காய்கறி, பழச்சாறுகளிலுள்ள மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
do you know strength of vegetable and fruit juice நாம்அன்றாடம் சாப்பிடும் காய்கறி, பழ வகைகளில் தாதுச்சத்துகள் நிரம்பியுள்ளன. குழந்தைகளுக்கு தினமும் கொடுத்து பழக வேண்டும்.
HIGHLIGHTS

do you know strength of vegetable and fruit juice
நாம் அன்றாடம் சாப்பிடும் காய்கறிகளில் போதிய தாதுச்சத்துகள் இருந்தாலும் ஒவ்வொரு காய்கறியிலும் சத்துகள் மாறுபடும்.அதேபோல் தான் பழவகைகளிலும் ஒவ்வொரு பழத்திற்கும் வெவ்வேறான சத்துகள் இருக்கும். ஆனால் இக்கால குட்டீஸ்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் பொறித்த உணவு மற்றும் பாஸ்ட்புட் அயிட்டத்தில் காட்டும் ஆர்வமும் அக்கறையும் காய்கறி பழங்கள் சாப்பிட காட்டுவதில்லை. இதனால் அவர்களின் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்காமல் நோய்பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
உண்மையில் சொல்லப்போனால் காய்கறிப்பழச்சாறுகள் சாப்பிட்ட 20 நிமிடத்திலேயே சீரணித்து உடலுக்குத் தேவையான சக்திகளாக மாற்றப்படுகின்றன. சமைத்த உணவில் 65 சதவீதத்தினைக் கழிவுகளாக நம் உடல் வெளியேற்றுகிறது. ஆனால் இயற்கை உணவில் நம்உடல்வெளியேற்றுவது 10 சதவீதத்திற்கும் குறைவே., சாறுகள் எடுக்க உபயோகப்படும் காய்கறிகள்: வெள்ளரி, கோஸ், காரட், பீட்ரூட், புடலங்காய், பீன்ஸ், வாழைத்தண்டு, இஞ்சி முதலியன. இஞ்சியை அரைத்துச் சாறு எடுத்து அதை சிறிது நேரம் தங்கவிட்டால், அடியில்சுண்ணாம்பு மாதிரி சிறிது தேங்கும். அதைச் சாப்பிடக்கூடாது. அதனால் சிறுநீரகக் கல் உண்டாகும். ஆகையினால் மேலே உள்ள இஞ்சிச்சாறு மட்டும் எடுத்து தேன் கலந்துசாப்பிடலாம்.
do you know strength of vegetable and fruit juice
do you know strength of vegetable and fruit juice
கேரட் சாறு
ஒருகிலோ கேரட்டில் 600கிராம் சாறு கிடைக்கிறது. ஒரு கிலோ கேரட் சாறு 20 கிலோ கால்சியம், மாத்திரைகளுக்குச் சமம். மேலும் சோடியம், பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு போன்ற சத்துகளும் நிரம்பியுள்ளன. பாக்டீரியாகிருமிகளை கேரட்சாறு வெளியேற்றுகிறது. 200 கிராம் சாறில் 50ஆயிரம் யூனிட் வைட்டமின் ஏ உள்ளது.அடுத்து வைட்டமின்அதிகம் இருப்பதால் நோய் தடுக்கும் சக்தி அதிகரிக்கிறது. கேரட் சாற்றை மற்ற இலை, காய், பழச்சாறுகளுடன் கலந்து் குடிக்கலாம். கேரட் சாறு அதிகமாக குடித்தால் உடல் மஞ்சள் நிறமாக மாறலாம். அதனால் பயமில்லை. குடிப்பதை நிறுத்தியவுடன் மறைந்துவிடும். ரத்தக்கசிவு உள்ள அல்சர் நோயாளிகளும் கேரட் சாற்றில் குணமடைந்துள்ளனர். வாய் துர்நாற்றம், கண்பார்வைக்குறைவு, டான்சில், போன்ற நோயாளிகளும் நன்றாக குணமடைந்துள்ளனர். 30 வருட ஆஸ்துமா நோயாளி கேரட் சாறு குடித்து பூரணமாக குணமடைந்துள்ளார்.
do you know strength of vegetable and fruit juice
do you know strength of vegetable and fruit juice
திராட்சைச் சாறு
ஒரு நாளுக்கு தினமும் 200 கிராம் திராட்சையிலிருந்து சிறிது சிறிதாககூட்டி ஒரு நாளைக்கு 4 கிலோ திராட்சை வரையிலும் சாப்பிடலாம். அளவு மனிதனைப் பொறுத்து மாறும். திராட்சைச் சாறு சாப்பிட்டு குறைவான ரத்த அழுத்தம், அனிமியா, நரம்புத்தளர்ச்சி, குடல்புண், காமாலை, வாய்வு, மூட்டுவலி, போன்றநோய்களில் உடனே குணமடையலாம். உலகத்திலேயே மிகச்சிறந்த டானிக் திராட்சை சாறுதான். ரத்தக் கலரில் சாறு உள்ள கருப்பு திராட்சை மிகவும் சிறந்தது.
