அசைவ உணவு சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் தீங்குகள் என்னென்ன?.....படிச்சு பாருங்க...
ஆஹா....நான் அப்படியே சாப்பிடுவேன்....என்கிறாரா?....இவர்...(கோப்பு படம்)
do you know, non veg food affect our health?
மனிதர்களில் பலவிதம்....ஒவ்வொருவரும் நிறத்தால், குணத்தால் வேறுபட்டு காணப்படுவர். அதேபோல் சாப்பிடும் நடைமுறைகளும் அவரர்களின் விருப்பத்துக்கு ஏற்றவாறு மாறும். அசைவ உணவுப்பழக்கம் அவர்கள் குடும்பத்தில் பழக்கத்தில் இருந்தாலும் ஒருசிலர் அந்த குடும்பங்களிலேயே சைவம் மட்டும் சாப்பிடுவர். சைவம் சாப்பிடும் குடும்பங்களில் ஒருசிலர் அசைவம் சாப்பிடுபவர்களும் இருக்கின்றனர். இதுபோல் மாறுபட்ட குணங்கள் கொண்ட மனிதர்களும் உள்ளனர்.
do you know, non veg food affect our health?
do you know, non veg food affect our health?
ஒருசிலரோ வாழ்வதற்காகவே சாப்பிடுவர். அது சைவமாக இருந்தாலும் அசைவமாக இருந்தாலும் அளவோடு உண்டு விட்டு எழுந்துவிடுவார்கள். ஆனால் ஒருசிலர் இருக்கின்றார்கள் பாருங்க...அவர்கள் சாப்பிடுவதற்காகவே பிறந்தவர்கள் மாதிரி ஒரு ரவுண்டு கட்டி அடித்துவிட்டுதான் இடத்தினை விட்டு எழுந்திருப்பார்கள். இதுபோன்றவர்கள் அவர்களைச் சுற்றி இருப்பவர்களைப் பற்றி கவலையே படமாட்டார்கள். யார் எப்படி நினைத்தால் என்ன ? நமக்கு வேண்டியது ருசியான உணவுதான் என ரவுண்ட் கட்டி அடிப்பார்கள்.
அசைவ உணவு சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஆரோக்ய பாதிப்பு ஏற்படுகிறது என்பதைப் பற்றிப்பார்ப்போம்.
உணவுக்காக ஆடு, மாடு, கோழி மற்றும் மிருகங்களைக் கொல்லும்போது அம்மிருகங்களின் உடலில்பரவும் ஒரு வகை பயத்தின் காரணமாக விஷப்பொருள் ஒன்று அதன் தசைகளில் பரவுகிறது. இரண்டாவதாக மிருகங்களை வெட்டி நீண்ட நேரம் வைத்திருக்கையில் மாமிசத்திலுள்ள நீர்ச் சத்து உலர்ந்துவிடுகிறது. மூன்றாவது இந்தப் பொருட்களை சமைப்பதற்கு பயன்படுத்தும் உப்பு, புளி, காரம் மசாலா வகைகள் இவையனைத்துமே மாமிச பொருட்களோடு சேர்த்து வேக வைக்கும்போது இத்தகைய மாமிசப்பொருட்கள் ஜீரண நீர்களையும், குடலுறிஞ்சிகளையும் பாதிக்கின்றன.
do you know, non veg food affect our health?
do you know, non veg food affect our health?
மாமிசப் பொருட்களை குடலுறுஞ்சிகள் உறிஞ்சும்போது கரையாத கொழுப்பு பொருட்களும் உறிஞ்சப்பட்டு ரத்தத்துடன் சேர்ந்து விடுகின்றன. இத்தகைய பொருட்கள் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுத்துவதுடன் ரத்தக்குழாய்களில் ஆங்காங்கே தேங்கிவிடுகிறது. சிறுநீரகங்கள் ரத்தத்தை சுத்தி செய்யும்போது அதிக அளவில் சேரும் மாமிச கொழுப்புவகைகள் கரையாத கொழுப்பு படிவங்களாக மாறி கற்களை உண்டாக்கும். ரத்தத்தில் யூரிக் ஆசிட் என்னும் உப்பு பொருளை அதிகரிக்கிறது. மாமிச உணவு வகைகளைச் செரிக்க வைப்பதில் ஈடுபடும் கல்லீரல் மிகுதியான வேலைத்திறன் காரணமாக நாளடைவில் பழுதடைகிறது.
பெருங்குடலில் மாமிச உணவானது சிறிதும் செரிக்கப்படாமல் மிகுதியான புளிப்புத் தன்மையையும், அழுகல் தன்மையையும், அடைந்து அதன் காரணமாக அசுத்த வாயுக்களை உண்டாக்கி உடல் உறுப்புகளில் உள்ள ரத்தத்துடன் சேர்ந்துவிடுகிறது. மேலும் ஜீரணமண்டலம் முழுவதும் புளிப்புத்தன்மையை உண்டாக்குகிறது. மாமிச உணவு உண்பவர்களுக்கு குடல்வால் அழற்சி நோய் (அப்பெண்டிக்ட்டீஸ்)ஏற்படும். இதன் காரணமாக குடல்வால் வெட்டி எடுக்கப்படுகிறது. தாவர உணவு சாப்பிடுபவர்களுக்கு பெரும்பாலும் குடல்வால் அழற்சி நோய் ஏற்படுவதில்லை.
do you know, non veg food affect our health?
do you know, non veg food affect our health?
மலச்சிக்கல் நோய்
மாமிச உணவில் நீர்ச்சத்தும் , நார்ச்சத்தும் இல்லாத காரணத்தினால் குடலில் நகரும் தன்மை குறைவதன் காரணமாக உணவுப்பொருட்கள் ஆங்காங்கே தேங்குவதன் மூலம் கடைசியாக மலக்குடலில் மலச்சிக்கல், குடல் பூச்சிகள், ஆசனவாயில் பூச்சித்தொந்தரவு தொடர்ந்த மலச்சிக்கல் காரணமாக மூலநோய் இவை உண்டாகின்றன.
