வலிப்பு நோய் ஏன் வருகிறது தெரியுமா? ... அறிகுறிகள் என்னென்ன?..... படிச்சு பாருங்க...

do you know the symptoms of fits disease மனிதர்களுக்குஏற்படக்கூடிய நோய் வகைகளில் ஒன்று வலிப்பு நோய். இது திடீரென்று ஏற்படக்கூடியது.இதுபோன்ற நேரங்களில் முதல் உதவி செய்து ஆஸ்பத்திரிக்கு அனுப்பி விட வேண்டும்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
வலிப்பு நோய் ஏன் வருகிறது தெரியுமா? ...  அறிகுறிகள் என்னென்ன?..... படிச்சு பாருங்க...
X

வலிப்பு நோயால்  பாதிப்படைந்தவருக்கு தலையில் ஏற்படும் மாற்றங்கள் (கோப்பு படம்)

do you know the symptoms of fits disease

மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய நோய்களானது நாகரிக காலத்தில் என்னென்ன நோய்கள் எப்போது தாக்கும்? என்று சொல்ல முடியவில்லை. புதிய புதிய நோய்கள் வரவால் ஒரு சிலநேரங்களில் டாக்டர்களினால் கூட இனங்காண முடிவதில்லை. பல கட்ட பரிசோதனைகளுக்கு பின்னரே அவர்களே இந்த நோய் பாதிப்பு என முடிவெடுக்கும் சூழலில் உள்ளனர்.

மாறிவரும் உணவுப்பழக்க வழக்கம், உடலுழைப்பின்மை, உடற்பயிற்சியின்மை , பரபரப்பான சூழலினால் ஏற்படும் டென்ஷன் , போன்றவற்றால் பொதுமக்களை நோய்கள் அதிகம் தாக்குகின்றன. ஒரு சிலருக்கு இந்த நோய் தாக்கம் குறித்து ஒரு வித சமிக்ஞைகளின் மூலம் உணர்த்தினால் அவர்கள் அப்போது கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றனர். பின்னர் பாதிப்பு முற்றிய பின்னர் ஆஸ்பத்திரிக்கு ஓடி என்ன பயன்? ...

do you know the symptoms of epilepsy disease



வலிப்பு நோயால் பாதிப்படைந்தவர் கீழே படுத்து வாயில் நுரை தள்ளிய காட்சி ,இதுபோன்ற நேரங்களில் அருகில் உள்ளோர் அவருக்கு முதல் உதவி சிகிச்சை செய்து ஆஸ்பத்திரிக்கு உடனே அனுப்ப வேண்டும். (கோப்பு படம்)

எனவே அனைவருக்குமே தெரிவிப்பது என்னவென்றால் நம் உடல் ஆரோக்யமானது வழக்கமான செயல்பாடுகளை விட மாற்றத்தினை உணர்த்தியது என்றால் நாம் உடனடியாக ஏதோ ஒரு பொதுமருத்துவரை சந்தித்து ஆலோசிப்பது நலம். அதுவும் 35 வயதிற்கு மேற்பட்டுவிட்டால் வருடம் ஒரு முறை ஜெனரல் செக் அப் செய்து கொள்வது நலம். அதில் உங்களுக்கு பிரச்னை என்றால் மட்டுமே தெரியவரும். பலர் பயந்து கொண்டு முன்னெச்செரிக்கையாக இருப்பதை கோட்டை விட்டு விடுகிறார்கள். பின்னர் நோய் முற்றிய பின் உங்களிடம்பணம் இருந்தாலும்நோயைக் குணப்படுத்த முடியாத இக்கட்டிற்கு ஆளாகீதீர்...உஷாராக இருங்க...

மனிதர்களுக்கு வரக்கூடிய நோய்களில் ஒன்று வலிப்பு நோயாகும். இந்த நோயானது மூளையில் ஒருவித உறுத்தலினால் ஏற்படுவதாக கண்டறியப்பட்ட நோயாகும். இதுகுழந்தைகள் முதல் நடுத்தர வயதினரையுமே மிகுதியாக பாதிக்கிறது.இப்பருவங்களில் நோய்க்குரிய காரணம் ஏதுமின்றியே இந்நோய் வரலாம்.

