மனமே....மனமே...மனமே.....நலமா?..... மனநோய்- சில உண்மைகள்....படிங்க...
do you know some,facts about psychiatric disease? மனமது செம்மையானால் வாழ்வது சிறக்கும்.மனம் சரியான நிலையில் இல்லாவிட்டால் அவ்வளவுதாங்க...பிரச்னைகள்தான்... படிங்க...
HIGHLIGHTS

ஒரு மனுஷனின் மனதில் இவ்வளவு பிரச்னைகள் விஷயங்கள்இருந்தால் ஏங்க குழம்பாது...(கோப்பு படம்)
do you know some,facts about psychiatric disease?
வாழ்க்கையில் நாம் முழு மனுஷனா நாம் நடமாடவேண்டும் என்றால் நம் மனம் நல்லநிலையில் இருக்க வேண்டும். நீங்களே உங்களுடைய அனுபவத்தில் உணர்ந்திருப்பீர்கள் ... யாராவது சோகமாக இருந்தால் அல்லது யாருடனும் பேசாமல்அமைதியாக தனித்திருந்தால் என்னாச்சு என்று கேட்டிருப்பீ்ர்கள்...ஒண்ணுமில்ல....கொஞ்சம் மனசு சரியில்லை என்று பதிலே ஓங்கி ஒலிக்கும்.
அந்த வகையில் நம்முடைய அன்றாட செயல்பாடுகள் அனைத்துமே மனதினை மையமாக கொண்டவை. மனமது செம்மையானால் வாழ்வது சிறக்கும்... என்றகூற்றிற்கேற்ப மனசு நல்லாயிருந்தாதான் அன்றைய வேலைகளும் சிறக்கும் என்பதில் எந்தமாற்றுக்கருத்தும்இல்லை.
do you know some,facts about psychiatric disease?
do you know some,facts about psychiatric disease?
அதுசரிங்க மனசு சரியில்லாம பலர் ஆகிவிடுகின்றனரே அதற்குஎன்ன காரணம்? என கேட்கிறீர்களா? படிச்சு பாருங்க உங்களுக்கே புரிந்துவிடும்.
அழுக்கு தோய்ந்த கிழிந்த ஆடைகள், சடைபோட்ட கேசம், யாருக்கும் புரியாத பேச்சுகள் என்று சாலைகளில் திரியும் நபர்களை மட்டும் தான் நாம் மனநோயாளிகள் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் சலவை செய்த சட்டையும், வாரிச்சீவிய தலையுடன் கூடிய டிப்-டாப் ஆசாமிகளிலும்பலர் மனநோயாளிகளாக இருக்கின்றனர் என்கிறது மருத்துவ உலகம்.
அடடே...அப்படியா.. என்கிறீர்களா?.... அதற்கான விடையாக மனநோய்களும் நலமும் பற்றிய செய்தித்தொகுப்புதாங்கஇது.
do you know some,facts about psychiatric disease?
do you know some,facts about psychiatric disease?
ஒவ்வொரு மனிதனுக்கும்உடல்நலத்தைப் போன்றே மனதின் ஆரோக்யமும் மிகவும் முக்கியம் என்பதால்தான் உலக சுகாதார நிறுவனம் உடல் மற்றும்மன ஆரோக்யத்தின் அவசியத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
மனநலம் குறித்து நடத்தப்பட்ட கணக்கெடுப்புகளின்படி, மொத்த மக்கள் தொகையில் ஒரு சதவீதம் பேர் தீவிர மனநோயினாலும், 10 முதல் 15 சதவீதம் வரையிலான மக்கள் மற்ற மன நோய்களினாலும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்தியாவில் மட்டும் 90 லட்சத்திற்கும் அதிகமானோர் தீவிரமன நோயாளிகளாக மன நோய்களினால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
do you know some,facts about psychiatric disease?
do you know some,facts about psychiatric disease?
மனநோய்களைப் பொறுத்தவரை பல வகைகள் உள்ளது. மூளையில் ஏற்படும் சில ரசாயன மாறுதல்கள், வாழ்வில் ஏற்படும் பிரச்னைகள் போன்றவற்றால் ஏற்படும் மனச்சோர்வு நோய், மனச்சிதைவு நோய், மனஎழுச்சி நோய், தற்கொலை முயற்சி, சந்தேக நோய், எண்ண சுழற்சி மனநோய், மனப்பதட்ட நோய், பேயாட்டம், ஹிஸ்டீரியா, மனவளர்ச்சி குன்றுதல், வலிப்பு நோய், குடிநோய் போன்றவை குறிப்பிடத்தக்க மன நோய்களாகும்.