நோய்கள் உண்டாகும்
மாமிச உணவுக்காக கொல்லப்படும் உயிரினங்களின் உடலில் நோய் ஏதாவது இருப்பின் அந்த மாமிச உணவை உண்ணும் மனிதர்களுக்கும் அந்த நோயின் காரணமாக உடலில் பல தொந்தரவுகள் உண்டாகும். தொடர்ந்து மாமிசத்தை உண்பவர்களுக்கு அதிக அளவு கொழுப்பு சேர்ந்துவிடுவதால் ரத்தத்தில் கொலஸ்ட்ரால், ரத்தக்கொதிப்பு, இதயத்தாக்கு, மிகுந்த ரத்தஅழுத்தம், ரத்தத்தில் போதுமான இன்றியமையாத சத்துகள் குறைவு காரணமாக குறைந்த ரத்த அழுத்தம் முதலான வியாதிகள் உண்டாகும். மேலும் தோல்வியாதிகள் மூட்டுவலி, வாத நோய்கள் , சிறுநீரக கோளாறுகள் இவை உண்டாகலாம்.
do you know, non veg food affect our health?
do you know, non veg food affect our health?
மாமிசங்களை உண்ணும் விலங்குகளுக்கும், மனிதனின் ஜீரணப்பாதை அமைப்பிற்கும் மிகுந்த வித்தியாசம் உள்ளது. மனித உடலமைப்பின்படி பார்த்தால் பெருங்குடலின் தன்மைகளும், அதன் அமைப்பும் மாமிச உணவை ஏற்றுக் கொள்வதாக அமையவில்லை. நார்ப்பொருள் உள்ள செல்லுலோஸ் எனும் சத்துகள்கள் மட்டுமே பெருங்குடல் செரிக்ககூடிய தன்மையும் பெருங்குடல் இயக்கமானது இயங்கும் வகையிலும் அமைந்துள்ளது.
*மாமிசஉணவுகளை அதிகம் உண்பவர்களுக்கு மாரடைப்பு. புற்றுநோய் முதலிய நோய்கள் அதிகம் வருகின்றன.
*மாமிச உணவு உண்ணும் 85 சதவீத பேருக்கு குடல் புழுக்கள், மற்றும் கிருமி தொற்றுகள் உண்டாகின்றன.
*மாமிசத்திற்காக ஒரு விலங்கினை உயிருடன் வெட்டும்போது அந்த மாமிசத்தின் உடலில் நீல நிறமான ஒருவிஷப்பொருள் ரத்தத்தில் கலந்து தசையில் பரவுகிறது. அந்த மாமிசத்தை சமைத்து சாப்பிடும்போது அந்த விஷத்தன்மை சாப்பிடுபவர்களையும் பாதிக்கிறது.
*மாமிச உணவு சாப்பிடும்போது உடலுக்கு கிளர்ச்சியையும், மனதுக்கு அமைதியின்மையையும் ஏற்படுத்துகிறது.
do you know, non veg food affect our health?
do you know, non veg food affect our health?
*முட்டைபோன்ற பொருட்களில் உள்ள விஷப் பொருட்கள் ரத்தத்தில் சேரும்போது ரத்தத்தின் இயற்கை தன்மைக்கு மாறானநிலையை உண்டு பண்ணுகின்றன.
*மாமிச உணவிலிருந்து கொழுப்புப்பொருட்கள்,மற்றும் மிகக் குறைந்த அளவில் மட்டுமே பிற சத்துகள் கிடைக்கின்றன.
*அரிசி உணவோடு மாமிசத்தினைச் சாப்பிடும்போது கெடுதல்கள் அதிகம் வர வாய்ப்புகள் உள்ளது.
*முட்டையை தொடர்ந்து சாப்பிடும்போது வயிற்றில்சீதம் என்றபொருள் உற்பத்தியாகி, வயிற்றுக்கடுப்பு, வயிற்றுப்போக்கு போன்றவை உண்டாகின்றன.
do you know, non veg food affect our health?
do you know, non veg food affect our health?
*எந்தவகை மாமிசத்திலும் புதியரத்தமோ அல்லது ரத்தசெல்களோ உற்பத்தியாவதில்லை. தொடர்ந்து மாமிச உணவு சாப்பிடுபவர்களுடைய நரம்புமண்டலம் பாதிக்கப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
*மாமிச உணவிலுள்ள இறந்து போன திசுக்களில் எந்தவித உயிர்ச்சத்தும் கிடையாது.
*மாமிச உணவுப்பொருள்களுக்கு குடலில் நகரும் தன்மை கிடையாது.
*மாமிச உணவினால் உடலில்கொழுப்பு சத்து மட்டுமே சேர்கிறது.
*இத்தகைய கொழுப்புசத்துகளும் உடலில் ரத்தக்குழாய்களை இறுக்கமடையச் செய்தல், அளவுக்கதிகமாக கொழுப்பு பொருட்கள் உடலில் தேவையில்லாமல் சேர்ந்து விடுதல் இவை காரணமாக உடலில் இயற்கையான அமைப்பு மாறிவிடுகிறது.
*இது குரோமோசோம்களின் கட்டமைப்பைக் குலைத்துவிடும் தன்மை படைத்தமாமிச உணவை நீக்கினால் பல வியாதிகளிலிருந்து தப்பிக்க வழி உண்டு என டாக்டர். கண்ணன் தெரிவித்துள்ளார்.
நன்றி :டாக்டர்.கண்ணன்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu