/* */

கறிவேப்பிலையிலுள்ள மருத்துவ குணம் பற்றி தெரியுமா? ....உங்களுக்கு ?. படிங்க......

do you know the medicinal character of curry leaves நாம்அன்றாடம் உணவில் வாசனைக்காக கறிவேப்பிலை சேர்க்கிறார்கள் என தவறுதலாக நினைத்து அதனைச் சாப்பிடாமல் ஒதுக்குகிறோம்...இதைப்படிங்க..இனிமே ஒதுக்க மாட்டீங்க...

HIGHLIGHTS

கறிவேப்பிலையிலுள்ள மருத்துவ குணம்   பற்றி தெரியுமா? ....உங்களுக்கு ?. படிங்க......
X

பல மருத்துவ குணங்கள்  கொண்ட கறிவேப்பிலைச் செடி.... (கோப்பு படம்)

do you know the medicinal character of curry leaves

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவு வகைகளில் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை ஏதோ வாசனைக்காக சேர்க்கப்படுவதாக நினைத்து பலர் இலையின் ஓரத்தில் ஒதுக்கி வைத்துவிடுவார்கள். ஆனால் அதனை உணவோடு சேர்த்து உண்பவர்களுக்கு எத்தனை நன்மைகள் தெரியுமா? ...இது குறித்து ஒரு சொலவடை கூட நம் தமிழகத்தில் தேவைன்னா கூப்பிடுவாங்க...இல்லாட்டி கருவேப்பிலை மாதிரி துாக்கி எறிஞ்சிடுவாங்கன்னு...ஒரு சொல் உண்டு. அந்த வகையில் துாக்கி எறியக்கூடிய பொருள் கறிவேப்பிலை அல்ல. படிச்சு பாருங்க...உங்களுக்கே ஆச்சர்யமாகிவிடும்...இனிமே துாக்கி எறியமாட்டீங்க....

do you know the medicinal character of curry leaves


கறிவேப்பிலைச் செடித் தோட்டம் ....அந்தப் பக்கம் போனாலே நறுமணந்தான் போங்க.....(கோப்பு படம்)

do you know the medicinal character of curry leaves

நம் உணவில் சேர்க்கும் பல பொருட்களும் நமக்கு உடல் நலத்திற்கு ஆரோக்யத்தைக் கொடுப்பவைகள் தான். அந்த வகையில் கறிவேப்பிலை உணவுக்கு மணம்கொடுக்க மட்டுமல்ல ஆரோக்யம் காக்கவும் தான் இது பயன்படுகிறது.

மருத்துவ குணங்கள்

கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளதாக பல்வேறு ஆராய்ச்சியின் முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது. இதில் வைட்டமின் ஏ,பி,சி, கால்சியம் போன்றவை உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர் ஜான்,சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன், போன்ற அமினோ அமிலங்கள் உள்ளன. இவைதான் கறிவேப்பிலைக்கு இனி மணத்தினைத் தருகின்றன.

do you know the medicinal character of curry leaves


கறிவேப்பிலையை நிலத்தில்தான் வளர்த்த வேண்டுமென்பதில்லை.... வீடுகளில் மாடிகளில் கூடி இதுபோன்ற பிளாஸ்டிக் தொட்டிகளில் வளர்க்கலாம்.... (கோப்பு படம்)

பலமருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகின்றன.கறிவேப்பிலை, புற்றுநோயை ஆரம்பத்திலேயேக் கொல்லும் ஆற்றல் உடையது என்பதை ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.

நியூட்ரிசன் சயின்டிஸ்ட் ஆப் சிசையரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். இந்நிறுவனம் மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையவை மட்டுமல்ல. அவை பல மருத்துவ குணங்களைக் கொண்டவை என்பதைக் கண்டறிந்துள்ளது.இந்நிறுவனத் தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் , கறிவேப்பிலை ஒரு சிறந்த ஆன்டி ஆக்சிடண்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய் , இதய நோய் அபாயங்களைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது.

ஞாபகசக்திக்கு

மேலும் கறிவேப்பிலையால் ஞாபகசக்தி பெருகுகிறது என்கிறார் இவர்.கறிவேப்பிலையிலிருந்து எண்ணெய் எடுத்து அதை நுரையீரால், இதயம் ,கண்நோய்களுக்குத் தலைக்குத் தேய்க்கும் எண்ணையாகப் பயன்படுத்தலாம் என இங்கிலாந்திலுள்ள விவசாய மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

do you know the medicinal character of curry leaves


ஆஹா....நாக்கில் எச்சில் ஊறுதுங்கோ.... சூடான இட்லியோடு இந்த சட்னியைச் சாப்பிட்டுப்பாருங்க... (கோப்பு படம்)

do you know the medicinal character of curry leaves

சாதாரணமாக 100கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணெயில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி, தினசரி தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும். பரம்பரை நரை வராது. கண் பார்வைக்குறைவு ஏற்படாது. கறிவேப்பிலையை அரைத்துச்சாப்பிட்டால் நுரையீரல், இதயம் சம்பந்தப்பட்ட, ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்கிறது மேற்கண்ட ஆஸ்திரேலிய நிறுவனம்.

திருவனந்தபுரத்தில் உள்ள கேரளா பல்கலைக்கழகத்தில், கறிவேப்பிலையையும், கடுகையும், தாளிக்கப்பயன்படுத்தினால் அதனால் நன்மை உண்டா என்பது பற்றி மருத்துவக்குழுவினர் ஆராய்ந்தனர். அதில் கறிவேப்பிலையும், கடுகும் சேர்ந்து நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கின்றன என்பது தெரியவந்தது.

மேலும் ''பிரிரேடிக்கல்ஸ்'' நிலைஏற்படுவதையும் கறிவேப்பிலை தடுக்கிறது. பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால்தான் டி.என்.ஏ பாதிக்கப்படுகிறது. செல்களிலுள்ள புரோட்டீன் அழிகிறது. விளைவு, கேன்சர், வாதநோய்கள், தோன்றுகின்றன. தாளிக்கும்போது நாம் பயன்படுத்தும் கறிவேப்பிலையும், கடுகும் ப்ரிரேடிக்கல்ஸ் உருவாவதைத் தடுப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். இது தவிர நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலைகளையும் , மாலையில் 10இலைகளையும், பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவைப் பாதியாகக் குறைத்துவிடலாம் என்கிறார்கள் டாக்டர்கள்.

do you know the medicinal character of curry leaves


பல மருத்துவ குணங்கள் கொண்ட கறிவேப்பிலைப் பொடி.... பொடித்து டாப்பாவில் வைத்துக்கொண்டால் நல்லது (கோப்பு படம்)

தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டுவந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். கறிவேப்பிலை, ரத்தத்தில் இருக்கும் கொழுப்பைக் குறைக்கவும்.அறிவைப் பெருக்கவும்உ தவுகிறது. கறிவேப்பிலையைப் பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் டாக்டர்கள்.

எனவே இனிமேலாவது கறிவேப்பிலையைச் சாப்பாட்டில் இருந்து துாக்கி எறிந்து விடாமல் அதையும் குடலுக்கு அனுப்புவோம்...

நன்றி :சிவமதி.

Updated On: 5 Dec 2022 4:03 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு