காய்கறிகளிலுள்ள மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா உங்களுக்கு?

நாம்அன்றாடம்சாப்பிடும் காய்கறிகள் ஒவ்வொன்றிற்கும் மருத்துவ குணங்கள் உள்ளது. ஆனால் இக்கால இளையோர்கள் காய்கறிகளை உண்ணாமல் ஃபாஸ்ட்புட் டில் ஆர்வம் காட்டி ஆரோக்கியத்தை கெடுத்துக்கொள்கின்றனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
காய்கறிகளிலுள்ள மருத்துவ குணங்கள்  பற்றி தெரியுமா உங்களுக்கு?
X

நாம் அன்றாடம் சாப்பிடும் காய்கறிகள் ஒவ்வொன்றிலும்தன்னகத்தே மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இதனால் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி பெருகுகிறது. அதுமட்டும்அல்லாமல் நம் உடலின் ஆரோக்ய பாதிப்பிலிருந்து காய்கறிகளும் நம்மை பாதுகாக்கிறது என்று சொன்னால் மிகையாகாது. எனவே தினந்தோறும் காய்கறிகளை உணவில் கட்டாயம் சேர்த்து கொள்ளுங்க. நீங்க சேர்த்துக்கிறது பெரிசு இல்லீங்க... உங்கள் குழந்தைகளுக்கு பழக்கப்படுத்துங்க... ஃபாஸ்ட் புட் தேடி செல்லும் இளையோர்களுக்கும் இ தன் அவசியத்தை உணர்த்துங்க....உணர்வார்கள்.

பாகற்காய்

பாகற்காய் வேக வைத்த நீரைக்குடித்தால் நீரிழிவு நோய் வராமல் தற்காத்துக்கொள்ளலாம். மேலும் பித்தம், தலைச்சுற்றல் இருக்காது. பாகற்பழத்தை சாப்பிட்டு வந்தால் தோல்நோய்கள், நீங்கும். குடல் பூச்சிகள் ஒழியும். காரணம் பாகற் பழத்தில் தான் நோய் எதிர்ப்பு ஆற்றலும் நோய்களை நீக்கும் ஆற்றலும் அதிகம்.

மலக்கட்டு,வயிற்றுப்பூச்சி, குடல்புழுக்கள் ,கழிவுகள் அனைத்தையும் வெளியேற்ற வல்லது. சர்க்கரை நோயாளியின் மருந்துப் பொக்கிஷம். பாகற்காய் சாப்பிடுபவர்களுக்கு நரை, திரை ஏற்படாது. கர்ப்ப பூச்சி தொல்லையால் குழந்தை பேறு கிடைக்காத பெண்கள் பாகற்காய் சாப்பிட்டுகுழந்தை பெறலாம்.பிறமருந்துகளை நம்பி வாழ்பவர்கள் டாக்டரின் ஆலோசனையை கேட்டுத்தான் பாகற்காயை உணவில் சேர்க்க வேண்டும்.

வெள்ளரிக்காய்

பச்சையாக சாப்பிட்டால் நிறைய பலன் உண்டு. நரம்புக்கு வலிமைதரும். கொழுப்பைக்கரைக்கும். உயர் ரத்தஅழுத்தம், மலச்சிக்கல், சிறுநீர் எரிச்சல், மஞ்சள் சிறுநீர், கல் அடைப்பு மூலம் ஆகியவைகளை விரட்ட அருமருந்துதான் வெள்ளரிக்காய்.மஞ்கள் காமாலைக்கு தினம் ஒருவெள்ளரிக்காய் சாப்பி்ட்டு வந்தால் பலன் தெரியும். முகப்பரு, மூட்டுவலி, தொப்பை, அதிக கொலஸ்ட்ரால், கண் எரிவு, கண்சூடு, உள்ளவர்கள் வெள்ளரிக்காயை தினமும் சாப்பிடலாம்.

சுண்டைக்காய்

காலை உணவுடன் சுண்டைக்காயை சேர்த்து உண்டால் பித்தம் தணியும். மார்பு வீக்கம்மறையும். நுரையீரல் வலுப் பெறும். வாத நோய்கள் குணமாகும். உஷ்ணபேதி, சளி ஆகிய நோய்கள் நீங்கும். மற்றும் அபானக் காற்று வெளியேறுவதுடன் குடல் பூச்சிகள் ஒழியும். உடல் வலி நீங்கும். ஆஸ்துமாக்காரர், சுண்டைக்காயைத் தினமும் சாப்பிடணும். இது நீரிழிவுக்கு நல்லது. வயிற்றுவலியை நீக்கும்.

