உங்களுடைய முடி பிரச்னைகளுக்கு முடிவு கட்டும் அரு மருந்து சீரகம் ...தெரியுமா?
cumin seeds tamil நம் உணவில் அன்றாடம் சேர்க்ககூடிய பொருளான சீரகத்தில் என்னென்ன மருத்துவ குணங்கள் உள்ளது என்பது பற்றி பார்ப்போம்.
HIGHLIGHTS

cumin seeds tamil
cumin seeds tamil
நாம் அன்றாடம் சாப்பிடும் உணவு சமைக்கும் போது பல உப பொருட்களை சேர்க்கிறோம்.உதாரணத்திற்கு கருவேப்பிலையை சேர்க்கிறோம். அது எதற்காக சேர்க்கிறோம்? பலரும் நினைத்துள்ளனர் அதனை வாசனைக்காக சேர்க்கிறோம் என்று. பலர் அதனை உணவில் இருந்து இலையின் ஓரத்தில் எடுத்து வைத்துவிடுவார்கள். பெரியோர்களே, தாய்மார்களே, வாசனைக்காக மட்டும் கருவேப்பிலையை சேர்க்கவில்லை. அதனுடைய மருத்துவ குணம் பற்றி உங்களுக்கு யாராவது தெரிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். முடி வளர்ச்சிக்கும், நரைதோன்றாது பித்தத்திலிருந்து நம்மை பாதுகாக்ககூடியது தான் கருவேப்பிலை. இது பலருக்கும் தெரிவதில்லை. அதனை ஓரம் கட்டிவிடுவார்கள். அதனை உணவோடு மென்று சாப்பிடுங்க...
அதேபோல்தான் மிளகு, சீரகம், பூண்டு, வெங்காயம், என சொல்லிக்கொண்டே போகலாம்.ஏங்க மஞ்சள் பொடியில் எவ்வளவு மருத்துவ மகத்துவம் இருக்குது தெரியுங்களா? சாதாரணமாகவே நம் முன்னோர்கள் விட்டுச்சென்றது எல்லாமே உடலுக்கு நன்மை பயப்பன தாங்க.
cumin seeds tamiசீர்-அகம் என்று சொல்வார்கள். சீரகம் இது எல்லா வீட்டு சமையலறையில் உள்ள ஐந்தரைப்பெட்டிகளில் இருந்தே ஆக வேண்டிய ஒரு மருத்துவ பொருள் என்று கூட சொல்லலாம். அந்த வகையில் இதனை சீர்கூட்டல் அகம். அகத்தில் இருக்கக்கூடிய, பல பிரச்னைகளை சீர் செய்ய வல்லது, என்கிறதுனாலதான், இதனை சீரகம், அப்படின்னு சொல்றாங்க.
ஏங்க சீரகத்தில் மருத்துவ குணம் அதிகம் இருக்குதுன்னு கை நிறைய அள்ளி அள்ளி சாப்பிட முடியாதுங்க.அதுக்கும் ஒரு லிமிட் வைத்துள்ளனர். அதாவது ஒரு நாளைக்கு 300முதல் 600 மி.கிராம் வரை சாப்பிடலாங்க.
சீரகத்தினை பொதுவாக நம் வீட்டு பெண்கள் முக்கியமாக ரசத்தில் மிளகோடு சேர்ப்பார்கள். மிளகு சீரக ரசம் என்று வைப்பார்கள். செக்க டேஸ்ட் ஆக இருக்கும்.மேலும் வெண்பொங்கலுக்கு போடுவார்கள். ஒரு சிலர் வாழைக்காய் பஜ்ஜியில் சேர்க்கிறார்கள். வெள்ளையப்பத்தில் சேர்க்கின்றனர். அதுபோல் பல பயன்களை சீரகம் தருகிறது. இதனை சீரகத்தோடு சிறிது மிளகு சேர்த்து பொடிசெய்து எண்ணெயிலிட்டு காய்ச்ச வேண்டும்.இந்த எண்ணையைத் தலைக்கு தேய்த்துகுளித்து வந்தால் உங்கள் உடம்பில் உள்ள கண் எரிச்சல், மற்றும் கண்ணீரிலிருந்து வரும் நீர்வடிதல் போன்ற பிரச்னைகள் தீரும்.
cumin seeds tamiபெரும்பாலும் கேரளைட்ஸ் அதாவது கேரள மாநில மக்கள் தினமும் சீரகத்தினை தண்ணீரில் போட்ட அதனை கொதிக்க வைத்து அ ந்த தண்ணீரைத்தான் உட்கொள்வார்கள். அவ்வளவு உடம்புக்குநல்லதுங்க. மேலும் சீரகத்தினை வறுத்து சூடான நீரில் கலந்து அதை கொதிக்க வைத்து இரவில்குடித்து வந்தால் துாக்கமின்மை பிரச்னை தீர்ந்துஆழ்ந்த துாக்கம் வரும்.
