/* */

இருதய பாதிப்பு ஏற்படுவது ஏன் தெரியுமா? முதலில் இதைப் படிங்க.....

do you know reason for heart problem? மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய நோய்களில் மிகவும் முக்கியமானது இருதய சம்பந்தப்பட்ட நோய்கள்தான். சிறுவயதினரையும் தாக்குகிறது ஹார்ட் அட்டாக்...படிங்க...

HIGHLIGHTS

இருதய பாதிப்பு ஏற்படுவது ஏன் தெரியுமா? முதலில் இதைப் படிங்க.....
X

இருதயம்  மிகவும் பாதுகாக்கப்பட வேண்டிய உறுப்பு என்பதைச் சுட்டிக்காட்டும்  படம் (கோப்பு படம்)

do you know reason for heart problem?

மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய நோய்களில் மிகவும் சென்சிடிவானது இருதய பாதிப்பு தான். மற்ற நோய்களினால் பாதிக்கப்பட்டால் நோயாளிகள் தொடர்சிகிச்சையால் குணமடைந்துவிடலாம். ஆனால் இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதற்கு உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் மாரடைப்பு ஏற்பட்டு பாதிப்பு ஏற்படுகிறது.

தற்போது நவீன மருத்துவத்தில் இருதய பாதிப்படைந்தவர்கள் உடனடி சிகிச்சை மேற்கொண்டால் உயிர் பிழைக்க வாய்ப்புகள் உள்ளது. நம்முடைய உடலில் வழக்கத்துக்கு மாறாக எந்த வித மாற்றான அறிகுறிகள் ஏற்பட்டாலும் அதற்கு உடனடித்தீர்வாக சிகிச்சை மேற்கொள்வது அவசியம். அந்த வகையில் இதய சிகிச்சை என்றாலே பயந்து அலறி அடித்தது. இந்த நுாற்றாண்டில் தான் இருதய நோய்களுக்கான சிகிச்சையில் எவ்வளவு வளர்ச்சி அதுவும் சென்ற ஐம்பது வருடங்களில்தான். அது ஒரு காலம்...சரியானநேரத்தில் முறையான சிகிச்சை பெற்றால்இன்று பாதிப்பினைத்தவிர்க்க, முடியும். எனவே, இருதய நலன் பற்றிய விழிப்புணர்வும், நவீன சிகிச்சை முறைகளையும்அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். உலகின் 60 சதவீத இருதய பாதிப்பு ஏற்பட்டோர் நம் இந்தியாவில்தான் உள்ளனர். எனவே இருதய நலன் பற்றிய விழிப்புணர்வு நமக்குஅவசியம் மட்டுமல்ல...கட்டாயம்...

do you know reason for heart problem?do you know reason for heart problem?

நோய்க்கான காரணங்கள்

இருதய நோயின் காரணங்களுக்கான டாப் 5 பட்டியல்:

புகைபிடிப்பது, நீரிழிவு, உயர் ரத்தஅழுத்தம், உடல் பருமன், பாரம்பரியம். இதில் உடல் பருமனால்ஆசிய மக்கள் அதிகம் பாதிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு கொழுப்பு அளவில் நல்லகொலஸ்ட்ரால் குறைவாகவும், இருதய நலனைப் பாதிக்கும் டிரை கிளிசரைட் அதிகமாகவும் உள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரத்தத்தில் நல்ல கொழுப்பு அளவு சராசரியாக 40 மில்லி கிராம் இருக்க வேண்டும். ஆனால், நம்மவர்களுக்கு பெரும்பாலும் இதற்கு குறைவாகவே உள்ளது. அதுபோல் சாப்பிடாமல் எடுக்கும் சர்க்கரை அளவு 110 இருக்க வேண்டும். இடுப்பு சுற்றளவு ஆண்களுக்கு 90 செ.மீ. பெண்களுக்கு 80 செ.மீ. என்ற அளவில் இருக்க வேண்டும். இந்த சராசரியை மீறும்போது இருதய நோய் வாய்ப்புகள் அதிகமாகின்றது. முக்கியமாக பொதுவான உடல் பருமனைக்காட்டிலும் நம்மவர்களுக்கு வயிற்றினைச் சுற்றி அதிக அளவில் கொழுப்பு உள்ளது.இது ஆபத்தானது. உடலில் கொழுப்பு கூடாமல் இருக்க அல்லதுகூடிய கொழுப்பைக்குறைக்க மூன்றே விஷயங்களைசெய்தால் போதும் தினமும் ஆறு மணி நேரம் கண்டிப்பாகதுாங்க வேண்டும். ஒருமணி நேரத்தை உடற்பயிற்சிக்காக செலவிட வேண்டும். தினமும் 150 முதல் 250 கிராம் அளவு காய்கறிகளையும், அதே அளவு பழங்களையும் சாப்பிட வேண்டும். மேலும் உணவில் கார்போஹைட்ரேட்சத்து குறைவாக எடுப்பதாலும் உடல் பருமனைக் கட்டுப்படுத்தலாம்.

