உடல் பருமனைக் குறைத்து மெலிய வேண்டுமா?....படிங்க....

do you want to like slim body? மனிதர்களில் இருவகையுண்டு. உடம்பே ஏறமாட்டேங்குது என்பது ஒரு வகை. ஏறிய உடம்பை எப்படி இறக்குவது? என சிந்திக்கும் அணி ஒரு வகை...இந்த இரண்டாவது அணியைப் பற்றிப் பார்ப்போம் வாங்க....படிங்க...

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
உடல் பருமனைக் குறைத்து  மெலிய வேண்டுமா?....படிங்க....
X

உடல் எடையைக் குறைக்க வேண்டுமா இன்றே துவங்குங்கள்  விழிப்புணர்வு (கோப்பு படம்)

do you want to like slim body?

நம்மில் பலர் எந்தவித செய்லபாடுகளைப் பற்றிக் கவலைப்பட்டாலும் , உடல் ஆரோக்யத்தினைப் பற்றி எள்ளளவும் ஒரு சிலர் கவலைப்படுவதே இல்லை. அதேபோல் உணவுக்கட்டுப்பாட்டு பழக்க வழக்கங்களி்லும் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் மனம் போன போக்கில் காலத்தினைத் தள்ளிவருகின்றனர். தற்போதுள்ள நாகரிக மோகத்தில் யாருமே உடல் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுவதாக தெரியவில்லை. அதேபோல் வருடத்திற்கு ஒருமுறை மருத்துவ செக் அப்பும் செய்வதில்லை. இதனால் அவர்களை அறியாமலேயே நோயானது முற்றி பின் விளைவுகளைச் சந்திக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

do you want to like slim body?


do you want to like slim body?

உடல் எடையில் கவனம்

நம்முடைய உடல் நலமானது நல்ல நிலையில் இருக் கவேண்டும் என்றால் உடல் எடையும் சரியான அளவில் இருக்க வேண்டும் என்பது பல பேருக்கு தெரிவதில்லை. கட்டுப்பாடற்ற உணவுப்பழக்க வழக்கங்களினால் உடல் பெருத்து பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். எடை அதிகமானதால் உடல் அழகும் கெடுகிறது. அளவுக்கதிகமான தொப்பை உண்டாகிறது. ரத்தத்தில் கொலஸ்ட்ரால் எனும் கொழுப்பு அதிகரிக்கிறது. இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், போன்ற உயிர் காக்கும் உடல் உறுப்புகளின் வேலைப்பளு அதிகமாகிறது. இதன் காரணமாக அவற்றின் செயல்பாடு திறனில் குறை உண்டாகி உடலில் கோளாறுகள் தோன்றுகின்றன.

do you want to like slim body?


உடல் எடையைக் குறைப்பதற்காக பயிற்சிகள் மேற்கொள்கின்றனர் (கோப்பு படம்)

do you want to like slim body?

பெருகும் நோய்கள்

உடல் பெருத்துவிடுவதால் ரத்தக்கொதிப்பு, இதய நோய், ஆகியவை எட்டிப்பார்க்கின்றன. பக்கவாத நோயும் சில நேரங்களில் உருவாக வாய்ப்புண்டு. நீரிழிவு நோயும், சிறுநீரக கோளாறுகளும், உடலில் வியூகம் அமைக்கும். வேகமாக நடந்தால் மூச்சிரைப்பு, அதிகமாக பேசினால் மூச்சிரைப்பு, என பல வித உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. உடலின் எடையை நாம் தொடர்ந்து கண்காணித்து வந்தால் இந்த மாதிரியான தொந்தரவுகளுக்கு இடமிருக்காது.

எடையைக் குறைக்க வழிகள்

முதலில் உங்கள் உயரத்திற்கேற்ற எடை எவ்வளவு என்பதை ஒவ்வொருவருமே தெரிந்து கொள்ள வேண்டும். உங்கள் உயரத்தினை செ.மீ.ல் அளந்து கொள்ளுங்கள். உதாரணமாக உங்கள் உயரம் 5அடி என்றால் 150 செ.மீ. அதில் முதலில் உள்ள 1 ஐ நீக்கிவிடுங்கள். பிறகு 50 கிலோ வரை இருக்கலாம் எனக்கொள்ள வேண்டும்.

do you want to like slim body?


do you want to like slim body?

உணவுக்கட்டுப்பாடு

உடல் எடையைக் குறைப்பதில் உணவுக்கட்டுப்பாடு பெரும்பங்கு வகிக்கிறது. நீங்கள் வழக்கமாக சாப்பிடும் உணவின் அளவை முதலில் குறைக்க வேண்டும். அதன் வின் வகைவகையான உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர்த்து தேவையான சில வகை உணவுகளை மட்டம் சாப்பிட வேண்டும்.

சாப்பிடும் உணவில் கொழுப்புச்சத்து குறைவாக இருக்கிற மாதிரி பார்த்துக்கொள்ள வேண்டும். கார்போஹைட்ரேட் எனப்படும் மாவுச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாகச் சேர்த்துக்கொள்ளலாம். புரத உணவுகளையும் தாராளமாக சாப்பிடலாம். கேப்பை, கம்பு, சோளம், அரிசி, கோதுமை போன்றவற்றில் மாவுச்சத்து அதிகமாக உள்ளது. இவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதில் தவறில்லை. இதே மாதிரியே பட்டாணி, பருப்பு வகைகளில் புரதச்சத்து இருக்கிறது. இவற்றையும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

do you want to like slim body?


do you want to like slim body?

கலோரி குறைவு

இந்த உணவுகளில் கலோரி குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றிால் உணவின் அளவை விட இதில் உள்ள கலோரிகள்தான் நம் உடல் எடையைத் தீர்மானிக்கும். பொதுவாக கொழுப்புச்சத்தில் கலோரிகள் அதிகம். நெய், வெண்ணெய், பாலாடை, தயிர், எண்ணெய், வகைகளில் கொழுப்புச்சத்து அதிகமாக இருக்கிறது. ஆகவே இவற்றை அறவே ஒதுக்கிவைப்பது நல்லது. ஈரல், இறைச்சி, முட்டை, போன்ற அசைவ உணவுகளைக்குறைத்துக்கொள்வதினால் உடல் எடைகுறையும்.

தினமும் இரண்டு முட்டை சாப்பிடுவதையும் அதனை ஒன்றைாக குறைத்துக்கொள்ளலாம். ஒரு முட்டை சாப்பிடுபவர்களாக இருந்தால் மஞ்சள் கருவை மட்டும் சாப்பிட்டலாம். மஞ்சள் கரு கொழுப்பின் மறு உருவம். எனவே அதைத் தொட வேண்டாம். கிழங்கு வகைகளை அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம். அவை நம் உடலுக்குத் தேவையான சக்தியைத் தருவதோடு வயிறு நிரம்பிய உணர்வினையும், தோற்றுவிக்கக் கூடியது. எண்ணெய் போடாத சப்பாத்தி சாப்பிடலாம். பூரி சாப்பிடுவதை தவிர்த்தல் நல்லது.

do you want to like slim body?


do you want to like slim body?

பெரும்பாலான வேளைகளில் திட உணவுகளைத் தவி்ர்த்துவிட்டு தக்காளி, திராட்சை, ஆரஞ்சு, போன்ற பழச்சாறுகள் அடிக்கடி சாப்பிடுவது நல்லது. குறிப்பாக எந்த ஓர் உணவுக்கு முன்னரும் ஒரு டம்ளர் பழச்சாறு சாப்பிட்டுவிட்டால் போதும். அகோரப்பசியானதுகுறைந்துவிடும். அதனால் அதி க உணவு இழுக்காது.

உடற்பயிற்சிகள்

தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். குறைந்த பட்சம் 45 நிமிடங்கள் நடக்க வேண்டும். உடல் எடை உடனடியாக குறைக்க வேண்டும் என்றால் தினமும் ஒரு மணிநேரம் ஓட வேண்டும். உடல் எடைகுறைவதற்கு நடையும், ஓட்டமும் நல்ல பயிற்சிகள். இவற்றைச் செய்ய இயலாதவர்கள் சைக்கிள் ஓட்டலாம். நீரில் நீந்தலாம். இவையாவும் உடலைக்குறைக்கும் உடற்பயிற்சிகளே. பெண்கள் வீட்டிலேயே செய்துகொள்ளக்கூடிய எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

do you want to like slim body?


do you want to like slim body?

யோகாசனமும், சில வகை மூச்சுப்பயிற்சிகளும், உடல் எடையைக் குறைத்துக் காட்டுவதாக கூட விளம்பரங்கள் தினமும் வந்தகொண்டிருக்கின்றன. இவற்றை நம்பாதீர்கள். அளவுக்கு மீறிய உடலின் எடை சிறிது சிறிதாகவே குறைய வேண்டும். அதற்கு உணவுக்கட்டுப்பாடும் உடற்பயிற்சியுமே சரியான ஆயுதங்களாக அமையும்.

மருந்தின் மூலம் சிகிச்சை

வேறுநோய்களின் காரணமாக உடல் எடை அதிகரித்திருந்தால் அவற்றுக்கு பரிசோதனைகளைச் செய்து தேவையான மருந்துகளைச் சாப்பிடவேண்டும். மேலும்உடல் எடையைக் குறைப்பதற்கென்று சில மருந்துகள் உள்ளன. அவற்றை டாக்டரின் ஆலோசனை இல்லாமல் சாப்பிடக்கூடாது. அவற்றில் பக்க விளைவுகள் உள்ளன என்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

do you want to like slim body?


do you want to like slim body?

ஆபரேஷன் சிகிச்சை

தற்போதுள்ள உலகில் ஆபரேஷன் சிகிச்சையின் மூலம் உடல் எடையைக் குறைத்துவிடலாம். உடலில் தேவையின்றி உள்ள கொழுப்பைக் குறைக்க லைப்போசக்‌ஷன் என்னும் ஆபரேஷன் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இந்த சிகிச்சையின் உதவியால் ஆப்பிள் தொந்தியையும் கரைத்து அழகான தோற்றத்தைப் பெற முடியும்.

எனவே உடல் மெலிய வேண்டும் என விரும்புபவர்கள் தக்க உணவுக்கட்டுப்பாட்டினை மேற்கொள்வதோடு மேற்சொன்னா உடற்பயிற்சிகளையும் செய்ய வேண்டும் என டாக்டர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Updated On: 31 Jan 2023 5:58 AM GMT

Related News

Latest News

 1. விளையாட்டு
  ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை வென்றது இந்திய அணி
 2. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி கலெக்டர் தலைமையில் எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
 3. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி அருகே சிறுமியை கடத்திய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது
 4. திருச்சிராப்பள்ளி மாநகர்
  இளைஞர் அணி மாநாட்டையொட்டி திருச்சியில் தி.மு.க.வினர் சைக்கிள் பேரணி
 5. அரசியல்
  டிச. 4 துவங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 18 மசோதாக்கள்
 6. துறையூர்
  திருச்சி அருகே துறையூரில் அமைச்சர் நேருவின் காரை மறித்த...
 7. டாக்டர் சார்
  Health Benefits Of Amla நோய் எதிர்ப்பு சத்துள்ள நெல்லிக்காயைச் ...
 8. ஆன்மீகம்
  Sabarimala Ayyappan Temple- சபரிமலை அய்யப்பன் கோவிலில் படிபூஜை; வரும்...
 9. லைஃப்ஸ்டைல்
  Land And Building Approval மனைகள் வாங்க மற்றும் கட்டிடம் கட்ட ...
 10. அவினாசி
  அவிநாசி அருகே போத்தம்பாளையத்தில் சிறுத்தைகள் நடமாட்டம்; பொதுமக்கள்...