/* */

முருங்கைக் கீரையிலுள்ள மருத்துவ குணம் பற்றி தெரியுமா உங்களுக்கு....-படிங்க...

do you know the medicinal characters of drumstickleaves நாம் அன்றாடம் சாப்பிடும் காய்கறிகளில் அதிக மருத்துவ குணம் கொண்ட முருங்கைக்காய் பற்றி விரிவாக பார்க்கலாம்...வாங்க....

HIGHLIGHTS

முருங்கைக் கீரையிலுள்ள மருத்துவ  குணம் பற்றி தெரியுமா உங்களுக்கு....-படிங்க...
X

விற்பனைக்காக வந்துள்ள மருத்துவ குணமுடைய முருங்கைக்காய்கள் (கோப்பு படம்)

do you know the medicinal characters of drumstickleaves


அப்பப்பா... அப்பப்பா முருங்கைக்கீரையில் இவ்வளவு சத்தா? ...... இனியாவது சாப்பிட ஆரம்பிங்க....(கோப்பு படம்)

நாகரிக உலகில் நாளுக்கு நாள் உணவுப் பழக்க வழக்கமானது மாறி வருகிறது. எல்லாமே பாஸ்ட் ஃபுட் மயமாக மாறி வரும் வேளையில் இக்கால சந்ததியினர் காய்கறிகள்,கீரைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்களா? என்றால் கேள்விக்குறியாகவே உள்ளது.

பேக்கடு புட் வகைகளை விரும்பி சாப்பிடுவதும், பாஸ்ட்ஃபுட் என அரைவேக்காடு உணவுகளின் மீது ஆர்வம் காட்டுவதும் தான் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தினசரி ஒரு கீரை வகையினை உணவில் சேர்த்துக்கொண்டால் நம் உடல் ஆரோக்யம் மேம்படுவதோடு அதிலுள்ள நார்ச்சத்து நம் உடலுக்கு தேவையான சக்தியை அளிக்கிறது.

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தினாலும் நாமனவைரும் அதனைக் காதில் வாங்கி விட்டு வேறு வகையான உணவு வகைகளில் நாட்டம் கொள்வதால்தான் நமக்குஉடல் ஆரோக்ய கேடுகள் வரிசைக் கட்டி நிற்கிறது. சத்துள்ள உணவுகளை சாப்பிடுபவர்களின் எண்ணிக்கையானது நாளடைவில் குறைந்து வருகிறது. பாஸ்ட் ஃபுட்டுக்கு அடிமையாகிவிட்டனரோ என எண்ணத்தோன்றுகிறது.

do you know the medicinal characters of drumstickleaves


முருங்கை மரத்தில் பூக்களோடு காய்த்து தொங்கும் முருங்கைக்காய் (கோப்புபடம்)

கீரைவகைகளைப் பொறுத்தவரை நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் அதனைக் கட்டாயம் வாரம்ஒரு முறையேனும் சேர்த்துக்கொண்டால் நம்முடைய உடல் ஆரோக்யத்துக்கு அது நல்லது. அந்த வகையில் கீரை வகைகளில் பல மருத்துவ குணங்கள் மிகுந்துள்ள கீரைகளும் உண்டு. முருங்கைக்கீரையிலும் பல மருத்துவகுணங்கள் நிறைந்துள்ளது.

முருங்கைக்கீரை

கிராம மற்றும் நகர்ப்புறங்களில் வசிப்பவர்களில் தங்களுடைய வீட்டினில் முருங்கை மரத்தினை வளர்ப்பர்.இது தரும் பூ, காய், இலை, ஆகிய மூன்றுமே சத்து மிகுந்தவை. முருங்கை உஷ்ணவீரியத்தினைக் கொண்டதாகும். ஆனால் இதைத் நம்முடைய உடலில் நரம்பு , ரத்தம், சதை, மஜ்ஜை, ரசம், எலும்பு ஜீவசத்து ஆகிய ஏழுவகை தாதுக்களின் வெப்பத்தைப் போக்கி அவற்றைப் பாதுகாக்கும் தன்மை இருக்கிறது என்று சித்தர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். முருங்கைக் கீரையினை சமைத்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் பல நோய்கள் குணமாகும்.

முருங்கை மரத்தின் பூ, காய், இலை மூன்றும் சிறந்த பத்திய உணவாக பயன்படுகின்றன. வளரும்போதே பயனைத்தரக்கூடியதும் முருங்கைதான். அதிக பட்சம் 29 அடி உயரம் வரை வளரும். ஒரே ஆண்டிற்குள் பூத்துக்குலுங்கும் புதிய ரக குட்டை முருங்கைகளும் இப்போதே வந்துவிட்டன. இது வீட்டுத்தோட்டங்களில் வளர்ந்து வருவாய் ஈட்டுவதற்கு உகந்தது.

do you know the medicinal characters of drumstickleaves


சமையலுக்காக வெட்டி துண்டு துண்டுகளாக வைக்கப்பட்டுள்ள முருங்கைக்காய்.... (கோப்பு படம்)

மருத்துவ குணங்கள்

முருங்கை இலையில் வைட்டமின் ஏ மற்றும் சி இரும்புச்சத்துகள் அதிகமாக இருக்கின்றன. முருங்கைக் கீரையை அவித்துச் சாப்பிடுவதால் நல்ல பலனைத்தரும். பாலுாட்டும் தாய்மார்கள் முருங்கைக் கீரையினைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் நன்கு சுரக்கும்.

*கருத்தரிக்கும் பெண்களுக்கு தேவையான வைட்டமின்கள், இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, போன்றவை இக்கீரையில் உள்ளன.

*எல்லா வகையான அமினோ அமிலங்கள் இருப்பதால் நோய்க்கிருமிகள் நம்முடைய உடலுக்குள் நுழைய விடாமல் தடுத்துவிடுகிறது. இருதய நோய்கள்,ஆஸ்துமா,போன்றவை ஏற்படாதிருக்க முருங்கைக்கீரை, கட்டாயம் சேர்த்துக்கொள்வது நல்லது.

*நீரிழிவு நோயாளிகள் முருங்கைக்கீரையுடன் எள்ளைச் சேர்த்து சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்படும். ஆரோக்யமும், சிறப்பாக இருக்கும். உஷ்ண ஆதிக்கத்தினால் ஏற்படும் வயிற்றுவலி, வயிற்று உப்புசம், அடிவயிற்றை இழுத்து பிடித்துக்கொள்ளுதல், வயிற்று உளைச்சல் போன்றவை குணமாக முருங்கைக்கீரையை நெய்யுடன் பொரியல் செய்து உண்டால் கோளாறுகள் நீங்கும்.

do you know the medicinal characters of drumstickleaves


காலை டிபன் இட்லிக்கு சைடு டிஸ்சாக தயார் செய்து வைக்கப்பட்டுள்ள முருங்கை அரைத்துவிட்ட சாம்பார்

*குழந்தை பிறந்த பின் தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரக்காமல் போவதுண்டு. அத்தகைய தாய்மார்கள் முருங்கைக்கீரையைத் துவரம்பருப்புடன் சேர்த்துப்பொரித்து அதைச் சாதத்தில் போட்டு பசுநெய், ஊற்றிப்பிசைந்து தினமும் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் தாராளமாக சுரக்கும்.

*முருங்கைக் கீரையைப் பொரியல் செய்து நெய்யுடன் உணவில் சேர்த்துச் சாப்பிட்டுவந்தால் ஆண்களுக்கு ஆண்மைத் தன்மை அதிகரிக்கும். முருங்கை இலைப் பொரியலுடன் ஒரு முட்டையை உடைத்துக் கிளறினால் அது சத்தான உணவாக அமைகிறது. இந்த பொரியலை தொடர்ந்து 40 நாட்கள் சேர்த்து வந்தால் உடல் வலிமை பெறுவதுடன் தாது புஷ்டியும் உண்டாகும். உடலுக்கு பொலிவையும் தரும். கண் தொடர்பான நோயகளுக்கும் இது ஏற்றது.

முருங்கைப்பூ

முருங்கைப்பூவைச் சுத்தப்படுத்தி துவரம்பருப்புடன் வேக வைத்துச் சாப்பிட்டு வந்தால் வெப்பம் தணியும். கண் எரிச்சல் நீங்கும். தாதுக்கள் வலிமை பெறும். பித்த நோய்கள் குணமாகும்.பாலில் முருங்கைப் பூக்களைப் போட்டுக்கொதிக்க வைத்து அந்தப்பாலைத் தினமும் சாப்பிட்டு வந்தால் ஜீவசத்து அதிகம் உற்பத்தியாகும்.

do you know the medicinal characters of drumstickleaves


கம...கமக்கும் முருங்கைக்காய் கூட்டு.... டேஸ்டோ டேஸ்ட் போங்க.... வாங்க சாப்பிடலாம் ....(கோப்பு படம்)

do you know the medicinal characters of drumstickleaves

*முருங்கை ஈர்க்கு

முருங்கை் கீரையைப் போன்று அதன் ஈர்க்கும் மருத்துவகுணம் பெற்றதாகும். முருங்கை இலைகளை உருவிய பின் உள்ள காம்புகளே ஈர்க்குகள் என குறிப்பிடப்படுகின்றன. இவைகளினால் வலி உயர்வு போன்றவை நீங்கும்.

முருங்கைச்சாறு

முருங்கை இலைசாற்றைப்பாலுடன் கலந்து கர்ப்பிணிப் பெண்கள் தொடர்ந்து பருகி வந்தால் பிறக்கும் குழந்தை ஆரோக்யமாக இருப்பதுடன் பிரசவமும் சுகமாக அமையும்.

