dr question and answers about our health ஆரோக்யத்தைப் பாதுகாக்க டாக்டர்- கேள்வி பதில் பகுதி :9 படிச்சு பாருங்க.....
dr question and answers about our health நாம் சிகிச்சைக்காக டாக்டரிடம் செல்லும்போது நம்முள் எழும் அனைத்து சந்தேகங்களையும் கேட்க முடிவதில்லை.காரணம் நேரமின்மை. இதுபோன்ற சந்தேகங்களுக்கு நிவாரணம் அளிப்பதுதான் இந்த பகுதி... படிச்சு பாருங்க...சந்தேகத்தைத் தீர்த்துக்கங்க.....
HIGHLIGHTS

ஆரோக்யம் சம்பந்தமான கேள்விகளைக் கேளுங்க...பதிலை தெரிஞ்சுக்கோங்க....(கோப்பு படம்)
dr question and answers about our health
மனிதர்களாகப் பிறந்த எவருமே நோய் பாதிப்பினால் பாதிக்கப்படவே இல்லை என்று எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?..... நிச்சயமாக இருக்கவே முடியாது. ஏதாவது ஒரு வயதில் நோய்கள் பாதிப்புக்கு ஆளாகியிருக்க வேண்டும்.. அல்லது வயதான காலத்திலாவது நோய்கள் பாதித்திருக்க வேண்டும் இதுதான் நியதி.
dr question and answers about our health
dr question and answers about our health
பிறந்ததிலிருந்து இறப்பு வரை எந்த நோயாலும் இவர் பாதிக்கப்படவில்லை என்று யாரையும் நாம் சொல்லிவிட முடியாது. அந்த வகையில் நோய்கள் எப்படி வருகிறது? . இதற்கு பல காரணிகள் சொல்லப்படுகிறது. முதலாவதாக நாம் வாழும் சூழ்நிலை சுத்தமாக பராமரிக்கப்பட வேண்டும். சுத்தம் இருக்கும் இடத்தில் பாதிப்புகள் வருவதற்கு குறைவு. இது மட்டுமல்லாமல் உடல் உழைப்பின்மை, உடற்பயிற்சியின்மை, உடல்ப ருமன், உள்ளிட்ட காரணிகளால் நோய்கள் நம்மைத் தாக்குகிறது. ஆனால் இன்றைய சமூகத்தில் பலரும் நோய்கள் முற்றிய பின்னர்தான்ஆஸ்பத்திரிக்கு படையெடுக்கின்றனர். ஒன்று மட்டும் தெரிந்து கொள்ளுங்க... அதாவது நம் உடல் செயல்பாட்டில் வழக்கமானதை விட எந்தவொரு சிறிய மாற்றமும் தென்பட்டாலே நாம் உடனடியாக டாக்டரைச் சந்தித்துவிடுவது சாலச்சிறந்தது. அதனை அப்படியே விட்டு விட்டு பின்னர் பாதிப்பு அதிகம் வந்தபின்னர் ஆஸ்பத்திரிக்கு செல்லும்போது நோயானது முற்றி விடுகிறது. ஒரு சில நோய்கள் விபரீத விளைவையும் ஏற்படுத்தும். என்னதான் நாம் பரபரப்பாக இருந்தாலும் உடல் ஆரோக்ய விஷயத்தில் தயவு செய்து தினமும் அக்கறை கொள்ளுங்க...எந்த வலியானாலும் சாதாரணமானது என நீங்களே தயவு செய்து முடிவெடுக்காதீர்கள்.. அந்த முடிவை டாக்டர் எடுக்கட்டும்...டாக்டரிடம் சென்று பரிசோதித்து கொள்ளுங்க.... சரி நமக்கு ஏற்படும் சந்தேகங்களை டாக்டரிடம் கேட்டு அ றிந்துகொள்வோம் வாங்க...
dr question and answers about our health
dr question and answers about our health
கே:டாக்டர்கள் ஸ்டெத்தாஸ்கோப்பை வைத்துப் பரிசோதிக்கும்போது மூச்சை இழுத்துவிடச் சொல்கிறார்களே ஏன்?
