இயற்கை உணவின் இனிமையும்,சுவையும் எப்படி இருக்கு?உங்களுக்கு தெரியுமா?

இயற்கை உணவின் இனிமையும்,சுவையும்  எப்படி இருக்கு?உங்களுக்கு தெரியுமா?

மாம்பழத்தில் தயாரிக்கப்பட்ட ஜாம்.

do you know the taste of natural food? நாம் அன்றாடம் சாப்பிடும் உணவு வகைகளில் போதிய சத்துகள் உள்ளனவா? என்பது சந்தேகமே. எனவே இயற்கை உணவினை தயாரித்து சாப்பிடும் பட்சத்தில் நம் உடலும் ஆரோக்யமாக இருக்கும் என்பதே உண்மை.

do you know the taste of natural food?

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவு வகைகளில் பல்வேறு நிலைகள் உள்ளது. அதாவது செயற்கை முறையில் தயாரிப்பது. இயற்கையில் கிடைப்பதை உண்பது., செயற்கை பொருட்களின் துணையோடு சமைப்பது, இயற்கை உணவுகளைப் பெற்று அதனோடு ஒரு சில பொருட்கள்சேர்த்து சமைத்து உண்பது, என பலநிலைகள் உள்ளன. ஆனால் இயற்கை உணவினை பெற்று அதனை சாறு, சாலட் என வகை வகையாக பிரித்து உண்ணுதல் என்பது உடலுக்கும் மனதிற்கும் நல்ல ஆரோக்யத்தினைத் தரக்கூடியதாக உள்ளது.

நாகரிக உலகில் யாருமே உடல் ஆரோக்யத்தினைப் பற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை. நோய் வருவதற்கு முன் எந்தவித பாதுகாப்பு நடவடிக்கையினையும் கட்டுப்பாடுகளையும் மேற்கொள்ளாமல் விட்டுவிடுவதால் நோய் முற்றும் போது ஆஸ்பத்திரிகளில் தவம் கிடக்கின்றனர்.

தற்போது பெரும்பாலானோர் மாத்திரைகளையே உணவாக சாப்பிடுவது போல் சாப்பிடுகின்றனர். இவர்கள் உடல் ஆரோக்யம் குறித்து எந்தவித கட்டுப்பாடுகளையும் உடற்பயிற்சிகளையும், மேற்கொள்ளாததால் இவர்களுக்கு இந்த நிலைமை. எவரொருவர் தன் உடல் ஆரோக்யத்தினைப் பற்றியும் அனுதினமும் உடற்பயிற்சி மற்றும் நடைப்பயி்ற்சி, யோகா,தியானம், போன்றவைகளில் அக்கறை காட்டுகிறாரோ அவரை எந்த நோயும் எளிதில் அணுகுவதில்லை.

இயற்கை உணவுகளை சாப்பிடுபவர்களும் ஆரோக்ய குறைபாடுகளினால் அவதிப்படுவதில்லை. பாஸ்ட்புட், ஜங்க்புட், ஆகியவற்றில் ஆர்வம் காட்டுபவர்களுக்கே ஆரோக்ய குறைபாடு ஏற்படுகிறது.

இயற்கை உணவுகளின் மகத்துவம்

do you know the taste of natural food?


do you know the taste of natural food?

அனைத்து பச்சைக்காய்கறிகள் கலந்த வெஜிடபிள் சாலட்

முதல் தர காய்கறி சாலட்:

கேரட், வெள்ளரி தக்காளி இவைகளை அழகாக வட்டத்துண்டுகளாக சாப்பிடும் தட்டில் அடுக்கடுக்காக பரப்பி சுவைக்காக மிளகுத்துாள் கொஞ்சம் துாவி அதன் மீது துருவிய தேங்காய் (பூ) கலந்து முளைக்கட்டிய தானியங்களைச் சிறிதளவு பரப்பி உலர் திராட்சை, பேரிச்சம்பழத்துண்டுகள், செர்ரிபழத்துண்டுகளையும், துாவி. பசி வேளையில் பரிமாறுங்கள். வழக்கமான உணவுக்கு அரைமணிநேரம் முன்பு இப்படி ஏதாவது மூன்று அல்லது நான்கு காய்கறிகளைக் கலந்து இந்த முதல் தர இயற்கை உணவைத்தயார் செய்திடலாம்.