முதுமையில் மட்டும் ஏதேனும் ஒரு காரணத்தோடுதான் வரும். அப்படி வந்தால் அதற்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும். முதுமைக்காலத்தில் வலிப்பு வர காரணங்கள் என பார்த்தோமானால் மூளைக்குச் செல்லும் ரத்தநாளங்களில் கோளாறு ஏற்பட்டால் ரத்தக்கசிவு அதன் ஓட்டம்குறைதல், ரத்த ஓட்டம் தடைப்படுதல், போன்ற காரணங்களினால் ஏற்படுகிறது. மூளையில் கட்டி ஏற்பட்டாலும் ,புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும் இந்நோயால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. மேலும் அதிக அளவில் மது அருந்துவோருக்கும், பென்சிலின், அமினோபிலின், இன்சுலின், ஆகிய மருந்துகளை அதிகம் பயன்படுத்துவோருக்கும் , துாக்கமாத்திரைகளை அதிகம் உபயோகப்படுத்துவோருக்கும் வலிப்பு நோய் தாக்கும் அபாயம் உள்ளதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

do you know the symptoms of epilepsy disease


வலிப்பு நோயால் பாதிப்படைந்தவருக்கு மண்டையில் ஏற்படும் மாற்றங்களைக் காட்டும் படம் (கோப்பு படம்)

do you know the symptoms of epilepsy disease

சிறுநீரகக்கோளாறு, ஈரல்கோளாறு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவானது திடீரென குறைதல், சுண்ணாம்புச்சத்து குறைதல், உப்புச்சத்துக்குறைதல், போன்றவைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், மூளை பாதிப்பால் ஏற்படும் அறிவுத்திறன் சீரழிவாலும், நோய்க்கிருமிகளால் மூளை பாதிக்கப்படுவதாலும், தலையில் அடிபடுவதாலும், வலிப்பு நோய் வரலாம். பெரும்பாலும் வலிப்பு நோய் ஏற்படுவதற்கு முதல் காரணமாக கருதுவது மூளைக்குச் செல்லும் ரத்தநாளங்களில் ஏற்படும் கோளாறுகளே என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் மூளையில் ஏற்படக்கூடிய கட்டிகளாலும் இந்நோய்கள் வரலாம் எனவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

நோயின் அறிகுறிகள்

இளமைப்பருவத்தினரைப் போலவே முதுமையடைந்தவர்களும் இரண்டு கை, கால்களும் வெட்டிஇழுக்க, வாயில்நுரைத்தள்ள மயக்கமடைவர். உடலின் ஒரு பக்கத்தில் மட்டிலும், அதாவது முகத்தில் ஒரு பகுதி, ஒரு , கை, கால், ஆகியவற்றில் மட்டுமே வலிப்பு வருதலை முதியவரிடம் மிகுதியாக காணலாம். இரவு நேரங்களில் வலிப்பு மிகுதியாக வருவதற்கும் வாய்ப்புகள் உண்டு. வலிப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வலிப்பு வரும்போது ஏற்படும் தொல்லை சிறிதும் தெரியாது. ஆகையால் வலிப்பு வந்த பின்பு தம் அருகில்இருந்தவரின் உதவியால் தம் வலிப்பின் தன்மையை அவர் விவரமாக கேட்டுத்தெரிந்து கொள்ள வேண்டும். வலிப்பு வருவதற்குரிய காரணங்களை முதலில் கண்டறிய வேண்டியது அவசியமாகும்.

do you know the symptoms of epilepsy disease



மனித மூளையில் ஏற்படக்கூடிய மாற்றங்களைக்காட்டும் படம் (கோப்பு படம்)

உடற்பரிசோதனையை முழுமையாக செய்ய வேண்டும். உயர் ரத்தஅழுத்தம், நீரழிவு நோய், இதய நோய் உள்ளவர் எனக் கண்டறிய வேண்டும். நோயாளர் உண்ணும் மருந்துகளை ஆராய வேண்டும். மேலும் தேவையான ரத்த ஆய்வு,எக்ஸ்ரே, ஈசிஜி,இஇஜி,ஸ்கேன் ஆய்வு முதலியவற்றால் வலிப்பிற்குரிய காரணங்களைக் கண்டறிய வேண்டும்.

வலிப்பு நோய்க்கான சிகிச்சை

வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைகளை மேற்கொள்வதன் மூலம் நோயிலிருந்து நிவாரணம் பெறலாம். முதியவர்களுக்கு ஏற்படும்வலிப்பு நோயினை மருந்தினாலேயே கட்டுப்படுத்தலாம். மூளையில் கட்டி இருப்பின் அதற்குரிய சிகிச்சையை செய்ய வேண்டும்.

வலிப்பு நோய் தொடங்கியவுடனே கீழே படுக்க வைத்து வாயினுள் எச்சில், சளி, உணவுப்பொருள்களை அகற்றி , எளிதில் மூச்சு விட வசதி செய்ய வேண்டும். செயற்கைப் பல் இருப்பின் அதனை அகற்றிவிட வேண்டும். நாக்கைக் கடித்துக் கொள்ளாதிருக்கச் சிறிய மரக்கட்டையையோ பல்லிடுக்கில் வைக்க வேண்டும். விரைவாக டாக்டர் ஆலோசனையைப் பெற வேண்டும்.

do you know the symptoms of epilepsy disease



வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவருக்கான முதலுதவி செய்யும் முறைகள் (கோப்பு படம்)

வலிப்பு நோயாளிகள் கவனத்திற்கு

வலிப்பு நோயானது மூளையில் ஏற்படும் ஒரு விதஉறுத்தலினால் ஏற்படுகிறது. இந்த நோயானது மன நோய் அல்ல. இதனைக்கட்டுப்படுத்த முடியாவிடில் நாளடைவில் மனநோய் வரும். மருந்துகளினால் இந்த நோயினைக் கட்டுக்குள் கொண்டு வரலாம். மருந்துகளினால் கட்டுப்படுத்தலாம் என்றால்மருந்து சாப்பிட்டவுடன் உடனே குணமாகி விடாது. இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து மருந்துகளை தவறாமலும், வேளை தவறாமலும், சாப்பிட்டு வந்தால் நோயினைக்கட்டுக்குள் கொண்டு வர வாய்ப்புகள் இருப்பதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

பாதுகாப்பு நடவடிக்கைகள்

உணவு செரியாமை, மலச்சிக்கல், துாக்கமின்மை, சோம்பல், மதுபானம், மனக்குழப்பம் நேரும் சூழ்நிலை, ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். உள்ளம், உடல் இரண்டினாலும் எப்போதும் சுறுசுறுப்பாக இருத்தல் அவசியம்.நீர் , நெருப்பு, உயரமான இடங்கள் , இயந்திரங்கள் அருகில் செல்லாமல் இருத்தல்வேண்டும். தாம் வலிப்பு நோய் உள்ளவர் என்று நோயால் பாதிக்கப்பட்டவர் தெரிவிக்கவேண்டும். தாம் வலிப்பு நோயுள்ளவர் என்பதைக் குறிக்கும் அ டையாளச்சீட்டினை எப்போதுமே தம்முடன் வைத்திருக்க வேண்டும். புதிய சூழ்நிலையில் பிறர் தமக்கு உதவ இது வாய்ப்பளிக்கும் என மருத்துவ நிபுணர்கள் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கையாக மேற்கண்ட கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

Updated On: 15 Nov 2022 9:06 AM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    புழல் ஏரியில் 3000 கனஅடி தண்ணீர் திறப்பு..! வெல்ல அபாய எச்சரிக்கை..!
  2. தொழில்நுட்பம்
    2024 Instagram Trend Talk-இன்ஸ்டாகிராமை கட்டமைக்கும் இந்திய 'ஜென்...
  3. கல்வி
    Canada Student Visa Latest News-கனடாவில் படிக்க இந்திய மாணவர்கள்...
  4. தஞ்சாவூர்
    தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 31,169 நபர்களுக்கு தேசிய அடையாள...
  5. தொழில்நுட்பம்
    83 Spanish Newspapers are Suing Meta-மெட்டா மீது ஸ்பானிஷ் ஊடகங்கள்...
  6. நாமக்கல்
    காப்பீடு ஒப்படைப்பு செய்தவருக்கு ரூ 1.20 லட்சம் வழங்க நுகர்வோர்...
  7. தமிழ்நாடு
    ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை
  8. தொழில்நுட்பம்
    Chandrayaan 3 Latest News-சந்திரயான்-3 பூமியின் சுற்றுப்பாதைக்கு...
  9. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 80 அடியாக சரிவு
  10. தஞ்சாவூர்
    தஞ்சாவூர் குருங்குளம் சர்க்கரை ஆலையில் அரவைப்பணிகள் தொடக்கம்: ஆட்சியர்...