நமது உடலிலுள்ள ரத்தத்தினைப் பற்றி தெரியுமா? உங்களுக்கு?.....படிங்க

do you know the function of blood? ஆரோக்யமான உடல் தேவை என்றால் ரத்தத்திலும் எந்த பிரச்னை இருக்க கூடாது. நமது உடலின் செயல்பாடுகளுக்கு ரத்தமானது மிகவும் அவசியம்...அதனைப்பற்றி பார்ப்போம்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
நமது உடலிலுள்ள ரத்தத்தினைப்   பற்றி தெரியுமா? உங்களுக்கு?.....படிங்க
X

ரத்த சிவப்பணுக்கள்  மாதிரி  (பைல்படம்)

do you know the function of blood?



உடலில் ரத்த விருத்திக்கான காய்கறிகளும்,கனி வகைகளும் (பைல்படம்)

do you know the function of blood?

உயிரினங்கள் அனைத்தும் உயிர் வாழ்வதற்கு ரத்தமானது மிக மிக அவசியம். குறிப்பாக மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய விபத்துகளில் முதலில் சேதாரமாவது ரத்தமே. ரத்த வகைகளைக் கண்டறிந்து இழந்த ரத்தத்திற்கு ஈடாக மாற்று நபரின் ரத்தத்தினைச் செலுத்தும்போது பாதிக்கப்பட்டவர்கள் உயிர் பிழைக்க வாய்ப்புண்டு.

ரத்த உற்பத்தி

கருவுற்ற 4 வது வாரத்தில் ரத்த அணுக்களின் உற்பத்தியானது துவங்குகிறது. ரத்தசிவப்பணுக்களின் எண்ணிக்கை பிறக்கும்பொழுது 5 முதல் 6மில்லியன் வரை இருக்கும். ஹீமோகுளோபின் அளவு பிறக்கும்போது 20 கிராம் /100 மி.லி. என்ற அளவில் இருக்கும்.

பொதுவாக ரத்தத்தில் சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், தட்டணுக்கள், போன்ற பொருள்கள் மிதப்பதுடன் திரவப்பகுதியான பிளாஸ்மாவில் ஆல்புமின், குளோபுலின், பைப்ரினோஜன், ஆகிய புரதங்களும் , பொட்டாசியம், சோடியம் குளோரைடு, பை-கார்பனேட், கால்சியம் ஆகிய வேதிப்பொருட்களும், இரும்பு போன்ற மூலக்கூறுகளும், கரைந்துள்ளன. சிவப்புஅணுக்களும், வெள்ளையணுக்களும்,தட்டணுக்களும், ஒருகுறிப்பிட்டநாட்களே உயிர்வாழ்கின்றன இவ்வணுக்கள்.

குழந்தைகளிடமும், பெரியவர்களிடமும் எலும்பின் உட்சோற்றில் உற்பத்தி ஆகின்றன. கருச்சிசுவில் ரத்த உற்பத்தி எலும்பு உட்சோறு அன்றி பிற உறுப்புகளிலும் நடக்கின்றது. முதல் இரண்டு வாரக்கருவில் முட்டைப்பையிலும், பின்னர் கருச்சிசுவின் கல்லீரல், மண்ணீரலும் உற்பத்தி செய்யப்படுகின்றது. குழந்தைபிறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு ரத்த உற்பத்தியினை எலும்பின் உட்சோறு எடுத்துக்கொள்கிறது.

do you know the function of blood?


do you know the function of blood?

பிறக்கும்போது குழந்தையின் எலும்பு உட்குழி சிவப்பு உட்சோற்றால்நன்கு நிரப்பப்படும்.பின்குழந்தை வளர வளர சிவப்பு உட்சோறு எலும்பின் நடுப்பகுதியில் சுருங்கிஇருமுனைகளிலும் மஞ்சள் சோற்றால் நிரப்பப்படும். மஞ்சள் சோற்றில் கொழுப்புப் பொருளே நிரம்பிஇருப்பதால் ரத்த உற்பத்தி நடைபெற முடியாது. நடுவயதில் தட்டை எலும்புகளாகிய மண்டை ஓடு, நெஞ்சு எலும்பு, முதுகுத்தண்டுவட எலும்பு, இடுப்பு மற்றும் நெஞ்சுக்கூட்டு எலும்புகளிலும், வயது முதிர்வில் நெஞ்சுக்கூடு, ஸ்டெர்னம், வாட்டபிரா, இடுப்பெலும்புகளிலும் ரத்த செல்களின் உற்பத்தி நடைபெறுகிறது.

