பாகற்காயிலுள்ள மருத்துவ குணங்கள் என்னென்ன?....படிச்சு பாருங்க.....

do you know medicinal character, of bittergourd பாகற்காயில் கசப்புத்தன்மைஅதிகம் இருப்பதால் இதனை சர்க்கரை நோயாளிகள் விரும்பி சாப்பிடுகின்றனர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
பாகற்காயிலுள்ள மருத்துவ குணங்கள்   என்னென்ன?....படிச்சு பாருங்க.....
X

சர்க்கரை நோயாளிகள் அதிகம் விரும்பி சாப்பிடும்  காய் பாகற்காய் (கோப்புபடம்)


do you know medicinal character, of bittergourd

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் சேர்க்கப்படும் காய்கறிகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சத்துகள் உள்ளது. அதேபோல்தான் கீரை வகைகளும்.ஒவ்வொரு கீரையும் ஒவ்வொரு சத்தினைக்கொண்டது. பாகற்காயிலுள்ள மருத்துவ குணங்களைப் பற்றிப் பார்ப்போம்.

பாகல் என்பது உணவாகப் பயன்படும் பாகற்காய் என்னும் காயைத் தரும், பாகற்கொடியைக் குறிக்கிறது. இக்கொடி வெள்ளரிக்காய், பூசணிக்காய், தர்ப்பூசணி முதலான நிலைத்திணை (தாவர) வகைகளை உள்ளடக்கிய குக்குர்பிட்டேசியே என்னும் பண்படுத்தாதசெடி, கொடி குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.பாகற்காய் கைப்புச் (கசப்பு, கயப்பு) சுவைமிக்கது. இது உடல் நலத்துக்கு உகந்த உணவாகக் கருதப்படுகிறது. இதற்கு மருத்துவப் பயன்களும் உண்டு. சம்பலாகவோ, கறியாக்கியோ, வறுத்தோ, பொரித்தோ உண்பர். பாகற்காயின் இரத்த-சர்க்கரையளவைக் குறைக்கும் குணம் அறிவியலறிஞர்கள் பலராலும் அறியப்பட்ட ஒரு உண்மையாகும்இதன் தாயகம் இந்தியா ஆகும். இந்தியாவிலிருந்து, சீனாவிற்கு 14 ஆம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப் பட்டது.

இம்மூலிகைக் கொடி 5 மீட்டர் (16 அடி) நீளம் வரை வளரக்கூடிய இயல்புடையதாகும். ஒவ்வொரு தாவரமும் தனித்தனியான ஆண், பெண் மலர்களைக் கொண்டு இருக்கும். பூமியின் வடகோளத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் பூக்கும் இயல்புடையதாக இருக்கிறது. கனியாதல் செப்டம்பர் முதல் நவம்பர் வரை நடைபெறுகிறது. கனியானது அடர் மஞ்சள் நிறத்திலும், விதைகள் பட்டையாக மஞ்சள் நிறத்திலும், சதைப்பகுதி சிவப்பாகவும் இருக்கும். இச்சதைப்பகுதியை அப்படியே சமைக்காமல் சாலட் ஆக உண்ணும் வழக்கம் பல தெற்கு ஆசிய நாடுகளில் காணப்படுகின்றன.நன்கு பழுத்தக்கனி, ஆரஞ்சு நிறமாக மாறும் இயல்புடையது ஆகும்..

பாகற்காயில் பல வகைகள் உள்ளன. அவற்றின் அளவிலும், வடிவத்திலும் இவை வேறுபடுகின்றன.இருப்பினும், வேளாண்மையினர் இருவகை இனங்களையே விளைவிக்கின்றனர். ஒன்று பொடியாக, 6–10 cm (2.4–3.9 in) அளவு இருப்பது, இதனை மிதி / குருவித்தலை பாகற்காய் என்கின்றனர். இவ்வினம் இந்தியாவிலும், வங்காள தேசத்திலும் மற்றொன்று பெரிதாக நீளமாக இருக்கும். அதனை கொம்பு பாகற்காய் என்றழைக்கின்றனர். இந்த கொம்பு பாகல் இனங்கள் இந்தியாவிலும் சீனத்திலும் வேறுபட்டு இருக்கின்றன. இந்திய இனம் அடர் பச்சை நிறமாகவும், முனைகள் கூராகவும் இருக்கும்.

do you know medicinal character, of bittergourd


சர்க்கரை நோய்க்கு அரு மருந்தான பாகற்காய் (கோப்பு படம்)

do you know medicinal character, of bittergourd

சர்க்கரை நோய்க்கு அரு மருந்து

பாகற்காய் சர்க்கரை நோய்களால் அவதிப்படுவோருக்கு ஆறுதல் அளிக்கும் மிகச்சிறந்த மருந்தாக உள்ளது. பாகற்காயை இடித்துப் பிழிந்து சாறு எடுத்துக்கொள்ளவும். அதே அளவு பாகல் இலையை இடித்துப் பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். அதேபோன்று நாவல் மரப்பட்டையை இடித்துச் சாறு எடுத்துக்கொள்ளவும்.