இவற்றில் குறிப்பிட்ட சில நோய்களை மருந்துகள் மூலமாகவும், சில நோய்களை குறைபாடுகளை கணித்து உரிய மன நல டாக்டர்கள் மூலம் பயிற்சிகளை அளிப்பதன் மூலமாகவும் தீர்க்க முடியும். மேலும் மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் யாருக்கும் பாரமாக இல்லாமலும், மற்றவர்களைப் போல வாழவும் முடியும். ஆனால் மனநோயை் பற்றியும், அதற்கான தீர்வுகளைப் பற்றியும் அறியாமலும் எல்லாம் ’’விதி’’ என்று எடுத்துக்கொள்ளும் மனப்பான்மை சமூகத்தில் இன்னமும் இருக்கத்தான் செய்கிறது.இதை மாற்றுவதற்குத்தான் மத்திய மாநில அரசுகள் பெரும் முயற்சி எடுத்து வருகின்றன.
do you know some,facts about psychiatric disease?
do you know some,facts about psychiatric disease?
இது குறித்து மன நல டாக்டர்கள் கூறுகையில், பெரும்பாலான வளரும் நாடுகளில் மனநோயாளிகள் நலனும், சிகிச்சையும் புறக்கணிக்கப்படுகிறது. மனநோய், பேய், பிசாசு மற்றும் கெட்ட ஆவிகளால் தான் ஏற்படுகிறது என்று எண்ணி அதை மந்திரம், மாயம், பில்லி , சூனியங்களால் தீர்க்க முற்படும் அறியாமை இன்றும் நாட்டின் பல இடங்களில் நிலவுகிறது.
பல மூட நம்பிக்கைகள் மற்றும் அறியாமைகள் மனநல மருத்துவத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை மக்களிடம் சென்று அடையாத வகையில் செய்துள்ளது. மனநோய் சிகிச்சையும் அதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களும் நகர்ப்புறங்களில் உள்ள மருத்துவ மனைகளில் மட்டும்தான் என்ற நிலை உருவாகியுள்ளது.
தற்காலத்தில் மனநோய்க்கான சிகிச்சை என்பது வெட்டவெளிச்சமாகிவிட்டது என்று கூட சொல்லலாம். அக்காலத்தில் தயங்கி தயங்கி மனநல டாக்டர்களிடம் சென்ற பொதுமக்கள் தற்போது தைரியமாகவே செல்லதுவங்கியுள்ளனர்.மனநல டாக்டர்களின் கிளினிக்குகளிலும் வழக்கத்தினைவிட கூட்டம்அதிகரித்து காணப்படுகிறது.
do you know some,facts about psychiatric disease?
do you know some,facts about psychiatric disease?
ஆனால் கிராமங்களில் உள்ள மக்கள் நீண்ட துார பயணம் செய்துதான் மனநல சிகிச்சைபெறும்நிலைஉ ள்ளது. இந்நிலையை மாற்றி மனநோயை ஆரம்ப நிலையிலேயே கிள்ளி எறியும்நிலை கிராமப்புறங்களி்லும் ஏற்பட அங்குள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் மனநல டாக்டர்களை நியமிக்க வேண்டும்.
இந்நிலையில்தான் மனநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனநல மருத்துவ வசதிகளை அருகாமையிலேயே பெறச்செய்யும் வகையில் மத்திய அரசின் உதவியுடன் தமிழக அரசால்மாவட்டம் தோறும் மனநலத்திட்டம் செயல்படுத்தப்படுகிறதுஎனஅவர்கள் தெரிவித்தனர்.
மனநோய் -சில உண்மைகள்
*குணத்தில் மாற்றம் பில்லி சூன்யம். ஆவிகளால் ஏற்படுவதில்லை.
*மனநோய்க்கு மருந்து உண்டு
*மனநோயாளிகளுக்கு அன்பும், ஆதரவும் தேவைப்படுகிறது.
do you know some,facts about psychiatric disease?
do you know some,facts about psychiatric disease?
*-மனநோயாளியை ஏளனம் செய்வது , கடிந்து கொள்வது, அடிப்பது அவர்களது மனநோயை அதிகரிக்கச் செய்யும்.
*மனநோய் முற்றிலும் குணமடையக்கூடியவை. டாக்டர் ஆலோசனையின்படி அவர்கூறும் காலத்திற்கு மருந்து தடையில்லாமல் வழங்க வேண்டும்.
*மாவட்ட மருத்துவமனைகளில் மனநல சிகிச்சை அளிக்கப்படுகிறது.
*வழிபாட்டுத் தலங்களில் அடைப்பதாலோ, அல்லது கட்டிவைப்பதாலோ மனநோய் குணமடையாது. மாந்திரீகம், ஆவிஇறக்குதல் போன்றவை மனநோயைக்குணப்படுத்தும் முறைகள் இல்லை.