என்னது குக்கர் சாதம் சாப்பிட்டா இவ்ளோ பிரச்னையா? டாக்டர் அட்வைஸ் கேளுங்க
பைல் படம்.
இந்தியாவில் 1990-ம் ஆண்டு 4-வது இடத்தில் இருந்த இதய நோய்கள், தற்போது முதலிடத்தில் உள்ளன. இதேபோல், 18-வது இடத்தில் இருந்த சர்க்கரை நோய், 2-வது இடத்தில் உள்ளது. 100 பேரில் 11 பேர் இதய நோய்களாலும், 12 பேர் சர்க்கரை நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக சில ஆய்வின் முடிவுகள் தெரிவித்துள்ளன.
இதய நோய்கள் அதிகரிக்க வாழ்க்கை முறை மாற்றம் முக்கிய காரணமாக உள்ளது. பொதுமக்கள் பாஸ்ட்ஃபுட் உணவுக்கு அடிமையாகியுள்ளனர். ஏசி அறையில் வேலை. எங்கு சென்றாலும் கார் என்று வாழ்கிறோம். சத்துள்ள உணவுகளை சாப்பிடுவதில்லை. உடற் பயிற்சி செய்வதில்லை. நடைபயிற்சியில் ஈடுபடுவதில்லை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதில்லை. உடல் பருமன் அதிகரித்துவிட்டது.
முன்பெல்லாம் 50 வயதுக்கு பிறகு தான் மாரடைப்பு வரத்தொடங்கியது. ஆனால், தற்போது 30 வயது இளைஞர்களுக்கே மாரடைப்பு வருகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு இதய நோய்களின் பாதிப்பு அதிகமாக உள்ளது. சாதாரண நபருக்கு ரத்தக் குழாயில் ஒரு அடைப்பு வந்தால், சர்க்கரை நோயாளிக்கு மூன்று அடைப்பு ஏற்படுகிறது. இதேபோல் இதயச் செயலிழப்பும் அதிகரித்து வருகிறது.
மரபணு பிரச்சினையும் காரணம்:
பரம்பரையாக மரபணு பிரச்சினையாலும் இதய நோய்கள் வருகின்றன. ஆனால், வாழ்க்கை முறை மாற்றத்தால்தான் 90 சதவீத இதய நோய்கள் ஏற்படுகின்றன. வாழ்க்கை முறை மாற்றத்தை சரிசெய்தால் இதய நோய்கள் வராமல் தடுக்க முடியும். அதற்கு முதல்கட்டமாக குக்கரில் அரிசி, பருப்பு, காய்கறிகளை சமைத்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். முன்பு எப்படி அரிசியை வேகவைத்து வடித்து சாப்பிட்டோமோ அப்படி சாப்பிட வேண்டும்.
இரவு நேரத்தில் சாதம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. மாரடைப்பு, ரத்தக்குழாய் மற்றும் இதய தசைகளில் பிரச்சினை என இதய நோய்களில் பல இருக்கின்றன. இதய நோய்களின் முக்கிய அறிகுறிகளாக நெஞ்சுவலி, அதிகமாக மூச்சு வாங்குவது, படபடப்பு, மயக்கம், கை, கால்களில் வீக்கம், உடல் சோர்வு போன்றவை உள்ளன. மாரடைப்புக்கு நெஞ்சு வலி, மூச்சு வாங்குதல் அறிகுறிகளாகும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu