பொய் சொல்வதைக் குறைத்தால் உயர் ரத்த அழுத்தம் குறையும்? ...இந்த உண்மை தெரியுமா?......படிங்க...
பொய்யே சொல்லாதீங்க....பொய் சொன்னா உங்களுடைய ஆரோக்யத்துக்கும் கேடு (கோப்பு படம்)
do you know,reason for pressure decrease?
என்னங்க....அநியாயம்...பொய் சொல்வதைக் குறைச்சா உயர் ரத்தஅழுத்தம் குறையுமா? அது எப்படீங்க... பொய்க்கும்...ரத்த அழுத்தத்திற்கும் சம்பந்தம் இருக்கிறதா?... என்று நீங்க கேட்கறது எனக்கு கேட்குதுங்க... இருங்க ஆய்வாளர்கள் சொல்றதைக் கேளுங்களேன்.... எப்டீன்னு....
do you know,reason for pressure decrease?
do you know,reason for pressure decrease?
பொய் சொல்வதைக் குறைத்தால் உயர் ரத்த அழுத்தமும் குறையும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஆச்சர்யமாக இருந்தாலும் இது உண்மைதான். பொய் சொல்லும்போது மூளை அதிகம் சிரமப்படுகிறது. இது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். எனவே இதயத்தைக் காக்க விரும்பினால் பொய் சொல்றதை நிறுத்திடுங்க...பெஸ்ட்.
பொய்யை நிறுத்தினால் மட்டும் போதாரது. அடிக்கடிசிரிக்கவும் வேண்டும். காரணம் சிரிக்கும் போது அட்ரீனலின் சுரப்புக்குறையும். அட்ரீனலின் சுரப்பு உயர் ரத்த அழுத்தத்தில் எதிரிடை பலனை ஏற்படுத்தும் என்பதால் சிரித்து சிரித்த அதனைக்கட்டுப்படுத்துவது சிறந்தது என்கிறார்கள்.
do you know,reason for pressure decrease?
do you know,reason for pressure decrease?
இவை எல்லாம் உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவினாலும், அதற்காக மருந்து மாத்திரைகளை நிறுத்திவிடக்கூடாது. இந்த விஷயத்தில் டாக்டரின் ஆலோசனையைப் பின்பற்றுங்கள். மாதத்திற்கொருமுறை ரத்த அழுத்த அளவைப் பரிசோதியுங்கள்.
உயர் ரத்த அழுத்தம் குறித்து இங்கு இந்த அளவுக்கு போதும். இதய நோய்க்கான மற்ற முன் காரணிகள் குறித்து தொடர்ந்து பார்ப்போம்.
*ரத்தமிகைக் கொழுப்பு
கொழுப்பின் அளவு ரத்தத்தில் அதிகரிக்கும் போது இதய ரத்த நாள நோய்கள் உருவாகும் ஆபத்தும் அதிகரிக்கிறது. கொலஸ்ட்ரால் எனும் கொழுப்பு உடலுக்கு அவசியம் என்றாலும் இதன் அளவில் கவனம் தேவை. இதன் அளவும் ட்ரைகிளிசரைட்ஸ்(டிஜிஎல்) , குறை அடர்த்திக் கொழுப்பு (எல்டிஎல்) போன்ற பிற கொழுப்புகளின் அளவும் ரத்தத்தில் அதிகரிக்கும்போது இவை இதய ரத்த நாளங்களை அடைத்துஇதய ரத்த நாள நோய்களை ஏற்படுத்துகின்றன.கொழுப்புக் குறைந்த உணவுகளை உட்கொள்வதாலும், ரத்தக் கொழுப்பைக் குறைக்கும் மருந்துகளைப் பயன்படுத்துவதாலும் இந்த பாதிப்பைக்குறைத்துக்கொள்ளலாம்.
do you know,reason for pressure decrease?
do you know,reason for pressure decrease?
*ரத்த உறைப் பொருட்கள்
ரத்த உறைப் பொருட்களான ஃபைப்ரினோஜன் மற்றும் ஏதாவது ரத்த உறைப்பொருள் ரத்தத்தில் அதிகரிக்கும்போது இதயத் தமனதாளத்தில் மிக எளிதாக கொழுப்புப் படியும். அத்துடன் ரத்தம் விரைவில் உறைந்து ரத்த நாளத்தை அடைந்துவிடும் வாய்ப்பும்அதிகரிக்கிறது. இது இதய ரத்த நாள நோய்களுக்கு வாசலைத் திறந்து விடுகிறது.
do you know,reason for pressure decrease?
do you know,reason for pressure decrease?
*உடற்பயிற்சியின்மை
எந்த உடற்பயிற்சியும் செய்யாமல் இருப்பவர்களை விட தினமும் குறைந்தது 40 நிமிடங்களுக்கு நடத்தல், நீந்துதல், சைக்கிள் ஓட்டுதல், போன்ற பயிற்சிகளில் ஏதேனும் ஒன்றை முறைப்படி செய்து வருபவர்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு இரண்டு மடங்கு குறைவு. காரணம்,உடற்பயிற்சிகள் ரத்தத்திலுள்ள கொலஸ்ட்ரால் அளவைக்கு குறைக்கின்றன. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதுடன் ரத்த நாளங்களில் ரத்த உறவையும், தடுக்கின்றன. வயதானாலும் இதயத் திசுக்களுக்கு ரத்தம் தடையின்றி கிடைக்க வழி செய்கின்றன.
do you know,reason for pressure decrease?
do you know,reason for pressure decrease?
*நீரிழிவு நோய்
நீரிழிவு நோயினால் ஒருவரது ரத்த நாளங்கள் பாதிக்கப்பட அதிக வாய்ப்புஉள்ளது. இதனால் இதயத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படலாம். எனவே சர்க்கரை நோயாளிகள் ,குறிப்பாக உடல் பருமன் கொண்ட சர்க்கரை நோயாளிகள் இதயத்தை மிகவும் கவனமாக பார்த்துக்கொள்ளவேண்டும்.
ரத்தத்தில் மிக அதிகமாகவோ, மிகக்குறைவாகவோ சர்க்கரை இருந்தால் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும். அந்த சமயத்தில் மாரடைப்பு ஏற்பட்டால் வலி தெரியாது. இதனால்தான் இதைச் சத்தமில்லா கொலைக்காரன் என்று அழைப்பர். காரணம். நாள்பட்ட சர்க்கரை நோயினால் நரம்பு மண்டலம், பாதிக்கப்பட்டிருக்கும். இதனால் மாரடைப்பு வலியை மூளைக்குத் தெரிவிக்க வேண்டிய நரம்புகளால் அந்த வலியை உணர முடிவதில்லை. இளவயது சர்க்கரை நோயாளிகளுக்கு இளமையிலேயே இதய நோய்கள் தோன்றக்கூடும்.
do you know,reason for pressure decrease?
do you know,reason for pressure decrease?
*உடல் பருமன்
ஒருவரின் உயரத்திற்கு தகுந்தாற் போல் உடல் எடை அமைய வேண்டும். தேவைக்கு அதிகமாக 20 சதவீதம் எடை அதிகரிக்கும்போது மாரடைப்பு தோன்றும்அபாயம் 2 அல்லது 3 மடங்கு அதிகரிக்கிறது. பருமனான உடல்கொண்டவர்களிடம் உயர் ரத்த அழுத்தம் , நீரிழிவு, கொலஸ்ட்ரால் அதிகரிப்பு, ஆகிய பிரச்னைகள் தோன்றும் வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன.
*மது
மிகக் குறைந்த அளவு மது அருந்துவது இதயத்திற்கு நல்லதுதான். இருப்பினும், மதுவின் அளவு அதிகமாகும் போது உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். இது இதயத்தைப் பல விதங்களில் பலவீனப்படுத்தும்.
do you know,reason for pressure decrease?
do you know,reason for pressure decrease?
*மன அழுத்தம்
அளவுக்கு அதிகமான மன அழுத்தம், தாங்க முடியாத துயரம், கவலை, பேரிழப்பு எளிதில் உணர்ச்சி வசப்படுதல், ஆகியவை இதய நோய்க்கு பாதை அமைக்கும். ஏற்கனவே இருக்கும் இ தய நோயையும் அதிகரிக்கும்.
*பிற உணவுப் பொருட்கள்
பல்வகை நீர்மக் கொழுப்பு அமிலங்கள் குறைந்த உணவை உட்கொள்கிறவர்களுக்கும், திண்மக் கொழுப்பு அமிலங்கள் மிகுந்த உணவுகளை மிகையாக உண்கிறவர்களுக்கும் இதய நோய்கள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. வைட்டமின் சி, ஈ,மற்றும்ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் குறைந்த உணவுகளைச் சாப்பிடுகிறவர்களுக்கும் இதே நிலைதான்.
do you know,reason for pressure decrease?
do you know,reason for pressure decrease?
சோம்பல்
ஓடியாடி உழைக்காமல் உட்கார்ந்தநிலையிலேயே பணிபுரியும் சூழலில் உள்ளவர்கள் முறையான உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் இவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் 2 அல்லது 3 மடங்கு அதிகமாகும்.
மேற்கூறியவற்றில் ஏதேனும் மூன்று காரணிகள் உங்களிடம் இருந்தால் நீங்கள் உஷாராக வேண்டிய தருணம் இது. காரணம் உங்களுக்கு இதயத்தமனிநாள நோய்கள் வருவதற்கான வாய்ப்பு 10 மடங்கு அதிகம். எனவே, உடனே உரிய பரிசோதனைகளைச் செய்து நோய்இருக்கிறதா? என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
நன்றி:டாக்டர். சிவபாலன்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu