பலநோய்களைக் குணப்படுத்தும் அற்புதக் கனியாக விளங்கும் ''நெல்லிக்கனி ''

do you know the medicinal characters of amla நாம் எத்தனை கனிகள் சாப்பிட்டாலும் அத்தனை கனிகளிலுமே ஒரு மருத்துவ குணம் உண்டு. அந்த வகையில் நெல்லியின் மருத்துவ குணங்களைப் பற்றிப் பார்ப்போமா?

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பலநோய்களைக் குணப்படுத்தும் அற்புதக் கனியாக விளங்கும் நெல்லிக்கனி
X

நெல்லிக்காய்.


do you know the medicinal characters of amla


நெல்லிக்காயில் தயார் செய்யப்பட்ட பல்வேறு வகைக் பொருட்கள் சாறு, பொடி, வற்றல், ஊறுகாய் (கோப்புபடம்)

do you know the medicinal characters of amla

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவு வகைகள் அனைத்திலுமே தாதுச்சத்துகள் அடங்கியுள்ளன. இவையெல்லாம் நமக்கு மறைமுகமாக பயன் தருகின்றன. எந்த காயில் எந்த பழத்தில் என்னென்ன சத்துகள் அடங்கியுள்ளது என்பதைப் பற்றி தெரியாமலேயே நாம் சாப்பிடும்போதே அவைகள் நமக்குபயனளிக்கின்றன. அந்த வகையில் நெல்லிக்காயிலுள்ள மருத்துவ பயன்கள் என்ன என்பதைப் பற்றி விரிவாக காண்போம்.

காயகற்ப மூலிகையில் முக்கியமானது நெல்லியாகும். இதற்கு அருநெல்லி, நெல்லிமுள்ளி, ஆம்லகம், ஆம்பல், ஆலகம், ஆமரிகம், தாத்திரி, கோரங்கம், மிருதுபலா, என்று பல சிறப்பு பெயர்களும் உண்டு.தமிழ்நாட்டில் அருநெல்லி,கருநெல்லி என இரண்டு இனங்கள் இருக்கின்றன. இதன் காய் உருண்டை வடிவத்துடன் சதைப்பற்றுடன் இருக்கும். இதன் விதைகள் மூன்று கோணங்கள் உடையது.

do you know the medicinal characters of amla


நெல்லிக்காயும் மற்றும் அதிலிருந்து தயார் செய்யப்பட்ட ஜூஸ் ஆகியன.

do you know the medicinal characters of amla

நெல்லியின் இலை, காய்,பூ, பழம், காய்ந்த பழம், பட்டை ஆகியவைகள் எல்லாம் மருத்துவ பயனுடையதாகும். நெல்லியில் உள்ளது போன்ற வைட்டமின்கள் வேறு எதிலும் இல்லையென்றே கூறலாம். அந்த அளவுக்கு இதில் சக்திகள் அடங்கியுள்ளது.பாஸ்பரஸ் 21 மி.கி. கால்சியம் 15 மி.கி, இரும்பு சத்து 1 மி.கி, வைட்டமின் பி-1 28 மி.கி,வைட்டமின் சி -720 மி.கி. நியாஸின் -டி0.4 கிராம், மாவுச்சத்து 14 கிராம், புரதச்சத்து 0.4 மி.கி, கொழுப்புச்சத்து 0.5 மி.கி.கலோரிகள் 60.

இதில் அதிகமாக உள்ளது வைட்டமின் சி. இதுபோன்று எந்தக்கனியிலும் இவ்வளவு சக்திகள் இல்லாமையினால் இதனை அதிகம்வேக வைக்காது பயன்படுத்தினால் பலன் பெறலாம். இல்லையெனில் இதிலுள்ள வைட்டமின் சி சத்துகள் அழிந்துவிடும்.இரும்புச்சத்து உடலில் குறைவாக இருப்பவர்கள் நெல்லிக்காயை தினசரி பயன்படுத்தினால் மிகவும் நல்லது.தவிர நீரிழிவு, மஞ்சள் காமாலை, போன்ற நோய்களைக் குணப்படுத்துவதில் நெல்லிக்காய் முக்கிய பங்கை வகிக்கிறது.

do you know the medicinal characters of amla


நெல்லிக்காய் (கோப்பு படம்)

do you know the medicinal characters of amla

நெல்லிக்காயை நெல்லிக்காய் லேகியம், நெல்லிக்காய் தைலம், நெல்லி-முள்ளி குடி நீர் என தயாரித்து நோய்கள் குணமாக்கப் பயன்படுத்தப்படுகிறது.நெல்லி-முள்ளி என்பது நெல்லிக்காய்களை காயவைத்து வற்றலாகப் பயன்படுவதாகும். இதனை நெல்லிக்காய் கிடைக்காத சமயங்களில் உபயோகித்து நிவாரணம் பெறலாம்.

