பல நோய்களுக்கு அருமருந்தாகும் டோலோபர் -650 மாத்திரை

doloper 650 in tamil மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய நோய்களில் ஒரு சிலவற்றைக் குணப்படுத்தும் அருமருந்தாக டோலோபர் 650 மருந்து பயன்படுகிறது. டாக்டர்கள் பரிந்துரைத்தால் மட்டுமே நாம் உட்கொள்ள வேண்டும்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பல நோய்களுக்கு அருமருந்தாகும் டோலோபர் -650 மாத்திரை
X

தலையே விண்ணென்று வலித்துக்கொண்டே இருக்கும். (கோப்பு படம்)

dolopar 650 uses in tamil

மனிதப்பிறவி என்றாலே அனைத்து விஷயங்களையும் சகித்துக்கொள்ள வேண்டும்...அந்த பக்குவம் இல்லாவிட்டால் இன்றைய வாழ்க்கை முறையில் அன்றாட வாழ்க்கை வாழ்வதே கடினமாகிப் போய்விடும். ஏற்கனவே பரபரப்பான வாழ்க்கையினை நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இதற்காக எடுத்ததெற்கெல்லாம் நாம் டென்ஷனானால் நம் ஆயுள் அதிலேயே பாதி போய்விடும்.. போய்விடுகிறதே...

நாம் எல்லோரும் ஆரம்ப கட்ட நோய் வரும்போது கண்டுக்கிறதே இல்லை.. நோய் முற்றியபின் அது அதிக சிரமத்தினைத் தரும்போதுதான் ஐயோ...அப்பா...என அலறிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடுகிறோம்.. ஏன் இதனை ஆரம்ப கட்டத்தில் நாம் செய்யக்கூடாது? ஒரு சிலருக்கு எத்தனை முறை பட்டாலும் அவர்கள் திருந்திய பாடில்லை. மீறிக்கேட்டால் ஆஸ்பத்திரி என்றால் செலவு அதிகமாகுமே-..ஆமாங்க... ஆமா...உங்க ஆரோக்யத்தை நீங்க பார்த்துக்கணும்.. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்.. உடம்பு கெட்டுப்போச்சுன்னா அவ்வளவுதான்.....கண்டுக்காம விட்டீங்க.. விபரீதந்தான்..போங்க...நாம் இப்போது டோலோபர் 650 மாத்திரை எந்தெந்த நோய்களுக்கு சாப்பிடலாம் அதன் முழு விபரங்குறித்து பார்க்கலாமா? வாங்க...

doloper 650 in tamil


doloper 650 in tamil

நமக்கே வரும் காய்ச்சல் வலியைத்துாண்டும் ஒருசில காரணிகளிடமிருந்து தடுக்கிறது. இது காய்ச்சல் மற்றும் வலி வராமல் பாதுகாக்கவும் அதிலிருந்து விடுபடவும் உதவுகிறது. மேலும் நம் உடலில் ஏற்படும் வலிகளான மூட்டுவலி, தசைவலி, தொண்டைவலி, மாதவிடாய் வலி, பல்வலி, நரம்புவலி, தலைவலி, ஒற்றைத்தலைவலி, சளி உள்ளிட்டநோய்களின் சிகிச்சைக்கும் பெரிதும் பயனளிக்கிறது.

டாக்டர் பரிந்துரை

டோலோபர் 650 மாத்திரைகள் உங்களுடைய டாக்டர் ஆலோசனையின்படி நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த மாத்திரைகள் தனியாகவோ அல்லது மற்ற மருந்துகளுடனோ இணைந்தும் டாக்டர்கள் சிபாரிசு செய்து எழுதிக்கொடுக்கலாம். இம்மருந்தினை உணவுடன் எடுத்துக்கொள்வது அதாவது உணவுக்குப் பின்னர் எடுத்துக்கொள்வது நல்லது. இல்லாவிட்டால் அது உங்கள் வயிற்றில் தொந்தரவுகளைச் செய்யலாம். டாக்டர்கள் பரிந்துரைக்கும் கால இடைவெளிகளில் மட்டுமே இந்த மருந்தினை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிகம் எடுத்துக்கொள்ளக்கூடாது.

