கல்லீரல் கொழுப்பு நோய் வராமல் தடுக்க சாப்பிட வேண்டிய உணவு முறை

fatty liver disease,Diet to prevent system, doctor adviceகல்லீரல் கொழுப்பு நோய் வராமல் தடுக்க சாப்பிட வேண்டிய உணவு முறை பற்றி டாக்டர் பரூப் அப்துல்லா விளக்கம் அளித்துள்ளார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கல்லீரல் கொழுப்பு நோய் வராமல் தடுக்க சாப்பிட வேண்டிய உணவு முறை
X

fatty liver disease,Diet to prevent system, doctor adviceநமது உடலில் உள்ள முக்கியமான உறுப்புகளில் ஒன்று கல்லீரல். உடல் இயக்கத்திற்கு தேவையான கொழுப்பு மற்றும் புரதச்சத்தை உற்பத்தி செய்து கொடுப்பது மட்டும் இன்றி நாம் சாப்பிடும் உணவை செரிமானம் செய்ய வைப்பதிலும் கல்லீரல் முக்கிய பங்காற்றுகிறது. நோய் தொற்றால் பாதிக்கப்படாத ஒரு உறுப்பும் கல்லீரல் தான்.

ஃபேட்டி லிவர் நோய்

fatty liver disease,Diet to prevent system, doctor adviceஃபேட்டி லிவர் எனப்படும் கல்லீரலில் கொழுப்பு படியும் நோய் தற்போது பெரிய பிரச்சினையாக உள்ளது. பெரியவர்கள் மட்டும் இன்றி சிறு வயதினரை கூட இந்நோய் தாக்குகிறது. இது வராமல் தடுப்பது எப்படி, அதற்கு நாம் சாப்பிடவேண்டிய உணவு முறை பற்றி விரிவாக விளக்கம் அளித்து உள்ளார் சிவகங்கையை சேர்ந்த டாக்டர் பரூக் அப்துல்லா.


பொது நல மருத்துவரான இவர் கூறும் அறிவுரைகள் என்ன என்பதை இனி பார்ப்போமா?

பெரும்பாலும் நாற்பதுகளை நெருங்கும் அல்லது நாற்பது வயதை தாண்டிய ஆணோ பெண்ணோ அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுக்கும் போது தற்செயலாக தென்படும் "ஃபேட்டி லிவர்" என்ற கண்டுபிடிப்பு இப்போது இந்த நோய் இருபது முதல் முப்பது வயது மக்களுக்கும் தென்பட ஆரம்பித்திருக்கிறது.

fatty liver disease,Diet to prevent system, doctor adviceஉங்களது அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் ரிப்போர்ட்டில் Fatty liver ( grade 1 /2) என்று குறிப்பிடப்பட்டிருக்கலாம் அல்லது Hepatomegaly with fatty changes என்று குறிப்பிடப்பட்டிருக்கலாம்.கல்லீரலில் அதிகமான கொழுப்பு தேங்குவதால் ஏற்படும் நிலை தான் இந்த "கல்லீரலில் கொழுப்பு ஏறிய நிலை"நிறைய பேருக்கு தற்செயல் கண்டுபிடிப்பாக தென்படுவதால் இது நார்மல் என்று ஆகிவிடாது.

கல்லீரலின் வேலை என்ன?

fatty liver disease,Diet to prevent system, doctor adviceநம் உடலுக்குள் நேரும் வளர் சிதை மாற்றக்குளறுபடியால் (metabolic syndrome) கல்லீரல் அடிவாங்குகிறது என்பதும்.அது எழுப்பும் கூக்குரலாகவே இந்த நோயை கருத்தில் கொள்ள வேண்டும்.பொதுவாக கல்லீரல் ஒரு கல்லுளி மங்கன் போன்ற உறுப்பு.எதற்கும் அசையாத ஒரு உறுப்பு. தான் உண்டு. தன் வேலையுண்டு என்று வேலை பார்க்கும். அமிலத்தன்மை கொண்ட மதுவைக்கூட செரிமானம் செய்யும் தன்மை கொண்டது.கல்லைக்கூட செரிமானம் செய்யக்கூடியது. ஆனால் அப்படிப்பட்ட ஸ்ட்ராங்கான ஒரு உறுப்பையே அசைத்துப்பார்க்கக் கூடியது இந்த கல்லீரல் கொழுப்பு படியும் நோய்.