பொதுவாக நெல்லிக்காயில் உடலுக்குத் தேவையான அறுசுவைகளில் இனிப்பு, கசப்பு, புளிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு என ஐந்து சுவைகள் அடங்கியுள்ளன.இனிப்பும் உவர்ப்பும் -பித்தத்தையும், புளிப்பு-வாயுவையும், துவர்ப்பும்-கசப்பும்- கபத்தையும் உன் முக்குணங்களான வாத-பித்த-கபம் ஆகிய மூன்று தோஷங்கள் போக்கக்கூடிய சக்தி நெல்லிக்காயில்உள்ளது.

நோயற்று- ஆரோக்யமாக வாழ எல்லோரும் அடிக்கடி நெல்லிக்காயை பலவிதத்தில் பயன்படுத்தி பலன் பெறவேண்டும்.

வாந்தி போன்றவைக்கு

நெல்லிக்காயைத் துவையல் செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் வாந்தி ஒக்காளம் சுவையின்மை போன்ற குறைபாடுகள் குணமாகும்.

காமாலை இருமல் அஜீரணம்

மேலே கண்ட நோய்கள் குணமாக கீழ்க்காணும் மருத்துவ முறையைக் கையாண்டு குணமாகலாம். முதலில் நெல்லிக்காயில் சாறு எடுத்துப் புளிக்க வைக்கவும். பின்னர் அதில் சுத்தமான தேனை சாற்றில் எட்டில் ஒரு பாகம் சேர்த்துக்கொள்ளவும்.

பின்னர் அதில் திப்பிலித் துாளையும், சர்க்கரையையும் சேர்த்து அடுப்பிலேற்றிக் காய்ச்சவும், பாகு பதம் வந்ததும் கீழே இறக்கி ஆறவிட்டு சுத்தமான பாட்டிலில் பத்திரப்படுத்திக்கொள்ளவும். இதிலிருந்து தினசரி காலை-மாலை ஒருஸ்பூன் வீதம் தொடர்ந்து சாப்பிட்டு வரவும். இதனால் காமாலை, குன்மம், இருமல், அஜீரணம், போன்ற நோய்கள் குணமாகும்.

do you know the medicinal characters of amla


நெல்லிக்காயில் தயார் செய்யப்பட்ட ஊறுகாய் (கோப்பு படம்)

do you know the medicinal characters of amla

எலும்புருக்கி நோய்

எலும்புருக்கி நோயினால் அவதிப்படுகின்றவர்கள் ஒரு தேக்கரண்டி நெல்லிச்சாறுடன் ஒரு தேக்கரண்டி சுத்தமான தேன் சேர்த்து தினசரி காலை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலனைப் பெறலாம்.

பல் வியாதிக்கு

பல்லில் உண்டாகும் பயோரியா வியாதிகளுக்கு நெல்லி இலை மருந்தாகப் பயன்படுகிறது. நெல்லி இலையில் சாறு எடுத்து வாய்க்கொப்பளித்து நெல்லிக்காயை உட்கொண்டால் நலமாகும்.

ஆறாத புண்கள்

சிலசமயம் உடலில் காயம் ஏற்பட்டால் ஆறாமல் அழுகி புழுத்து விடும். அதற்கு ஒரு நிவாரண பரிகாரம். நெல்லிக்காயை அரைத்து மெழுகு பதத்திற்கு எடுத்து சிறு மாத்திரை உருண்டைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி கண்ணாடி புட்டியில் பத்திரப்படுத்திக்கொள்ளவும். இந்த மாத்திரை உருண்டையை தினசரி மூன்று வீதம் சாப்பிட்டு வந்தால் ஆறாத புண்கள் ஆறிவிடும்.

சீதக்கழிச்சல்

இதனுடைய இலைக்கொழுந்தை ஒரு கைப்பிடி அளவு கொண்டு வந்து மெழுக அரைத்து மோரில் கலந்து குடிக்கக் கொடுத்தால் சீதக் கழிச்சல் குணமாகும்.

குடல் புண்ணுக்கு

நெல்லிக்காயில் சாறு எடுத்து அந்த சாற்றுடன் கொஞ்சம் பசுவின் கோமியம் கலந்து காலையில் சாப்பிடவும். இதுபோன்று தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குடல் புண் பூரண குணமாகும்.

செம்பட்டை முடி கருமையாக

ஒருசிலரின் முடி கருமையாக இல்லாமல் செம்பட்டை நிறத்துடன் காணப்படும். இதனைப்போக்கி முடி கருமையாக மாற ஒரு வழி. நெல்லிக்கனிகளை ஒரு பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு ஒரு இரவு முழுவதும் ஊற வைக்கவும்.

மறுநாள் காலை அந்த நீரில் எலுமிச்சம்பழத்தின் சாறைப்பிழிந்து கலக்கி அதனை எடுத்து தலைக்குத் தேய்த்துகுளித்து வரவும். இதுபோன்று தொடர்ந்து செய்து வந்தால் சில நாட்களிலேயே முடி கருப்பாக மாறும்.

வாய்க்கடுப்பு

மேற்கண்ட குறைபாடுகள் நீங்க தினசரி நெல்லிக்காயின் சாறை மட்டும் சாப்பிட்டு வந்தால் மேற்கண்ட குறைபாடுகள் நீங்கும். தவிர சிறுநீர் எரிச்சல் உள்ளவர்களுக்கு தினசரி இந்த சாறை உண்டு குணமாகலாம். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தினசரி மூன்று நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை வியாதி மட்டுப்படும்.

நெல்லி லேகியம்

தேக காந்தல், கிராணி, பொருமல், இருமல், க்ஷயம், ஈளை போன்ற வியாதிகளுக்குக் கீழ்க்காணும் முறையில் நெல்லிக்காய் லேகியம் தயாரித்து சாப்பிட்டால் குணமாகும்.

நெல்லிக்காய் வற்றல் 1 கிலோ சர்க்கரை 300 கிராம் ஆகியவைகளை தயார் செய்து கொள்ளவும். பின்னர் சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம், கிராம்பு, தக்கோலம் , மோடிஏலம், குங்கிலியம், குக்கில், வாய்விளாங்கம், சீரகம், தனியா, கூகை நீறு, அதிமதுரம், இவைகளை ஒவ்வொன்றும் 20கிராம் வீதம் சேகரித்துக்கொள்ளவும்.

நெல்லிக்காய் வற்றலை ஒரு மட்பாண்டத்தில் போட்டு 10 லிட்டர் சுத்தமான நீர் விட்டு அடுப்பில் வைத்து சிறுதீயாக எரியவிடவும்.

1 லிட்டர் அளவிற்கு சுண்டக்காய்ச்சியதும் கீழே இறக்கிப் பிசைந்து வடிகட்டி மறு பாத்திரத்தில் ஊற்றி அதில் சர்க்கரையைக் கொட்டிக் கரைத்து அடுப்பில் வைத்து சிறுதீயாக எரியவிடவும்.

பாகுபதம் வரும்போது 20 கிராம் வீதம் சேகரித்து வைத்துள்ள மற்றச் சரக்குகளை நன்குஇடித்து சூரணம் செய்து கொஞ்சம் கொஞ்சமாக அதில் போட்டுக் கிளறிக் கொண்டு கீழே இறக்கிவிடவும்.

கீழே இறக்கி ஆறியதும் போதிய அளவு நெய் தேன் விட்டுநன்கு கலந்து கையில் ஒட்டாத பதமாகப் பிசைந்து ஒரு ஜாடி அல்லது பெரிய கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்திக்கொள்ளவும். இந்த லேகியத்திலிருந்து வேலைக்கு சுழற்சிக் கொட்டை அளவு எடுத்து காலை மாலை இரு வேளைகள் வீதம் சாப்பிட்டு வந்தால் மேலே கண்ட வியாதிகள் குணமாகும். இதற்கு இச்சாப்பத்தியம்இருக்கவும.

நன்றி:சூர்யநாத்.

Updated On: 12 Nov 2022 11:27 AM GMT

Related News

Latest News

 1. நாமக்கல்
  நாமக்கல்லில் அரசு பள்ளி ஆய்வக உதவியாளர்களுக்கு விருப்ப இடமாறுதல்...
 2. தென்காசி
  தென்காசி உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்
 3. காஞ்சிபுரம்
  செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு ஆயிரம் கன அடியாக
 4. அம்பாசமுத்திரம்
  நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் மற்றும் நீர் இருப்பு நிலவரம்
 5. தென்காசி
  தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் மற்றும் இருப்பு நிலவரம்
 6. திருப்பூர் மாநகர்
  திருப்பூரில் இன்று (புதன்கிழமை) மின்தடை
 7. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை தீபத் திருவிழா; பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவம்,...
 8. பாளையங்கோட்டை
  நெல்லை மாவட்டத்தில், காய்கறி இன்றைய விலை நிலவரம்
 9. தமிழ்நாடு
  TRP Exam- பட்டதாரி ஆசிரியர், பயிற்றுநர் பணியிடங்கள் விண்ணப்பிக்க...
 10. நாமக்கல்
  திமுக கலை இலக்கியப் பேரவை சார்பில் நாமக்கல்லில் கவிதை ஒப்புவித்தல்...