do you know medicinal values of drumstick? தாதுச் சத்துகள் அதிகம் கொண்ட முருங்கை; உங்களுக்கு தெரியுமா?....

do you know medicinal values of drumstick? நாம் அன்றாடம் சாப்பிடும் காய்கறி வகைகளில் போதுமான சத்துகள் உள்ளன என்பது பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. அதுவும் பல காய்கறிகளில் பல மருத்துவகுணங்களும் உள்ளன. அந்த வகையில் முருங்கை பல நோய்களுக்கு மருந்தாகிறது. படிங்க..

HIGHLIGHTS

do you know medicinal values of drumstick?                   தாதுச் சத்துகள் அதிகம் கொண்ட முருங்கை; உங்களுக்கு தெரியுமா?....
X

உங்களுக்கு  தெரியுமா?-.....இதயத்தைப் பாதுகாக்கும்  முருங்கை   (கோப்பு படம்)

do you know medicinal values of drumstick?

மாறிவரும் பரபரப்பான உலகில் மக்களிடம் குறைந்த உடலுழைப்பு, உடற்பயிற்சியின்மை, நடைப்பயிற்சி உள்ளிட்டவைகளினால் நோய்கள் வரிசை கட்டி நிற்கின்றன. ஆஸ்பத்திரிகளிலும், மெடிக்கல் ஸ்டோரிலும் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சாப்பிடும் சாப்பாட்டை தட்டில் போட்டு சாப்பிடுவது போல் இன்று பலர் மாத்திரைகளையே சாப்பாடாக சாப்பிடும் அவல நிலை. இதற்கெல்லாம் என்ன காரணம். நாகரிகம் என்ற மோகத்தில் பல சத்துகள் மிகுந்த காய்கறிகள், பழவகைகள், சிறுதானியங்களைப் புறக்கணித்ததே நோய்களின் பெருக்கத்திற்கு காரணம். இதோடு உடல் உழைப்பு குறைந்து போனதும் ஒரு காரணியாக திகழ்கிறது. உடல் பருமனால் பலர் இன்றளவில் அவதிப்பட்டு உடலைக்குறைக்க காசு செலவழித்து வருகின்றனர்.

do you know medicinal values of drumstick?


do you know medicinal values of drumstick?

தினந்தோறும் நாம் சாப்பிடும் உணவில் போதிய சத்துகள் இருக்கிறதா? என்பதே பலருக்கு தெரியாது. சத்தான உணவுகளை தேர்ந்தெடுத்து அன்று உண்டார்கள். இதனால் அவர்கள் ஆரோக்யமான வாழ்க்கையினை வாழ்ந்தனர். ஆனால் இன்று சாப்பிடும் உணவில் சத்துகள் உண்டா? என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் ருசியை மட்டும் பிரதானமாக வைத்து பல உணவு வகைகளை விதம் விதமாக சாப்பிட்டு உடல் ஆரோக்யக்குறைவை தாங்களே ஏற்படுத்திக்கொள்கின்றனர். எண்ணெயில் பொறித்த உணவுகளுக்கே இக்கால இளையோர்கள் முதலிடம் அளிப்பதால் பல உடல் நல பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.

முருங்கை வியக்கத்தக்க பயன் அளிக்ககூடியதாகும். இது மர வகையைச் சார்ந்தது. இதன் பூக்கள் இளமஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில் கொத்துக்கொத்தாக பூக்கும். இதன்காய்கள் நீளமாக இருக்கும். பொதுவாக எல்லோரும் முருங்கை கீரையையும் முருங்கை காயையும் சமையலில் சேர்த்து கொள்வது வழக்கமாகும். ஆகையினால் முருங்கையை அறியாதவர்கள் எவரும் இருக்க முடியாது.

do you know medicinal values of drumstick?


do you know medicinal values of drumstick?

முருங்கையின் இலை, பூ, காய், விதை , வேர், பட்டை , பிசின் எல்லாமே மருத்துவத்திற்கு பயன்படுகின்றன. இதில் கால்சியம் , இரும்பு, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி ஆகிய சத்துகள் அடங்கியுள்ளன. இந்த கீரையை சமையலில் வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் இரும்பு சக்தி குறைபாடுகளினால் ஏற்படக்கூடிய நோய்கள் குணமாகும்.

அத்துடன் பெண்களுக்கு வரும் சோகை, காமாலை, உப்புச்சத்து போன்ற நோய்களும் குணமாகும். இந்த கீரையை பகல்நேரத்தில் மட்டுமே சாப்பிட வேண்டும். இரவு நேரத்தில் உபயோகிக்ககூடாது. காலையில் சமையல் செய்து அதனை இரவில் சாப்பிட்டால் பேதி ஆகும்.

விந்தை கெட்டிப் படுத்த

விந்து நீர்த்து உடனே வெளியேறினால் முருங்கையின் விதையை லேகியமாக்கி உபயோகிக்க வேண்டும். இதனால் விரைவில் விந்து வெளியேறாது. விந்து கெட்டிப்பட்டு உடலுக்கு வலுவைக்கொடுக்கும்.

do you know medicinal values of drumstick?


do you know medicinal values of drumstick?

கெட்ட நீர் வெளியேற

கீழ்காணும் முறையில் கஷாயம் தயார் செய்து சாப்பிட்டுவந்தால் உடலிலுள்ள கெட்ட நீர் வெளியேறி உடல் நலம்பெறும்.

முருங்கை இலையில் ஈர்க்கை தயார் செய்துகொண்டு அதனை நன்றாக இடித்து ஒரு மட்பாண்டத்தில் போட்டு ஒரு படி சுத்தமான நீர் விட்டுகால் படியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி எடுத்துக்கொள்ளலாம். காலை மாலை என இரு வேளையும் இந்த கஷாயத்தில் 3 அவுன்ஸ் எடுத்து சாப்பிட்டு வந்தால் உடலில் சேர்ந்துள்ள கெட்ட நீர் வெளியேறி உடல் நலமாக இருக்கும்.

இருமல் தொண்டை கம்மல்

முருங்கை இலையை சாறு பிழிந்து எடுத்து அதில் சிறிது சுண்ணாம்பு தேன் ஆகியவற்றை நன்றாக கலக்கி குழைத்து தொண்டைக்குழியின் மேல்தடவி வந்தால் இருமல், தொண்டைக்கம்மல் ஆகிய குறைபாடுகள் உடனடியாக அகன்று விடும்.

மலட்டுதன்மை

முருங்கை பூவை நன்றாக கழுவி பசும்பாலில் போட்டு வேக வைத்து பாலுடன் சேர்த்து சாப்பிட்டுவரவும். இதுபோன்று தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பெண்ணின் மலட்டுத்தன்மை அகன்று விடும். ஆண்களுக்கு ஆண்மை பெருகும்.

do you know medicinal values of drumstick?


do you know medicinal values of drumstick?

நாய்க்கடி

நாய்க்கடியின் விஷத்தை முறிப்பதில் முருங்கை இலை சிறந்ததாக இருக்கிறது. முருங்கை இலையோடு பூண்டு பல் இரண்டு, ஒரு துண்டு மஞ்சள், சிறிதளவு ,மிளகு, உப்பு ஆகியவற்றையெல்லாம் ஒன்றாக சேர்த்து மெழுக அரைத்து ஓரளவுக்கு உள்ளுக்கு கொடுத்து இதனையே நாய் கடிவாயின் மீது பூசி வரவும்.இதனால் நாய்க்கடியின் விஷம் முறியும். கடியினால் உண்டான புண்ணும் ஆறிவிடும்.

பாரிச வாயு -காக்கை வலிப்பு

இதுபோன்ற நோயகள் குணமாக முருங்கை பட்டை பலன் அளிக்கிறது. முருங்கைப் பட்டையை நைந்து மட்பாண்டத்தில் போட்டுநீர் விட்டு சுண்டக் காய்ச்சி கஷாயமாக்கிக்கொள்ளவும். இந்த கஷாயத்தை தினசரி தொடர்ந்து சாப்பிட்டு வ ந்தால் பாரிச வாயு. காக்கை வலிப்பு போன்றவைகள் குணமாகும்.

வாயு அகல

உடம்பில் வாயு அதிகமாகிவிட்டால் தொந்தரவுகள் உண்டாகும். ஆகையினால் முருங்கைப் பிஞ்சை கறியாக சமைத்து உட்கொண்டால் வாயு அகலும். வாயுவினால் பிடிப்பு ஏற்பட்டிருந்தால் அகன்றுவிடும்.

do you know medicinal values of drumstick?


do you know medicinal values of drumstick?

தாது பலம் பெற

ஆண்களுக்கு தாதுபலம் பெறவேண்டுமாயின் முருங்கை பிசின் சூரணம் சாப்பிடலாம். முருங்கை பிசினைக் கொண்டு வந்து நன்றாக உலர்த்தி இடித்து துாளாக்கி சூரணமாக்கிக் கொள்ளவும். தினசரி காலை, மாலை என இருவேளையும் பசுவின் பாலில்இந்த சூரணத்தைகலந்து சாப்பிடவும். இதுபோன்று தினசரி செய்து வந்தால் தாது கெட்டிப்படும்.

தலைவலியா?

தலைவலியினால் வேதனைப்படுகின்றீர்களா?தலைவலி தீர ஒரு வழி. முருங்கைப்பட்டையை இடித்து சாறு எடுத்து சாறின் அளவுக்கு பசும்பால் சேர்த்து நெற்றியில் பற்று போட்டால் உடனே தலைவலி தீர்ந்துவிடும்.

வயிற்றுவலி

முருங்கை ஈர்க்கு, கருவேப்பிலை ஈர்க்கு, இரண்டையும் சேர்த்து நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி குடிநீரில் விட்டு குடித்து வரவும். இதனால் வயிற்றிலுள்ள புழுக்கள் வெளியேறி விடும். வயிற்று வலியும் அகன்றுவிடும்.

do you know medicinal values of drumstick?


do you know medicinal values of drumstick?

குழந்தைக்கு டானிக்

வளரும் குழந்தைகளுக்கு முருங்கை டானிக்காக இருந்து சிறந்த பலனைக்கொடுக்கும். முருங்கை கீரையை சுத்தமாக கழுவி சாறு பிழிந்து அதைப் பாலுடன் கலந்து பிறந்த குழந்தைகளுக்கும் வளரும் குழந்தைகளுக்கும் புகட்டலாம். இதிலுள்ள இரும்பு மற்றும் சுண்ணாம்பு சத்தினால் குழந்தை திடமாக வளரும்.

சிறுநீரக கோளாறுகளுக்கு

ஒரு கரண்டி முருங்கை இலையின் சாறை எடுத்து அதில் கேரட் அல்லது வெள்ளரி சாறு ஒரு தம்ளர் சேர்த்து கலந்து குடித்து வரவும். இதனால் நீர்க்கடுப்பு சிறுநீர் வெளியேறும் துவாரத்தில் எரிச்சல் ஆகிய தொந்தரவுகள் நீங்கிவிடும்.

கீரையினால் குணமாகும் நோய்கள்

இந்த இலையின் சாறை கசக்கி இரண்டொரு துளி கண்களில் விட்டால் கண் நோய்கள் குணமாகும். இந்த கீரையை எள் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும். இந்த கீரையை உணவில் அடிக்கடி சேர்த்து கொண்டால் தாய்ப்பால் அதிகமாக சுரக்க வைக்கும். உடலிலுள்ள எலும்புகளைப் பலப்படுத்தும். கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான உயிர்ச்சத்துக்கள் சுண்ணாம்பு சத்து மற்றும்இரும்பு சத்தையும் அளிக்கும். முருங்கை இலையை நன்கு அரைத்து வீக்கம் உள்ள இடஙக்ளில் பூசி வரவீக்கம் குறையும்.

வாத நோய்களினால் உண்டாகும் வலியைக் குறைக்க இதன் விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயைப் பூசினால் நல்ல பலன் கொடுக்கும்.

கரப்பான்-சொறி-சிரங்கு

இவைகள் குணமாக முருங்கைப் பட்டையைக் கொண்டு வந்து சாறு எடுத்து அத்துடன் குப்பை மேனிச் சாறை கலந்து சாறுடன் தேங்காய் எண்ணெய் ஊற்றி கலந்து காய்ச்சவும். நன்கு காய்ச்சியதும் கீழே இறக்கி ஆறவிட்டு பாட்டிலில் பத்திரப்படுத்திக்கொள்ளவும்.இந்த எண்ணெயை கரப்பான், சொறி, சிரங்கு போனறவற்றில் பூசி வந்தால் இவைகள் எல்லாம் விரைவில் குணமாகிவிடும்.

முகப்பரு மறைய

முகத்தில் முகப்பருவோ அல்லது கரும்புள்களிளோ வந்துவிட்டால் முகத்தின் அழகைக் கெடுத்துவிடும். ஆதலின் அதற்காக கவலைப்படாமல் கீழ்காணும் முறையைக் கையாளுங்கள்.முருங்கை இலையைக் கொண்டு வந்து சாறு எடுத்து அந்த சாற்றின் அளவு எலுமிச்சம்பழத்தின் சாற்றை விட்டுநன்கு கலந்து முகத்தில் பூசி வந்தால் முகப்பரு கரும்புள்ளிகள் அகன்று முகம் பொலிவு பெறும்.

ஜன்னிகண்டு இழுப்பு

ஜன்னி கண்டு கை கால்கள் இழுப்பு ஏற்பட்டால் நிவாரணமளிக்கிறது முருங்கைப்பட்டை. முருங்கைப்பட்டையை எடுத்து அதன் எடை அளவுக்கு கடுகை எடுத்துக்கொள்ளவும். முதலில் கடுகை அரைத்துக்கொண்டு அத்துடன் முருங்கைப் பட்டையையும் சேர்த்து மெழுக அரைத்து எடுத்துக்கொள்ளவும். இதனை ஜன்னி கண்டவரின் இரு உள்ளங்களிலும் கனமாக பற்று போட்டு துணியினால் கட்டி விட வேண்டும். சிறிது நேரத்திலேயே ஜன்னி நின்றுவிடும். பின்னர் கட்டை அவிழ்த்து பற்றை எடுத்துவிடவும்.

நன்றி: சூரியநாத்.

Updated On: 25 April 2023 5:02 PM GMT

Related News

Latest News

 1. நாமக்கல்
  கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து கட்டுனர் சங்கம்...
 2. ஈரோடு
  ஈரோட்டில் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்த ஆட்சியர்
 3. ஈரோடு
  கூட்டுறவு நிறுவனங்களில் தானிய ஈட்டுக்கடன் உச்சவரம்பு ரூ.25 லட்சமாக...
 4. டாக்டர் சார்
  Stomach Cancer Symptoms In Tamil இரைப்பை புற்றுநோய் ஏற்பட காரணங்கள்...
 5. நாமக்கல்
  தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் ஸ்டிரைக்: பொதுமக்கள்
 6. லைஃப்ஸ்டைல்
  Bestie quotes Tamil உயர்வென்ன தாழ்வுமென்ன உந்தன் அன்பின் முன்னாலே
 7. ஈரோடு
  ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வூதியர்கள் குறை தீர்க்கும்...
 8. லைஃப்ஸ்டைல்
  Life Abdul Kalam quotes in Tamil அப்துல் கலாம் மேற்கோள்கள்:...
 9. காஞ்சிபுரம்
  ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி காஞ்சிபுரத்தில் நலத்திட்ட உதவிகள்
 10. காஞ்சிபுரம்
  பரந்தூர் விமான நிலைய நிலம் கையகப்படுத்தும் பணியை எதிர்த்து போராட்டம்