ப: நம் நுரையீரல்களைத் தெளிவாகப் பரிசோதிப்பதற்குத்தான் டாக்டர்கள் மூச்சை இழுத்துவிடச் சொல்கிறார்கள். சாதாரணமாக நாம் மூச்சை உள்ளே இழுக்கும்போதும், வெளியே விடும்போதம் நுரையீரல்களுக்குள் சத்தம் எழும்பும். சில நோய்களின் போது, இந்த சத்தத்தில் மாறுதல்கள் உண்டாகும். ஒவ்வொரு நோய்க்கும் ஒரு வித சத்தம் கேட்கும். அதை டாக்டர்கள் அறிவார்கள். அவர்கள் ஸ்டெத்தாஸ்கோப்பை மார்பிலும், முதுகிலும் வைத்துக் கேட்பது அந்தச் சத்தங்களைத்தான். சத்தத்தில் ஏற்படும் மாறுதல்களைப் பொறுத்து நோய்களை நிர்ணயிப்பார்கள். சமயங்களில் நோயின் ஆரம்பக் கட்டத்திலும் முதுமையிலும் இந்தச் சத்தங்கள் தெளிவாகக் கேட்காது. அதே சமயம் மூச்சை இழுத்துவிட்டால் அப்போது தெளிவாக கேட்கும். அதற்காகத்தான் அப்படி மூச்சை இழுத்துவிடச் சொல்கிறார்கள்.
கே:உடலில் ஏற்படும் வெள்ளைப் புள்ளிகள் எதன் குறைவால் உண்டாகின்றன?
ப:தோலுக்குக் கறுப்பு நிறத்தைத் தரக்கூடிய மெலனின் எனும் நிறமிகள் குறையும்போது உடம்பில் வெள்ளைப் புள்ளிகள் தோன்றும்.
கே:கல்லீரலைச் சுத்தப்படுத்த முடியுமா?
ப: முடியாது. சிறுநீரகங்களைச் சுத்தம் செய்வதற்குக் கருவிகள் இருப்பதைப் போலக் கல்லீரரைச் சுத்தம் செய்வதற்கு இதுவரை கருவிகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. பதிலாக கல்லீரலில் ஆபத்தான நோய்கள் ஏற்பட்டு அது முழுமையாகப் பழுதாகிவிட்டால், கல்லீரல் மாற்றுச் சிகிச்சையை மேல்நாடுகளில் மேற்கொள்கிறார்கள். இந்தச் சிகிச்சை முறை நம் நாட்டிற்கும் விரைவிலேயே வந்துவிடும்.
dr question and answers about our health
dr question and answers about our health
கே:இருதயத்திலிருந்து புறப்படும் ரத்தம் மீண்டும் இருதயத்தை அடைய எவ்வளவு நேரம் ஆகும்?
ப:இருதயத்திலிருந்து புறப்படும் ரத்தம் மீண்டும் இருதயத்தை அடைய ஒரு வினாடிக்குள் குறைந்த நேரம் பிடிக்கும்.
கே:உடம்பில் தையல் போட டாக்டர்கள் பயன்படுத்தும் செயற்கை நரம்புகள் எந்த இழையைக் கொண்டு செய்யப்படுகிறது?
ப:உடம்பில் தையல் போடுவதற்கு பயன்படும் செயற்கை இழைகள் இரு வகைப்படும். 1. உடம்பினுள் உட்கவரும் தன்மை உடையவை.(absorable sutures)2.உட்கவரும் தன்மை இல்லாதவை (nonabsorable sutures) இவற்றில்முதல் வகை செயற்கை இழைகள் . ஆடுகளின் குடலிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இரண்டாம் வகை செயற்கை இழைகள் துணிநுால், நைலான், பட்டுநுால் போன்றவற்றால் தயாரிக்கப்படுகிறது.
dr question and answers about our health
dr question and answers about our health
கே: கால்நடைகளுக்குத் தயாரிக்கப்படும் மருந்துகளை மனிதன் உட்கொண்டால் என்ன விளைவுகள் ஏற்படும்?
ப:கால்நடைகளும் உயிரினங்கள் தானே. அவையும் கிருமிகளாலும், வைரசுகளாலும் வளர்சிதை மாற்றக் கோளாறுகளாலும், நாளமில்லாச்சுரப்பி நோய்களாலும், மனிதனைப் போலவே பாதிக்கப்படுகின்றன. ஆகவே மனிதனுக்குக் கொடுக்கப்படும் மருந்துகளே. அந்தந்த நோய்களைப் பொறுத்துக்கொடுக்கப்படுகின்றன. விலங்கினங்கள் அளவிலும் எடையிலும் அதிகமாக இருப்பதால் அதற்கேற்ப மருந்துகளின் அலகுகளும் அதிகரிக்கின்றன.
கே:கண்களைச் சுற்றிக் கருவளையம் உள்ளது. இது எதனால்? இதனைப் போக்குவது எப்படி?