வெண்டைக்காய்

வெண்டைக்காய்களைச் சமைக்காமல் பச்சையாய் காலைஉணவாக உண்டு வந்தால், மலக்குடலில் உள் சுவர்களில் தேங்கியுள்ள மாவுக்கழிவுகள், கரைந்து வெளியேறும். உஷ்ண இருமல் குணமாகும். நரம்புத்தளர்ச்சி நீங்கும். விந்துவைக் கட்டும்.விந்து நஷ்டத்தைப் போக்கும்.

அவரைக்காய்

அவரைக்காயைச் சமைக்காமல் பச்சையாய் காலை உணவாக உண்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும். நரம்பு, எலும்பு வலுவடையும். சர்க்கரை நோய் குணமாகும். இருதய நோய்கள் கட்டுப்படும். விந்து சக்தியைக்கூட்டும்.

சுரைக்காய்

சுரைக்காயை பச்சையாய் காலை உணவாக உண்டு வந்தால் மலச்சிக்கலும் உடல் வலியும் நீங்கும். சிறுநீர் வெளியேறும். நரம்பு எலும்பு வலுவடையும் . சர்க்கரை நோய் குணமாகும். ஆண்மையைப் பெருக்கி ஆற்றலை அதிகரிக்கும்.

நீரிழிவு , உயர் ரத்த அழுத்தம், மஞ்சள் காமாலைக்கு நல்லமருந்து சுரைக்காய். நெஞ்சடைப்பு, இருதய அடைப்பு, பாத எரிச்சலை நீக்கும். சுரைக்காயை உணவில் சேர்ப்பதன் மூலம் , சிறுநீர்ப் பிணிகள், நீரடைப்பு, குடல்புண், வெள்ளைப்படுதல், சரியாகும். மலக்கட்டு உடனே விலகும்.

புடலங்காய்

நெஞ்சுத்துடிப்பு, இருதய வலியுள்ளவர்கள் புடலங்காய் சாப்பிடவும். புடலங்காயை உணவில் சேர்த்துக்கொண்டால் உயர் ரத்த அழுத்தம் ,மூலச்சூடு நீரிழிவு குறையும்.

பீட்ரூட் கிழங்கு இதயத்துக்கு வரும் தொல்லைகளை முன்கூட்டியே தடுத்துவிடும். குடல்புண் உள்ளவர்கள் பீட்ரூட் சாறு அல்லது சூப் போட்டு குடித்தால் குடல்புண் ஆறும்.

கேரட்

காய்கறிகளின் இளவரசன் என கேரட் சொல்லப்படுகிறது. இதை அதிக நேரம் வேக வைத்தால் சத்துகுறைந்துவிடும். புற்றுநோயாளிகள், கண் கோளாறு உள்ளவர்கள் பச்சை கேரட்சாப்பிடவேண்டும். அல்சர் நோயாளிகள், சிறுநீர் கோளாறு உள்ளவர்கள் , மாதவிடாய் குறை உள்ளவர்களுக்கு கேரட் நல்ல உபகாரி, கேரட் உண்பதால் வெட்டைச்சூடு, மலக்கட்டுநீங்கும்.

தினம் ஒரு கேரட் பிணிக்கவலை நீங்கும். பச்சையாக கேரட்டை சாப்பிட நினைப்பவர்கள் அதை நல்ல கொதிநீதில் ஒரு நிமிடம்போட்டு எடுக்க வேண்டும் என்று அனுபவசாலிகள் சொல்கின்றனர்.

முட்டைக்கோஸ்

நெடுநாள்பட்ட வயிற்றுப்புண் உள்ளவர்கள் முட்டைக்கோஸின் சாற்றை எடுத்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் குணம் பெறலாம். முட்டைக்கோஸை பச்சையாக சாப்பிட, சிரமப்படுபவர்கள் முட்டைக்கோஸின் இரு மடல் எடுத்து சூப் போட்டு பருகி பலன் பெறலாம். இருதய வால்வு அடைப்பு, நெஞ்சுவலி போன்றவற்றை முட்டைக்கோஸ் நீக்கி விடும்.

காலிஃப்ளவர்

புலால் உணவுக்கு இணையான சக்தி காலிஃப்ளவரில் உண்டு. இதை உண்பதால் உடல் பலம் பெறும். கண்ணின் கருவிழிகளுக்கு நல்ல பாதுகாப்பு கிடைக்கும்.

முள்ளங்கி

மூலம், வெட்டைச்சூடு, முள்ளங்கியால் குணம் பெறும்.நீரிழிவு இருதய அடைப்பு உள்ளவர்கள் தினமும் முள்ளங்கியைப் பயன்படுத்தலாம்.

வெண்பூசணி

வயிற்றுப்புண் உள்ளவர்கள் வெண்பூசணி சாறு சாப்பிட்டு, ஒரு வாரத்தில் குணம் பெறலாம். எண்ணெய் ஸ்நானம் செய்த நாளில் வெண்பூசணிக்காயை உண்ணக்கூடாது.

வெங்காயம்

வெங்காயத்தில் இன்சுலின் இருக்கிறது. சர்க்கரை நோயாளிகள் வெங்காயத்தை உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ளவேண்டும்.

சின்னவெங்காயம்

வெங்காயத்தை வெட்டியவுடன் பயன்படுத்தவேண்டும். சளி, இருமல், ஆஸ்துமாக்காரர்கள் அடிக்கடி இதை சாப்பிடணும். இருதய நோய் , உயர் ரத்தஅழுத்தம், கொலஸ்ட்ரால் அன்பர்கள் தினம் வெங்காயம் சாப்பிட வேண்டும். புகைப்பிடிப்பவரின் கபத்தை முறிப்பது இந்த வெங்காயம்தான். தொண்டைப்புண்ணை ஆற்றவல்லதும் கூட.மூல வியாதியை விரட்டும் சக்தி இந்த சின்ன வெங்காயத்துக்கு உண்டு. சர்க்கரை நோய் பச்சை வெங்காயத்தினால் மட்டுப்படும்.

வாழைத்தண்டு

வாழைத்தண்டு சாறு சிறுநீரக கல்லை கரைக்கும். சிறுநீர் எரிச்சலை நீக்கும்.

வாழைப்பூ

மலச்சிக்கல், நரம்புதளர்ச்சி நீங்க, துர்நீர் வெளியேற, உள்கட்டிகள் கரைய, உடல் வலிமை பெற, பெண்களுக்கு வெள்ளைப்படுதல் சரியாக கருப்பை துாய்மையும் வலிமையும் பெற , ஆசனவாய் கடுப்பு நீங்க, குடல் புண் குணமாக, ரத்தம் சுத்தியடைய , விருத்தி அடையவும், உள் உறுப்புகள் இறுக்கம் பெற்று வலிமை பெற. வாழைப்பூவை சமைக்காமல் காலை உணவாக உண்டு வரவேண்டும்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு

தாகம்,சிறுநீர் எரிச்சலையும் , ரத்த சோகையையும் நீக்கவல்லது. சர்க்கரை வள்ளிக்கிழங்கு, நோஞ்சான்களுக்கு பலம் தரும். வாயு, சொறி, சிரங்கு, நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஆகாது.

நன்றி: சதானந்தம்.

Updated On: 9 Aug 2022 11:17 AM GMT

Related News

Latest News

 1. டாக்டர் சார்
  Health Benefits Of Lemon எலுமிச்சம்பழத்திலுள்ள மருத்துவ குணங்கள் ...
 2. புதுக்கோட்டை
  டேக்வாண்டோ மற்றும் குத்துச்சண்டைப் போட்டிகளில் மாவட்ட அளவில் சாதனை
 3. கந்தர்வக்கோட்டை
  பள்ளி செல்வதற்கு வசதியாக நகர் பேருந்துகளை இயக்கக் கோரி மறியல்...
 4. லைஃப்ஸ்டைல்
  Importance Of Blood Bank ரத்த வங்கிகளின் செயல்பாடுகள் ...
 5. புதுக்கோட்டை
  புதுக்கோட்டை மாவட்டத்தில் பிற்படுத்தப் பட்டோர் நலக் கல்லூரி மாணவர்...
 6. கடையநல்லூர்
  உரிமம் புதுப்பிக்கப்படாத வளர்ப்பு யானையை முகாமிற்கு அனுப்பி வைத்த...
 7. லைஃப்ஸ்டைல்
  Benefits Of Apartment House அபார்ட்மென்ட் வீடுகளில் போதிய வசதி...
 8. தர்மபுரி
  காமாட்சி அம்மன் கோவிலில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
 9. ஓசூர்
  வீலிங் செய்து அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டி சாகசம் செய்தவர்கள்...
 10. லைஃப்ஸ்டைல்
  Importance Of Aadhar Card In Tamil ஆதார் கார்டின் பயன்கள் என்னென்ன ...