இந்த மருந்தானது ஒரு சிலருக்கு ஒத்துக்காமல் இருந்தால் வாந்தி, வயிற்றுவலியினை ஏற்படுத்தும். அப்படி ஏதேனும் உங்களுக்குபிரச்னை இருக்கும் பட்சத்தில் நீங்கள் உங்கள் டாக்டரிடம்இதுகுறித்து கலந்து ஆலோசிக்கவும். ஆனால் இம்மருந்துகளில் பக்கவிளைவுகள் என்பது அரிதானது.

இம் மருந்தை உட்கொள்ளும் முன் உங்களுக்கு கல்லீரல்,அல்லது சிறுநீரக பிரச்னைகள் அல்லது ரத்தத்தை மெலிக்கும் மருந்துகளை நீங்கள் ஏற்கனவே பயன்படுத்துபவராக இருந்தால் இதனை உங்கள் டாக்டரிடம் முன்னமே தெரிவித்துவிடுதல் நல்லது. இதுமட்டும் அல்லாமல் வேறு என்ன மருந்துகளை நீங்கள் தொடர்ந்து உட்கொள்கிறீர்கள் என டாக்டரிடம் சொல்லுங்கள்...

doloper 650 in tamil


doloper 650 in tamil

காய்ச்சல்

காய்ச்சல் என்பது நம் உடலின் வெப்ப நிலையில் ஏற்படும் மாற்றம் என்று கூட சொல்லலாம். அதாவது நம்உ டல்நிலையில் வெப்பநிலை 98.4 டிகிரி இருக்க வேண்டும்.ஆனால் அதனைவிட நமக்கு அதிகமாக இருக்கும்போது நம் உடல் அதிக வெப்பத்தினைப் பெறுகிறது. இம்மருந்தானது காய்ச்சலைக் குறைக்க தற்காலிக நிவாரணத்திற்காக பரிந்துரைக்கப்படுகிறது.

தலைவலி

நம் அனைவருக்கும் தலைவலி என்பது அடிக்கடி ஏற்படும் ஒரு வலியாகும். இது பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் என வயது வித்தியாசம் இன்றி வரும். ஆனால் தலைவலிக்கு நல்ல ஓய்வு இருந்தாலே போதும். காபி, ஓய்வு,நல்ல காற்றோட்டம் உள்ள இடம், தியானம் போன்றவற்றினால் இது நிவாரணம் பெறும்.

doloper 650 in tamil


doloper 650 in tamil

தசைவலி

நம் உடலில் ஏற்படும் தசைவலிகள், வலி மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்தும் மற்றும் படுக்கையிலிருந்து எழுவது. பொருட்களைத் துாக்குவது, படிக்கட்டுகளில் ஏறுவது போன்ற அன்றாட பணிகளைச் செய்வதிலிருந்து உங்களைக் கட்டுப்படுத்தலாம். மனஅழுத்தம், பதற்றம் தீவிரமான உடல் செயல்பாடு என ஒருசில மருத்துவ நிலைகளால் ஏற்படலாம். நம் உடல் தசைகளில் ஏற்படும் வலிகளைக் கட்டுப்படுத்த இந்த மருந்து பயன்படுகிறது. உங்களின் வலி கடுமையாக இருக்கும்பட்சத்தில் உங்கள் டாக்டர் இந்த மருந்துகளைத் தனியாகவோ அல்லது மற்ற மருந்துகளுன் சேர்த்து சிபாரிசு செய்யலாம்.

