துளசியிலுள்ள மருத்துவ குணம் பற்றி தெரியுமா? உங்களுக்கு.... படிங்க....

do you know medicinal character if tulsi? தாவரங்களில் நமக்கு பயனளிக்கக்கூடிய எத்தனையோ வகைகள் உள்ளன. அதில் முக்கியமானது துளசியாகும். இதனை ஒரு மருத்துவ சஞ்சீவினி என்று கூட சொல்லலாம்.

HIGHLIGHTS

துளசியிலுள்ள மருத்துவ குணம் பற்றி  தெரியுமா? உங்களுக்கு.... படிங்க....
X

அதிக மருத்துவ குணங்கள் கொண்ட துளசி (கோப்பு படம்)

do you know medicinal character if tulsi?

நாம் அன்றாடம் பயன்படுத்தும் துளசியில் இவ்வளவு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளதா? என நீங்களே ஆச்சரியப்படும் அளவுக்கு மருத்துவ குணம் நிறைந்ததுதான் துளசி- இது ஆன்மீக விஷயங்கள் என்றில்லை. இது வீட்டில் வளர்க்கப்பட்டால் நீங்கள் ஒரு நோய் எதிர்ப்பு காரணியின் காற்றை சுவாசிப்பதாகவே வைத்துக்கொள்ளலாம். அந்த வகையில் நல்ல பயனுள்ள ஒரு தாவரம் இது.

சாதாரணமாக துளசியானது காட்டில் தானாகவே வளர்கிறது. அதனைப் பறித்து வந்து சாப்பிடு...என்றால் நம்மாட்கள் சாப்பிட மாட்டார்கள். இதற்காகவே அக்காலத்தில் பெரியவர்கள் ஒரு யோசனை செய்து இதனை கோயில்களில் கொடுப்பதை வாடிக்கையாக்கி விட்டதோடு இதனை தண்ணீரில் ஊறவைத்து அதனை தீர்த்தம் என கொடுப்பதால் சகல ரோக நிவாரணியாக இதனை அனைத்து பக்தர்களும் வாங்கிச் செல்வதுதான் ஆனந்தமே. சாதாரண மனிதர்களுக்கு நம் ஆட்கள் பயப்பட மாட்டார்கள். ஆனால் கடவுளின் பிரசாதம் எனும்போது பயபக்தியோடு வாங்கி அருந்துகின்றனறரே. அதுதாங்க நம் முன்னோர்கள் நல்ல வழியினைக் காட்டிவிட்டு சென்றுள்ளனர்.

do you know medicinal character if tulsi?


வீடுகளில் தொட்டிகள் மற்றும் மாடங்கள் கட்டி துளசி செடிகள் வளர்க்கப்படுகிறது (கோப்பு படம்)

do you know medicinal character if tulsi?

துளசி செடியை அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சிலர் வீடுகளில் துளசி மாடம் கட்டி அதற்குத் தினமும் பூஜை செய்து வருவார்கள். தவிர பகவானை அர்ச்சிக்க துளசியை உபயோகிப்பார்கள் .துளசி பலவித வியாதிகளைக் குணப்படுத்தும் பேராற்றல் உள்ள தாவரம் ஆகும். ஆகவேதான் நம் முன்னோர்கள் இதனைத் தெய்வீக மூலிகையாக கருதினர். இதனை தினந்தோறும் சிறிதளவு உபயோகித்தால் எண்ணற்ற வியாதிகள் வராமல் தடுக்கும் ஆற்றல்கொண்டது துளசி.

துளசியில் 32 வகைகள் உள்ளன. அவைகளில் முக்கியமாக நிலத்துளசி, சிவதுளசி, காட்டுத்துளசி, கருந்துளசி, செந்துளசி, வெண்துளசி, முள் துளசி, நாய்த்துளசி என்பவைகள் மிகவும் முக்கியமானவைகள் ஆகும்.

இவைகள் எல்லாமே மருத்துவக்குணமுள்ளவையாகும். துளசி திருநீற்றுப்பச்சை இனத்தைச் சார்ந்தது. சுவாசத்தைதடை செய்கின்ற இறுகிப்போன கபம் கோழையை இளகச் செய்து நீர்போன்று வெளியேற்றுகின்ற தன்மை துளசிக்கு உண்டு. துளசி குழந்தைகளுக்கு வரும் பலவித நோய்களை குணமாக்கும் நிவாரணியாகும்.

குழந்தை மாந்தம்

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு சில சமயம் மாந்தம் உண்டாகும். இதுபோன்ற சமயத்தில் துளசி இலை, நொச்சி இலை, நுனா இலை, பொடுதலை, உத்தாமணி, ஆகியவைகளை சமபாகம் எடுத்துக் கையினால் நன்றாகக் கசக்கி ஒரு சங்கு அளவு சாறை எடுத்து காலை-மாலை, இரண்டு வேளை என மூன்று நாட்கள் கொடுத்தால் மாந்தம் குணமாகும்.