மது பழக்கத்தால் வரும் நோய்

fatty liver disease,Diet to prevent system, doctor adviceஇரண்டு நிலைகளில் நம் கல்லீரலில் கொழுப்பு படியும். மது அருந்துபவர்களுக்கு நேருவது முதல் நிலை. இதை Alcoholic Fatty liver என்போம். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் வருவதற்கு முன் யாருக்கேனும் ஃபேட்டி லிவர் என்று மருத்துவர் கண்டறிந்தால் அவர் நிச்சயம் அவ்வப்போது மது அருந்துபவராகவே இருந்திருப்பார்.மதுவால் கல்லீரலின் செல்கள் பழுதாகி அதில் குளறுபடி ஏற்பட்டு கொழுப்பு படியும் நிலை.

fatty liver disease,Diet to prevent system, doctor adviceஆனால் இதன் இரண்டாவது நிலைமது அருந்தாதவர்களுக்கும் வர ஆரம்பித்து விட்டது. இதை Non Alcoholic Fatty liver disease என்று தனிப்பெயரிட்டு அழைக்கிறோம். சமீபத்தில் என்னை உடல் பருமன் என்று சந்தித்த 10 வயது பாலகனுக்கு ஃபேட்டி லிவர் இருந்தது. மிரண்டு தான் போனேன்.கல்லீரலில் கொழுப்பு சேருவது இயற்கையானதா? நல்லதா?கல்லீரலில் கொழுப்பு சேருவது இயற்கையானது அன்று.நல்லதன்று. நிச்சயம் கெட்டது. இதை மட்டும் மனதில் நன்றாக இருத்திக்கொள்ளவேண்டும்.

எதனால் கல்லீரலில் கொழுப்பு சேர வேண்டும்? கல்லீரலின் பிரதான வேலைகளில் சில -க்ளூகோசை -> கொழுப்பாக( triglyceride ) மாற்றி உடலில் சேமிப்பது.-லைபோ புரதங்களை உருவாக்குவது.

fatty liver disease,Diet to prevent system, doctor adviceஇதன் செயல்பாட்டை அறிய கல்லீரலை சமையல் கூடத்துடன் ஒப்பீடு செய்யலாம். ஒரு கிலோ மாவு கொடுத்தால் நமது அம்மா அதில் நமக்கு இட்லி தயாரித்து தருவார்.மீதம் உள்ள மாவை குளிர் சாதனப்பெட்டியில் வைப்பார். ஒரு கிலோ மாவு மூன்று நாளைக்கு வரும் என்பது அம்மாவுக்கு தெரியும். அடுத்த மூன்று நாட்களுக்கு மாவு புதிதாக வாங்க தேவையில்லை. ஏனெனில் ஃபிரிட்ஜில் தான் மாவு இருக்கிறதே. ஆனால் அடுத்தநாள் அப்பா தெரியாமல் ஒரு கிலோ மாவு வாங்கி வந்துவிட்டால் அம்மா என்ன செய்வார்?

இந்த ஒரு கிலோ புது மாவை ஃபிரிட்ஜில் வைப்பார். ஆக அடுத்த ஆறு நாட்களுக்கு மாவு கைவசம் இருக்கும். இப்படி தேவைக்கு மீறி மாவு இருந்தும் தினமும் யாரோ ஒருவர் மாவு,பரோட்டா என வாங்கி வந்துவிட்டால்.. நம் அம்மா என்ன தான் செய்வார் பாவம். ப்ரிட்ஜும் ஒரு அளவுக்கு மேல் இடம் கொள்ளாது.ஒரு கட்டத்துக்கு மேல் கிச்சனே அலங்கோலமாகி விடும். இந்த சினாரியோவை நமது கல்லீரலுக்கும் சிந்தித்து பாருங்கள்.