இதயம் இயங்க கரண்ட் தேவை

இதயம் துடிப்பது தானாக நடைபெறவில்லை. இதயம் இயங்க ஒரு துாண்டுதல் தேவை. இல்லை என்றால் இதயம் நின்றுவிடும். இந்த துாண்டுதல் கொடுக்கும் மின் உற்பத்தி நிலையம் இதயத்தின் மேல் அறையில்தான் இதயம் இயங்க தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றது. இதில் பாதிப்பு ஏற்படும்போது இதயத்துடிப்பு குறைந்து உயிரிழப்பு ஏற்படுகிறது. கவலைப்படாதீர்கள் கரண்ட் பிரச்னைக்கு யு.பி.எஸ். மாதிரி இவற்றை சமாளிக்க நவீன சிகிச்சைகள் தற்போது உள்ளது.

do you know reason for heart problem?


மனித இருதயம் ஹார்ட் அட்டாக்கிற்குமுன்பு உள்ள நிலை அடுத்த படம் ஹார்ட் அட்டாக் ஏற்பட்ட பின்னர் நிலை (கோப்பு படம்)

do you know reason for heart problem?

2 வால்வுகளினால் இதயத்திற்கு நீண்ட வாழ்வு

உண்மையில் வால்வுகள் பாதித்தால் வாழ்க்கையே பாதித்துவிட்டது என்பது காலம் கடந்துவிட்டது. இதயத்தில் முற்றிலும் பாதிக்கப்பட்ட வால்வுகளை மாற்றி புதிய செயற்கை வால்வினைப் பொருத்தி நலம் பெறும் வகையில் தற்போது நவீன சிகிச்சை முறைகள் வந்துள்ளன.

என்ன? வால்வுகளை மாற்ற வேண்டுமா? இதயம் என்ன மோட்டார் பம்பா? வால்வினை மாற்றுவதற்கு? என்றுபயந்து நடுங்க வேண்டாம். பாதிக்கப்பட்ட இதய வால்வுகளை மாற்றுவது பயப்படக்கூடிய விஷயமில்லை. மைட்ரல் வால்வு, அயோட்டிக் வால்வு, ட்ரைகஸ்பிட் வால்வு, போன்ற இதய வால்வுகள் பழுதுபட்டால் அவற்றை அறுவை சிகிச்சையால் நீக்கிவிட்டு செயற்கை வால்வுகளை பொருத்தி மீண்டும் இதயத்தினை இயல்பான ஆரோக்யமான நிலைக்கு கொண்டு வர முடியும்.

இருதய பைபாஸ் சிகிச்சையின் மகத்துவம்

1960-70 களில் இச்சிகிச்சை தொடங்கியது. இந்த சிகிச்சையில் இதயத்துடிப்பை நிறுத்தி அதற்குபதில் ஹார்ட் லங்மிஷின் மூலம் உடலுக்குப் பம்ப் செய்யப்படும். ஆனாலும் நீண்ட நேரம் ஹார்ட் லங் மிஷனைப் பயன்படுத்தும்போது ஒரு சிலகுறைபாடுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தகுறைபாடுகளைக் களைய அறிமுகமானதுதான்''பீட் ஹார்ட் பைபாஸ் சர்ஜரி'' என்ற புதிய அறுவை சிகிச்சை முறை.