மாதவிடாய் பிடிப்புகள்

மாதவிடாய் பிடிப்புகள் (டிஸ்மெனோரியா) என்பது அடிவயிற்றில் துடிக்கும் அல்லது தசைப்பிடிப்பு வலிகள். பல பெண்கள் மாதவிடாய்க்கு முன்னும் பின்னும் மாதவிடாய் பிடிப்பை அனுபவிக்கின்றனர். இந்த மாத்திரையானது இதிலிருந்து நிவாரணம் பெற பயனளிக்கிறது.

மூட்டு வலி

மூட்டு வலி என்பது காயம் அல்லது கீல்வாதம், முடக்கு வாதம், புர்சிடிஸ், கீல்வாதம், விகாரங்கள் மற்றும் சுளுக்கு போன்ற ஏதேனும் மருத்துவ நிலைகள் காரணமாக மூட்டுக்குச் சேதம் ஏற்படுவதால் ஏற்படுகிறது. மூட்டு வலியிலிருந்து நிவாரணம் அளிக்கும் மருந்தாக இது பயனளிக்கிறது.

பல்வலி

நமக்கு ஏற்படும் பல்வலி அல்லது பல்லினைச் சுற்றி நாம் உணரக்கூடிய கூச்சம் போன்றவற்றை சரி செய் யஇந்த மாத்திரையானது ஓரளவு பயனளிக்கிறது. ஆனால் கடுமையான பல்வலிகள் இருக்கும் பட்சத்தில் அதற்கான பல் டாக்டரிடம் சென்றுதான்காண்பித்து சிகிச்சையானது மேற்கொள்ள வேண்டும்.

இந்த மாத்திரையினை தோல்வெடிப்பு, உடலெங்கும்அரிப்பு, வீக்கம் , தலைச்சுற்றல், சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால் உடனடியாக உங்கள் டாக்டரிடம்இதுகுறித்து தெரிவிக்கவும். பாராசிட்டமால் அலர்ஜி பற்றி இருந்தால் இதனையும் டாக்டரிடம் தெரிவிக்கவும்.

நம் உடலில் ஏற்படும் சில வலிகளுக்காக நாம் சாப்பிடும் மருந்துகள் நம் சிறுநீரகத்தினை ஒரு சில நேரத்தில் பாதிப்பதுண்டு. இதுபோன்று வலி நிவாரணிக்காக மருந்து சாப்பிடுபவர்களுக்கு இந்த மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுவதில்லை.

உடலில் கல்லீரல் பாதிப்பு இருப்போருக்கு இந்த மாத்திரையானது டாக்டர்களால் பரிந்துரைக்கப்படுவதில்லை. காரணம் இந்த மருந்து கல்லீரல் பாதிப்பினை அதிகரிக்கலாம் என்பதால்.

Updated On: 5 Dec 2022 10:25 AM GMT

Related News

Latest News

 1. நாமக்கல்
  நாமக்கல்லில் அரசு பள்ளி ஆய்வக உதவியாளர்களுக்கு விருப்ப இடமாறுதல்...
 2. தென்காசி
  தென்காசி உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்
 3. காஞ்சிபுரம்
  செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு ஆயிரம் கன அடியாக
 4. அம்பாசமுத்திரம்
  நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் மற்றும் நீர் இருப்பு நிலவரம்
 5. தென்காசி
  தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் மற்றும் இருப்பு நிலவரம்
 6. திருப்பூர் மாநகர்
  திருப்பூரில் இன்று (புதன்கிழமை) மின்தடை
 7. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை தீபத் திருவிழா; பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவம்,...
 8. பாளையங்கோட்டை
  நெல்லை மாவட்டத்தில், காய்கறி இன்றைய விலை நிலவரம்
 9. தமிழ்நாடு
  TRP Exam- பட்டதாரி ஆசிரியர், பயிற்றுநர் பணியிடங்கள் விண்ணப்பிக்க...
 10. நாமக்கல்
  திமுக கலை இலக்கியப் பேரவை சார்பில் நாமக்கல்லில் கவிதை ஒப்புவித்தல்...