எப்படி வருகிறது?

fatty liver disease,Diet to prevent system, doctor adviceமாவுச்சத்து ஒரு வரைமுறைக்குள் இருந்தால் உடல் அதை சக்திக்கு உட்கொண்டுவிடும். அது வரம்பு மீறி சென்றால் நம் கல்லீரல் அதை கொழுப்பாக மாற்றி தொப்பையில், தொடை, இடுப்பு , மார்பு பகுதிகளில் சேமிக்கும். மீண்டும் மீண்டும் அதிக மாவுச்சத்து சாப்பிட்டால் , உண்ட வீட்டையே ரெண்டாக்கிய கதையாய் தன்னை உற்பத்தி செய்த கல்லீரலிலேயே கொழுப்பு படிந்து சேர ஆரம்பித்துவிடும். ஆக, ஃபேட்டி லிவருக்கு காரணம் மாவுச்சத்து தான். கொழுப்பு அல்ல. உங்கள் கல்லீரலில் கொழுப்பு படிவதைப்பார்த்தவுடன் நீங்கள் உண்ணும் மாமிசம் ,முட்டை, பால் போன்றவற்றை நிறுத்தி விட்டு அதற்குப்பதிலாக அதிகமாக சோறு, கோதுமை , மைதா என்று உண்பீர்களானால் நிச்சயம் உங்களது ஃபேட்டி லிவர் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.


தெரிந்து கொள்வது எப்படி?

fatty liver disease,Diet to prevent system, doctor adviceஅல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் என்பது நுண் ஒலி அலைகளை பீய்ச்சி அந்த அலைகள் நம் உள்ளுறுப்புகள் மேல் பட்டு பிரதிபலிக்கும் பிம்பத்தைக்கொண்டு உருவாக்கப்படும் வெள்ளை-சாம்பல்(white-grey) நிற படங்களை வைத்து உருவாக்குவது.அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனில், கல்லீரல் தான் நடுநிலை நாயகம். அதாவது கல்லீரலின் பிம்பம் தான் நடுநிலை.கல்லீரலை விட குறைவாக ஒலியை பிரதிபலிக்கும் பாகங்கள் hypoechogenic என்று அழைக்கப்படும். இவை கல்லீரலை விட அதிக பழுப்பு (more greyer than liver) நிறத்தில் இருக்கும்.

fatty liver disease,Diet to prevent system, doctor adviceகல்லீரலை விட அதிகமாக ஒலியை பிரதிபலிக்கும் பாகங்கள் hyper echogenic என்று அழைக்கப்படும். இவை கல்லீரலை விட குறைந்த பழுப்பு நிறத்தில் (less greyer) இருக்கும். ஃபேட்டி லிவர் பிரச்சனையில் கொழுப்பு கல்லீரலில் படிவதால் இந்த கொழுப்பு படிந்துள்ள இடங்கள், நார்மல் கல்லீரலை விட அதிக ஒலி அலையை பிரதிபலிக்கும். அதனால் அந்த இடங்கள் நார்மல் கல்லீரலை விட பழுப்பாகவோ கருப்பாகவோ இருக்கும்.இதில் grade I என்பது கல்லீரலில் ஆங்காங்கே கொழுப்பு படிந்து காணப்படுவது. நார்மல் கல்லீரலில் கொழுப்பு படியாது. இது ஆரம்ப நிலை.

fatty liver disease,Diet to prevent system, doctor adviceGrade II என்பது கல்லீரலில் கொழுப்பு அதிகமாக படிவதால், போர்டல் சிறை சரியாக புலப்படாமல் போகும் (portal vein) இது அடுத்த கட்டம்.Grade III என்பது கொழுப்பு அதிகமாக கல்லீரலில் படிவதால் உதரவிதானம் (diaphragm) சரியாக புலப்படாது .இது முற்றிய நிலை. இந்த கல்லீரலில் படியும் கொழுப்பானது பின்னாளில் கல்லீரலில் பாதிப்பை ஏற்படுத்தி மது அருந்தாதவர்களுக்கு வரும் கல்லீரல் கொழுப்பு படியும் நோயாக மாறலாம். (NON ALCOHOLIC STEATO HEPATOSIS) இதன் செல்லப் பெயர் NASHமேலும் கல்லீரலில் ஒரு அளவுக்கு மேல் கொழுப்பு சேர்ந்தால் , கல்லீரல் விரிந்து விரிந்து ஒரு நிலைக்கு மேல் சுருங்க ஆரம்பித்து விடும். இது கல்லீரல் அழற்சி நோய் (cirrhosis) எனப்படும். இந்த அளவுக்கு முற்றிய நோயை ரிவர்ஸ் செய்ய இயலாது.