டெய்லி சாலட்:

அன்றாடம் வீட்டிலுள்ள அனைவரும் சாப்பிட ஏற்றது. சிக்கனமானது. சுவையானது. பொரி, வேர்க்கடலை அதிகமாகவும், கேரட் துருவல், தக்காளி சிறுதுண்டுகள், அன்னாசிப்பழ துண்டுகள், மாங்காய் துண்டுகள், எல்லாம் சேர்த்துக் கலந்து தினமும் மாலையில் சாப்பிட்டு மகிழலாம். சுவைப்பிரியர்களுக்கு கொஞ்சம் மிக்சர் கலந்து தரலாம். மலச்சிக்கல் தீர மிக எளிய வழிஇதுதான்.

பழங்கள் சாலட்:

குழந்தைகளுக்கு மாலையில் பள்ளியில் இருந்து திரும்பியதும் எல்லாவித பழங்களும் கலந்து பழக்கலவை (ப்ரூட் சாலட்) அவசியம் தரவேண்டும். மார்க்கெட்டில் உங்களுக்குபிடித்த பல பழவகைகளை வாங்கி வந்து அதனை சிறுதுண்டுகளாக கட் செய்து அழகான பீங்கான்குடுவையில் அடுக்கி ஸ்பூன் போட்டு கலந்து பாருங்கள். வாழை, மா, பலா, அன்னாசி, ஆப்பிள், பப்பாளி, உலர் திராட்சை, முந்திரி, எல்லாமே இடம்பெறச் செய்யுங்கள்.

அவல் :

நல்ல நார்ச்சத்து நிறைந்த உணவு. அவல் என்றதும் குசேலர் ஞாபகத்திற்கு வரும்.குறைந்த விலையில் நிறைந்த பயன் பெறலாம். எண்ணற்ற விதத்தில் அவர் உணவுகளைத் தயாரிக்கலாம். சிற்றுண்டியாகவும் பயன்படும். முளைவிட்ட கார் அவல் பயன்படுத்திக்கொள்ளுங்கள். மலச்சிக்கல் தீரஅருமையான மருந்து.

இனிப்பு அவல்:

முளைவிட்ட கைக்குத்தல் அவல் கையளவு அரைமணிநேரம் ஊற விட்டு வெல்லம் துாள் செய்து கலந்து தேங்காய்த்துருவலைக் கலந்து தயாரிக்கவும். இயற்கை உணவு முகாம்களில் அரிசிச்சோறு இடத்தினை இனிப்பு அவல்தான் பிடித்துக்கொள்ளும். வீட்டிலும் அவசரத் தேவைக்கு இதுபோல்செய்து பயன்படுத்தலாமே.

do you know the taste of natural food?


do you know the taste of natural food?

எலுமிச்சை அவல் டிஷ்....

லெமன் அவல்:

சிலருக்கு இனிப்பு பிடிக்காது. புளிப்பு பிடிக்கும். அவலை ஊறவைத்து எலுமிச்சை சாற்றை அளவாக பிழிந்து மிளகு, சீரகத்துாள், போட்டுநன்றாக கலக்கிச் சாப்பிடலாம்.

எள் அவல்:

ஊறவிட்ட அவலில் வெள்ளை எள்துாள் கலந்து தேங்காய்த்துருவல், வெல்லம் ஓரளவு கலந்து சாப்பிட்டு பாருங்கள். அதன் மணமே தனிதான் , கை, கால்வலி, உடனேபோய்விடும்.

நெல்லி அவல்:

ஊறவைத்த அவலில் மேற்கூறியவாறு எள்ளுக்கு பதிலாக நெல்லியைத் துருவிக்கொட்டிக் கலந்து சாப்பிடலாம்.

பால் அவல் :

இனிப்பு கலந்த அவல் தவிர எல்லா வகை அவல் தயாரிப்புகளும் சர்க்கரை வியாதிக்கு சிறந்த மருந்து பாலில் ஊறவிட்டு உடனே ஸ்பூன் போட்டு சாப்பிடலாம்.

do you know the taste of natural food?


do you know the taste of natural food?

