ஆரோக்யத்துக்கு பயன் தரும் டாக்டர் கேள்வி -பதில் பகுதி -5
Dr,Question answers about health நம் மனதில் எழும் ஆரோக்யம் சம்பந்தமான கேள்விகளுக்கு டாக்டர் பதிலளிக்கிறார். படிச்சு பாருங்க...
HIGHLIGHTS

Dr,Question answers about health
மனித வாழ்க்கை என்பது மகத்தானது. நோயில்லாப் பெருவாழ்வு வாழவேண்டும் என்பதே நமது குறிக்கோளாக இருந்தாலும் திடீர் திடீரென தாக்கும் நோய்களில் இருந்த நம்மால் தப்ப முடிவதில்லை. சீசன் மாற்றம், மழை, பனி, என பருவநிலைகள் மாறும்போது எப்போதுமே காய்ச்சல், சளித்தொல்லைகளால் பாதிப்போர் எண்ணிக்கையானது வழக்கத்தைவிட கூடுதலாகவே இருக்கும்.அந்த வகையில் மாறிவரும் உணவுப்பழக்கம், உடலுழைப்பின்மை,உடற்பயிற்சியின்மை போன்ற காரணிகளால் நோய்கள் நம்மை எளிதாக தாக்கும் சூழ்நிலைதான் தற்போது உருவாகியுள்ளது. சரிங்க...நாம எல்லாவற்றையும் டாக்டரிடம் கேட்க முடிகிறதா? அவர் அளிக்கும் சிறு நேரத்தில் நம் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள முடிவதில்லை. எனவே நோய் சம்பந்தமான கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்.டாக்டர்...படிச்சு உங்களுடைய சந்தேகங்களையும் தீர்த்துக்கங்க....
Dr,Question answers about health
Dr,Question answers about health
*கே: பெண்கள் குங்குமம் வைக்கும்இடம் கறுத்து போகிறதே ? அதற்கு என்ன தான்தீர்வு?
*ப: குங்குமத்தில் உள்ள சில வேதியியல் பொருள்கள் தோலுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும். இதன் விளைவாக ஹிஸ்டமின் என்கிற பொருளைத் தோல்வெளியிடும். அப்போது தோலில் சிவந்த தடிப்புகளும், அரிப்பும், வீக்கமும், ஏற்படும்.நாளடைவில் இது கறுப்பு நிறத்திற்கு மாறி விடும். இதைப்போக்க தரமான குங்குமம் உபயோகிக்க வேண்டும். அல்லது குங்குமமே உபயோகிக்காமல் இருக்க வேண்டும் . கறுப்பு நிறம் மறைய அதன் மீது இயக்க ஊக்கிக் களிம்புகளைப் பூசலாம். ஹிஸ்டமின் எதிர்ப்பு மாத்திரைகளைச் சாப்பிடலாம்.
*கே: ஹைட்ரோசில் என்பது என்ன?
*ப: ஹைட்ரோசில் என்பது விரை சுற்றி சேரும் நீராகும். நம் நாட்டில் கொசுக்கடியால் ஏற்படும் பைலேரியா காய்ச்சலினால் விரை சுழற்சி ஏற்படுவதுண்டு. இதன் காரணமாக நீர் சேருவது தவிர மற்றும் பல காரணங்களால் நீர் சேருவதுண்டு.
Dr,Question answers about health
Dr,Question answers about health
*கே: வாயால் சுவாசித்தால் உடலுக்குக் கெடுதலா?
*ப: நிச்சயம் கெடுதல்தான் வாயால் சுவாசித்தால் காற்றிலுள்ள அசுத்தங்கள் அப்படியே நுரையீரல்களுக்குள் சென்று விடும். இதனால் அடிக்கடி சளி பிடிக்கும். வாய் முழுவதும் ஈரப்பசை இல்லாமல் உலர்ந்து போவதால் பேச்சு சரியாக வராது. வாய், நாக்கு, தொண்டை, போன்றவற்றினால் புண் ஏற்படும். இரவில் தொண்டை காய்ந்து விடுவதால் துாக்கம் கெடும். அடிக்கடி காதுவலி, காதில் சீழ் போன்ற தொல்லைகள் தொடரும். இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமான கெடுதல் எது தெரியுமா? தெற்றுப்பல். இது முக அழகையே கெடுத்துவிடும்.
*கே: தேமல் எவ்வாறு வருகிறது? எப்படிப் போக்குவது?
*ப: தேமல் வருவதற்குக் காரணம் ஒருபூஞ்சைக் காளான் கிருமிபெயர். பிட்ரோஸ்போரம் ஃபர் ஃபர் ,இக்கிருமிகள் நம் தோலில் ஆயிரக்கணக்கில் ஒன்று சேர்ந்ததும் தோலின் மேல் அடுக்கு அணுக்களைப் பாதிக்கும். இதன் விளைவுதான் . தேமல், காளான் கொல்லி மருந்து ஒன்றை டாக்டரின் பரிந்துரைப்படி பலமாதங்களுக்கு தேமல் உள்ள இடத்தில் பூசி வந்தால் குணமாகும். சுயசுகாதாரம் பேணுவது தேமலைத் தவிர்க்கச் சிறந்த வழி குறிப்பாக அடுத்தவர்கள் உபயோகித்த சோப்பு,சீப்பு, துவாலை, உள்ளாடைகள், போன்றவற்றைப் பகிர்ந்து கொள்ளும் பழக்கத்தைக் கைவிட வேண்டும்.
Dr,Question answers about health
Dr,Question answers about health
*கே: பால் மரு என்பது என்ன? எதனால் ஏற்படுகிறது? இதற்கு மருந்து என்ன?
*ப:பால்மரு என்பது நம் தோலிலுள்ள எண்ணெய்ச் சுரப்பிகளை வைரஸ் கிருமிகள் தாக்குவதால் உண்டாகிற சிறுவளர்ச்சி.இதில் பாக்டீரியா கிருமித் தொற்று உண்டானால் சீழ்பிடித்து தொந்தரவு செய்யும். இதற்கு எதிர் உயிர் மருந்துகளைக் கொடுத்து சிகிச்சை செய்வார்கள். அறுவைச் சிகிச்சை மூலமும் , வெப்ப சிகிச்சை மூலமும் இதனை முழுமையாகஅகற்றி விடலாம். உடம்பை சுத்தமாக வைத்துக்கொண்டால் இது பலருக்குத் தானாகவே மறைந்துவிடுகிறது.
*கே: மஞ்சள் காமாலைத் தடுப்பூசி போட்டுக்கொண்டால் நம் வாழ்நாள் முழுவதும் காமாலை நோய்வராதா?
*ப:மஞ்சள் காமாலையில் பல வகைகள் உண்டு.அவற்றில் ஒன்று உயிர்க்கொல்லி- மஞ்சள் காமாலை. அதாவது ஹெபடைட்டிஸ்-பி. இது உயிருக்கு மிகவும் ஆபத்து தரக்கூடியது. இதற்குத்தான் இப்போது தடுப்பூசி போடுகிறார்கள். இந்த தடுப்பூசியை குழந்தை பிறந்த உடன் ஓர் ஊசியும் பிறகு முதல் ஆறாவது மாதங்களில் ஒவ்வொரு முறையும் ஓர் ஊசியும் போட்டுக்கொண்டால் வாழ்நாள் முழுவதும் ஹெபடைட்டிஸ்-பி மஞ்சள் காமாலை வராது என்று உறுதியாகக் கூற முடியும். ஆனால் ஹெபடைட்டிஸ்ஏ , ஹெபடைட்டிஸ் சி போன்ற மற்ற காமாலை நோய்கள் வராது எ ன்று கூற இயலாது.
Dr,Question answers about health
Dr,Question answers about health
வாய் மற்றும் நாக்குகளில் காயம் ஏற்பட்டால் உடனே ஆறிவிடுவதன் காரணம் என்ன?
*ப:வாயில் எந்நேரமும் உமிழ்நீர் சுரந்து கொண்டே இருக்கிறது. அதை அடிக்கடி நாம் விழுங்குகிறோம். அப்போதெல்லாம் வாயில் அல்லது நாக்கில்உள்ள காயத்தில் அழுக்கும் சேர்ந்து விழுங்கப்படுகிறது. அதனால் காயம் சுத்தமடைகிறது . இம்மாதிரியே நாம் சாப்பிடும்போது வாயைக் கொப்பளிக்கும்போது காயத்தின் அழுக்கு நீக்கப்பட்டு சுத்தமாகிறது.இந்த சுத்தமே வாய் மற்றும் நாக்குகளில் ஏற்படும் காயங்களை விரைவில் குணமாக்குகிறது.
*கே: சராசரி மனிதனின் காதுகள் தாங்கக்கூடிய அதிக பட்ச அதிர்வு எவ்வளவு ?
*ப:சுமார் இருபது முதல் இருபதாயிரம் ஹெர்ட்ஸ் வரை உள்ள ஒலி அதிர்வுகளைக் காதுகள் தாங்கும். இதற்கும் அதிகமாக அதிர்வுகள் நுழைந்தால் காதுகள் இரையும்.
*கே: மனிதர்களுக்கு இருப்பது போல் மிருகங்களுக்கும் ரத்தப்பிரிவு உண்டா?
*ப:உண்டு.ஏ,பி,ஓ மூன்று வகை ரத்தப் பிரிவுகளும் Rh பாசிட்டிவ் Rhநெகட்டிவ் என்ற Rh பிரிவுகளும் மிருகங்களுக்கு உள்ளன. ஆனால் மிருகத்தின் ரத்த அணுக்களின் அளவு,அடர்த்தி,கனபரிமாணம் எண்ணிக்கை ரத்த உறைநிலை, குரோமோசோம்களின் எண்ணிக்கை போன்றவை மனித ரத்தத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளன. இதுவே மிருக ரத்தத்தை மனித ரத்தத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.
Dr,Question answers about health
Dr,Question answers about health
*கே: கை, கால்களில் உள்ள நகங்கள் சொத்தை ஆவதற்கு என்ன காரணம்? இதனைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
*ப: ட்ரைக்கோஃபைட்டன்ரூப்ரம் என்ற காளான் கிருமிகள் நகங்களைத் தாக்கும்போது நகங்கள் சொத்தையாகின்றன. இதனைக் குணப்படுத்த களிம்புகள் அவ்வளவாக உதவாது மாறாக, வாய்வழிக்காளான் கொல்லி மாத்திரைகளைச் சுமார் ஆறு மாதங்கள் முதல் ஓராண்டு வரை தொடர்ச்சியாகச் சாப்பிட்டு வந்தால் நோய் பூரணமாக குணமாகும். மேலும் நகங்களைச் சுத்தமாக வைத்திருந்தால் நகச்சொத்தை ஏற்படுவதில்லை. அடிக்கடி விரல்களைத் தண்ணீரில் முக்குவதைத் தவிர்க்க வேண்டும்.இயலாவிட்டால் விரல்களுக்கு காப்புறை அணிந்துகொள்ளலாம்.
*கே: காய்ச்சாத பாலைக் குடிக்கலாமா?
*ப:குடிக்கக்கூடாது. காய்ச்சாத பாலில் நோய்த்தொற்றை உண்டாக்கும். கிருமிகள், ஒட்டுண்ணிகள், நச்சுகள், போன்ற வைஇருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. பாலைக் காய்ச்சாமல் குடித்தால் அவை நோய்களை உற்பத்தி செய்யும். அதே சமயம் பாலைக் காய்ச்சிவிட்டாலோ அக் கிருமிகள் செத்தொழியும். நமக்கும் ஆபத்தில்லை. அவதியில்லை. இதனால் எப்போதும் பாலைக் காய்ச்சிக் குடிப்பதே நல்லது.