fatty liver disease,Diet to prevent system, doctor adviceஇது பின்னாளில் கல்லீரல் புற்றுநோய்(HEPATO CELLULAR CARCINOMA) அல்லது கல்லீரல் செயலிழப்பு(LIVER FAILURE) வரை இட்டுச்செல்லும் ஆபத்து இருக்கிறது. நம்மை பயமுறுத்தும் செய்தி யாதெனில் மேலை நாடுகளில் இருபது வயதைக்கூட எட்டாத பள்ளி செல்லும் பிள்ளைகளிடம் செய்த ஆய்வுகளில் அவர்களில் பெரும்பாலானோருக்கு ஃபேட்டி லிவர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.உண்மையில் நம் நாட்டிலும் அதே அளவு பிரச்சனை இருக்கக்கூடும். ஆனால் யாரும் இங்கு பரிசோதனைக்கான முக்கியத்துவத்தை கொடுப்பதில்லை என்பதால் இருக்கும் பிரச்சனை வெளியே தெரிவதில்லை.

நாமும் தற்போது ஃபாஸ்ட் ஃபுட் கலாச்சாரம், சாக்லேட், கேக் என்று ரீபைன்டு கார்போஹைட்ரேட்டுகளை வாங்கி குழந்தைகளுக்கு கொடுக்கிறோம்.இதன் கேடுகளை அறிந்தால் நாம் அப்படி செய்யமாட்டோம் என்றே நினைக்கிறேன்.

உணவு முறை

fatty liver disease,Diet to prevent system, doctor adviceகுழந்தைகள் எதை உண்ண வேண்டும் . எதை உண்ணக்கூடாது என்பதில் பெற்றோரின் கவனம் என்றும் இருக்க வேண்டும்.மேலும், ஃபேட்டி லிவரை சரி செய்ய இயலும். அது எப்படி என்பதை பார்ப்போம்.

மாவுச்சத்து பொருட்கள் உண்பதை உடனே நிறுத்த வேண்டும்.இனிப்பு சுவை தரும் அனைத்து பொருட்களையும் நிறுத்த வேண்டும்.குறை மாவு நிறை கொழுப்பு உணவுக்கு மாறுவது உங்களுக்கு நன்மை பயக்கும்.மாவுச்சத்து குறைத்து உண்பதால் மேற்கொண்டு க்ளூகோஸ் கொழுப்பாக மாற்றம் அடைவது நின்று விடும்.

இந்த உணவு முறையில் உடல் கொழுப்பை எரிப்பதால், கொஞ்சம் கொஞ்சமாக உள்ளுறுப்புகளில் மண்டிக்கிடக்கும் கொழுப்பும் கரைய ஆரம்பித்து காணாமல் போய் விடும். நாம் உணவிலேயே தேவையான அளவு கொலஸ்ட்ராலை கொடுத்து விடுவதால் கல்லீரல் தினமும் கஷ்டப்பட்டு கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்ய வேண்டியது இல்லை. இது அதன் பணிச்சுமையை வெகுவாக குறைத்து விரைவில் நலம் பெற உந்து சக்தியாக அமையும்.

உணவே மருந்து

fatty liver disease,Diet to prevent system, doctor adviceஉங்களின் உறவினர்களில் யாருக்கேனும் ஃபேட்டி லிவர் இருப்பின் அவருக்கு இந்த டயட்டை பரிந்துரை செய்யுங்கள்.அவரது கல்லீரல் பிரச்சினை தீவிரமாவதற்குள் காக்க ஒரு வாய்ப்பு வழங்குங்கள்.ஃபேட்டி லிவர் பிரச்சினையை கொலஸ்ட்ரால் மாத்திரைகளாலோ வேறு எந்த குறுக்கு வழியிலோ சரி செய்ய இயலாது.

எதைத் தின்றதால் அது வந்ததோ அதை நிறுத்த வேண்டும்.முதல் இரண்டு நிலைகளில் இருக்கும் ஃபேட்டி லிவர் "குறை மாவு நிறை கொழுப்பு உணவுமுறையால் மட்டுமே கட்டுப்படுத்தப்படும்.

இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா விளக்கம் அளித்துள்ளார்.

Updated On: 11 Oct 2022 12:36 PM GMT

Related News