do you know strength of vegetable and fruit juice
do you know strength of vegetable and fruit juice
ஆரஞ்சுச்சாறு
தொண்டையில் புற்று நோய் வந்து எந்த உணவையும் சாப்பிட முடியவில்லை என்ற நிலையில் வந்த பல நோயாளிகளுக்கு ஆரஞ்சுச்சாறு மட்டுந்தான் உணவாக கொடுத்து குணப்படுத்துகின்றனர் இயற்கை மருத்துவத்தில். எனவே திட உணவு சாப்பிட முடியாத நோயாளிகளுக்கு தண்ணீர் கலக்காத ஆரஞ்சு சாறுகளை சொட்டு சொட்டாக மெதுவாக ருசித்துச் சாப்பிடும்படி செய்தால் எந்தவிதமான நோயாளிகளும் குணம் பெறலாம்.
do you know strength of vegetable and fruit juice
do you know strength of vegetable and fruit juice
எலுமிச்சை
புளிப்புச் சுவையுள்ளதால் எலுமிச்சம்பழத்தினை மிகவும் அதிகம் சாப்பிட வேண்டாம்.தேவைப்படும்சமயத்தில் ஒரு நாள் ஒன்றுக்கு ஒரு எலுமிச்சம்பழமே போதுமானது. பாத்திரங்களை எலுமிச்சம்பழம் போட்டு விளக்கினால் அழுக்கு நீங்குவது போல உடலில் பல உறுப்புகளில் உள்ள அழுக்குகளையும் நீக்கி சுத்தம்செய்கிறது எலுமிச்சம்பழம். ஒரு பழத்திற்கு 4 டம்ளர் தண்ணீர் கலந்து சாப்பிடலாம். சுவைக்கு தேன் அல்லது வெல்லம் சேர்க்கவும். மஞ்சள் காமாலை நோயாளிகளுக்கு எலுமிச்சம்பழச்சாறு, மிகச்சிறந்த மருந்து.
தர்ப்பூசணிப்பழம் சாறு எடுத்துச்சாப்பிட சிறந்தது. மேலும்அன்னாச்சி, நெல்லிக்கனி, விளாம்பழம், பப்பாளி, மாதுளை, மாம்பழம், ஆப்பிள்,கொய்யா, போன்ற எந்த பழங்களையும் தோல்விதை நீக்கி சாறு தயாரிக்க உபயோகிக்கலாம்.தேவைப்பட்டால் தேங்காய்ப்பால் தேன்அல்லது வெல்லம் சேர்க்கவும். கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் மிகச்சிறிதளவுதான் கொட்டைப்பருப்புகள் சாப்பிட வேண்டும். பழங்களை அதிகமாகச் சாப்பிடலாம்.
முளைவிட்ட தானியங்களும் பயறு வகைகளும்
கோதுமைப்பால் தயாரிக்கும்போது முளைவிட்ட கோதுமை தயார்செய்த மாதிரி பலவிதமான தானியங்களையும், பயறுகளையும் முளைக்க விட்ட பிறகு உணவாகச் சாப்பிடலாம்.
இதற்கேற்ற தானியங்கள்:
கம்பு, கேழ்வரகு, கோதுமை முதலியன இதற்கேற்ற பயறுவகைகள்:எள், நிலக்கடலை, பட்டாணி, கொண்டைக்கடலை, உளுந்து, பச்சைப்பயறு,முதலியன. சூரிய ஒளி, காற்று, நீர், மண் முதலியவற்றிலிருந்து தயாரிக்கப்பட்ட வைட்டமின்களும், தாது உப்புக்களும், கீரைபோன்றுமாற்றம் அடைந்துள்ள இந்த முளைவிட்ட உணவுகளில் மிகவும் அதிகமாக இருப்பதை இந்த உலகமே ஒத்துக்கொண்டுள்ளது.
do you know strength of vegetable and fruit juice
do you know strength of vegetable and fruit juice
உலர்ந்த பழங்கள்
உலர்ந்த பழங்களில், அனைவருக்கும் தெரிந்தவை திராட்சை, பேரிச்சம்பழம், அத்திப்பழம் முதலியன. உலர்ந்த பழங்களை பூச்சி சாப்பிடாமலிருக்க அதில் சல்பனாமைட் போன்ற விஷமருந்துகளைத்தெளிக்கின்றார்கள். எனவே உலர்ந்த பழங்களை சாப்பிடுவதற்கு முந்தி பத்து நிமிடம் , தண்ணீரில் ஊறவைத்துக் கழுவிய பிறகுதான் சாப்பிட வேண்டும். 6 கிலோ பழங்களைக் காயப் போட்டால்தான் ஒருகிலோ உலர்ந்த பழங்கள் கிடைக்கும். எனவே உலர்ந்த பழங்களின் விலை சாதாரண பழங்களைவிட 6 மடங்கு அதிகமாகத்தான் இருக்கும். எனவே 100 கிராம் உலர்ந்த பழம் சாப்பிட்டால் 600 கிராம் பழங்கள் சாப்பிட்ட மாதிரி, குளிர் காலத்திலும் பழங்கள் கிடைக்காத காலங்களிலும், உலர்ந்த பழங்களை உணவாக உபயோகிக்கலாம்.
கொட்டை பருப்புகள்
மனிதனின் முக்கிய உணவுகளில் கொட்டை, பருப்புகளும் ஒன்றாகும். முந்திரிப்பருப்பு, பிஸ்தாப்பருப்பு, பாதாம்பருப்பு,தேங்காய் முதலியன. கொட்டைப்பருப்புகளில் முக்கியமானவை. தேங்காயைத் தவிர மீதி பருப்புகளை சிறிது நேரம் ஊற வைத்தும் சாப்பிடலாம்.