எல்லா ரத்த அணுக்களும் தண்டு அணுவிலிருந்து உண்டாகின்றன. இவற்றை உட்சோற்றில் தனியாக இனம் காணமுடியாது. எரித்ரோபிளாஸ்ட், மைலோபிளாஸ்ட், நினோபிளாஸ்ட், மானோபிளாஸ்ட் , மெகாகாரியோ பிளாஸ்ட் ஆகிய அணுக்களில் தனித்தனியாக காணலாம். ரத்த அணுக்கள் பருவமடைந்து வளர்ந்து பின்புற ரத்த ஓட்டத்திற்கு வந்து பணியைத் தொடர்கின்றன. மனிதனின் எடையில் 6.8 விழுக்காடாக உள்ள ரத்தம், குழந்தைகளுக்கு ஒரு கிலோ கிராம் எடைக்கு 80 மி.லிட்டர் என்ற அளவில் இருக்கும். பிறக்கும்பொழுது ஏறத்தாழ 500 மி.லிட்டராக இருக்கும் ரத்தம் ஒரு வயதின் முடிவில் இரு மடங்காகவும், 12 வ யதில் 10 மடங்காகவும் மாறுகின்றது.

do you know the function of blood?


do you know the function of blood?

சிவப்பணுக்கள்

உட்கரு உள்ள மைலாய்டு தண்டு அணுக்களிலிருந்து சிவப்பணுக்கள் உருவாகின்றன. இவை வட்ட வடிவில் இருபுறமும் உட்குழிந்த தட்டையான செல்களாகும். முதலில் உருவாகும் போது உட்கருக்களோடு தோன்றும்.இச்செல்கள் பின்னர் உட்கருக்களை இழக்கின்றன.

ரத்தத்திற்கு சிவப்பு நிறத்தை அளிக்கும்இரும்புச்சத்து கொண்ட ஹீமோகுளோபினைப் பெற்றிருக்கின்றன. சிவப்பணுவின் வளர்ச்சிக்கு செம்பு இரும்புச்சத்து, உயிர்ச்சத்து, பி12, போலிக் அமிலம், தைராக்சின் மற்றும் புரதம் ஆகியன தேவை.சிவப்பணுவின் ஆயுட்காலம் 120 நாட்கள். பின்பு அகவலை மண்டலத்தால் அவை அழிக்கப்படுகின்றன. ஒரு கனமில்லி மீட்டர் ரத்தத்தில் 5 லிருந்து5.5 மில்லியன் சிவப்பு அணுக்கள் அடங்கியுள்ளது.

வெள்ளையணுக்கள்

குருதியிலுள்ள வெள்ளையணுக்களை , துகளணுக்கள், நிணஅணுக்கள், மானோ அணுக்கள், என மூவகையாக பிரிக்கலாம். இவைகளுக்கு உட்கரு உண்டு. துகளணுக்களை அவை ஏற்கும் வண்ணத்தைக்கொண்டு பேசோபில்கள், ஈசினோபில்கள், மற்றும் நியூட்ரோபில்கள் என்று மூன்று வகைகளாக பிரிக்கலாம். புரதம் சார்ந்த நச்சுப் பொருட்களை அழித்தல் மற்றும் அவைகளின் நச்சுத்தன்மையை நீக்குதல் ஈசினோபில்களின் முக்கிய வேலையாகும். பேசோபில்கள் சில சமயங்களில் அமீபாய்டு இயக்கங்களை மேற்கொள்கின்றன. நியூட்ரோபில்கள் பாக்டீரியா அல்லது அயல்பொருட்களை எதிர்கொள்ளுமிடத்து அவற்றோடு தொடர்புகொண்டு அவற்றை விழுங்கிவிடுகின்றன. ஆன்டிஜென்னை (எதிர்ப்பொருளை) உருவாக்குவதே லிம்போசைட்டுகளின் அதாவது நிணஅணுக்களின் முக்கிய பணியாகும். மானோசைட்டுகள் நுண்கிருமிகளை விழுங்குவதன் மூலம் உடலை பாதுகாக்கின்றன.

தட்டணுக்கள் அல்லது த்ரோம்போசைட்டுகள்

சிறிய நிறமற்ற உட்கரு இல்லாத ரத்தத்தட்டுகள், இவை ரத்தம் உறைதலில் முக்கிய பங்கேற்கின்றன. இவை எலும்பின் சிவப்பு மஜ்ஜையிலுள்ள மெகாகெரியோசைட்டுகள் எனப்படும் பெரிய செல்களிலிருந்து உருவாகின்றன. இவை புறக்குழியில் 7லிருந்து 10நாட்கள் வரை உயிர்வாழும் . 1 கன மில்லி லிட்டர் ரத்தத்தில் 2,50, 000 தட்டணுக்கள் உள்ளன.

do you know the function of blood?


do you know the function of blood?

ரத்தத்தின் வேலைகள்

நமது உடலில் நடக்கும் பல்வேறு பணிகளில் ரத்தம் முக்கிய பங்கு வகிக்கின்றன.

*அமினோ அமிலங்கள் , குளுக்கோஸ், மற்றும் கொழுப்பு அமிலங்கள் போன்ற செரிக்கப்பட்ட உணவுப்பொருட்களை ரத்தம் சிறுகுடலிலிருந்து உடலின் பல பாகங்களுக்கு எடுத்துச்செல்கிறது.

*ரத்தச் செல்களின் சிதைவால் உண்டாகும் யூரியா போன் கழிவுப் பொருட்களைக் கழிவு நீக்கி உறுப்புகளுக்கு எடுத்துச்செல்கிறது.

*வளர்சிதை மாற்றத்தின் பொருட்டு ரத்தம், பிராண வாயுவை நுரையீரலிலிருந்து திசுக்களுக்கு கொண்டு செல்கின்றது. இந்த செயலால் திசுக்களில் உண்டாகும் கார்பன் டை ஆக்ஸைடு நுரையீரலுக்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கிருந்து வெளியேற்றப்படுகிறது.

*நாளமில்லா சுரப்பிகளால் சுரக்கப்படும் ஹார்மோன்கள் உடலின் பல பகுதிகளுக்கும் ரத்தத்தின் மூலம் எடுத்துச் செல்லப்படுகின்றன.

*ரத்தம் உடல் வெப்பநிலையை ஒரே சீராக வைத்திருக்கிறது.

*வியர்வைச் சுரப்பிகளுக்கு, அதிக ரத்தம் செல்லும்போது அதிக வியர்வையும், அதேபோல் வியர்வைச் சுரப்பிகளுக்கு குறைவான ரத்தம் செல்லும்போது குறைவான வியர்வையும் உற்பத்தியாகின்றன.

*வெப்ப உற்பத்தி மற்றும் வெப்ப இழப்பிற்கு இடையே உள்ள சம நிலைதான் உடல் வெப்ப நிலையை நிர்ணயிக்கிறது. இதற்கு முக்கிய காரணியாக விளங்குவது ரத்தமே.

do you know the function of blood?


உடலில் இயல்பான ரத்த அணுக்கள் மாதிரி ரத்தசோகை நோயால் பாதிப்பு மாதிரி

Updated On: 6 Nov 2022 12:54 PM GMT

Related News

Latest News

  1. டாக்டர் சார்
    Health Benefits Of Lemon எலுமிச்சம்பழத்திலுள்ள மருத்துவ குணங்கள் ...
  2. புதுக்கோட்டை
    டேக்வாண்டோ மற்றும் குத்துச்சண்டைப் போட்டிகளில் மாவட்ட அளவில் சாதனை
  3. கந்தர்வக்கோட்டை
    பள்ளி செல்வதற்கு வசதியாக நகர் பேருந்துகளை இயக்கக் கோரி மறியல்...
  4. லைஃப்ஸ்டைல்
    Importance Of Blood Bank ரத்த வங்கிகளின் செயல்பாடுகள் ...
  5. புதுக்கோட்டை
    புதுக்கோட்டை மாவட்டத்தில் பிற்படுத்தப் பட்டோர் நலக் கல்லூரி மாணவர்...
  6. கடையநல்லூர்
    உரிமம் புதுப்பிக்கப்படாத வளர்ப்பு யானையை முகாமிற்கு அனுப்பி வைத்த...
  7. லைஃப்ஸ்டைல்
    Benefits Of Apartment House அபார்ட்மென்ட் வீடுகளில் போதிய வசதி...
  8. தர்மபுரி
    காமாட்சி அம்மன் கோவிலில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
  9. ஓசூர்
    வீலிங் செய்து அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டி சாகசம் செய்தவர்கள்...
  10. லைஃப்ஸ்டைல்
    Importance Of Aadhar Card In Tamil ஆதார் கார்டின் பயன்கள் என்னென்ன ...