ஆரோக்யம் சம்பந்தமான சந்தேகத்திற்கு டாக்டர் கேள்வி -பதில் :பகுதி 7

ஆரோக்யம் சம்பந்தமான சந்தேகத்திற்கு  டாக்டர் கேள்வி -பதில் :பகுதி 7

உடல் ஆரோக்யம் சம்பந்தமாக டாக்டர் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார்  (கோப்பு படம்)

dr.question and answers , about health நம் உடல் ஆரோக்யம் சம்பந்தமான கேள்விகளுக்குடாக்டரிடம் சிகிச்சைக்கு செல்லும்போது கேட்க முடியாது. இதுபோல் பதில் அளிக்கும் டாக்டர்களிடம் நம்சந்தேகங்களைக் கேள்விகளாக கேட்டு தீர்த்துக்கொள்ளலாம்...வாங்க.....படிங்க...

dr.question and answers , about health

மனிதர்களுக்கு நோய்கள் எப்படி தாக்குகிறது? யாருக்காவது தெரியுமா? நாம் நம்முடைய உடல் ஆரோக்யத்தில் போதிய அளவு அக்கறை காட்டாத போது மாறுபட்ட செயல்கள் நடப்பதால் நம் உடல் பாதிப்படைகிறது. இதனால் நோய்கள் உண்டாகிறது.எப்போதும் போல் இருந்தால் எந்த பிரச்னைகளும் வராது. மாறுபட்ட செயல்பாடுகள் என்பது புதிய வகை உணவுகள், குடிநீர், நாம் வாழும் சுற்றுப்புறத்தில் உள்ள அசுத்த கேடுகள், உள்ளிட்டவைகளால் நம் உடல் பாதிப்படைந்து நோய்கள் தாக்குகிறது. இதனை ஆரம்பத்திலேயே கண்டுவிட்டால் நமக்கு எந்த வித பாதிப்புகளும் இல்லை. ஆனால் பெரும்பாலானவர்கள் அலட்சியமாக இருந்துவிட்டு நோய் முற்றிய பின் முண்டியடித்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடுவார்கள். நோய் முற்றிவிட்டால் டாக்டர்களால் கூட குணப்படுத்த முடியாத நிலையே ஏற்படும். சரிங்க...இதுக்கு யார் காரணம்? நாம் தாங்க காரணம்? அலட்சிய மனப்பான்மையால் நம்ஆரோக்யம் வீணாகிவிடுகிறது என்பது உங்களுக்கு புரிகிறதா?- இனியாவது உஷாரா இருங்க...

கே: சிறுகுடல் புற்று நோய் எதனால் வருகிறது?

ப:சிறுகுடல் புற்று நோய்க்குக் காரணம் என்னவென்று இன்னும் தெரியவில்லை. பரம்பரை அம்சம் மற்றும்புகை பிடித்தல், சிறுகுடலுக்கு ஊறுவிளைவி்க்கும் உணவு வகைகள், சில வைரஸ்கள் ஆகியவை காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

dr.question and answers , about health


dr.question and answers , about health

கே: ஒருவர் இறந்துவிட்டார் என்பதை உறுதிசெய்ய டாக்டர்கள் கண்களைப் பரிசோதனை செய்வதன் காரணம் என்ன?

ப: உயிரோடு இருப்பவரின் கண்களில் டார்ச் விளக்கு ஒளியைச் செலுத்தினால் கண்ணின் பாப்பா சுருங்கும். ஒளியை நீக்கிவிட்டால்மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி விடும். இறந்தவரின் கண்களில் ஒளியைச் செலுத்தினால் பாப்பா இயல்பு நிலைக்கு அதிகமான நிலையில் விரிந்து இருக்கும். எவ்வளவு ஒளியைச் செலுத்தினாலும் அது மீண்டும் சுருங்காது. இதைப் பரிசோதிக்கவே டாக்டர்கள் நோயாளியின் கண்களில் ஒளியைப் பாய்ச்சி பார்க்கிறார்கள். மரணத்தினை உறுதி செய்கிறார்கள்.

கே: தண்ணீர் அதிகம் குடித்தால் சிறுநீரக பாதிப்பு வருமா?

ப: அதிகமாக தண்ணீர் குடிப்பது சிறுநீரகத்திற்கு நல்லதுதான். உடல் கழிவுகள் உடனடியாக வெளியேறுவதற்கு இது உதவும். சிறுநீரகம் வறட்சியடையாமல் இருப்பதற்கு இது வழி செய்யும். சிறுநீரக கற்கள் உருவாகாமல் இருப்பதற்கும், இது உதவு புரியும். சிறுநீரக கடுப்பு வராமல் தவிர்க்க அதிகமாகத் தண்ணீர் குடிப்பதுதான் நல்ல வழி .

கே: மூக்குப் பொடி போடலாமா?

ப:மூக்குப் பொடி போடுவது நல்லதல்ல. புற்று நோய் வர வாய்ப்புள்ளது.

கே: கண்நோயினால் பாதிக்கப்படுபவர்கள் வெல்டிங் வேலைசெய்வதால் பிற்காலத்தில் பாதிப்பு வருமா?

ப:பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு. வெல்டிங் வேலை செய்யும்போது உண்டாகின்ற அதிகமான ஒளிக்கதிர்கள் கண்களைத் தாக்கும். இதனால் ஏற்கனவே கண்ணிலுள்ள பாதிப்பு அதிகமாகிவிடும். கண்ணில் ஏற்படும் வலியில் தொடங்கி பார்வை இழப்பு வரை எந்தப்பாதிப்பும் இவர்களுக்கு வரலாம். எச்சரிக்கை அவசியம்.

dr.question and answers , about health


dr.question and answers , about health

கே: வயிற்றுப்புண்ணைக் குணப்படுத்த ஒரு வழி?

ப: வயிற்றுப்புண்ணைக் குணப்படுத்த அதன் காரணத்தைக் கண்டுபிடித்து சிகிச்சை அளிப்பதுதான் ஒரே வழி. மன உளைச்சலைத் தவிர்த்தல், வேளா வேளைக்கு உணவு அருந்துதல் ,புகை பிடிக்காமல் இருத்தல் , காரமான உணவு வகையினைத் தவிர்த்தல்,. அமில எதிர் மருந்துகளைச் சாப்பிடுதல் போன்றவை நல்ல பலனளிக்கும். இதிலும்ப லன் இல்லையெனில் அறுவை சிகிச்சைத் தேவைப்படும்.

கே: ஒரு நாள் காதில் சீழ் வந்தது. சிகிச்சை செய்யமலே நின்று விட்டது. இதனால் பின்விளைவுகள் உண்டா?

ப:தொண்டையில் ஏற்படுகின்ற நோய்த்தொற்று காதுக்கு செல்வதால்தான் காதில் சீழ் வடிகிறது. இந்த அடிப்படைக் காரணம் சரியாகிவிட்டால் காதில் சீழ் வடிவதும் நின்று விடும். ஒருமுறை காதில் சீழ் வடிந்தால் பின்விளைவு எதுவும் ஏற்படாது. அடிக்கடி இது ஏற்படுமானால் செவிட்டுத்தன்மைக்கு அடித்தளம் போடும்.

கே: இருமினால் சிறுநீர் வருகிறது? இது எதனால்?

ப:இருமினால் சிறுநீர் வெளியேறுவது பெரும்பாலும் பெண்களில் காணப்படுகிறது. குழந்தை பிறந்த பின்னர் கூபகத்தசைகள் தளர்வடைவதால் சிறுநீர் பாதையின் சுருக்குத் தசைகள் தளர்வடைவதால் இந்நிலைஏற்படுகிறது. முதுமையிலும், புரோஸ்டேட் சுரப்பியின் நோயாலும், நீரிழிவு நோயாலும் இந்நிலை உண்டாகிறது அறுவை சிகிச்சை ஓரளவுக்குத்தான் பலனளிக்கும்.

கே: புற்றுநோய்க்கும் ரத்த புற்றுநோய்க்கும் வித்தியாசம் என்ன?

ப:புற்று நோய் என்பது பொதுவான பெயர் ரத்தப்புற்றுநோய் அதில் ஒருவகை புற்றுநோய். நம் உடலில் உள்ள எந்த அணுக்களையும் தாக்கலாம். ரத்தப்புற்றுநோய் ரத்த அணுக்களில் மட்டும் ஏற்படுகிறது. புற்றுநோயின் வகையைப் பொறுத்த உடலில் அறிகுறிகள் தோன்றுவது வேறுபடும். பரிசோதனை முறைகள் வித்தியாசப்படும். சிகிச்சை மற்றும் நிவாரணம் எல்லாமே மாறுபடும்.

dr.question and answers , about health


பாக்டீரியா மாதிரிப்படம் (கோப்பு படம்)

dr.question and answers , about health

கே: கம்பளி ஆடைகள் உடலை சூடேற்றக் காரணம்என்ன?

ப:மற்ற ஆடைகளைவிடக் கம்பளி ஆடைகள் தடிமனாகவும், நெருக்கமாகவும் பின்னப்பட்டிருக்கும். அவற்றின் வெப்பத்தைக் கடத்தும் திறன் மிகக் குறைவு. அவை உடலின் வெப்பத்தை வெளியேறாமல் தடுப்பதால் சூடேற்படுவதைப் போலத் தெரிகிறது. அவை சூட்டை உண்டாக்குகின்றன.

கே: பாக்டீரியா தாக்குதல் வராமல் தடுக்க என்ன செய்யலாம்?

ப:இதற்கு ஆறு வழிகளை நாம் அவசியம் கடைப்பிடிக்க வேண்டும். 1.சுத்தமான தண்ணீரைக் குடிக்க வேண்டும். 2. சுத்தமான காற்றைச் சுவாசிக்க வேண்டும். 3. சுயசுத்தம் பேண வேண்டும். 4,சுற்றுப்புறத்தையும் வெகு சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். 5.உடலில் எதிர்ப்புச் சக்தியை ஊக்குவிக்கும் சத்துள்ள உணவினை உண்ண வேண்டும். 6.தடுப்பூசிகளைக் காலத்தோடு போட்டுக்கொள்ள வேண்டும்.

dr.question and answers , about health


dr.question and answers , about health

கே: விக்கல் எதனால் தோன்றுகிறது?

