நீங்க வேகமா சாப்பிடுவீங்களா? மெதுவா சாப்பிடுவீங்களா? இதை படிங்க முதல்ல

அவரசமாக, வேகமாக சிலர் உணவு சாப்பிடுவதை ஸாரி... விழுங்குவதைப் பார்த்தால், புறப்படத் தயாராக இருக்கும் ரயிலில் ஏறச் செல்பவரோ, என நினைக்கத் தோன்றும். நீங்களும் அந்த லிஸ்ட் என்றால், தொடர்ந்து படியுங்கள்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நீங்க வேகமா சாப்பிடுவீங்களா? மெதுவா சாப்பிடுவீங்களா? இதை படிங்க முதல்ல
X

ஆரோக்கியமான முறையில் உணவை, சாப்பிடும் முறைகள் குறித்து, கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம். (கோப்பு படம்)

வயிறு நிறைந்துவிட்டதாக மூளைக்கு சிக்னல் செல்வதற்கு 20 நிமிடங்கள் ஆகும். எனவே அவசர அவசரமாக கிடைப்பதை விழுங்காமல், மெதுவாக உணவை ருசித்து சாப்பிடுங்கள். இதனால் வயிறு நிறைந்த உணர்வு உண்டாகி அளவுக்கு மீறி சாப்பிடும் பழக்கம் மாறும். ஆரோக்கியமாக வாழ்வதற்கு உணவு தேவை. ஆனால், அதை அளவாகச் சாப்பிடுவது அவசியம். அதிகப்படியான உணவு உடல் நலத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம்.


அளவுக்கு மீறி சாப்பிடுவதைத் தடுக்கும் ஆலோசனைகள்

ஒவ்வொருவருக்கும் இடையே உடலின் செயல்பாடு வித்தியாசப்படுவதால், பொதுவாக ஒரு அளவை குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஒருவரது உடல் காட்டும் அறிகுறிகளை வைத்து, நீங்கள் தேவைக்கு அதிகமாக சாப்பிடுகிறீர்களா என்பதை கண்டறியலாம். தேவைக்கு அதிகம் என்பதன் பொருள், உங்கள் உடலின் செயல்பாடுகள் சீராக இருப்பதற்கு போதுமான உணவின் அளவை மீறுவது என்பதாகும்.


அறிகுறிகளில் கவனம்

நீங்கள் சாப்பிடும் உணவின் அளவு அதிகமாகும்போது, உங்கள் உடலே போதும் என்பதற்கான அறிகுறிகளைக் காட்டும். வயிறு நிறைந்தது போல் தோன்றும், வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படும். உணவு போதும் என்று ஒதுக்கும் அளவைத் தாண்டி, அதிகமாகச் சாப்பிடும்போது ஆரோக்கியம் பாதிக்கும். சிலரால் அந்த அளவை கண்டுபிடிக்க முடியாததால் அதிகமாகச் சாப்பிடுவார்கள். சிலர் ஆசையால் அதிகம் சாப்பிடுவார்கள். எந்த காரணமாக இருந்தாலும், அளவுக்கு மிஞ்சினால் அனைத்தும் நஞ்சுதான். எனவே, அதிகமாக உணவு உட்கொள்ளும் பழக்கத்தை தவிர்ப்பது மிக முக்கியம். .

அளவாக சாப்பிடுதல்

சாப்பிடும் தட்டின் அளவு சிறியதாக இருந்தால், குறைந்த அளவு உணவைப் பரிமாறினாலே உங்கள் தட்டு நிறைந்து விடும். இதனால் அதிகமாகச் சாப்பிடுவது போன்ற பிம்பம் உருவாகி வயிறு நிறைந்த உணர்வு ஏற்படும். இதன் மூலம் அதிகமாகச் சாப்பிடுவதைக் குறைக்கலாம்.


நார்ச்சத்து நிறைந்த உணவுகள்

நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை கொஞ்சமாக சாப்பிட்டாலே வயிறு நிறைந்தது போன்ற உணர்வு தோன்றும். இதனாலும் சாப்பிடும் அளவு குறையும்.

உடலின் தேவையை அறிந்து சாப்பிடுங்கள்

உடல் உணர்த்தும் குறிப்புகளை உற்றுக் கவனித்து அதனை புரிந்து கொண்டு சாப்பிட பழகுவது நல்லது. கட்டாயத்திற்காக சாப்பிடாமல் பசி எடுத்தால் மட்டுமே சாப்பிட வேண்டும்.

மெதுவாக சாப்பிடுங்கள்

வயிறு நிறைந்துவிட்டதாக மூளைக்கு சிக்னல் செல்வதற்கு 20 நிமிடங்கள் ஆகும். எனவே அவசர அவசரமாக கிடைப்பதை விழுங்காமல், மெதுவாக உணவை ருசித்து சாப்பிடுங்கள். இதனால் வயிறு நிறைந்த உணர்வு உண்டாகி அளவுக்கு மீறி சாப்பிடும் பழக்கம் மாறும்.

பிடித்தமான உணவாக இருந்தால் அதிகம் சாப்பிட விரும்பலாம். எனவே எந்த உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடுகிறீர்கள் என்பதை கவனித்து, அந்த நேரங்களில் விழிப்புணர்வாக இருப்பது நல்லது.


கவனச்சிதறல் கூடாது

சாப்பிடும்போது போன், டி.வி, கம்ப்யூட்டர் போன்றவற்றில் கவனத்தை சிதறவிட்டால் எவ்வளவு சாப்பிட்டீர்கள் என்பதே தெரியாது. அளவிற்கு மீறி சாப்பிடுவதற்கு இந்த கவனச்சிதறல் ஒரு முக்கிய காரணியாகும்.


உணவே மருந்து என்ற நிலையில், அதுவே விஷமாகவும் மாறி உடல் நலத்தை கடுமையாக பாதிக்கக் கூடும். எனவே, உடல் ஆரோக்கியத்தில், உணவுக்கு மிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நல்லா சாப்பிடுங்க, என்பதை விட, நல்லதையே சாப்பிடுங்க என்ற புதுமொழிதான் தற்போது மிக முக்கியமாக உள்ளது.

Updated On: 9 March 2023 3:25 PM GMT

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  நடிகர் விஷாலுக்கு சென்னை மேயர் பிரியா பதிலடி
 2. டாக்டர் சார்
  Urinary Bladder Meaning In Tamil சிறுநீரக தொந்தரவு வராம இருக்கணுமா? ...
 3. தமிழ்நாடு
  4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
 4. இராஜபாளையம்
  ராஜபாளையம் அருகே, காட்டு யானைகளால் தென்னை மரங்கள் சேதம்
 5. வணிகம்
  Bitcoin Crosses $40000 Mark-எகிறிய கிரிப்டோ சந்தை..! காரணம் என்ன..?
 6. கந்தர்வக்கோட்டை
  விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாற்றுத்திறன் மாணவர்களுக்கு...
 7. லைஃப்ஸ்டைல்
  Milk Meaning In Tamil பிறப்பு முதல் இறப்பு வரை பயன்படும் பொருள்...
 8. கந்தர்வக்கோட்டை
  கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் மாற்றுத் திறனாளி தினத்தை முன்னிட்டு...
 9. திருவள்ளூர்
  புழல் ஏரியில் 3000 கனஅடி தண்ணீர் திறப்பு..! வெள்ள அபாய எச்சரிக்கை..!
 10. தொழில்நுட்பம்
  2024 Instagram Trend Talk-இன்ஸ்டாகிராமை கட்டமைக்கும் இந்திய 'ஜென்...