வாந்தி -பேதி

குழந்தைக்கு வாந்தியும், பேதியும் உண்டானால் உடனடியாக நாட்டு மருந்து கடைக்குச்சென்று துளசி விதையை வாங்கி வந்து மெழுக அரைத்து பசும்பாலில் கலந்து வேளைக்கு 3 பாலாடை வீதம் கொடுத்தால் உடனடியாக வாந்தியும் பேதியும் நின்றுவிடும்.

do you know medicinal character if tulsi?


துளசியைக் காய்ச்சி வடிகட்டிய நீரைக் குடிக்க பயன்படுத்தலாம் உடலுக்குநல்லது. (கோப்பு படம்)

do you know medicinal character if tulsi?

தாய்ப்பால் குடிக்கலையா?

சில சமயம் பால் கொடுத்தாலும் குழந்தை சரியாக பால் குடிக்காது. இதற்கு துளசி வழி செய்கிறது. துளசி அதிமதுரம் ஆகிய இரண்டையும் சேர்த்து சிறிது வெந்நீர் விட்டு சந்தனம்போல் அரைத்து மார்பில் தடவிக் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் சரியாக பால் குடிக்காத குழந்தைகள் கூட தாய்ப்பால் குடிக்கும்.

வாந்தி எடுத்தால்

குழந்தை குடித்த தாய்ப்பாலை வாந்தி எடுத்தால் துளசிச் சாற்றில் சுத்தமான தேனைச் சிறிது சேர்த்துக் கலந்து வைத்துக்கொண்டு இரண்டு குண்டுமணி அளவு அரை மணிக்கொருதரம்கொடுத்தால் வாந்தி எடுப்பது நின்றுவிடும்.

காதுவலி

குழந்தை காது வலியால் கஷ்டப்பட்டால் உடனடியாக துளசியைக் கசக்சி சிறிது சாறு எடுத்துக்கொண்டு அதில் தேன் சிறிதளவு உப்பு சிறிதளவு போட்டு நன்கு கலந்து மூன்று நான்கு துளிகள் காதில் விடவும். காதுவலி, காது குத்தல் போன்றவை குணமாகும்.

விஷக்கடிகளுக்கு

பூரான்கடி வண்டுக்கடி, இரவினில் கடித்த கணாக்கடி, இவற்றினால் உண்டாகும் கடுப்பு, வீக்கம் இவைகளைப் போக்கிக் குணமடையக் கீழ் காணும் முறையைக் கையாளுங்கள்.

100 மில்லி துளசி சாறு எடுத்து அதில் ஒரு சங்கு பசு நெய்விட்டு வெண்ணெய் போன்று உள்ள சுண்ணாம்பு மூன்று குன்றிமணி எடை அளவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

இதனை ஒரு வெண்கலப் பாத்திரத்தில் விட்டு அடுப்பிலேற்றி சுண்டக்காய்ச்சவும், களிம்பு பதம் வந்ததும் கீழே இறக்கி எடுத்துக்கொள்ளவும்.இந்த களிம்பை விஷக் கடிப்பட்ட இடங்களின்மேல் பூசி வரவும். இதனால் விஷத்தினால் உண்டான கடுப்பு வீக்கம் போன்றவை நீங்கிவிடும்.

do you know medicinal character if tulsi?


do you know medicinal character if tulsi?

சொப்பன ஸ்கலிதம்

வாலிப வயதினருக்கு உஷ்ணத்தினாலும் இரவு கெட்ட கனவுகளினாலும் துாக்கத்தில் இந்திரியம் ஸ்கலிதமாகும்.இதுபோன்று தொடர்ந்து உண்டானால் உடல் நலம் பாதிக்கும். ஆதலால் உடனடியாக இதனைப் போக்கிக் கொள்ள வேண்டும்.

துளசி செடியின் வேரினைமட்டும் கொண்டு வந்து சுத்தமாக கழுவி சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வெயிலில் காய வைத்துக் கொள்ள வேண்டும்.

நன்றாகக் காய்ந்ததும் இடித்துத் துாளாக்கி சலித்து ஒரு பாட்டிலில் பத்திரப்படுத்திக்கொள்ளவும். தினசரி இந்த சூரணத்தில் ஒரு ஸ்பூன் எடுத்து 100 மி.லி. பசும்பாலில் கலக்கி காலையும் மாலையும் குடித்து வரவும். தொடர்ந்து ஒருவாரம் குடித்தாலே சொப்பனஸ்கலிதம் நின்றுவிடும். உடல் நலமாகும்.