ப:கண்ணிற்குக் கீழே உள்ள தோலில் மெலனின் என்ற நிறமிகள் மிகையாக படிவதால் கருவளையம் விழுகிறத. டாக்டர்கள் இதனை ஜெல்கின்சன் அறிகுறி என்கிறார்கள். தைராய்டு சுரப்பியின் பாதிப்பால் வரும் நோய் நிலைகளில் இது தோன்றுகிறது. சிலருக்கு பல ஆண்டுகள் தொடர்ந்து கண்ணாடி அணிவதால் கண்ணாடி ஃப்ரேம் அழுத்தி கருவளையம் உண்டாகிறது. இதனைப் போக்க தோல்நோய் நிபுணரிடம் பரிசோதித்துக் காரணம் தெரிந்து சிகிச்சை பெற வேண்டும்.
dr question and answers about our health
dr question and answers about our health
கே:முருங்கைக் கீரையில் என்னென்ன வைட்டமின்கள் உள்ளன? அவற்றால் எந்தெந்த நோய்களைக் குணப்படுத்த முடியும்?
ப:முருங்கைக் கீரையில் வைட்டமின் ஏ மற்றும் டி, ஈ,சி, பி காம்ப்ளக்ஸ், போன்றவை காணப்படுகின்றன. இதன் மூலம் கண் பார்வைக் குறைவு மாலைக்கண் ,எலும்பு மெலிவு, மலட்டுத்தன்மை, ஈறுகளில் ரத்தம் கசிவது, நரம்புத்தளர்ச்சி போன்ற பல நோய் நிலைகளுக்கு நிவாரணம் கிடைக்கும்.
கே:பல் ஈறுகளைப் பாதுகாப்பது எப்படி?
ப:தினமும் காலை, இரவு இரு நேரங்களில் பல்துலக்குங்கள். ஒவ்வொரு முறை உணவு உட்கொண்டபின்னரும் வாயை நன்றாக சுத்தப்படுத்துங்கள். இரவு படுக்கைக்குச் செல்லும் முன் காரட், வாழைப்பழம், சாப்பிடுவது நல்லது. இவை ஈறுகளில் சிக்கியிருக்கும் உணவுத்துகள்களை அப்புறப்படுத்தி, பற்களைச் சுத்தமாக்கி விடும். இனிப்புப் பண்டங்களை அளவுக்கதிகமாக உட்கொள்ள வேண்டாம். லவங்கம், சீரகம், பாக்கு போன்றவற்றை உபயோகிக்க வேண்டாம் . புகை பிடிப்பது, புகையிலை போடுவது, பான்மசாலா சாப்பிடுவது, போன்ற தீய பழக்கங்களை அண்ட விடாதீர்கள். கால்சியம் மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவுகளை அடிக்கடி உபயோகியுங்கள். பற்களில் கறை ஏற்பட்டால் உடனுக்குடன் பல் டாக்டரிடம் காண்பித்து கறை அகற்றி விடுங்கள்.
கே:தலைவலியோ, காய்ச்சலோ வந்தால் வாய் கசப்பது ஏன்?
ப:நாக்கில் சுவை மொட்டுகள் உள்ளன. காய்ச்சல் ஏற்படும் நிலையில் இந்த மொட்டுகளின் இயங்குதல் தன்மை கெடுவதால் வாயில் கசப்பு தென்படும். தவிர, எச்சி உமிழ்நீரின் தன்மை மாறுவதால் வாய்க்கசப்பு ஏற்படக்கூடும்.
dr question and answers about our health
dr question and answers about our health
கே:மாற்றுஇதயம், மாற்றுச் சிறுநீரகம் பொருத்திக்கொண்டவர்கள் அதிக நாட்கள் உயிர்வாழ முடியாதாமே ஏன்?
ப:தவறு . மாற்றுச்சிறுநீரகம் பொருத்திக்கொண்டவர்கள் அதிக காலம் உயிர் வாழலாம். எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் மாற்றுச்சிறுநீரகம் பொருத்திக்கொண்டு 15 ஆண்டுகள் ஆகின்றன. சமீபத்தில் அவரை நான் சந்தித்தேன். நலமாக உள்ளார். மாற்றுஇதயம் பொருத்துதல் இந்தியாவில் இன்னும் பிரபலமாகவில்லை. எனவே அதுபற்றிய தெளிவான விளக்கத்தை இப்பொழுது கூற இயலவில்லை.
கே:போதைப்பொருள்களால் சிறுநீரகம் பாதிக்கப்படுமா?
ப:போதைப்பொருட்களால் சிறுநீரகம் பாதிக்கப்படலாம். அதே போல் கல்லீரலும் பாதிக்கப்படலாம்.
கே:பீடியாட்ரிசன், கைனகாலஜிஸ்ட் என்பவர்கள் யார்?
ப:பீ்டியாட்ரிசன், என்பவர் குழந்தைகள் மருத்துவத்தில் சிறப்புத்தகுதி பெற்ற மருத்துவ நிபுணர். கைனகாலஜிஸ்ட் என்பவர் மகப்பேறு மருத்துவ நிபுணர்.
கே:பனிக்காலங்களில் உதடு வெடிப்பது ஏன்?
ப:உதட்டுத் தோலில் ரத்த ஓட்டம் ஓரளவு குறைவதால் வெடிப்புகள் ஏற்படக்கூடும்.
கே:டாக்டர்கள் நோயாளிகளின் கண்களை வெளிச்சம் செலுத்திப் பார்ப்பது ஏன்?
ப:வெளிச்சத்தில் கண்ணின் வெளிப்பாகங்களை நன்றாகப்பார்த்துப் பரிசோதிக்க முடியும் என்பதுதான் காரணம். மற்றொரு காரணம் கண்ணிலுள்ள கண்மணி வெளிச்சம் செலுத்தும்போது சுருங்கும். வெளிச்சம் விலகியதும் அது விரியும். இந்த சகஜமான செயல் சில கண் மற்றும் உடல் நோய்களால் மாறும். இதைத் தெரிந்துகொள்ளவே கண்ணில் வெளிச்சம் செலுத்திப் பார்க்கிறோம்.
dr question and answers about our health
dr question and answers about our health
கே:காயங்கள் ஆறியபின் தழும்புகள் ஏற்பட என்ன காரணம்? பிளாஸ்டிக் சர்ஜரியில் இதுபோன்ற தழும்புகள் ஏற்படவில்லையே ஏன்?
ப:காயங்கள் ஆறும்போது குறுமணி ‘வளர்திசு என்ற புதிய திசு காயம் முழுவதுமே வளர்ந்து தோல் போல் மூடுகிறது. இந்த திசுவிற்கும் தோலுக்கும் வித்தியாசம் உண்டு. அதனால்தான் காயங்கள் ஆறியபின் இந்த இடங்களில் தழும்பு ஏற்படுகிறது. ஆனால் ஒட்டறுவை சிகிச்சையில் உடம்பிலிருந்து வேறு தோலை எடுத்து காயமேற்பட்ட பகுதியில்இ ணைக்கிறார்கள். இதனால் தோலில் வித்தியாசம் ஏற்படுவதில்லை. அதன் விளைவாகத்தழும்புகளும் தெரிவதில்லை.
கே:எலும்பு முறிந்து விட்டால் மனிதன் செய்ய வேண்டிய முதலுதவி என்ன?
ப:முறிந்த எலும்பை அசையவிடாமல் கட்டுப்போட வேண்டும். இதற்கு தடிப்பான மரக்குச்சி மூங்கில் தப்பை அல்லமு மர ஸ்கேலைப் பயன்படுத்தலாம். மரக்குச்சி, அல்லது மர ஸ்கேலை எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் இருபக்கங்களிலும் வைத்து துணியால் இறுகச் சுற்றிக் கட்டவேண்டும். பாதிக்கப்பட்ட எலும்புகள் உள்ள பகுதியைத் தொங்க விடக்கூடாது. சற்றே உயரத்தில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான்முறிந்த இடத்தில் வீக்கம் ஏற்படாது. அதன்பிறகு அந்த நபரை அருகிலுள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்று தேவையான மருத்துவ சிகிச்சையைத் தொடங்க வேண்டும்.
dr question and answers about our health
dr question and answers about our health
கே:எனக்கு கண்கட்டி அடிக்கடி வருகிறது. அதைப் போக்குவதற்கு என்ன செய்ய வேண்டும்? கண் கட்டி ஏன் வருகிறது?
ப: கண் இமைகளின் அடியிலுள்ள சுரப்பிகள் ஸ்டெபிலோ காக்கஸ் எனும் பாக்டீரியா கிருமிகளால் பாதிக்கப்படும்போது அழற்சி ஏற்பட்டு கண் கட்டி வருகிறது. முறையான கிருமிக் கொல்லிமருந்துகளை உபயோகித்தால் கண்கட்டி குணமாகும். முகத்தை அடிக்கடி கழுவி கண்களைச்சுத்தமாக வைத்துக்கொண்டால் அடிக்கடி கண்கட்டி வராது.
நன்றி:டாக்டர். மாணிக்கவேல்.