மா, பலா, வாழையிலுள்ள மருத்துவ குணம் பற்றி தெரியுமா? ....படிங்க....

do you know the medicinal uses of mango,jackfruit,banana நாம் சாப்பிடும் மா, பலா, வாழையிலுள்ள மருத்துவ குணங்கள் இன்றளவில் பலருக்கும் தெரியவில்லை. படிச்சு பாருங்க...புரியும்...

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மா, பலா, வாழையிலுள்ள மருத்துவ  குணம் பற்றி தெரியுமா? ....படிங்க....
X

do you know the medicinal uses of mango,jackfruit,banana


do you know the medicinal uses of mango,jackfruit,banana

நாம் அன்றாடம் சாப்பிடும்முக்கனிகளின் மருத்துவ குணம் பற்றி தெரிந்துகொள்ளவேண்டும். அதாவது ஒவ்வொரு பழத்திலும் ஒவ்வொரு வகை தாதுச்சத்துகள் உள்ளன. அந்த வகையில் மா, பலா, வாழை என முக்கனிகளில் உள்ள மருத்துவ குணங்களைப் பற்றி விரிவாக பார்ப்போம்.

மாங்காய்

மா மரத்தினை அதன் பழங்களுக்காகவே தமிழகத் தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. வீட்டின் பின்பக்கத்தில் நிலம் இருப்பின் அதிலும் வளர்க்கின்றனர். மாம்பழத்தின் சுவைக்கேற்ப பல பெயர்களில் மாம்பழங்களை அழைத்தாலும் அதன் சிறப்பியல்புகள் எல்லாம் ஒன்றுதான்.

பொதுவாக மாங்காய் புளிக்கும். கனியானதும் சுவையுடன் இனிக்கும். இது காம்பு உள்ள நீண்ட தனி இலைகளையும் உச்சியில் கொத்தான மலர்களையும் உடைய பசுமையான பெரிய மரமாகும். மாமரத்தின் இலை துளிர், பருப்பு, பட்டை, ஆகியவைகள் எல்லாம் மருத்துவத்திற்குப் பயன்படுகின்றன.

சீதக்கழிச்சல் ரத்தக்கழிச்சல்

இவைகள் குணமாக மாமரத்தின் வேர்ப்பட்டையைக் கொண்டு வந்து இடித்து 50 கிராம் எடுத்து ஒரு மட்பாண்டத்தில் போட்டு 2 லிட்டர் நீர் விட்டு அரை லிட்டராகச் சுண்டக்காய்ச்சி வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.

வேளைக்கு 50 மி.லி. அளவாக காலை மாலை மதியம் என மூன்று வேளைகள் சாப்பிட்டு வந்தால் மேற்கண்ட நோய்கள் குணமாகும்.

குரல் கம்மல்தீர

நன்கு முற்றிய மாவிலைகளைக் கொண்டு வந்து ஒன்றிரண்டாக இடித்து 300 மி.லி. நீர்விட்டு கொதிக்க வைத்து எடுத்து வடிகட்டிக்கொள்ளவும். இதில் 50 மி.லி. எடுத்து சிறிது தேன் கலந்து சாப்பிடவும். இது போன்று 2 அல்லது 3 வேளை குடித்தாலே குரல் கம்மல் அகன்றுவிடும்.

தீப்பட்டபுண்ணுக்கு

மாவிலையை உலர்த்திக் கொளுத்தி சாம்பலாக்கி வெண்ணெயில் குழைத்து, தீப்புண்ணில் போட்டால் விரைவில் ஆறிவிடும்.

ரத்தமூலம், ஆசன எரிவு அகல

மாம்பருப்பைத் துாளாக்கி 5 கிராம் வீதம் காலை மாலை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் குணமாகும். மாம்பருப்பை நெய்யில் வறுத்து துாளாக்கி ஒரு தேக்கரண்டி வீதம் காலை மாலை கொடுத்து வந்தால் ஆசன எரிவாயு சுகமாகும்.

do you know the medicinal uses of mango,jackfruit,banana


do you know the medicinal uses of mango,jackfruit,banana

பலாப்பழம்

பலா மிகவும் சுவையுடையது என்பதினால் எல்லோருமே விரும்பி சாப்பிடுவார்கள். ஆகையினால் இதனையும் பெருமளவில் வளர்க்கின்றனர். பலா மரத்தின் இலை பளபளப்புடன் கரும் பச்சை நிறத்தில் இருக்கும். இதன் பழம் உருளை வடிவத்தில் இருக்கும். அதன் மேல் முள் உள்ளதாக இருக்கும். அதன் உள்ளே மஞ்சள் நிறக் கட்டையுடன் இனிய பலா சுளைகள் இருக்கும். பலா மரத்தின் இலை, பிஞ்சு, காய், பால், வேர் ஆகியவைகள் எல்லாம் மருத்துவ குணமுடையதாகும்.

தாதுவிருத்திக்கு

பலாப் பிஞ்சை சமைத்து உணவுடன் சேர்த்து உண்டு வந்தால் தாது விருத்தியாகும். பித்த நோய்கள் அகலும். பசிமந்தம் இருப்பின் நீங்கிவிடும்.

பசி தணிய

பலாக்காயை சமைத்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் பசி தணியும். சுவாசம் மிகும்.

மலச்சிக்கலுக்கு

பலாப்பழத்தினை சிறிய அளவில் சாப்பிட்டால் மலச்சிக்கல் அகலும். ஆனால் பலாப்பழத்தினை அதிக அளவில் உண்பது உடல் நலத்திற்கு நல்லதல்ல.

கட்டி உடைய

சில சமயம் கட்டி வந்தால் பழுத்து உடையாமல் துன்பத்தைக் கொடுக்கும். ஆகையினால் பலாப்பழத்தினை காடியில் இழைத்து அதன்மேல் பற்றுப்போட்டால் கட்டிப் பழுத்து உடையும்.

சிரங்குகள் ஆற

பலா மரத்தின் கொழுந்து இலைகளையோ அல்லுது அதன் வேரையோ மெழுகு பதத்திற்கு அரைத்து அதன் மேல்பூசி வந்தால் விரைவில் சிரங்குகள் அகலும்.

வாழைக்காய்

வாழை நமக்கு பல வகைகளில் அன்றாடம் பயன்படுவதினால் தமிழகம் முழுவதும் பரவலாகப் பயிரிடப்படுகிறது. இதில் பேயன் மொந்தன், பூவன், ரஸ்தாளி, மற்றும் கல்வாழை ,மலைவாழை, என பலபிரிவுகள் உண்டு.

வாழையின் இலை, பூ, பிஞ்சு, காய், பட்டை , தண்டு , கிழங்கு ஆகியவைகள் எல்லாம் மருத்துவத்திற்குப் பயன்படுபவையாகும். வாழைப்பூவினைப் பருப்புடன் சேர்த்து சமைத்து உண்டால் வயிற்றுக் கடுப்பு, நீர்க்கடுப்பு, கைகால் எரிச்சல் போன்றவைகள் குணமாகும்.

do you know the medicinal uses of mango,jackfruit,banana


do you know the medicinal uses of mango,jackfruit,banana

வாழைக்காயை சமைத்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் பித்த வாந்தி, வயிற்றிறைச்சல், வரட்டு இருமல், உமிழ்நீர் சுரப்பு போன்ற குறைபாடுகள் குணமாகும்.

எலும்புருக்குக்கு

வாழைமரத்தின் கிழங்கு மேற்கண்ட நோய்களைக் குணமாக்க வல்லது. அதனால் கீழ்க்காணும் முறையைக் கையாண்டு நலம் பெறலாம். வாழை மரத்தினைத் தரை மட்டத்திற்கு வெட்டிய பின் அடியில் கிழங்கு இருக்கும். அந்த கிழங்கில் சிறிது பள்ளமாக வெட்டி வைத்தால் நீர் ஊறி வரும்.

அந்த நீரை 100அல்லது 22 மி.லி. அளவு வேளைக்கு எடுத்து தினசரி காலை மாலை இரு வேளை உட்கொண்டு வந்தால் மேற்கண்ட நோய்கள் நலமாகும்.

do you know the medicinal uses of mango,jackfruit,banana


do you know the medicinal uses of mango,jackfruit,banana

கல்லடைப்பு

சிறுநீர் பாதையில் கல்லடைப்பு உண்டாகி சிரமப்படுகின்றவர்களுக்கு கீழ்க்காணும் முறை கைக்கண்ட மருந்தாகும்.

வாழைத்தண்டு அல்லது கிழங்கை நன்கு இடித்து சாறுபிழிந்து எடுத்து அதில் 100 மில்லி வீதம் காலை மாலை குடித்து வந்தால் கல்லடைப்பு நீங்கிவிடும். தவிர நீரெரிச்சல், சிறுநீரில் குருதி கலந்து போகுதல் போன்ற குறைபாடுடையவர்கள் இதே முறையைப் பயன்படுத்திக்குணமாகலாம்.

சூதக வலி

சூதகவலி, பெரும்பாடு ஆகியவற்றினால் கஷ்டப்படும் பெண்கள் வாழைப்பூவை பிட்வியலாய் அவித்து எடுத்து கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து அந்தச் சாற்றில் 100 மி.லி. எடுத்து பனங்கற்கண்டில் கலந்து சாப்பிடவும். இதுபோன்ற காலை, மாலை இருவேளை சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகிவிடும்.

தீப்புண்

இதற்கு வாழைப்பட்டையின் சாறை தீப்புண்ணின் மீது பிழிந்து விட்டுவந்தால் தீப்புண் விரைவில் ஆறிவிடும்.

நன்றி :சூர்யநாத்.

Updated On: 14 Nov 2022 10:46 AM GMT

Related News

Latest News

 1. வணிகம்
  Bitcoin Crosses $40000 Mark-எகிறிய கிரிப்டோ சந்தை..! காரணம் என்ன..?
 2. லைஃப்ஸ்டைல்
  Milk Meaning In Tamil பிறப்பு முதல் இறப்பு வரை பயன்படும் பொருள்...
 3. கந்தர்வக்கோட்டை
  கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் மாற்றுத் திறனாளி தினத்தை முன்னிட்டு...
 4. திருவள்ளூர்
  புழல் ஏரியில் 3000 கனஅடி தண்ணீர் திறப்பு..! வெள்ள அபாய எச்சரிக்கை..!
 5. தொழில்நுட்பம்
  2024 Instagram Trend Talk-இன்ஸ்டாகிராமை கட்டமைக்கும் இந்திய 'ஜென்...
 6. கல்வி
  Canada Student Visa Latest News-கனடாவில் படிக்க இந்திய மாணவர்கள்...
 7. சினிமா
  அர்ச்சனா அப்செட்...! காண்டேத்திய பூர்ணிமா..!
 8. தஞ்சாவூர்
  தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 31,169 நபர்களுக்கு தேசிய அடையாள...
 9. தொழில்நுட்பம்
  83 Spanish Newspapers are Suing Meta-மெட்டா மீது ஸ்பானிஷ் ஊடகங்கள்...
 10. நாமக்கல்
  காப்பீடு ஒப்படைப்பு செய்தவருக்கு ரூ 1.20 லட்சம் வழங்க நுகர்வோர்...