வயிற்றுஇரைச்சல்

நல்லதுளசி இலைகளைக் கொண்டு வந்து கழுவி கல்வதி விட்டுஇடித்து 50 மில்லி சாறு எடுத்துக்கொள்ளவும். அந்த சாற்றில் 25 கிராம் சர்க்கரை சேர்த்து கலக்கி வடிகட்டி காலை, மாலை, இரவு, என மூன்று வேளைகள் சாப்பிட்டாலே வயிற்று இரைச்சல் நின்றுவிடும். இதேபோன்று சீதபேதி, ரத்தக் கழிச்சல், போன்ற தொல்லைகளுக்கு பயன்படுத்தி நலம் பெறலாம்.

முகம் பொலிவு பெற

முகம் பொலிவுடன் அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றவர்கள் கீழ்காணும் வழிமுறைகளைக் கையாளலாம். துளசி இலையைக் கசக்கி முகத்தில் தேய்த்துக்கொண்டு இரவில் படுத்துக்கொள்ளவும். காலையில் எழுந்து குளிர்ந்த நீரினால் முகத்தைக் கழுவிக்கொள்ளவும். இதுபோன்று தினசரி செய்து வந்தால் நாளடைவில் முகம் மாசு மருவற்று பொலிவுடன் அழகாக இருக்கும்.

உள்மூலம் கட்டுப்பட

காட்டுத்துளசியின் விதைகளைக் கொண்டு வந்து காய வைத்து நன்றாக இடித்து துாளாக்கிக் கொள்ளவும். அந்த துாளில் அரைஸ்பூன் எடுத்து பசும்பாலில் கலந்து குடித்து வரவும். இதனால் உள்மூலம் கட்டுப்படும்.

அரிப்புக்கு

உடலில் அரிப்பு உண்டானால் நாய் துளசி இலைகளைப் பறித்து வந்து மெழுக அரைத்தெடுத்து அரிப்புள்ள இடங்களில் தடவி வந்தால் அரிப்பு அகன்றுவிடும். இதேபோன்று சொறி, சிரங்கு இடங்களில் தடவினால் சொறி சிரங்குகளும் குணமாகும்.

துளசி குடிநீர்

துளசி இலைகளை நீரில் போட்டு நன்றாகக் கொதிக்க வைத்து கீழே இறக்கி வடிகட்டி ஒரு பாட்டிலில் பத்திரப்படுத்திக்கொள்ளவும்.இந் நீரை குடி நீராகப் பயன்படுத்தினால் குடிநீரில் உண்டாகும் எந்த நோயும் பாதிக்காமல் வாழலாம்.

சிறுநீரகக் கற்கள் கரைய

சிறுநீரகத்தில் கற்கள் இருந்து கஷ்டப்படுகின்றவர்கள் துளசி இலையை நைந்து ஒரு கப் அளவு எடுத்து இரண்டு ஸ்பூன் தேனைச் சேர்த்து குடிக்க வேண்டும். இதுபோன்ற தொடர்ந்து ஆறுமாதங்கள் குடித்தால் சிறுநீர்த் தடத்திலுள்ள கற்கள் எல்லாம் கரைக்கப்பட்டு வெளியேறி சுகமளிக்கும்.இதனைக்குடிக்கும் காலம் வரையில் உணவில் காபி டீ கீரை வகைகள், தக்காளி, பட்டாணி, இறைச்சி வகைகள் சேர்த்துக்கொள்ளக்கூடாது.

Updated On: 7 Dec 2022 11:33 AM GMT

Related News

Latest News

 1. தேனி
  பாகிஸ்தான் மீது மற்றொரு சர்ஜிகள் ஸ்ட்ரைக் !
 2. தேனி
  இரட்டை இலை சின்னம் மீண்டும் முடக்கப்படுமா?
 3. தேனி
  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை படுக்கையில் ஹாயாக ஓய்வெடுத்த...
 4. தேனி
  தமிழ் எழுத்துலகத்தை உயர்த்தி வைத்த சுஜாதா
 5. கோவை மாநகர்
  ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு
 6. இந்தியா
  மத்திய பிரதேசத்தின் ஆலங்கட்டி மழையால் 15 மாவட்டங்களில் பயிர்கள்
 7. இந்தியா
  வாக்குச் சாவடிகளில் வீடியோ, இணையதள ஒளிபரப்பு: தேர்தல் ஆணையத்திற்கு...
 8. குமாரபாளையம்
  விமான அலகு குத்தியபடி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
 9. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி மாநகர காவல் துறை சார்பில் சமூக நல்லிணக்க விழிப்புணர்வு...
 10. உலகம்
  Cankids எனப்படும் குழந்தைகளுக்கான புற்றுநோயை வரவிடாமல் தடுப்பது...