இதில் இதயத்துடிப்பு நிறுத்தப்படாமல் சிகிச்சை நடக்கிறது. நவீன சிகிச்சை முறையினால் கால் தொடையிலிருந்து எடுக்கப்பட்ட ரத்த நாளங்களை , நேரடியாக இதயத்தில் அடைப்பு ஏற்பட்ட ரத்த குழாயிற்குப் பதில் பொருத்துவோம். இந்த சிகிச்சை முறையின் நேரமும், நோயாளி ஆஸ்பத்திரியில் தங்கியிருக்கும் காலமும் குறைகின்றது. இதில் இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள், சிறப்பு மயக்க மருந்து நிபுணர்கள் , ஐ.சி.யு. ஊழியர்கள் மற்றும் பிஸியோ தெரபிஸ்டுகள் ஆகியோர் இணைந்து ஒரு சிறப்பு மருத்துவகுழுவாக இந்த பணியினைச் செய்கின்றோம். இதனால் பெரியவர்கள், குழந்தைகள் என அனைவருக்கும் கொரோனரி பைபாஸ் அறுவை சிகிச்சை, வால்வு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்ய முடியும். குழந்தைகளுக்கு இதயத்தில் ஏற்படும் ஓட்டைகளை அடைக்க முடியும்.

do you know reason for heart problem?do you know reason for heart problem?

இதயத்துக்கு ஒரு ஹெல்மெட்

இப்போதெல்லாம் அதிகவேகமாக துடிக்கும் இதயத்தால் விபரீதங்களும், அதிகமாகின்றன. இதயத்துடிப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவே ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 6 முதல் 12வரை ''உலக இதய துடிப்பு வாரம் '' கடைப்பிடிக்கப்படுகிறது. சராசரிமனித இதயம் நிமிடத்திற்கு 60 முதல் 100 முறை துடிக்க வேண்டும். இது உடற்பயிற்சியின் போது, மனநிலையைப் பொறுத்தும் மாறுபடலாம். இதயத்துடிப்பு குறையும் போது அதைச்சமாளிக்க பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்படுகிறது. இந்த கருவி சிறிய அறுவை சிகிச்சைசெய்து மார்பு பகுதியில் பொறுத்துவோம். பேஸ்மேக்கர் பொருத்துவதன் மூலம் இதயத்துடிப்பைச் சீராக்க முடியும்.

do you know reason for heart problem?


இருதய நோயாளிகள் அவசியம் சாப்பிட வேண்டிய காய்கறிகள் மற்றும் பழவகைகள் (கோப்பு படம்)

do you know reason for heart problem?

ஆஞ்சியோபிளாஸ்டி: மாரடைப்பை விலக்க சிகிச்சை

வாழ்க்கை முறை மாற்றத்தால் இன்று இளம் வயதினருக்கும் மாரடைப்பு ஏற்படுகிறது. இது இதய ரத்தக்குழாய் அடைப்பதால் உண்டாகிறது. திடீர் மாரடைப்பிலிருந்து உயிரைக் காப்பாற்ற வரப்பிரசாதமாக நவீன ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை இருக்கிறது. மாரடைப்பு சிகிச்சைக்கு நேரம் மிக மிக முக்கியம். கால தாமதத்தால் இதயம் செயலிழக்க துவங்கி விடும். இதனால் விளைவுகள் விபரீதமாகக்கூடும். எனவே விரைந்து ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை பெறுவதன் மூலம் அடைப்பட்ட ரத்த குழாயின் அடைப்பை நீக்கி இதய தசைகளுக்கு ரத்தம் தங்கு தடையின்றி பாய வைக்க ஸ்டென்ட் பொருத்தப்படுவதன் மூலம் உயிரைக்காப்பாற்ற முடியும் என இருதய நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Updated On: 29 Nov 2022 11:27 AM GMT

Related News

Latest News

 1. விளையாட்டு
  மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி முதல் கிளாசிக்கல் செஸ் வெற்றி பெற்ற...
 2. வீடியோ
  😧கிடு கிடுவென உயரும் விலை | வெள்ளிக்கு விலை இவ்வளவா? #gold #silver...
 3. ஈரோடு
  பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 982 கன அடியாக அதிகரிப்பு
 4. இந்தியா
  பாஜக வெற்றி பெற்றால் கர்தவ்யா பாதையில் ஜூன் 9 பதவியேற்பு விழா
 5. திருவண்ணாமலை
  சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய ஆர் ஐ கைது
 6. திருவண்ணாமலை
  இலங்கை தமிழ் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிக்காட்டுதல் பயிற்சி
 7. தொழில்நுட்பம்
  கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணை 'ருத்ரம்-II: இந்தியா வெற்றிகரமாக சோதித்த...
 8. ஆன்மீகம்
  Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
 9. ஈரோடு
  பெருந்துறை அருகே பதுக்கி வைத்திருந்த 150 கிலோ கஞ்சா பறிமுதல்: மூவர்...
 10. நாமக்கல்
  நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடர் சரிவில் இருந்து மீண்டது