நீ....நடந்தால் உடல் அழகு..... தினமும் 10 ஆயிரம் அடிகள் நடக்கிறீர்களா?.... உங்களுக்கு நோயே வராதுங்கோ........

நீ....நடந்தால் உடல் அழகு.....  தினமும் 10 ஆயிரம் அடிகள் நடக்கிறீர்களா?....  உங்களுக்கு நோயே வராதுங்கோ........

ஆரோக்யமான  உடலுக்கு நடைப்பயிற்சியானது மிக மிக அவசியம் ஆகும்.

benefits of walking,health tips நம் உடல் நல்ல ஆரோக்யமாக இருக்க வேண்டும் எனில் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 45 நிமிடங்களாவது ஒவ்வொருவரும் நடக்கவேண்டியது அவசியமாகும். நடப்பீங்களா?...

benefits of walking,health tips


தனி நபராக உரிய ஆடைஷூக்களோடு நடந்து செல்வதே உத்தமம்,என தனியே செல்கிறார் (கோப்பு படம்)

benefits of walking,health tips

மனித வாழ்க்கையே மகத்தானது. வாழ்க்கையினை நன்கு புரிந்து கொண்டவர்களுக்கு இறைவன் அளித்த நன்கொடையே மனித வாழ்க்கை என்பதுபுரியும். இறைவனால் படைக்கப்பட்ட மனிதர்கள் அவரவர்களுடைய சூழ்நிலைக்கேற்ப தங்கள் வாழ்க்கை முறையினை அமைத்துக்கொள்கின்றனர்.

அந்த வகையில் அவரவர்களுடைய சூழ்நிலைக்கு ஏற்ப அவர்களுடைய அன்றாட வாழ்க்கை முறையானது அமைந்துவிடுகிறது. சரிங்க... எல்லோருக்கும் வாழ்க்கை முறை அமைந்துடுச்சுங்க...அவரவர்கள் தங்களுடைய ஆரோக்யத்தில் அக்கறை செலுத்துகிறார்களா? என்று கேட்டால் ஒரு புறம் மட்டுந்தான் சத்தம் வரும். ஏங்க... அவனவனுக்கு அன்றைய வேலைகளை பார்க்கவே நேரம் பத்தமாட்டங்குது. அதுல ஆரோக்யத்தில வேற அக்கறை செலுத்தணுமா? ன்னு கேட்கிறது காதுல விழுதுங்க..

இதுமாதிரி தாங்க அட்வைஸ் சொன்னாலும் இந்த மக்கள் ஏத்துக்க மாட்டாங்க...உடம்பையும் பாத்துக்க மாட்டாங்க.. திடீர்னு வந்தா அலறி அடிச்சுட்டு ஆஸ்பத்திரிக்கு ஓடுறதுதாங்க நம்மாளுங்க வழக்கமா போயிடுச்சு... ஒண்ணுமட்டும் புரி்ஞ்சுக்கோங்க...

இறைவனால் படைக்கப்பட்ட இந்த உடம்பின் செயல்பாடுகள் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். அந்த வகையில் நீங்க கூட்டுக்குடும்பத்திலேயே வசித்தீர்கள் என்றால் கூட உங்க உடம்பில ஏற்படக்கூடிய மாற்றத்தினை நீங்கதான் உணர முடியும். அதனை மற்றவர்கள் உணர முடியாதுங்க.. ஏங்க உங்க மனைவியே இருந்தாலும் உங்க உடம்பு செயல்பாட்டை அவங்களுக்கு எப்படி தெரியும்?

