நம் உடலில் ஏற்படும் பலவித வலிகளுக்கு ஹோமியோ சிகிச்சையில் நிவாரணம் உண்டா?

do you know human health pain remedies ? ஆரோக்யமான மனிதனுக்குஎந்த வலிகளும் இல்லை. உடலில் ஏற்படும் பல வலிகளுக்கு ஹோமியோ சிகிச்சைமூலம் குணப்படுத்தபல வழிகள் உள்ளது என டாக்டர் தெரிவிக்கிறார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நம் உடலில் ஏற்படும் பலவித வலிகளுக்கு  ஹோமியோ சிகிச்சையில் நிவாரணம் உண்டா?
X

human health pain remedies method?


மனிதர்களுடைய உடலில் இருக்கும் எலும்புகளினாலும் பிற உறுப்புகளினாலும் வலி அடிக்கடி தோன்றும். இந்த வலிஏற்படுவது எதனால்? என ஆராய்ந்து பார்த்தால் மனித உறுப்புகளின் நார்மலான செயல்பாடுகளின்றி பிரச்னைகள்

தோன்றும்போதுதான் வலிகள் உருவாகின்றன.

நிறைய நேரம் நின்றுகொண்டே வேலை பார்ப்பவர்களுக்கு காலில் வலி தோன்றும். அது போல்உடலில் எந்த பாகத்திலும் இரண்டு எலும்புகள் சந்திக்கும்இடத்தில் ஏற்படக்கூடிய வலியினை மூட்டுவலி என்கிறோம். இவ்வாறு மூட்டுவலி ஏற்பட்டாலும் ஒருமூட்டில் இரண்டு எலும்புகள் ஒன்றோடொன்று உராயாமல் இருக்க அதனுடைய முனையில் தடிமனான குருத்தெலும்பு பாதுகாப்பு அரணாக உள்ளது. மூட்டைச்சுற்றி சைனோவியல் சவ்வானது சைனோவியல் திரவத்தினைச் சுரந்து எலும்பினுடைய தேய்மானத்தினை தடுக்கும் லுாப்ரிகண்டாக உதவுகிறது.

human health pain remedies method?


மூட்டு வலியால் பாதிக்கப்படுபவர்களுக்கு எப்படி வலிஏற்படுகிறது என்பதைக் காட்டும் படம் (கோப்பு படம்)

மூட்டு வலியின் காரணமும் வகைகளும்

மூட்டுவலி ஏற்படுவதற்கு பல காரணங்களைச் சொல்லலாம். சிறிது நேரம் கூட ஓய்வெடுக்காமல் ஓயாமல் உழைப்பவர்களுக்கும், விபத்தினாலும், கீழேவிழுதல் போன்ற காரணங்களினால் அடிபடுவதாலும் மூட்டுவலி ஏற்பட பெருமளவில் வாய்ப்பு உண்டு. அதேபோல் கிருமித்தொற்றுகளாலும், முதுமை காரணமாக எலும்பு தேய்மானம் அடைவதாலும் உடல் பருமனாலும் மூட்டுவலி தோன்றலாமென டாக்டர்கள்கூறுகின்றனர்.

மூட்டுவலியில் பல வகைகள் உள்ளன. ஆஸ்டியோ ஆர்த்திரைடிஸ், ருமடாய்டு ஆர்த்ரைட்டிஸ், கவுட் என பல வகைகளில் உள்ளன. மூட்டுவலிகள் மற்றும் வலிகளை ஹோமியோ தொடர் சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும் என டாக்டர்.முகுந்தன் தெரிவிக்கிறார்.

human health pain remedies method?


ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ் எனப்படும் மூட்டு வலிஏற்படுபவர்களுக்கு மூட்டுகளில் நிகழும் மாற்றம் (கோப்பு படம்)

ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ்

இந்த வகையிலான மூட்டு வலி பெரும்பாலும் வயதானவர்களுக்கே ஏற்படும். உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்களுக்கும் இவ்வகையான வலி ஏற்பட வாய்ப்புண்டு. அடிக்கடி அடிபடுபவர்களுக்கும், சில வகையான விளையாட்டுகளில் ஈடுபடும் விளையாட்டு வீரர்களுக்கு இந்நோய் தாக்குகிறது.