மூன்றும் ஒரே அளவாக சாறு எடுத்து ஒன்றாக கலந்து காலையில் 25 மில்லி அல்லது 30 மில்லி அளவு வெறும் வயிற்றில் குடிக்கவும். இதுபோன்று தொடர்ந்து 48 நாட்கள் குடித்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.

பொதுவாகவே பாகற்காய் ஒரு கிருமி நாசினியாகும். ஆதலினால் இதன் இலை, காய், பழம் ஆகியவைகள் பல நலனை அளிக்கிறது. பாகல் இலையை இடித்து தினசரி 25 மில்லி சாப்பிட்டாலே போதும் வயிற்றில் உள்ள கிருமிகள் வெளியாகிவிடும்.

பாகல் இலைச்சாற்றை அதிக அளவில் அருந்தினால் மலத்தினை வெளியாக்குவதுடன் வாத பித்த,கபம் ஆகியவைகளையும் கட்டுப்படுத்துகிறது. பாகற்காயை முறைப்படி சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் வாதசம்பந்தமான நோய்கள் விலகும். உள்ளங்கால், உள்ளங்கை, எரிச்சல் உள்ளவர்கள் இதன் இலைச்சாற்றைப் பூசிவந்தால் எரிச்சல் தணியும்.

இருமலைக் குணப்படுத்த

காசம்,கப இருமலினால் அவதிப்படுபவர்களுக்கு பாகல் ஒரு இதமான மருந்தாக உள்ளது. நாட்டு பாகல் பழத்தையும் துாதுவளை இலையையும் சம அளவாக எடுத்து நன்றாக இடித்து 15 மில்லி அளவு சாறு எடுத்துக்கொண்டு அதில் 50 மில்லி வெள்ளாட்டின் பால் கலந்து தினசரி காலையில் குடித்து வரவும். இதனால் காசத்தாலும் கபத்தினாலும் தொல்லைக் கொடுத்து இருமல் குணமாகும்.

காமாலை, கல்லீரல், தொழுநோய் குணமாக

மிதி பாகல் எனப்படும் பாகலின் சிறிய இலைகளையும் பழுத்த பாகல் பழங்களையும் கொண்டுவந்து கல்வத்திலிட்டு நன்கு இடித்து சாறு எடுத்துக்கொள்ளவும்.இந்த சாறை தினசரி காலை 25 மில்லி வீதம் உட்கொண்டு வந்தால் காமாலை, கல்லீரல், மண்ணீரல், தொழுநோய் போன்ற நோய்கள் குணமாகும்.பாகல் பழத்தை எடுத்து நன்றாக நைந்து சாறு எடுத்து அத்துடன் சிறிது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் பெண்களுக்குமாதவிடாயின் போது உண்டாகும் வயிற்றுவலி நீங்கிவிடும்.

ஆறாத புண் சிரங்குகளுக்கு

குஷ்டத்தினால் உண்டான புண்களாக இருந்தால் பாகல் இலையை நிழலில் நன்குஉலர்த்தித் துாளாக்கிக் கொண்டு அந்த புண்ணின் மீது போட்டு வந்தால்குணமாகும். ஆறாத புண்கள், சிரங்குகள், இருந்தால் கீழ்க்காணும் முறையின்படி குணமாக்கிக்கொள்ளலாம். பாகல் கொடியுடன் கருவாப்பட்டை திப்பிலி, அரிசி நீரடிமுடித்து எண்ணெய், ஆகியவற்றை ஒரே அளவாக எடுத்து விழுதாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். அதனை எடுத்து ஆறாதபுண்கள் சிரங்குகளின் மீது பூசி வர குணமாகும்.

do you know medicinal character, of bittergourd


பாகற்காய் கூட்டு வெகு சுவையானது (கோப்பு படம்)

do you know medicinal character, of bittergourd

குழந்தைகளின் வாந்திக்கு

பாகல் இலையைக் கொண்டு வந்து சாறு பிழிந்து அதில் சிறிதுமஞ்சள் துாள் கலந்து சிறுகுழந்தைகளுக்கு கொடுத்தால் வாந்தி நின்றுவிடும். அதேபோன்று குழந்தையின் வயிற்றில் உண்டாகும் கிருமிகளுக்கு கொடுத்தால் கிருமிகள் ஒழிந்துவிடும்.

மாலைக்கண் நோய்

மாலைக்கண் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் கொடிப்பாகம் இலையை ஒரு பிடி எடுத்து அத்துடன் ஆறு மிளகு சேர்த்து மை போன்று அரைத்து இரவு படுக்கைக்குப் போகும் முன்னர் கண்களைச் சுற்றிப் பற்று போட்டுக் காலையில் முகத்தைக் கழுவிவிடவும். இதுபோன்று தினசரி செய்து வந்தால் விரைவில்மாலைக் கண் நோய் அகன்று கண்பார்வை வளம் பெறும்.

மூல நோய்

மூலநோய் உள்ளவர்கள் நாய் பாகல் ரசத்தை தினசரி 15மில்லி வீதம் தொடர்ந்து குடித்துவந்தால் மூலம் அகலும். இதன் இலையை ஆமணக்கு எண்ணெய் விட்டுவதக்கி வெளிமூலத்தின் மேல் வைத்துக்கட்டிவர குணமாகும்.

Updated On: 23 Dec 2022 11:45 AM GMT

Related News