம்பியகதையாகிவிடும் எச்சரிக்கை தேவை.

Dr.question answers about health


Dr.question answers about health

கே: சில பெண்களுக்கோ ஆண்களுக்கோ தலை முடியானது சடைபோல் ஆகிறதே ஏன்?

ப:தலைமுடி சடைபோடுவது, முடி சுத்தமின்மையால் உண்டாகும் ஒரு நிலை. மருத்துவக் காரணம் எதுவும் இல்லை.

கே: பல் சொத்தைக்கும் காய்ச்சல் வருவதற்கும் என்ன தொடர்பு?

ப:நோய்க்கிருமிகள் பற்களைத்தாக்கும்போது ஏற்படுகின்ற ஓர் அழற்சி நோய்தான் பல்சொத்தை. நம் உடம்பில் எங்கு அழற்சி ஏற்பட்டாலும் உடனே அதனருகில் உள்ள நிணநீர் சுரப்பி வீங்கி நெறிகட்டுவது இயல்பு. பல் சொத்தை ஏற்படும் போது கீழ்த்தாடையும் கழுத்தும் இணைகின்ற இடத்தில் நெறிகட்டும். இதன் விளைவாக காய்ச்சல் வரும். தகுந்த மருந்துகளைச் சாப்பிட்டாலோ சொத்தைப்பல்லை அகற்றிவிட்டாலோ காய்ச்சல் குணமாகிவிடும். நெறிக்கட்டி மறைந்து விடும்.

கே:தொடர்ந்து ஏற்படும் கண்சிமிட்டலை அறுவை சிகிச்சையின்றி தவிர்க்க வழி உண்டா?

ப:தொடர்ந்து கண் சிமிட்டல் ஒரு பழக்கம். இதற்கு டிக் என ஆங்கிலத்தில் கூறுவர். இந்தப் பழக்கத்தினால் உடம்பிற்கு கெடுதல் இல்லை. அறுவை சிகிச்சை எதுவும் உதவாது.

கே: நமக்குள்ள இரண்டு சிறுநீரகங்களில் எது முதலில் இயங்குகிறது? ஒன்று பழுதாகிவிட்டால் அடுத்தது தானே இயங்கி விடுமா? அதில் ஆளுக்கு ஆள் வேறுபாடு உண்டா?

ப:உன் இரண்டு கண்களால் ஒரு பொருளைப் பார். எந்தக் கண்முதலில் பார்க்கிறது? உன் இரண்டு காதுகளால் ஒரு ஒலியைக் கேள் . எந்தக் காது முதலில் கேட்கிறது?- இரண்டு கண்களும் ஒரே நேரத்தில்தான் பார்க்கும். இரண்டு காதுகளும் ஒரே நேரத்தில்தான் பார்க்கும். இல்லையா? இதுபோலத்தான் நம் இரண்டு சிறுநீரகங்களும் ஒரே சமயத்தில்தான் இயங்கிக் கொண்டிருக்கும். முதலாவதுஇரண்டாவது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆளுக்கு ஆள் வேறுபாடு என்று எதுவுமில்லை. ஒரு சிறுநீரகம் பழுதாகிவிட்டால் அதன் வேலையையும் சேர்த்து இரண்டாவது சிறுநீரகம் பார்த்துக்கொள்ளும்.இரண்டும் பழுதாகிவிட்டால் சிறுநீரகத்தைப் பொருத்த வேண்டும்.

கே: சர்க்கரை நோய் உள்ளவர்கள் ரத்ததானம் செய்யலாமா?

ப:செய்யலாம். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்குக் கணையத்தில் இன்சுலின் என்ற இயக்குநீர் குறைவாகச்சுரக்கும். இதன் விளைவாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்துவிடும். இவர்களுக்கு அடிப்படையாகக் கோளாறு கணையத்தில்தானே தவிர ரத்தத்தில் இல்லை. ஆகையால் சர்க்கரை நோயாளிகளும் ரத்ததானம் செய்யலாம்.

கே: நம்முடைய பற்கள் எப்பொருளால் உண்டாகின்றன?

ப:சுண்ணாம்புச்சத்தால்

Dr.question answers about health


Dr.question answers about health

கே: முகத்தில் அதிகமாகப் பருக்கள் வருகின்றன. இதற்கு காரணம் என்ன? இவற்றை எப்படி போக்குவது?

ப:முகத்தோலின் கொழுப்புச் சுரப்பிகளிலிருந்து சீபம் என்ற எண்ணெய்ப் பசை வெளியேறுகிறது. இது முகத்தோலைப் பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது. பருவ வயதில் ஆண் , பெண் இருபாலருக்கும் ஆன்ட்ரோஜன் என்ற இயக்குநீர் சுரப்பது அதிகமாகிறது. இது சீபம் சுரப்பதையும் மிகைப்படுத்துகிறது. இதன் காரணமாக வழக்கத்திற்கு அதிகமாக சீபம் தோலில் படிந்து , உருண்டு, திரண்டு ரவை போன்ற முகப்பருக்களை உண்டாக்குகின்றன. முகத்தில் அழுக்குச் சேர்ந்தால் இவை மிளகு அளவிற்கு வீங்கிவிடும். பாக்டீரியா கிருமிகள் தொற்றிக்கொண்டால், பட்டாணி அளவிற்குப் பெரிதாகிவிடும். பருக்களைப் போக்கவும் வராமல் தடுக்கவும் சில யோசனைகள்

*முகத்தைச் சோப்பு போட்டு வெது வெதுப்பான தண்ணீரில் அடிக்கடி கழுவுங்கள்.

*முகப்பவுடர், அழகு சாதனக்களிம்புகள் வேண்டாம்

*கொழுப்பு உணவு, அசைவ உணவு, நெய், வெண்ணெய், பாலாடை , கேக், ஐஸ்கிரீம், சாக்லேட். புட்டிங்ஸ் முட்டை, இறைச்சி வேண்டவே வேண்டாம்.

*கீரை, மற்றும் காய்கறிகளை அதிகமாகச் சேர்த்துக்கொள்ளுங்கள்.

*பருக்களைக் கிள்ளாதீர்கள்.

*பருக்களின் மேல் பூசுவதற்கு டாக்டரின் யோசனையில் ஒரு களிம்பு வாங்கி உபயோகியுங்கள்.

கே: வியர்வை அதிகமாகச்சுரப்பது ஏன்?

ப:உடலின் தட்ப வெப்பத்தை சமநிலையில் வைக்கவும். கழிவுப்பொருட்களை அகற்றவும் வியர்வை உதவுகிறது. வியர்வைச் சுரப்பிகள் , பரிவு நரம்பு மண்டலத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. பரிவு நரம்பு மண்டலம் மிகையாகச் செயல்படும்போது வியர்வைச்சுரப்பி அதிகரிக்கிறது. ஆகவே உடற்பயிற்சியின் போதும்,உடல் வெப்பம் அதிகரிக்கும்போதும் வலி மற்றும் குமட்டல் நரம்பு பதட்டம் காய்ச்சல் ஆகியவற்றுக்கான எதிர்மருந்துகள் உபயோகிக்கும்போதும் வியர்வைச் சுரப்பி கூடுகிறது.

கே: நீரிழிவு நோயைத் தடுப்பது எப்படி?

ப:நீரிழிவு நோய் பெரும்பாலும் பாரம்பரியம் காரணமாகத் தான் வருகிறது. ஆகவேபரம்பரையாக நீரிழிவு நோய் உள்ள குடும்பத்தில் திருமணம் செய்வதைக் குறைத்துக் கொள்ளவேண்டும். உறவுத்திருமணங்கள் ஆகாது. நீரிழிவு நோய் வருவதற்கு வாய்ப்புள்ளவர்கள் சிறுவயதிலிருந்தே அளவான உணவு, சீரான உடல் எடை தேவையான அளவிற்கு உடற்பயிற்சி ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். முக்கியமாக இனிப்பு அதிகம் சாப்பிடக்கூடாது. உடற்பருமன் ஆகிவிடக்கூடாது. சோம்பேறித்தனமாக இருக்கக்கூடாது. மன அழுத்தம் ஆகாது. இவற்றையெல்லாம் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்தால் நீரிழிவு நோயை எளிதில் தடுத்துவிடலாம்.

கே: உணவு உண்ட உடனே உறங்குவது உடலுக்கு ஆபத்தா?

ப:இருதய நோயாளிகள், உணவுக்குபின் உறங்கி சிறிது நேரம் ஓய்வெடுப்பது நல்லது என பரிந்துரைக்கப்படுகிறது.

கே: சராசரியாக ஒரு நாளைக்குஎத்தனை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்?-

ப:சராசரியாக ஒருநாளைக்கு ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடிப்பது நல்லது

கே: டயாலிசிஸ் என்பதற்கு சரியான தமிழ்ப் பெயர் என்ன?

ப:ரத்தச்சுத்திகரிப்பு

கே: திறந்த வெளியில் உறங்கலாமா?

ப:அன்றாட தட்ப வெப்பநிலையைப் பொறுத்தும் தனது உடல் நிலையைப் பொறுத்தும் திறந்த வெளியில் உறங்கலாம்.

கே: உடலில் இயற்கையிலேயே நோய் எதிர்ப்புச்சக்தி அதிகரிக்க என்ன செய்யவேண்டும்?

ப:நம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க நல்ல சத்துள்ள உணவு, நல்ல பழக்க வழக்கங்கள்,தினந்தோறும் உடற்பயிற்சி போன்றவை உதவும்.இதற்கென சிறப்பு மருந்துகள் ஊசிகள் கிடையாது.

கே: மஞ்சள் காமாலை நோய்க்குச் சிறந்த இயற்கை மருந்து எது?

ப:கீழாநெல்லி.

கே:

ப:திடீரென்று படபடப்பும் வாய் திக்கும் ஏற்படுவது உளவயம் சேர்ந்ததாக இருக்கும் அதற்கு உரிய டாக்டரை அணுகவும்.

நன்றி :டாக்டர் .மாணிக்கவேல்.

Updated On: 19 Feb 2023 1:14 PM GMT

Related News

Latest News

 1. லைஃப்ஸ்டைல்
  தமிழக கிராம உணவின் சிறப்புகள்
 2. லைஃப்ஸ்டைல்
  வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
 3. லைஃப்ஸ்டைல்
  மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
 4. லைஃப்ஸ்டைல்
  இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
 5. இந்தியா
  5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
 6. கடையநல்லூர்
  கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
 7. லைஃப்ஸ்டைல்
  கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
 8. லைஃப்ஸ்டைல்
  இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
 9. தென்காசி
  கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி
 10. கல்வி
  அறிவை விளைவிக்கும் எழுத்து வயல், புத்தகங்கள்..!