benefits of walking,health tips


இரண்டு பேராக சென்றாலும் விலகியே செல்கின்றனர் அவர்களுடைய நடையில் அக்கறையோடு (கோப்புபடம்)

benefits of walking,health tips

உதாரணத்துக்கு தலைவலி என்று நாம் சொல்கிறோம். அதனை நாம் வெளியில் சொன்னால்தான் மற்றவர்களுக்கு தலைவலிக்கிறது என்று தெரியும் . நீங்க சொல்லாவிட்டால் அவர்களுக்கு எப்படிங்க தலைவலின்னு தெரியும்.ஏன்? டாக்டர்களுக்கு கூட தெரியாது. தலைவலியை உணர மெஷின் எதுவும் இல்லைங்க. நீங்க சொன்னாதான் தெரியும். அந்த வகையில் நம் உடலின் அன்றாட செயல்பாடுகளில் சற்று சிறிது மாற்றம் நிகழ்ந்தாலும் நாம் அதனை அலட்சியப்படுத்தக்கூடாது. நேரம் இல்லை.. நாளைக்கு பார்த்துக்கலாம்னு உங்க உடம்பு விஷயத்தில தள்ளிப்போடாதீர்கள்... காரணம் அது ஒரு சமிக்ஞை. அதனை நாம் ஏற்றுக்கொண்டு உடனடியாக ட்ரீட்மென்ட் செய்தால் சரியாகிவிடும். ஆனால் மறுதடவை வரும் வரை விட்டால் எதுவாக இருந்தாலும் அது விபரீதத்தில்தான் முடியும்... மனசுல வைச்சுக்கோங்க...

அது சரிங்க பத்தாயிரம் அடி நடந்தா உங்களுக்கு எந்த நோயும் வராதுன்னு சொல்றீங்களே அது எப்படி? ...

மாறி வரும் பரபரப்பான உலகில் நம்மில் யாருமே நம்முடைய ஆரோக்யத்தில் அக்கறை காட்டுவதில்லை. இதனால் உடல் பருமன், ஏற்பட்டு நோய்கள் நம் வீட்டு வாசற்கதவைத் தட்டுகிறது. நாமே நோய்களுக்கு ரத்தினக் கம்பளம் விரித்துவரவேற்கிறோம்.

ஆமாங்க... ஆமா...நமக்கு ஸ்மார்ட்போனில் மணிக்கணக்கில் பாக்க நேரம் இருக்குது.. ஆனால் ஆரோக்ய விஷயத்துக்கு தியானம், யோகா , நடைப்பயிற்சி, உடற்பயிற்சின்னு பண்ணணும்னா நேரம் இருக்காதுங்க... இதனால்தான் நாம் நோய்களுக்கு ஆட்பட நேரிடுகிறது. ஒருசிலரின் சோம்பேறித்தனம்தான் அவர்களுடைய ஆரோக்யத்துக்கு கேடு விளைவிக்கவே காரணமாக அமையுதுங்க

மனித உழைப்பு தற்காலத்தில் குறைந்து போயிடுச்சுங்க... யார் உழைக்கிறார்கள் உடல் ரீதியாக சொல்லுங்க பார்க்கலாம்... எல்லாத்துக்கும் மெஷின் வந்ததினால் உழைப்பு குறைந்து போயிடுச்சு... ஒவ்வொருத்தரும் 70 கிலோவுக்கு குறையாமல்இருக்கிற மாதிரி பெருத்துப்போனதால் நோய்கள் நமக்கு நிரந்தரமாகிப் போனதுங்க..அதேபோல் பேக்கரி அயிட்டம், ஸ்நாக்ஸ்,ஸ்வீட் , ஐஸ்கிரீம் என நம்முடைய சுவைக்கு யாருமே தடை போடாததாலும் நோய்கள் நம்மை விட்டுப்போகமாட்டேங்குது...

எண்ணெயில் பொறித்தஉணவுகளை அதிகம் சாப்பிடுகிறோம்.. அதாவது பாஸ்ட் ஃபுட் அயிட்டங்கள், அசைவ உணவுகள் என தினமும் சாப்பிட பழகியதால் நமக்கு எதனால் நோய்கள் வருகிறது என்பது தெரிய மாட்டேங்குது... ஏன் மெத்த படித்த டாக்டர்களுக்கே ஒரு சில நோய்களை இனம் காண முடிவதில்லை.பல கட்ட பரிசோதனைகளுக்கு பின்னரே ஒரு இரண்டு நாள் கழித்துதான் என்ன நோய் என்றே கண்டுபிடிக்கிறார்கள்? என்றால் பார்த்துக்கோங்க...நோய் தாக்கம் எப்படிஉள்ளதென்று?

அது சரிங்க .,..நடந்தா நோய் வராதுங்களா? ன்னு கேட்கறீங்க.. அப்படித்தானே...சரி மேல படிங்க..

முன்பெல்லாம் அதாவது ஒரு பத்து இருபது வருடங்களுக்கு முன்னால் நடையும், சைக்கிளும்தான் மக்களின் இடப்பெயர்ச்சிக்கு முக்கிய வாகனங்களாக இருந்தன. நாளடைவில் டூவீலர்கள் மாடல் மாடலாக வந்தவுடன், அதுவும் கடனுக்கு தந்தவுடன் யாருமே சைக்கிளை உபயோகிப்பதில்லை.,இதனால்தான் நம் முன்னோர்கள் கோயில்களை உயரமான மலையில் வைத்து படி வழியே நம்மள நடக்க வைச்சாங்க... ஆனால் இப்ப அதுக்கும் பல டெக்னாலஜி .. ரோப்காராம்.. ரோப் கார் வந்துடுச்சுங்க... பழனி மலையில.... இழுவை ரயிலாம்... அப்புறம் எப்படிங்க நடப்பாங்க..

பக்கத்துதெருவிற்கு செல்லவேண்டும் என்றால்கூட டூவீலர்தான். நடந்து செல்வதில்லை. நடப்பதால் உங்கள் உடம்பின் அத்தனை உறுப்புகளும் வேலை செய்கிறது. இன்னொன்று உங்களுக்கு தெரியுமா? இரண்டே இரண்டு விஷயங்களில் மட்டுந்தான் நம் உடல் உறுப்புகள் அனைத்தும் இயங்குகிறது. ஒன்று சைக்கிள் ஓட்டுதல், மற்றொன்று நீச்சல். ஆனால் தற்காலத்தில் கிராமப்புறத்தில் இருப்பவர்கள் கூட கிணறுகளுக்கு குளிக்க செல்வதில்லை. காரணம் பயம் ஒரு புறம் இருந்தாலும் அவர்களுக்கு நேரமில்லை என்றே பதில் வருகிறது.

benefits of walking,health tips


நடைப்பயிற்சியின் போது நால்வராக சென்றாலும் பேசாமல் செல்வதே பலன் தரும்... நடந்த பின் பேசலாம் (கோப்புபடம்)

benefits of walking,health tips

ஒரு நாளைக்கு பத்தாயிரம் அடிகள் நடந்தால் உங்களுக்கு வாழ்நாள் முழுக்க நோய்களே அண்டாதுன்னு ஆராய்ச்சில சொல்லியிருக்காங்க.. என்னான்னு பார்த்துடுவோமா? ..

இந்த ஆராய்ச்சியானது முதன் முதலில் ஜப்பானில் பிரபலப்படுத்தப்பட்டது என்றாலும் மருத்துவ ஆராய்ச்சியின் அடிப்படையில் இல்லை. ஆனால் இது ஒரு நல்ல பயனுள்ள குறிக்கோள் என்பதற்காக ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

பத்தாயிரம் அடிகள் என்பது ஒரு இலக்கு அல்ல. ஆனால் அப்படி நடக்கும்போது அவர் எந்த அளவிற்கு செயல்பாட்டினை அடைகிறார் என்பதற்கான நல்ல அடையாளமாக இது விளங்குகிறது.

