இதய நோய் ஏற்படக் காரணம் என்ன? உங்களுக்கு தெரியுமா?....படிங்க..

do you know the reason of heart problem? ஹார்ட்அட்டாக் தற்போது வயது குறைந்த இளையதலைமுறையினரையும் தாக்குகிறது. அனைவரும் உடல் ஆரோக்யத்தில் அக்கறை செலுத்துங்க....

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
இதய நோய் ஏற்படக் காரணம் என்ன?   உங்களுக்கு தெரியுமா?....படிங்க..
X

ஹார்ட் அட்டாக் வந்தால் இருதயத்தில்  ஏற்படக்கூடிய வலியினைக் காட்டும் படம் (கோப்பு படம்)

do you know the reason of heart problem?

மனிதனாகப் பிறக்க நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். என்னடா இது இப்படி சொல்லீட்டாரா? நாம் படும் கஷ்டம் இவர் போன்ற ஆட்களுக்கு எல்லாம் தெரியாதா? என கேட்காதீங்க... எப்படி அது சொல்லப்பட்டது என்றால் இறைவனின் படைப்பில் மற்ற உயிரினங்களுக்கு எல்லாம் ஐந்தறிவு படைத்த இறைவன் நமக்கு மட்டும் ஆறு அறிவைப் படைத்ததோடு பேச்சுத்திறன் என்ற பொக்கிஷத்தையும் வழங்கியுள்ளான். அந்த வகையில் நாம் பாக்கியம் செய்தவர்கள் என்று ஏன் சொல்லக்கூடாது.



do you know the reason of heart problem?

இறைவன் நம்மைப்படைக்கும்போது நல்ல திடகாத்திரமான உடல்நலத்தோடு படைத்தாலும் நம் உடம்பு ஏன் கெடுகிறது. எந்தவித கட்டுப்பாடுகள் இல்லாமல் நாம் வாழ்வதால்தான் நமக்கு பல பிரச்னைகள் வருகிறது. எப்படி ? அதாவது நாம் நம்முடைய ஆரோக்யத்தில் யாருமே அக்கறை எடுத்துக்கொள்வதில்லை. உடல் நலம் நன்றாக இருக்கும்போதே நாம் ஒரு சில கட்டுப்பாடுகளுடன் சாப்பிடுவதில் இருந்து இருக்க வேண்டும். ஆனால் நாம் அப்படி இருப்பதில்லை. உடம்பு கெட்டபின் தான் நம்மைப்போன்றவர்களுக்கு புத்தி வருகிறது. என்ன செய்ய?

சொல்லப்போனால் யாராக இருந்தாலும் சரி. பணக்காரன், ஏழை ஆகிய இருவருக்கும் உடல் உறுப்புகள் ஒரே மாதிரிதான் உள்ளது. நம் உடலில் வழக்கமான செயல்பாடுகளைத் தவிர்த்து ஏதாவது வித்தியாசமான அறிகுறிகள் தென்பட்டால் உடனே டாக்டரைச் சந்திக்க வேண்டும். ஆனால் நம்மில் எத்தனைபேர் அந்த ரிஸ்க் எடுக்கிறார்கள். யாரும் போவதில்லை. உதாரணத்திற்கு நெஞ்சு வலிக்கிறது அல்லது தோள்பட்டை வலிக்கிறது என்றால் உடனே டாக்டரைச் சந்தித்து என்ன என்று பார்த்துவிட வேண்டும். அதெல்லாம் ஒன்றுமில்லை. வெறும் வாயுத்தொல்லைதான் என நீங்கள்விடும்போதுதான் அது அடுத்த முறை வரும்போது ஆளையே விழுங்கிவிடுகிறது. இதுதாங்க நாம் செய்யற தப்பு. நம்மைப் படைத்த இறைவன் காலன் அழைக்கும்போதும் நமக்கு எச்சரிக்கை உணர்வாக இருக்க ஒரு சில அறிகுறிகளை தருகிறான். அதில் சுதாரித்துக்கொள்கிறவர்கள் உயிர் பிழைத்துவிடுகின்றனர். அலட்சியம் காட்டுபவர்கள் நிலைதான் அந்தோ நிலையாகிவிடுகிறது. இனியாவது இப்படிஇருக்காதீங்க..

do you know the reason of heart problem?


do you know the reason of heart problem?

சரி நாம் நம் தலைப்புக்கு வருவோம். தற்காலத்தில் ஹார்ட் அட்டாக் என்பது வயது வித்தியாசம் இல்லாமல் வருதுங்க.. அதாவது இளையோருக்கும் வருகிறது. தமிழகத்தில் எடுத்துக்கொண்டீர்களானால் கபடி வீரர்கள் திடீரென மரணம் அடைந்தனர். 2 பேர் அப்படி உயிரிழந்துள்ளனர். இதெல்லாம் நாம்சொன்னது போல்தான். இதற்கு முன்னர் அவர்களுக்கு ஒரு அறிகுறி தென்பட்டிருக்கும். ஆனால் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இரண்டாவது முறை தீவிரமான தாக்குதல் இதுவே உயிரிழப்பு...இதுதாங்க... நாம் சொன்னது...

do you know the reason of heart problem?



இருதய ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படுவதைக் காட்டும் படம் (கோப்பு படம்)

do you know the reason of heart problem?

இதயத்தினுடைய தசைத்சிதைவுக்கு காரணமான கரோனரி நாள அடைப்பினை அகற்ற இதய அறுவை சிகிச்சையினை மேற்கொண்டால் நோயிலிருந்து நிவாரணம் பெறலாம். இதய அறுவை சிகிச்சையில் 2 முறைகள் கையாளப்படுகின்றன.

1.ஆஞ்சியோ பிளாஸ்டி (ரத்த நாள சீரமைப்பு)

2.ஓப்பன் ஆர்ட் சர்ஜரி (திறந்த இருதய அறுவை சிகிச்சை)

இதயத்தை பாதிக்கும் மற்றநோய்கள்

இதய நோய்கள் ஏற்படுவதற்கான காரணங்கள் பல.அவற்றுள் ஒன்று பிறவிக்கோளாறு மற்றொன்று பெறப்பட்ட கோளாறு. பிறவி இதயக்கோளாறு நோய்களில் நீண்ட காலம் வாழமுடிகின்ற நோய்கள் வருமாறு,

ஈரிதழ் பெருந்தமனி வால்வு, நுரையீரல் தமனிச்சுருக்கம், பெருந்தமனியின் குறுகிய ஒரு பகுதி இரண்டு ஏட்ரியங்களுக்கு இடையேயுள்ள தடுப்புச்சுவரில் ஓட்டை, மூடப்படாத தமனி நாளம், பேலோ விவரித்த குறைபாடுகள் , (வலது வென்ட்ரிக்களின் மிகை வளர்ச்சி, வலது பக்கத்தில் அமைந்த பெருந்தமனி, நுரையீரல் தமனியின் குறுகிய நிலை,2 வென்ட்ரிக்கிள் இடையேயுள்ள தடுப்புச்சுவரில்ஓட்டை) போன்றவை மற்றும் பல இருதயகுறைபாடுகளின்போது குழந்தை நீண்ட நாள் வாழ்வது கடினம்.மற்ற வகையாக பெறப்பட்ட இதய நோய்களில் முக்கியமானது முடக்குவாத காய்ச்சலின் விளைவாக ஏற்படும் நோயாகும். பாக்டீரியாக்கள், வைரஸ், வளர்சிதை மாற்றங்கள், நசிவு நிலை ஆகியவற்றாலும் பல இதய நோய்கள் ஏற்படுகின்றன. மற்றொரு இதய நோயானது ரத்தமிகு அழுத்தத்தினால் உண்டாகிறது.

do you know the reason of heart problem?


ஹார்ட் அட்டாக் வருவதற்கான முந்தைய ஆறு விதமான அறிகுறிகள் படங்களுடன் (கோப்பு படம்)

do you know the reason of heart problem?

பாதுகாப்பு நடவடிக்கைகள்

தனது உடல் எடையைப் போதிய அளவில் வைத்துக்கொள்ள வேண்டும். உயரத்திற்கு தகுந்த எடையினைப் பராமரிக்க வேண்டும். தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் இதய நோயைத்தடுக்கலாம். நடப்பதால் எடைகுறைய வாய்ப்புண்டு.புகைப்பிடித்தலைக் கட்டாயம் கைவிட வேண்டும். புகைபிடிக்கும்போது உள்ளிழுக்கும் மூச்சானது இதயத்தினையும் ,நுரையீரல்களையும், பாதிப்படையச் செய்வதோடு ரத்தநாளங்களும் பாதிப்படைகிறது.

ரத்த மிகை அழுத்தத்தினைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதோடு நீரிழிவு நோயினையும் கட்டுபாட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியமாகும்.தேவையான உணவுக்கட்டுப்பாட்டுப் பழக்கவழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும். கொலஸ்டிரால், கொழுப்புப் புரதங்கள், கொண்ட உணவினை குறைந்த அளவு உண்ண வேண்டும்.தேங்காய் சம்பந்தப்பட்டஉ ணவினைத் தவிர்ப்பது நல்லது.

do you know the reason of heart problem?


ஹார்ட் அட்டாக் வரும்போது ஏற்படும் வலியால் மார்பை பிடித்துக்கொண்டுள்ளார். (கோப்பு படம்)

do you know the reason of heart problem?

மனஉளைச்சலை அதாவது கோபம், சிடுசிடுப்பு, பொறாமை, வெறுப்பு, பேராசை, குற்றமனப்பான்மை ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.மது அருந்துவதையும், தவிர்க்கவேண்டும். மதுவை அதிகமாக அருந்துபவர்களுக்குஇதயமும், கல்லீரல் பாதிப்பும் அதிக அளவில் ஏற்படுவதால் உடல்நலம் கெடும்.

எனவே, நாம் வாழும் வரை நலமுடன் வாழ மருத்துவ நிபுணர்கள் சொன்ன கட்டுப்பாட்டு முறைகளையும் நாம் நலமுடன் வாழ அவசியம் கடைப்பிடித்தாக வேண்டும் . நம்முடைய உடலின் ஆரோக்யத்தினையும் முறையாக பாதுகாக்க வேண்டியது நம்முடைய கடமைகளில் ஒன்றாக வைத்துக்கொள்ள வேண்டும். தினமும் நேரம் இல்லை என்று ஒதுக்காமல் சிறிய அளவிலான உடற்பயிற்சிகளையும் முறையான நடைப்பயிற்சிகளையும் மேற்கொள்ளும் பட்சத்தில் நம்மைத்தாக்கும் நோய்களும் நம்மைவிட்டுவிலகிச் செல்லும் என்பதே நிதர்சனமான உண்மை.

Updated On: 20 Nov 2022 4:52 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    Governments Spying on Apple & Google Users-ஆப்பிள்,கூகுள் தரவுகள்...
  2. தமிழ்நாடு
    கார் பந்தயத்திற்கு அவசரம் காட்டும் அரசு: டிடிவி தினகரன் கண்டனம்
  3. இந்தியா
    Assam Earthquake-அசாமில் நில நடுக்கம்..! 3.5 ரிக்டர் அளவு பதிவு..!
  4. தமிழ்நாடு
    ஆன்லைன் ரம்பி.. அலட்சியப்படுத்தும் அரசுக்கு ராமதாஸ் கண்டனம்
  5. தமிழ்நாடு
    தோல்வி அல்ல.. எச்சரிக்கை: கே எஸ் அழகிரி
  6. இந்தியா
    Revanth Reddy Swearing-in Today- தெலங்கானா முதல்வாகிறார் ரேவந்த்...
  7. திருநெல்வேலி
    திருநெல்வேலி மாநகர காவல்துறையில் வாகன ஏல அறிவிப்பு..!
  8. குமாரபாளையம்
    சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்க கோரிக்கை..!
  9. தேனி
    தேனி மாவட்டத்தில் ஆம்புலன்ஸ்கள் பழுது: விபத்தில் சிக்கியவர்களை...
  10. சிவகாசி
    சிவகாசி அருகே, வேனில் கடத்தப்பட்ட ரேசன் அரிசி..!