மன அழுத்தம் நீங்க, சீத்தாப்பழம் சாப்பிடுங்க ...!

custard apple in tamil - மனிதர்களின் இன்றைய வாழ்க்கை சூழல் இறுக்கமாகவும், பரபரப்பாகவும் இருக்கிறது. இதனால் ஏற்படும் மன அழுத்தம் நீங்க, சீத்தாப்பழம் சாப்பிடலாம்.

HIGHLIGHTS

மன அழுத்தம் நீங்க, சீத்தாப்பழம் சாப்பிடுங்க ...!
X

custard apple in tamil  - இனிமேல் சீத்தாப்பழம் சாப்பிட ‘மிஸ்’ பண்ணாதீங்க! 

custard apple in tamil - உணவுக்கு பிறகு இனிப்பு சாப்பிடவேண்டும்; ஆனால், கொழுப்பும் சேரக் கூடாது, சர்க்கரையும் ஏறக் கூடாது என்பவர்களுக்கு சீத்தாப்பழம் நல்ல தேர்வாக இருக்கும்.

பழங்கள் என்றால் ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, வாழை போன்றவைதான் நினைவுக்கு வரும். சீஸன் பழங்கள் எல்லாம் அந்த நேரத்துக்கு மட்டுமே நினைவுக்கு வரும். ஆனால் சில பழங்களை மட்டுமே எதிர்நோக்க தொடங்குவோம். அதில் முக்கியமானது மாம்பழமும், சீத்தாப்பழமும். சீஸன் வரும் போதே அதன் சுவையை ருசிக்க தொடங்கிவிடுவோம்.

பழங்களில் தனிப்பட்ட சுவையும் மணமும் கொண்டது. சீத்தாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை என எல்லாமே மருத்துவகுணங்களை கொண்டதுதான். சீத்தாப்பழம் குளுக்கோஸ், சுக்ரோஸ் இரண்டுமே நிறைந்திருப்பதால், உடனடியாக உடலுக்கு ஆற்றல் தருகிறது.


சீத்தாப்பழம் தரும் நன்மைகள்;

​சீத்தாப்பழம்

சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி -காம்ப்ளக்ஸ், வைட்டமின் ஏ, நார்ச்சத்து, மெக்னீசியம், நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து நிறைந்தது. புரதம், தாது பொருள்கள், இனிப்பு, கொழுப்புசத்து நிறைந்தது.

இதில் இருக்கும் தாதுப்பொருள்கள் நம் உடலில் இருக்கும் எலும்புகளுக்கும், தசைகளுக்கும், இதயத்துக்கும் வலு கொடுக்கும். உடலில் உள்ள திசுக்களுக்கு பாதிப்பு தரக்கூடிய நச்சுப்பொருள்களை உடலிலிருந்து வெளியேற்ற ஆன்டி- ஆக்ஸிடண்ட் தேவை. இதை உடலுக்குத் தருவது வைட்டமின் சி. சமைத்த உணவை காட்டிலும் பழங்களில் நிறைவாக வைட்டமின் சி கிடைக்கும்.


​ரத்த அழுத்தம்

சீத்தாப்பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உள்ளது. இது ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க இவை இரண்டுமே உதவுகிறது. ரத்த நாளங்களின் விரிவாக்கத்தை ஊக்குவிக்கிறது. இதனால் ரத்த அழுத்தம் சீராகிறது. இதய நோய் மற்றும் பக்கவாதம் அபாயத்தை குறைக்கிறது.

ஆய்வில் அதிகமாக மெக்னீசியம் உட்கொள்ளும் நபர்களுக்கு ரத்த அழுத்தம் வருவதற்கான ஆபத்து குறைவாக இருக்கும். உயர் ரத்த அழுத்தம் குறை ரத்த அழுத்தம் இருப்பவர்கள் அனைவருமே சீத்தாப்பழத்தை எடுத்துகொள்ளலாம்.

​செரிமானத்துக்கு உதவும்

ஒரு கப் அளவுள்ள சீத்தாப்பழ விழுதில் 5 கிராம் அளவுக்கு நார்ச்சத்து உள்ளது. சீத்தாப்பழத்தில் நார்ச்சத்தும் தாமிரச்சத்தும் சீராக இருப்பதால் செரிமானத்துக்கு உதவுகிறது. இதனால் மலச்சிக்கல் வராமல் தடுக்கப்படுகிறது.

இவை குடல் இயக்கத்தை சீராக்கி குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை மேம்படுத்துகிறது. சீத்தாப்பழம் ஜீரண சக்தியை அதிகரிப்பதால் பித்தம், வாந்தி, பேதி, தலைச்சுற்றல் போன்றவற்றை குணப்படுத்தும்.


மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும்

சீத்தாப்பழம் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஆற்றலை கொண்டது. மனநிலையை சீராக்க உதவும் செரோடோனின் மற்றும் டோபமைன் போன்றவற்றுக்கு வைட்டமின் பி6 முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த வைட்டமின் மனநிலை கோளாறுகளுக்கு உதவக்கூடியது. வைட்டமின் பி 6 மன அழுத்தத்தை குறைக்க செய்பவை. இது குறித்த ஆய்வு ஒன்றில் வைட்டமின் பி6 குறைபாடு ஒருவரின் மனச்சோர்வை இரட்டிப்பாக்குகிறது என்று கண்டறியப்பட்டது. இந்த வைட்டமின் அதிகரிப்பதன் மூலம் மனச்சோர்வு அபாயம் குறைக்கப்படும். அதற்கு சீத்தாப்பழத்தில் இருக்கும் வைட்டமின் பி 6 உதவக்கூடும்.

உடல் எடை அதிகரிக்க

உடல் எடை அதிகரிக்க வேண்டும் என விரும்புவோர், உடல் எடையை குறைப்பதை போன்றே ஆரோக்கியமான எடை அதிகரிப்பையும் அதிகரிக்க வேண்டும். இல்லையெனில் உடலில் அதிக கொழுப்புகள் சேர்ந்துவிட வாய்ப்புண்டு. அப்படி ஆகாமல் ஆரோக்கியமாக உடல் எடை அதிகரிக்க வேண்டுமெனில் சீத்தாப்பழத்தை தேர்வு செய்யலாம்.

இது அதிக ஊட்டச்சத்துக்கள், சரியான அளவு கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதங்களால் நிரம்பியுள்ளது. சீத்தாப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியமாக உடல் எடை அதிகரிக செய்யும்.


ஆஸ்துமாவுக்கு நல்லது

சீத்தாப்பழம் வைட்டமின் பி 6 கொண்டுள்ளது. இது மூச்சுக்குழாய் அழற்சியை எதிர்த்து போராட உதவுகிறது. ஆஸ்துமாவை தடுக்க உதவுகிறது. நுரையீரல் தொடர்பான சிக்கல் இருப்பவர்களுக்கு சீத்தாப்பழம் நன்மை தரும். வைட்டமின் சி உள்ளதால் சளி பிடிக்குமோ என்று பயப்படவேண்டாம். இது சளியை போக்கிவிடும். சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலைக் குணப்படுத்த கூடியது. ஆஸ்துமா, காசநோய் இருப்பவர்கள் தொடர்ந்து சீத்தாப்பழத்தை சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும்.

​எலும்பு பலமடையும், பெண்களுக்கும் ஏற்றது

சீத்தாப்பழம் உடலுக்கு வலிமை கொடுக்க கூடியது. இதயத்துக்கு பலம் கொடுக்கும் . கால்சியம் நிறைந்திருப்பதால் எலும்பு, பற்கள் பலமடையும். தசைப்பிடிப்பு இருப்பவர்கள் சீத்தாப்பழம் எடுத்துகொள்வதன் மூலம் தசைகள் வலிமையடையும். பெண்களுக்கு ஏற்ற கனி இது என்றும் சொல்லலாம்.

இது கருவுறுதலை மேம்படுத்தும், சோர்வு உணர்வை குறைக்கும். எரிச்சலை குறைக்கும் தன்மைகொண்டது. இது மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தகூடியது. கண் பார்வையை மேம்படுத்தும்.

நீரிழிவுக்கு நல்லதா?

நீரிழிவு நோயாளிகள் சீத்தாப்பழம் சாப்பிடலாமா என்பது குறித்து பலருக்கும் சந்தேகம் இருந்துவருகிறது. சீத்தாப்பழம் குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் நிறைந்திருக்கும் என்பதால் இதை சாப்பிட்ட உடனேயே ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துவிடும் என்கிறார்கள்.

ஒரு சிலர் சீத்தாப்பழம் கிளைசெமிக் குறியீடு 54 என்பதால் நீரிழிவு இருப்பவர்களுக்கு நல்ல பழம் என்றே சொல்கிறார்கள். ஏனெனில் நீரிழிவு இருப்பவர்களுக்கு லோகிளைசெமிக் உணவில் 55 மற்றும் அதற்கு குறைவான அளவு உணவுகளே பரிந்துரைப்பதால் சர்க்கரை நோயாளிகள் சீத்தாப்பழம் சாப்பிடலாம் என்கிறார்கள்.மேலும் இது நார்ச்சத்து உள்ள பழம் என்பதால் இது ரத்த சர்க்கரை அளவு உறிஞ்சுவதை மெதுவாக்குகிறது என்றும் சொல்கிறார்கள்.

உங்களுக்கு நீரிழிவு இருந்து நீங்கள் சீத்தாப்பழத்தின் மீது அதிக பிரியம் கொண்டிருந்தால் ஒருமுறை உங்களின் மருத்துரின் ஆலோசனையை பெறவும் மறக்க வேண்டாம்.

Updated On: 21 Dec 2022 12:56 PM GMT

Related News