ப:குரல்வளை மூடியிருக்கும்போது உதரவிதானம் வயிற்றுக்கும் மார்புக்கும் இடையேயுள்ள பிரிசுவர் சுருங்கும்போது விக்கல் உண்டாகிறது. அவசரமாகச் சாப்பிடும்போது சில சமயம் உணவுப்பொருள் உணவுக்குழலுக்குள் செல்வதற்குப் பதிலாக மூச்சுக் குழலுக்குள் சென்றுவிடும்போது அதை அகற்ற விக்கல் உண்டாகிறது. இது தீங்கற்றது. ஆனால் மூளைச்சுழற்சி மற்றும் மூளைத் தண்டுக்காயம், மாரடைப்பு நோய், நுரையீரல் அழற்சி, இரைப்பை உப்புசம், கணைய அழற்சி பெரிடோனிய அழற்சி, சிறுநீரகக் கோளாறு ஆகியவற்றிலும் அனிச்சைச் செயலாக விக்கல் உண்டாகிறது. இதனால்மனிதன் சோர்வடைந்து உண்ணுவதும் மூச்சுவிடுதலும் பாதிக்கப்படுகிறது.

கே: நரம்பு ஊசிகள் போடுவதால் நரம்பு உணர்ச்சிகள் பாதிக்கப்படுமா?

ப:பாதிக்கப்படாது. நாம் பேச்சு வழக்கில்தான் நரம்பு ஊசிகள் என்றுசொல்கிறோமே தவிர நடைமுறையில் நரம்பு ஊசிகளை நரம்பில் போடுவதில்லை. சிரைக்குழாய் என்று அழைக்கப்படுகிறது. அசுத்த ரத்தக்குழாய்களில் தான் போடுகிறோம். இதனால் நரம்புகளுக்குப் பாதிப்பு வருவதில்லை.

கே: சராசரி மனிதர்களுடைய இருதய எடை-?

ப: சராசரி மனிதனுடைய இருதய எடை 340 கிராம்கள் ஆகும்.

கே: டானிக் பாட்டில்கள் பிரெளன் கலரில் இருப்பதற்கு காரணம் உண்டா?

ப:உண்டு. டானிக் பாட்டில்களில் உள்ள மருந்து அல்லது சத்துப்பொருள் நெடுங்காலம் பாதுகாப்பாக இருக்க வேண்டியிருக்கும். இவற்றைக் குளிர்சாதனப் பெட்டியில் வைக்க முடியாது. கடைகளில் வெளிப் பார்வைக்குத் தெரிகிற மாதிரிதான் வைக்க வேண்டியிருக்கும். அப்போது சூரிய வெளிச்சம் பாட்டிலுக்குள் உள்ள பொருளைக் கெடுத்துவிடக்கூடாதல்லவா? அதற்காகத்தான் சூரிய வெளிச்சம் பாட்டிலுக்குள் அவ்வளவாகப் புகா வண்ணம் தடுக்கின்ற பிரெளன் பாட்டில்களை டானிக் பாட்டில்களுக்குப் பயன்படுத்துகிறார்கள்.

கே: தாடையில் படர்போல் தேமல் தோன்றக் காரணம் என்ன?

ப:இது விலங்குகளிடமிருந்து வரும் ஒரு வகைக் காளான் தொற்று நோயுள்ள ஒருவருக்கு மழித்த கத்தியால் நோயற்ற ஒருவருக்கு மழிக்கும்போது தொற்று நிகழவாய்ப்புண்டு. இத்தொற்றுக்கு நல்லமருந்துகள் உள்ளன. தோல் டாக்டரின் மேற்பார்வையில் பயன்படுத்த வேண்டும்.

dr.question and answers , about health


dr.question and answers , about health

கே: காளான் சாப்பிடுவது நல்லதா?

ப:நல்லதுதான். காளானில் புரதச்சத்து கொழுப்புச்சத்து, மாவுச்சத்து உள்ளன. உடலுக்கு சக்தி தருகின்ற சத்துணவு இது என்றாலும் காளான் விஷயத்தில் சிறிது எச்சரிக்கையாவும் இருக்க வேண்டியது முக்கியம். எல்லா வகைக் காளான்களையும் நாம் சாப்பிட முடியாது. உண்ணுவதற்கேற்றவை, தவிர்க்க வேண்டியவை என இருவகைக் காளான்கள் உள்ளன.இரண்டாம் வகையில் எச்சரிக்கை தேவை. ஏனென்றால் அவை கல்லீரலைப் பாதித்து உயிரை மாய்த்துவிடக்கூடும். உ-ம்- அமெனிட்டா, காளெரினா காளான்கள்.

(இன்னும் வளரும்....)

நன்றி : டாக்டர். மாணிக்கவேல்

Tags

Read MoreRead Less
Next Story