உடலுக்கு வலு சேர்க்கும் பப்பாளிப்பழம்

பப்பாளி பஃபே:

கூட்டுவிருந்து தரும்போது பப்பாளியைப் பாதியாகவெட்டி நடுவிலுள்ள விதைகளைநீக்கிவிட்டு ஸ்பூன் போட்டு முதலில் தரவும். இயற்கை உணவு தயாரிப்புகள் பலவிதத்தில் செய்து ஹாலில் நடுவில் வைத்துவிடவும்.அவரவர்க்கு பிடித்தவை எடுத்துக் கையிலுள்ள வெட்டிய பழம் நடுவே வைத்துக்கொண்டு ஸ்பூனில் தோண்டி பப்பாளியும் கலந்து உண்ணுவார்கள். தனியாக பாத்திரங்கள் அவசியமில்லை. தண்ணீர் தேவைப்படாது.

வெஜிடபுள் சேண்ட்விச்:

ரொட்டித்துண்டுகளுக்கு நடுவே வெள்ளரி தக்காளி துண்டுகளை வைத்து சாப்பிடலாம்.

ஸ்பெஷல் சேண்ட்விச்:

ஒவ்வொரு வீட்டிலும் இனிமேல் அவசியம் செய்து சாப்பிட வேண்டிய ஒன்று. ரொட்டி துண்டின் ஒரு பக்கம், இயற்கை சட்னி, காரசாரமாக மற்றொரு துண்டில் பிடித்தமான இயற்கை இனிப்பு பழ ஜாம் தடவிக்கொள்ளுங்கள். இரு ரொட்டித்துண்டுகளுக்கு இடையே ஒரு மெல்லிய பப்பாளித் துண்டு, மாம்பழத்துண்டு, வெள்ளரித்துண்டு, காரட் , பீட்ரூட் துண்டு, தக்காளித்துண்டு, என மென்று சாப்பிட இதமான,பதமான,துண்டுகளாக வைத்து தயார் செய்யவும்.

do you know the taste of natural food?


do you know the taste of natural food?

வெஜிடபுள் சாண்ட்விச்

ஸ்டஃப்டு வெண்டைக்காய்:

சிக்கன் 64 என்பார்களே... அதேபோல சுவையானது. வெண்டைக்காய் முழுதாக இருக்கும் கடித்தால் காரசாரமாக, சுவையாக இருக்கும் சீரகம், மிளகு, ஓரளவு உப்பு கலந்து நீரைடாக்டர்கள் பயன்படுத்தும் பெரிய ஊசி மூலியமாக வெண்டைக்காயினுள் செலுத்த வேண்டும்.விருந்தினர்களை வியக்க வைக்கவே இந்த தயாரிப்பு.

மாம்பழ ஜாம்:

சப்பாத்திக்கு தொட்டு கொள்ளலாம். ரொட்டிகளில் பயன்படுத்தலாம். கனிந்த மாம்பழத்தின் சதைப்பகுதியை மட்டும் பிரித்தெடுத்து, அத்துடன்சுவைக்காக ஏலக்காய்துாள், முந்திரித்துாள், போன்றவற்றைக் கலந்து கொண்டால் போதும். உடனே பயன்படுத்திவிடவேண்டும்.

பீட்ரூட் ஜாம்:

பீட்ரூட்டை நன்றாக செதுக்கி மிக்ஸியிலிட்டு கெட்டியான கூழ்பதத்தில் இறக்கி வெல்லம்,ஏலம், முந்திரித்துாள்களைச் சேர்த்தால் போதும். பீட்ரூட் ஜாம் தயார்.

கேரட் குல்கந்து:

கேரட்டை நன்றாக சுத்தம் செய்து பிறகு செதிலாக செதுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். தேவையான அளவு உலர்திராட்சை, பேரீச்சம்பழம், தேன் சேர்த்து ஊறவைத்து விட வேண்டும். தேவைப்படும்போதுஇரண்டு ஸ்பூன் சாப்பிட்டால் உடல் சூட்டைத் தணி்த்துக் கண்களைப் பளிச்சிடச்செய்யும்.

பர்கர், பாஸ்ட்புட் உலகில் திளைத்திருக்கும் இளைஞர்களுக்கு இதனுடைய சுவையானது சற்று வித்தியாசமாக இருந்தாலும் உடலளவில் எந்த கேடும் விளைவிக்காது.புத்துணர்வையே தரும். இனியாவது இயற்கை உணவுகளைச் சாப்பிட பழகுங்கள்... இன்பமாயிருங்கள்...

Tags

Next Story