/* */

உங்கள் உடலில் துத்தநாகம் ( ஜிங்க்) அதிகரித்தால், என்ன ஆகும் தெரியுமா?

துத்தநாகம் எனப்படும் ‘ஜிங்க்’ சத்து உடலில் மிக முக்கியமான ஒன்று. குறிப்பாக உடலில் 100க்கும் அதிகமான கெமிக்கல் விளைவுகளுக்கு காரணமாக இருப்பது இந்த ஜின்க் சத்துதான். டிஎன்ஏ தொகுப்பை மேம்படுத்துவது மற்றும் சுவை உணர்தலின் மேம்பாடு , இனப்பெருக்கம், நோய் எதிர்ப்பு சக்தி உள்ளிட்ட பலவற்றின் மேம்பாட்டுக்கு இது உதவுகிறது.

HIGHLIGHTS

உங்கள் உடலில் துத்தநாகம் ( ஜிங்க்) அதிகரித்தால், என்ன ஆகும் தெரியுமா?
X

துத்தநாகம் (ஜிங்க்) சத்து அதிகமாக உள்ள உணவு பொருட்கள்.

ஜிங்க்கை அதிகமாக எடுத்துக் கொள்வதால் ஒரு சில உடல்நல பிரச்சனைகள் வரக்கூடும். ஒரு நாளைக்கே 40மிகி ஜிங்க் மட்டுமே உங்களது தினசரி ஊட்டச்சத்து விகிதத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


சிவப்பு இறைச்சி, கோழி, கடல் உணவுகள், முழு தானியங்களில் அதிகளவிலான ஜிங்க் உள்ளது. குறிப்பாக 85 கிராம் சாப்பிடும்போது இவற்றில் 673 சதவீதம் அதிகமான ஜிங்க் உங்களது தினசரி ஊட்டச்சத்தில் சேர்ந்துக் கொள்ளும். அப்படி உங்களது தினசரி மதிப்பில் அதிகமான ஜிங்க் சத்தை சேர்க்கும்போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படலாம்.

வயிற்று கோளாறுகள்

ஆய்வு முடிவுகளின்படி அதிக ஜிங்க் சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்பவர்களுக்கு வயிற்று வலி, வயிற்று போக்கு, குடல் எரிச்சல் மற்றும் வாயு சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.பொதுவாக ஜிங்க் குளோரைடு நீங்கள் சாப்பிடும் உணவுகள் அல்லது சப்ளிமென்டுகளில் இருப்பதில்லை.

ஆனால், நீங்கள் வீட்டில் பயன்படுத்தும் சுத்தப்படுத்தும் பொருட்களில் உள்ள கெமிக்கல்ஸ், பசைகள், சால்டரிங் ப்ளக்ஸஸ் உள்ளிட்டவைகளில் காணப்படும். அவற்றை கொண்டு வேலைசெய்யும் போது இவை உங்கள் உடலில் சேர்ந்து விடலாம்.


காய்ச்சல்

அதிகமான ஜிங்க் எடுத்துக் கொள்வது உங்களுக்கு காய்ச்சல் , சளி, இருமல், தலைவலி உள்ளிட்டவற்றை உருவாக்கலாம். இது பிற மினரல்கள் நச்சுத் தன்மையாவதாலும் ஏற்படலாம். இதில் முக்கியமாக ஜிங்க் நச்சுத்தன்மை தீவிரமான அறிகுறிகளை காட்டும்.


​நல்ல கொழுப்பை குறைத்தல்

உடலில் உள்ள நல்ல கொழுப்பான HDL அதிகமாக இருந்தால் மட்டுமே இருதய நோய்கள் வராமல் தடுக்க முடியும். இரு அடல்ட் நபரின் உடம்பில் 40 mg/dL HDL இருக்க வேண்டும். ஆனால், தினசரி 40 மைக்ரோகிராம் ஜின்க் எடுத்து கொள்பவர்களின் உடம்பில் இந்த அதிகப்படியான ஜின்க் HDL அளவை 11.25 mg/dl குறைத்து கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாக வழிவகுக்குகிறது. இதன் விளைவாக இதய கோளாறுகள் ஏற்படுகின்றன.


​சுவைப்பதில் மாற்றம்

​ஏற்கனவே சொன்னது போல் உங்கள் சுவை உணரும் சக்தியை அதிகரிப்பதில் ஜின்க் சத்து பெரும்பங்கு வகிக்கிறது. அதே போல் அதிகமாக அதை சாப்பிட்டாலும் உங்கள் சுவை உணர்திறனில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

குறிப்பாக நீங்கள் நீண்ட நாட்களாக ஜிங்க் மாத்திரைகள் அல்லது டானிக்குகளை எடுத்துக் கொள்கிறீர்கள் என்றால் அது உங்களது சுவை உணர்த்திறனில் மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதை காணலாம். தினசரி அளவை விட அதிகமான ஜின்கை எடுத்துக் கொள்வதால் உங்கள் வாயில் மோசமான மற்றும் நாற்றமுள்ள சுவையை இது ஏற்படுத்தும்.


வாந்தி

ஜிங்க் உடலில் அதிகமாவதன் முக்கிய மற்றும் பொதுவான விளைவு குமட்டல் மற்றும் வாந்தி. இது உங்களின் உடலில் உள்ள நச்சுத்தன்மையுள்ள ஜின்கை வெளியேற்றி விட்டாலும், ஜின்க் நச்சுத்தன்மையால் மேலும் உருவாகும் பக்க விளைவுகளை தடுக்க முடியாது.


நோய் எதிர்ப்பு சக்தி

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதில் ஜிங்க் முக்கிய பங்காற்றுகிறது. ஆனால், அதை அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியின் செயல்பாட்டை பாதிக்கிறது. அதே ஜிங்க் குறைந்தாலும் இது ஏற்படும். அதிகப்படியான ஜிங்க் அளவு உங்களது உடலில் உள்ள ஒரு வகையான வெள்ளையணுவான T செல்களை பாதிக்கிறது.

Updated On: 10 March 2023 11:51 AM GMT

Related News

Latest News

 1. கோவை மாநகர்
  கோவையில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் மரம் விழுந்து லாரி சேதம்
 2. லைஃப்ஸ்டைல்
  தமிழில் பிறந்த நாள் வாழ்த்து கூறும் மேற்கோள்கள்
 3. லைஃப்ஸ்டைல்
  தமிழில் போகிப் பண்டிகை வாழ்த்துக்கள் சொல்லும் அழகியல்
 4. லைஃப்ஸ்டைல்
  வயசு மேல வயசு வந்து வாழ்த்துகிற நேரமிது..!
 5. லைஃப்ஸ்டைல்
  கவிதை அலங்காரத்தில் அண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
 6. ஈரோடு
  டி.என்.பாளையம் வனச்சரகத்தில் நாளை யானைகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்
 7. குமாரபாளையம்
  சாலை விபத்தில் இளைஞர் பலி : உடல் உறுப்புக்கள் தானம்..!
 8. வீடியோ
  Opening - Mass Entry செம்ம Vibe-ஆ இருக்கு !#saamaniyan...
 9. ஈரோடு
  சத்தியமங்கலம்: கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 1,300 கிலோ ரேஷன் அரிசி...
 10. வீடியோ
  Ramarajan,Ilaiyaraaja Combination -னே Blockbuster தான் !#ramarajan...