*முருங்கைக் கீரையின் சாற்றை வடிகட்டி அதைப்பாலுடன் கலந்து கைக்குழந்தைகளுக்கு கொடுத்துவந்தால் குழந்தையின் பல் எலும்புகள் உறுதியாக வளரும்.

do you know the medicinal characters of drumstickleaves


முருங்கைக்காய் கீரைப் பொரியல் பருப்பு கலந்தது (கோப்பு படம்)

*மூன்று வேளை ஒரு தேக்கரண்டி அளவு முருங்கைக் கீரைச் சாற்றுடன் ஒரு தேக்கரண்டி அளவு தேனையும் கலந்து சாப்பிட்டுவரவேண்டும்.

*அப்படிச் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை, வயிற்றுப்போக்கு, காலரா, குடல் அழற்சி,போன்ற நோய்கள் தீரும்.

*பொதுவாக தினமும் முருங்கைக்கீரை பொரியல் அளவாக உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் டாக்டரை நாட வேண்டியதே இல்லை.

*அந்த அளவுக்கு உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் இதில் உள்ளன. ஆகவே கட்டாயம் உணவில் முருங்கைக்கீரையைச் சேர்த்துக்கொள்ளுங்கள்.

*இதை யாரும் விலை கொடுத்து வாங்க தேவையில்லை. இது வீட்டிற்கு வீடு வளர்ந்து சுலபமாய் கிடைக்கும் கீரைகளில் ஒன்று. இதில் இரும்பு, தாது, புரோட்டீன், வைட்டமின் ஏ , வைட்டமின் சி, வைட்டமின் டி, என ஏராளமான சத்துகள் அடங்கியுள்ளன.

*துவரம்பருப்பு போட்டு குழம்பாகவும் பயன்படுத்தலாம். வேர்க்கடலைத் துகள்கள், காய்ந்த மிளகாய், பூண்டின் பருக்கைகள், இவைகளைச் சேர்த்து பொரியலாகவும் செய்யலாம்.

*நாய்க்கடிக்கு கூட இந்த கீரையை எண்ணெயில் இட்டு வதக்கி, நாய் கடித்த இடத்தில் கட்டுவார்கள். உள்ளுக்கு சாப்பிடவும் சொல்வார்கள்

*கைகளிலோ , கால்களிலோ, கட்டி வீக்கம் ஏற்பட்டு கட்டி உடையாமல் சீழும் நீரும் சேர்த்துக்கொண்டிருந்தால் இந்த கீரையை சற்று மஞ்சள் பொடி சேர்த்து எண்ணெயில் இட்டு வதக்கி இரவு நேரங்களில் கட்டியின் மீது கட்டி விடுவார்கள். இது நமக்கு வலி தெரியாமல் மிகவும் இதமாக இருக்கும். காலையில் கட்டை அவிழ்த்தால் கட்டிஉடைந்து சீழும், நீரும் வெளிவந்திருக்கும். பின் சாதாரணமாக மருந்தைப் பயன்படுத்தி புண்ணை ஆற்றி விடலாம்.

*தொண்டை கம்மலுக்கு கூட இந்த கீரையைப் பயன்படுத்துவார்கள். இதன் சாரைப்பிழிந்து தொண்டையில் தடவிக்கொண்டோமானால் தொண்டைக்கம்மல் போய்விடும்.மார்புச்சளிக்கும், இந்த கீரையைப் பயன்படுத்தலாம். இதைப் பொரித்தோ, குழம்புவைத்தோ உண்டால் மார்புச்சளி முற்றுமாக நீங்கிவிடும்.

Updated On: 20 Nov 2022 5:14 AM GMT

Related News

Latest News

 1. இந்தியா
  மூன்றாவது முறையாக மோடி மேஜிக்! டெய்லிஹண்ட் கருத்துக்கணிப்பு
 2. தமிழ்நாடு
  தேர்தல் கால சிறப்பு ரயில்கள்! தெற்கு ரயில்வே அறிவிப்பு
 3. வீடியோ
  Free Bus கொடுத்து ஆட்டோக்காரர்களின் வாழ்வாதாரத்தை கெடுத்த திமுக !...
 4. வீடியோ
  Stalin ஒன்னும் செய்யல திமுக இருந்து என்ன புரியோஜனும் ! #public...
 5. இந்தியா
  தேர்தல் நெருங்கும் நேரத்தில் சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள்
 6. இந்தியா
  தேர்தல் விதிகளுக்கு அரசியல் கட்சிகள் இணக்கம்: தேர்தல் ஆணையம் திருப்தி
 7. கிணத்துக்கடவு
  ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் துரோகம் செய்தவர் பழனிசாமி : உதயநிதி...
 8. வீடியோ
  Central Chennai-யில் பாஜகக்கு பெருகும் ஆதரவு மண்ணை கவ்வும் திமுக !...
 9. வீடியோ
  கீழ்த்தரமாக பேசும் Dayanidhi சென்னை மக்கள் குமுறல் ! #dmk #dayanidhi...
 10. வீடியோ
  திமுக பாஜக அதிமுக வெல்ல போவது யார் ? #dmk #admk #bjp #election...