இந்த வகையான மூட்டுவலியில் குறுத்தெலும்பும், மூட்டிலுள்ள திசுக்களும் தேய்ந்து மெலிந்து போய்விடும். எலும்பின் நுனியில் உள்ள குருத்தெலும்பு பாதிக்கப்படும்போது அதன் மேற்பாகத்தை அரித்துவிடும். அப்போது வலியும், மூட்டுப்பிடிப்பும்,ஏற்படத்துவங்கும். இது தேயும்போது 2 எலும்பினுடைய நுனிகளும் மோத ஆரம்பிக்கும். அப்போது மூட்டானது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த வகையான நோயானது பெரும்பாலும் முழங்கால் பகுதிகளில் அதிகமாக தோன்றும். மேலும் இடுப்பு, கைகள், முதுகு, கழுத்து, போன்ற இடங்களில் தோன்றும். இதற்கு ஆரம்ப நிலையில் ஹோமியோ சிகிச்சை அளிக்கும்போது எளிதில்குணமாகிவிடும்.

human health pain remedies method?


நார்மலான கால் மூட்டு, ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ், ருமடாய்ட் ஆர்த்ரைடிஸ் பிரச்னைகளை விளக்கும் படம் (கோப்பு படம்)

human health pain remedies method?

ருமடாய்டு ஆர்த்ரைட்டிஸ்

இந்த மூட்டுவலியானது20 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்களுக்கு அதிகம் ஏற்படுகிறது. இந்நோயானது பரம்பரையாக தோன்றவும் வாய்ப்புண்டு. இதுஏதாவது ஒருமூட்டில் வளர ஆரம்பிக்கும். வளர்ந்துவிட்டால் முடமாகக்கூடிய அளவுக்கு இந்த நோயின்தாக்கம் இருக்கும்.சிறிய மூட்டுகளான கைகள், பாதமூட்டுக்களில் ஆரம்பித்து பிறகு மணிக்கட்டு, முழங்கை, முழ்ங்கால், தோள்பட்டை, இடுப்பு முதலிய மூட்டுகளைப் பாதிக்கின்றன. இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூட்டு பிடிப்பு வலி வீக்கம், முதலியன தீவிரமாக இருக்கும். உடலின் இரண்டு பக்கமும், மூட்டுகள் ஒரே மாதிரி தாக்கப்பட்டிருக்கும்.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு பொருளை இறுக்கிப்பிடிக்கவும், பாத்திரத்தை எடுக்கவும், சேலை கட்டவும், சிரமப்படும் நிலையில் இருப்பார்கள். ஆரம்பநிலையிலேயே சிகிச்சை மேற்கொள்ளாமல் விட்டுவிட்டால் தீவிரமாகி மூட்டின்இயக்கம் குறைந்து முடமாக்கும் நிலைக்குதள்ளப்படும் சூழ்நிலை ஏற்படலாம். ஹோமியோபதி சிகிச்சையில் நீண்ட தொடர் சிகிச்சையில் இந்த நோயினை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரலாம் என டாக்டர் தெரிவிக்கிறார்.

கெளட்

இந்த வகை வலியானது ஆண்களுக்கே ஏற்படுகின்றது.இது அதிகம் கால் கட்டை விரலில் பெரிய வீக்கமாக காணப்படும். இந்த நோயானது யூரிக் ஆசிட்டிலிருந்து உற்பத்தியாகின்ற மோனோ சோடியம் யூரேட்டானது மூட்டிலுள்ள திரவத்தில் படிகங்கள் போன்று படிவதினால் இந்த வகையான வலியானது ஏற்படுகின்றது.சில உணவு வகைகளால் யூரிக் ஆசிட் அதிகம் உற்பத்தியாகிறது. குறிப்பாக மாமிச வகைகள், ஈரல், சில வகை மீன்கள், வான்கோழி, பறவைகள், பீன்ஸ், மது வகைகள், ஆகியவற்றால் இது அதிகம் உற்பத்தியாகலாம். இந்த நோயினைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் சிறுநீரகங்கள் பழுதடைந்துவிடும். மேலும் இதனால் சிறுநீரகக்கல் உற்பத்தியாவதற்கும் வாய்ப்பு உண்டு.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். யூரிக் ஆசிட் அதிகம் கலந்தஉணவுப் பொருள்களைக் கட்டுப்படுத்த வேண்டும். இந்நோய்க்கு ஹோமியோபதியில் நாள்பட்ட சிகிச்சை தேவைப்படும்.

human health pain remedies method?


முதுகுவலியால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஏற்படும் வலியைக் காட்டும் படம் (கோப்பு படம்)

முதுகுவலி

நம்மில் பலர் அடிக்கடி முதுகுவலியால் அவதிப்படுவார்கள். பெரும்பாலும் உடல் பருமனாக உள்ளவர்களுக்கு இதுதோன்றும். முதலில் செய்ய வேண்டியது என்னவென்றால் நாம் தினமும் உட்காரும் நிலையினைச் சரிசெய்ய வேண்டும்.சரிதானா? என ஆராய வேண்டும். நமது தண்டுவடமானது நாம் குனிவதற்கும், நிமிர்வதற்கும் ஏதுவாக வரிசையாக அடுக்கப்பட்டுள்ளது. 2 முதுகெலும்புகளுக்கு இடையில் ஒரு டிஸ்க் உள்ளது. இது ஒரு குஷன் போன்றுசெயல்படுகிறது.

மிகுந்த அழுத்தத்தினாலோ அல்லது அதிக வேலைப்பளுவினால் இந்த டிஸ்க்கின் கடினமான திசுக்கள் பிளவுபடும்போது உள்ளே இருக்கும் மென்மையான நியூக்ளியஸ் பிதுக்கப்பட்டு அதனருகில் இருக்கும். தண்டு வடத்தில் இருந்து வெளிப்படும் நரம்புகளை அழுத்தும்போது முதுகுவலி ஏற்படுகிறது.

வேலை செய்யும்போது சாய்ந்து உட்காருதல், குனிந்து எழுதுவது, பளுவான பொருட்களை துாக்குவது, போன்றவற்றாலும் முதுகிற்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டுமுதுகுவலி உண்டாகிறது. ஹோமியோசிகிச்சையில் இதற்கு எளிமையான முறையில் தீர்வு காணலாம்.

human health pain remedies method?


கழுத்துவலி ஏற்பட்டால் நம் உடம்பினுள் நிகழும் மாற்றத்தினை விளக்கும் படம் (கோப்பு படம்)

கழுத்துவலி

கழுத்துவலி ஏற்பட பல காரணங்கள் உண்டென டாக்டர்கள்கூறுகின்றனர். எலும்புகள் தேய்மானம் அடைவதாலும், ருமடாய்ட் ஆர்த்ரைட்டிஸ் கழுத்திலுள்ள மூட்டெலும்புகளைத் தாக்கினாலும் கழுத்துவலி வரலாம். இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தலையணை இல்லாமல் படுப்பது நல்லது. மிகுந்த பாரங்களை இவர்கள் துாக்கக்கூடாது. கழுத்தின் அசைவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.

குதிகால்வலி

கால்ஸனியல் ஸ்பர் என்ற நிலையில் குதிகால் வலி ஏற்படுகிறது. குதிகால் எலும்பில் இருந்து வளரும் ஒரு சிறிய எலும்பு வளர்ச்சி தான் இந்த ஸ்பர் என்பது. இது கால் இன்ஞ்சுக்கு குறைவாக இருந்தாலும் மிகுந்த வேதனையை உண்டு பண்ணக்கூடியது. அதுபோன்றே குதிகால் எலும்பில் உள்ள பர்சாக்களில் அழற்சி ஏற்படும் போது பர்சிடிஸ் ஏற்பட்டு வலி உண்டாகும். குதிகாலில் அடிபடும்போது இந்த வலிஏற்படலாம்.

human health pain remedies method?


நம் உடல் ஆரோக்யமே என்றும் வலிமை என்பதை விளக்கும் படம் (கோப்பு படம்)

human health pain remedies method?

மேற்கண்ட இந்த வலிகள் எல்லாம் முன்பெல்லாம் வயதானவர்களுக்கு மட்டுமே வந்தது. இப்போதுஇளைய தலைமுறையினரையும் இது ஆட்டிப்படைக்கிறது. காரணம் உடல் உழைப்பு ,நடை போன்றவைகள் இல்லாததுதான். அருகில் உள்ள இடத்திற்கு செல்லவேண்டும் என்றால் கூட நம்மில் பலர் நடக்க சிரமப்பட்டு வண்டியில்தான் செல்கின்றனர்.

மனமிருந்தால் மாற்றம் உண்டு எனும் அஸ்திரத்தினைக் கையில் எடுத்துக்கொண்டால் நிச்சயம்வலியினைப்போக்க வழிகள் பல உண்டு. அந்த வழிகளில் முதலிடம் பெறுவது உடற்பயிற்சிதான்.சிறிது நேரமாவது உடற்பயிற்சி செய்ய பழகினால் எந்த வலியும் வராது. அதேபோல் நடைப்பயிற்சியினால் பல நோய்களுக்கு தீர்வு உண்டு என பல ஆராய்ச்சிகளின் டாக்டர்கள் கண்டறிந்துள்ளனர்.

நன்றி:டாக்டர்.பி.முகுந்தன்

Updated On: 20 Nov 2022 11:45 AM GMT

Related News