ஒரு நபரானவர் ஒரு நாளைக்கு பத்தாயிரம் அடிகள் நடக்கும் பட்சத்தில் சராசரி நபரானவரின் கலோரியானது ஒரு வாரத்திற்கு 3500 எரிக்கப்படுகிறது. இவை தோராயமான மதிப்பீடுகள்தான்.

உங்கள் உடல் பருமனாக இருக்கும் பட்சத்தில் டாக்டர்களே ஒரு நாளைக்கு பத்தாயிரம் அடிகள் நடைப்பயிற்சி செல்லுங்கள் என பரிந்துரைக்கின்றனர். காரணம் இதுபோன்று உடல் பருமனோடு இருப்பவர்களுக்கு உள்ள கொழுப்புகள் அப்போதுதான் கரையும்.

இந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் ஆராய்ச்சியாளர்கள்ஒரு மதிப்பீடு செய்துள்ளனர். அந்த வகையில் ஒரு நாளைக்கு நாம் தினசரி நடக்கும் அடிகளை வைத்து நமது செயல்பாட்டு திறனை அறிந்துகொள்ளலாம்.

ஒரு நாளைக்கு நீங்கள் 5 ஆயிரம் அடிகளுக்கு குறைவாக நடந்தால் செயலற்றது என சொல்லப்படுகிறது.

அதாவதுஓரளவு செயலில் இருப்பவர்கள் ஒரு நாளைக்கு 7500 முதல் 9999 அடிகள் வரை நடக்கிறார்கள். அதுவும் மிகவும் சுறுசுறுப்பானது என்ற கணக்கில் ஒரு நாளைக்கு 12500 அடிகள் நடப்பவர்கள் மதிப்பிடப்படுகிறார்கள்.

மேலும் இந்த ஆராய்ச்சியில் வயதுக்கு ஏற்பஅடிகளின் எண்ணிக்கை மாறுபடுகின்றன என்று கண்டறியப்பட்டு அதற்கான விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.

18 வயதிற்கு மேற்பட்ட பெரியவர்கள் ஒரு நாளைக்கு 4 ஆயிரம் முதல் 18 ஆயிரம் அடிகள் வரை என மதி்ப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.

குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினரைப்பார்த்து 18 வயதிற்குட்பட்டவர்கள் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் முதல் 16 ஆயிரம் அடிகள் என கண்டறியப்பட்டுள்ளது.

18 வயதினை நெருங்கும்போது இது குறைவதாகவும் ஆராய்ச்சியில் மதிப்பிட்டுள்ளனர். இளம்பெண்கள் 10 ஆயிரம் முதல் 12ஆயிரம் அடிகள் வரை .ஆரோக்யமான பெரியவர்கள் ஒரு நாளைக்கு 4 ஆயிரம் முதல் 18 ஆயிரம் வரை என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நடப்பது என்பது யார் வேண்டுமானாலும் எவ்வளவு துாரம் வேண்டுமானாலும் நடக்கலாம். இதற்கு தடையே இல்லை. அவர்களால் எவ்வளவு நடக்க முடிகிறதோ அந்த அளவிற்கு அவர்கள் நடப்பது நல்லது. ஒரு சில நேரத்தில் வயதானவர்கள் ஆர்வ மிகுதியால் ஓடுவதைக்கூட நாம் காண்கிறோம்.

நடைப்பயிற்சி செய்யவேண்டும் என்பதுதான் நமது இலக்கு . அதனை அளந்து அளந்து நடப்பது என்பது ஆகாத காரியம்.

ஒரு சிலர் தினமும் 45 நிமிஷம் நடந்தால் போதும் என நேரம் கணித்து நடக்கிறார்கள். ஒருசிலரோ இத்தனை கிலோ மீட்டர் நடக்க வேண்டும் என கணித்துக்கொண்டு தினமும் அத்தனை கிலோ மீட்டரை அடையும் வரையில் நடந்து பயிற்சி செய்கின்றனர்.

benefits of walking,health tips


எவ்வளவு பொறுப்போடு ஒருவருக்கு ஒருவர் இடைவெளி விட்டு அவரவர்கள் வேலையை மட்டும் பார்க்கின்றனர் உரிய நடையோடு.....இதுதாங்க...இப்படித்தான் நடக்கணுமுங்க.....(கோப்பு படம்)

benefits of walking,health tips

இதுபோல் அவரவர்களுடைய தொழில், மற்றும் வீட்டுச்சூழ்நிலையைப் பொறுத்து இவர்களுடைய நடைப்பயிற்சியின் காலம் நேரம் மாறுபடக்கூடியதுதான்.

எப்ப வேண்டுமானாலும் நடக்கலாமா?-

இல்லைங்க.. பெரும்பாலும் காலை நேரத்தில் நடப்பது நல்லது. ஆனால் ஒருசிலருக்கு காலை நேரம் என்பது ஒத்துவராத நேரமாக போகலாம். காரணம் அவர்கள் வெளியூரில் வேலை செய்பவராகவோ அல்லதுகுறித்த நேரத்திற்கு பஸ்சை பிடித்து செல்பவராக கூட இருப்பார்கள். இதுபோல பிரச்னை உள்ளவர்கள் மாலை நேரத்தினை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

நீ நடந்தால் உடலழகு benefits of walking,health tips

நீங்கள் நடக்க நடக்க உங்கள் வயது குறைவதைத் தானே உணர்வீர்கள்.. உங்கள் உடலில் ஒரு களை வந்துவிடும். அதாவது இளமை திரும்பும் என்று கூட சொல்லலாம். மூளையானது புத்துணர்வைப் பெறுவதால் எப்போதும் சுறுசுறுப்பாகவே இருப்பீர்கள் என்பதை உணரலாம்.

*சாப்பிட்டு குறைந்த பட்சம் 2 அல்லது 3 மணி நேரம் கடந்த பின்னர் நடப்பது நல்லது. (காலையில் நடப்பவர்களுக்குஇது பிரச்னை இல்லை)

*ஒரு நாளைக்கு குறைந்த பட்ச நேரமான 45 நிமிடம் கண்டிப்பாக நடந்து செல்லவேண்டும்.

*ஆரம்பத்தில் மெதுவாக ஆரம்பித்து இடை இடையே சற்று வேகத்தினை அதிகரிக்கும் பட்சத்தில் உங்களுக்கு தானாகவே வியர்வை வழிய ஆரம்பித்துவிடும்.

*நடந்து செல்லும்போது பாட்டு கேட்பது, மற்றவர்களுடன் பேசிக்கொண்டே நடப்பது போன்ற செயல்களை முடிந்தவரை தவிர்ப்பது நலம்.

*ஒரு சிலர் வாக்கிங் செல்லும்போது டீ, பலகாரம் சாப்பிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள். இதனை கட்டுப்படுத்தவேண்டும்.

இதுபோல் நாம் நடந்து செல்வதால் நமக்கு செலவில்லை. ஆனால் வரவுகளோ அதிகம். ஆமாங்க... ஆமா... எந்த நோயும் வராதுன்னா உங்களுக்கு வரவுதானே? ஆனால் டூவீலரில் சென்றால் பெட்ரோலுக்கு காசு செலவு செய்தால்தான் பக்கத்துக்கு தெருவுக்கு போகமுடியும்.. ஆக செலவில்லாமல் நடந்து போக பழகுங்க... இளமையாகலாம் எப்போதும்...

ஆக....நீங்க நடந்தால் நடையும் அழக்கு...,,. அதனால வருங்க உங்க உடலழகு....நடந்து தான் பாருங்களேன்....

நடையானது போடுகிறது நோய்க்கு தடை...... நடையானது போடுகிறது முதுமைக்கு தடை.... எப்படீங்க.... நடங்க....

Tags

Next Story