ஆரோக்யத்துக்கு பயனளிக்கும் டாக்டர் கேள்வி -பதில் : பகுதி-8

ஆரோக்யத்துக்கு பயனளிக்கும்  டாக்டர் கேள்வி -பதில் : பகுதி-8

நம் உடல் நல ஆரோக்யம் , மற்றும் உள்ள பிரச்னைகள் குறித்து டாக்டர் பதில் அளிக்கிறார் (கோப்பு படம்)

Dr question and answers , about health நம் உடல் ஆரோக்யம், நோய்கள் பற்றி நமக்கு பல ஆயிரம் சந்தேகங்கள் வருகிறது. ஆனால் அனைத்தும் டாக்டர்களிடம் நேரிடையாக கேட்க முடியாது. இதற்காகவே டாக்டர்களின் கேள்வி- பதில் பகுதி...படிச்சு பாருங்க...

Dr question and answers , about health

மனிதர்களாகப் பிறந்தாலே நோய்நொடிகள் எதுவும் இல்லாமல் வாழ்ந்திட முடியாது. எண்ணிக்கையினை வேண்டுமானால் குறைக்கலாம். ஆனால் என்னை நோயே தாக்கியதில்லை என எவரும் மார்தட்டிக்கொள்ள முடியாது. அந்த வகையில் ஒவ்வொருவருக்கும் அவரவர்களின் உடல் நிலைக்கு ஏற்ப பாதிப்புகள் வரத்தான் செய்கிறது. அதற்கு சிகிச்சை மேற்கொண்டு நாம் சரி செய்து கொள்வது வாடிக்கையான நிகழ்வு. அந்த வகையில் நம் ஆரோக்யத்தினைப் பற்றி நாம் டாக்டரிடம் செல்கையில் முழு சந்தேகங்களையும்கேட்க முடியாது. காரணம் அவருக்கு நேரம் இருக்காது. இதனால் நமக்கு ஏற்படும் ஆரோக்யம் குறித்த சந்தேகங்களுக்குடாக்டர்கள் விளக்கமளிக்கும்பகுதியை நாம் பார்க்க உள்ளோம். இதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு டாக்டர் பதில் அளிக்கிறார். இரண்டையும் படிங்க.... படிச்சு பாருங்க...

Dr question and answers , about health


Dr question and answers , about health

*கே: நம் கால்களில் அடிபட்டுவிட்டால் ரத்தம் நின்றபின்னரும் ஒரு வித நீர் இருக்கிறதே ஏன்?

*ப:காலில் அடிப்பட்டவுடன் ஒழுகும் ரத்தம் உறையப் பல பொருள்கள் ரத்தத்தில் உள்ளன. இவை அனைத்தும் உன்று சேர்ந்து ரத்த உறைவை ஏற்படுத்துகிறது. ரத்த உறைவு முடிந்தவுடன் எஞ்சியுள்ளது செல்கள் இல்லாத ரத்த வடிநீர் தான் அது. அதனால் எந்தவித தீமையும் கிடையாது.

*கே: மாரடைப்பு பெரும்பாலும் அதிகாலை நேரத்திலேயே வருவது ஏன்?

*ப: முதல் நாள் இரவில் நன்கு ஓய்வு எடுத்துவிட்டு காலையில் பரபரப்பாக இயங்குவதுதான் . காலை நேரத்தில் மாரடைப்பு வருவதற்குக் காரணமாக அமைகிறது. எப்படியெனில் எழுந்ததும் பரபரப்பாக இயங்க துவங்கும்போது உடலின்இயல்பான செயல் சுழற்சிகள் மற்றும் இயக்குநீர் இயக்கங்கள் மாறுபடுகின்றன. இவை இதயத்துக்கு செல்லும் ரத்த ஓட்டத்தினைத் தடைச் செய்கின்றன.

விளைவு, மாரடைப்பு இம்மாதிரியான அசம்பாவிதங்களைத் தவிர்க்கவே காலையில் எழுந்ததும் நடைப்பயிற்சி, மெல்லோட்டம் , யோகாசனம், தியானம், உடற்பயிற்சிகள் ஆகியவற்றில் ஒன்றை அவசியம் மேற்கொள்ள வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Dr question and answers , about health


Dr question and answers , about health

*கே: இருமல் எப்படி உண்டாகிறது,?

*ப:இருமல் என்பது ஒரு தற்காப்பு அனிச்சைச் செயலாகும். ஏதாவது ஒரு அயற்பொருள் தொண்டையினுள் சென்றவுடன் மூச்சுக் குழலின் சிலேட்டுமப் படலமோ. இந்த பகுதிக்கு நரம்பூட்டம் அளிக்கும் 10 வது கபால நரம்பான வேகஸ் நரம்பு துாண்டப்படும்போது இருமல் உண்டாகிறது. மூடிய குரல்வளை மூடிக்கு எதிராக மார்பு உள்ளழுத்தம் அதிகரித்து மூச்சு வெளிவிடல் நடைபெறும்போது இருமல் உண்டாகிறது.

*கே: சிறுநீர் மஞ்சள் நிறமாக வருவது ஏன்?

*ப:ஆரோக்யமாக உள்ள ஒருவருடைய சிறுநீர் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். சிறுநீரில் 95 சதவீதம் தண்ணீரும், 5 சதவீதம் கழிவுப் பொருள்களும் உள்ளன. கழிவுப் பொருட்களில் கரிமப் பொருள்களும் கனிமப் பொருள்களும் அடங்கும். யூரியா,யூரிக் அமிலம், கிரியேட்டினின் போன்றவை கரிமப் பொருள்கள் சோடியம், கந்தகம், பாஸ்பரஸ், பொட்டாசியம் உப்புகள், கனிமப்பொருள்கள். இந்த இருவகைக் கழிவுப் பொருள்கள்தான் சிறுநீருக்கு வெளிர் மஞ்சள் நிறத்தைத் தருகின்றன. காய்ச்சல், சிறுநீர்க்கடுப்பு , மஞ்சள் காமாலை, மாத்திரைகளின் பக்க விளைவுகள் போன்றவற்றின் காரணமாக சிறுநீரின் மஞ்சள் நிறம் அதிகரிப்பதுண்டு.

Dr question and answers , about health


Dr question and answers , about health

*கே: சர்க்கரை நோயாளிகளுக்கு காயங்கள் விரைவில் குணமாவதில்லை ஏன்? என்ன காரணம்?

*ப:சர்க்கரை நோயாளிகளுக்கு காயங்கள் விரைவில் குணமாகாமல் இருப்பதற்குக் காரணம் ரத்தத்தில் குளுகோஸின் அளவு அதிகமாக இருப்பதால்தான். ரத்தத்தில் குளுக்கோஸின் சகஜ அளவு 80-120 மில்லிகிராம் சதவீத கிருமிகள் வளர்ச்சியடைந்து இனப்பெருக்கமடைய குளுக்கோஸ் நல்ல ஊடகமாகும்.

*கே: பற்களை ஆரோக்யமாக வைத்திருக்க என்ன வழி?

*ப:குழந்தைப் பருவத்தில் இருந்தே பற்களைச் சுத்தமாக வைத்திருக்க பெற்றோர்கள் அக்கறை காட்டவேண்டும். காலை, இரவு இரண்டு நேரமும் பல் துலக்க வேண்டும். இனிப்புமற்றும் மாவுப் பதார்த்தங்களைச் சாப்பிட்டவுடன் வாய் கொப்பளிக்க வேண்டும். பால்,ப ழம், காய்கறி,கீரை வகைகளை அவசியம் உணவில் சேர்க் கவேண்டும். புகை பிடிக்கக்கூடாது. புகையிலை போடக்கூடாது. வெற்றிலை, பாக்கு, பான் மசாலா, போன்றவற்றை உபயோகிக்க கூடாது. சாம்பல், செங்கல், உமி, உப்பு இவற்றால் பல் துலக்க கூடாது.

Dr question and answers , about health


Dr question and answers , about health

*கே: சிலருக்கு எல்லா நேரமும் ஏப்பம் வந்து கொண்டிருக்கிறதே? ஏன்?

*ப:இரைப்பையில் உணவு செல்லும்போது கூடவே காற்றும் விழுங்கப்படுகிறது. தவிர இரைப்பையில் உள்ள அமிலம் காரணமாக வாயுக்கள் உண்டாக்கப்படலாம. ஒரு அளவுக்கு மேல் வாயு சேர்ந்தால் ஏப்பமாக வெளியே வருகிறது. சிலருக்கு காற்றை விழுங்கும் பழக்கம் இருக்கலாம். தவிர இரைப்பை வியாதி காரணமாக அடைப்பு காரணமாக, வாயு சேர்ந்து அவ்வப்போது ஏப்பமாக வெளிவரக்கூடும்.

*கே: ஒரே பொருளைத்தொடர்ந்து 10 நிமிடம் பார்த்தால் கண்களில் தண்ணீர் வருகிறதே ஏன்?

*ப:பார்வைக்கோளாறு தான் காரணம். இந்தக் கோளாறு இருக்கும்போது கண் தசைகள் சீக்கிரத்தில் தளர்ச்சி பெற்று விடுவதால் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டும். உடனடியாக கண்களைப் பரிசோதித்துக்கொள்வது நல்லது.

Dr question and answers , about health


Dr question and answers , about health

*கே: மெட்ராஸ் ஐ கண்நோய் எதனால் உண்டாகிறது?பரவாமலிருக்க என்ன வழி?

*ப: மெட்ராஸ்ஐ என்பது அடினோவைரஸ் எனப்படும் மிகச்சிறிய நுண்கிருமிகளால் ஏற்படுகிறது. சுய சுகாதாரம் ஒன்றே இதைத் தடுக்கும் முறையாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுடன் பழகாமலும் அவர்கள் உபயோகித்த கைக்குட்டை, துண்டு பென்சில் போன்ற சாமான்களைப் பயன்படுத்தாமலும் இருக்க வேண்டும்.

*கே: எலும்பு எத்தனை வயது வரை வளரும்?

*ப: பெண்களுக்கு 16 வயது வரை,ஆண்களுக்கு 18 வயது வரை

*கே: மலம் கழிக்கும்போது இடையிடையே சிறிது ரத்தம் வெளிப்படக் காரணம் என்ன?

**ப:ஆசனவாய் வெடிப்புக்காரணமாக இருக்கலாம். இந்த நிலைக்கு ஆனல் திசு என்று பெயர். வேறு காரணம் இல்லை என சந்தேகமற தெரிந்துகொள்வதற்கு டாக்டரைச் சந்திப்பது நலம் பயக்கும்.

*கே: பஸ்சில் சிலருக்கு வாந்திவருகிறது? இதனை நிரந்தரமாககுணப்படுத்த முடியுமா?

*ப:பஸ்சில் பயணம் செய்யும்போது அதன் வேகத்திற்கும், அசைவுக்கும் ஏற்றபடி நம் உடலும் நீள வாட்டத்திலோ ,குறுக்கு வாட்டத்திலோ அல்லது செங்குத்தாகவோ அசைய நேரிடுகிறது. அப்போது சிலருடைய காதுகளில் வெஸ்டிபுலர் அமைப்பு உடலைச் சமநிலைப்படுத்த சிரமப்படுகிறது. இதனால் மூளையி்ன் வாந்தி நரம்புகள் துாண்டப்பட்டு வாந்தி வருகிறது. பயணம் செய்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பு அவோ மின்,டிசிரான் போன்ற மாத்திரைகளில் ஒன்றைச் சாப்பிட்டுவிட்டால் போதும் பயணத்தின்போது வாந்தி வராது.

*கே: உணவில் உப்பை அதிகம் சேர்த்துக்கொண்டால் சிறுநீரக பாதிப்பு ஏற்படுமா?

*ப: சமையல் உப்பு என்பது சோடியம் குளோரைடு எனப்படுகிறது. சோடியத்திற்கு நீரை உடலில் தேக்கி வைக்கும் தன்மை உள்ளது. சிறுநீரகங்கள் சிறுநீர் சுரக்கும் பணி தவிர, உடலின் பலவகைத் திரவங்களைச் சமச்சீர் நிலையில் வைக்க வேண்டிய பணியும் உண்டு. ஆகவே உணவில் உப்பு அதிகமாக இருந்தால் சோடியம் தண்ணீரைத் தேங்கச் செய்து சிறுநீரகங்களின் பணியை அதிகரிக்கிறது. இத்தகைய நீர்த்தேக்கத்தால் உண்டாகும் வீக்கம் தோன்றும் இருதய நோய்கள் மற்றும் மகோதரம், சிறுநீரக நோய்களின் போது உணவில் உப்பைக் குறைக்க டாக்டர் பரிந்துரைக்கின்றனர்.

Dr question and answers , about health


Dr question and answers , about health

*கே: எய்ட்ஸ் நோயுள்ளவர்களின் கண்களையோ, அல்லது சிறுநீரகங்களையோ மற்றவர்களுக்கு பொருத்த முடியுமா?

*ப: பொருத்த முடியாது. அப்படிப்பொருத்தினால் பொருத்திக்கொண்டவருக்கும் எய்ட்ஸ் நோய் வந்துவிடும்.

*கே: லாக்கோடெர்மா என்ற நோய் எதனால் ஏற்படுகிறது?

*ப: தோலுக்கு நிறமளிக்கிற மெலனோசைட்ஸ் எனும் நிறமி அணுக்கள் அளவுக்கு அதிகமாக குறைவதாலும், அழிவதாலும், தோலில் வெண்திட்டுகள் தோன்றுகின்றன. இதனை வெண்குஷ்டம் அல்லது லுாக்கோடெர்மா என்கிறோம். இது பெரும்பாலும் ஏதேனும் ஒருதோல் நோயைச் சார்ந்து , அதன் பின் விளைவாக ஏற்படுவதுண்டு. சில நேரங்களில் தோலில் உண்டாகும் காயம் காரணமாகவும் தொற்று கிருமிகளாலும், மெலனோசைட்ஸ் அணுக்கள் பாதிக்கப்பட்டு வெண்குஷ்டம் தோன்றும்.

*கே: சில சமயங்களில் எனக்கு மலத்தில் ரத்தம் வருகிறது? இது எதனால் வருகிறது? எப்படித்தடுப்பது?

*ப: மலத்தில் ரத்தம்வெளியேறுவதற்கு ‘பல காரணங்கள் உண்டு. அதில் முக்கியமானது மூலநோய் . இது மலத்துவாரத்தில் உள்ள சிரை ரத்தக்குழாய்கள் வீங்கிக்கொள்வதால் ஏற்படுகிறது. இந்த வீக்கத்தால் அழுத்தம் ஏற்படும் போது வெடிப்பு உண்டாகிறது. இதனால் மலத்துடன் ரத்தம் வெளியேறுகிறது. இதைத்தடுக்க கீழ்க்காணும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். மலச்சிக்கலைத் தவிருங்கள், காரம் நிறைந்த உணவுகளை ஒதுக்குங்கள், நிறைய தண்ணீ்ர் குடியுங்கள், ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து இருக்காதீர்கள், மூலநோய்க்கு ஆரம்பக் கட்டத்திலேயே டாக்டரிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ளுங்கள்.

*கே: நெறிகட்டுதல் என்றால் என்ன?இது மனிதனுக்கு எந்த வகையில் உதவி செய்கிறது?

*ப: நெறிகட்டுதல் என்பது நிணநீர்ச் சுரப்பிகளின் வீக்கத்தைக் குறிக்கும்.பொதுவாக இது உடம்பில் நோய்த் தொற்று ஏற்படும்போது தோன்றும். நோய்க் கிருமிகளை எதிர்த்துப்போராட ரத்த வெள்ளையணுக்களை அதிகப்படுத்துவதற்கு நிணநீர்ச்சுரப்பி வீங்குகிறது. நம் உடம்பில் எந்தப் பகுதியில் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது என்பதைத் தெரிந்து கொள்வதற்கு இந்த நெறிகட்டுதல் உதவுகிறது.

Dr question and answers , about health


Dr question and answers , about health

*கே: இளமையில் கன்னங்களில் சதையில்லாமல் குழி விழுவது ஏன்?

*ப: சத்துக்குறைவு , வயிற்றுப்பூச்சிகள், காசநோய், நீரிழிவு , புற்று நோய், நாளமில்லாச் சுரப்பிகளின் நோய்கள் , புகைப்பிடிக்கும் பழக்கம், பரம்பரைஅம்சம், இன்ன பிற காரணங்களினால் கன்னத்தில் சதையில்லாமல் குழிவிழலாம்.

*கே: தலையில் காயம்பட்டால் காப்பித்துாளை வைக்கிறார்களே இது நல்லதா? கெட்டதா?

*ப: சந்தேகமே வேண்டாம். இது கெடுதல்தான்.காயத்தின் மீது காப்பித்துாளை வைத்தால் காயத்தில் சீழ் பிடிக்கும் .காயம் ஆறுவது தாமதமாகும். மாறாக, காயத்தின் மீது சுத்தமான துணியை துணி கிடைக்காவிட்டால் இருக்கவே இருக்கிறது கைக்குட்டை. தண்ணீரில் நனைத்துப் பிழிந்துகொண்டு அதை சில மடிப்புகளாக மடித்து காயத்தின் மீது வைத்து அழுத்தமாக கட்டுப் போட்டால் ரத்தம் வடிவது உடனே நின்றுவிடும். அதற்கு பிறகு மருத்துவரிடம் சென்று தகுந்த சிகிச்சையை மேற்கொண்டால் காயம் சீக்கிரத்தில் ஆறிவிடும்.

Tags

Next Story