இதனை தினமும் உட்கொண்டால் உங்களுடைய செரிமான அமைப்பு வலுப்படும்.செரிமானம் சம்பந்தமான பிரச்சனைகளான அஜீரணம், வயிற்று உப்புசம், வாய்வுத் தொல்லை, நெஞ்செரிச்சல், போன்ற பிரச்னையினால் அவதிப்படுறவங்க, இந்த சீரகத் தண்ணீரை, காலை வெறும் வயிற்றில் குடித்து வர, எளிதில் குணமாகும். அதே சமயம், சீரகத்தில் இருக்கக்கூடிய அதிகப்படியான நார்ச்சத்து, மலச்சிக்கலையும் தடுக்கிறது. மேலும் இதில் வைட்டமின் சி உள்ளது. இரண்டு டீஸ்பூன் சீரகத்தினை ஊறவைக்க வேண்டும். காலையில் அந்த தண்ணீரை வடிகட்டி அதில் அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் செரிமான கோளாறு பிரச்னை நீங்கிவிடும். மேலும் உடம்பிலுள்ள நச்சுப்பொருள் அனைத்தும் நீங்கி விடும்.
சீரகம், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லது. அடிக்கடி தொற்று நோய்களினால் அவதிப்படுறவங்க, சீரக தண்ணீரை குடித்து வர, நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறும். இதன் மூலமாக, பிற நோய்கள் வருவது தடுக்கப்படும்.
cumin seeds tamiசீரகம் அகத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்கு மட்டுமில்லாமல், அழகு சார்ந்த பல பிரச்னைகளுக்கும், நல்ல தீர்வு தரக்கூடியதாகவும் இருக்கிறது. தலைமுடி வளர்ச்சிக்கு, மிகவும் நல்லது, சீரகத் தண்ணீர். தலைமுடி சம்பந்தமான பிரச்சனைகளான, தலைமுடி உதிர்வு, நரைமுடி, இது போன்ற பிரச்னையால் அவதிப்படுறவங்க, இந்த ஜீரக தண்ணீரை குடித்து வர, இதுல இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள், கூந்தலை வலுவாக்குவதோடு, தலைமுடி வளர்வதற்கும் உதவியாக இருக்கிறது.
ரத்தசோகை பிரச்னையினால், அவதிப்படுறவங்க, காலை வெறும் வயிற்றில், சீரக தண்ணீரை குடித்து வர, இதிலிருக்கக்கூடிய அதிகமான இரும்புச் சத்து, உடலில் புதிய இரத்த செல்களை உற்பத்தி செய்கிறது. இதன் மூலமாக, ரத்த சோகை குணமாகும்.
மனிதர்களுக்கு குடலில் ஏற்படும் கேன்சரை தடுக்க சீரகம் பெரிதும் உதவுகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைத்துக்கொள்ள இது உதவுகிறது.மேலும் திராட்சைப்பழச்சாறுடன் சிறிது சீரகத்தைப் பொடித்து போட்டு பருகினால் ஆரம்ப நிலை ரத்த அழுத்த நோய் குறையும். உடலின் தேவையற்ற கொழுப்புகளைக் கரைக்க உதவுகிறது. கொழுப்பு கரைவதால் இதயத்தின் ஆரோக்கியமும் மேம்படும். இதனால் உடல் எடை குறையும்.
cumin seeds tamiபெண்கள் பலரும், மாதவிடாய் காலத்தில், அதிக வலியினால் அவதிப்படுவாங்க. அந்த சமயத்தில், இந்த காய்ச்சி வடிகட்டிய, சீரகத் தண்ணீரை குடித்து வர, மாதவிடாய் வலி, கட்டுப்படும். ஆறு, உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். சீரகத் தண்ணீரில் பொட்டாசியம், கால்சியம், செலினியம், மாங்கனீஸ், போன்ற பொருட்கள் அடங்கி இருக்கிறது.
அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷம் என்று சொல்வார்கள். அந்த வகையில் அளவுக்கு மீறி எதுவும்சாப்பிடக்கூடாது. அதுவும்இந்த சீரகமும் அந்த வரிசையில் அடங்ககூடியது. இதனை அளவுக்கு மீறி சாப்பிட்டால் ஆண்களுக்குமலட்டுத்தன்மை உண்டாகும். அதுவும் அக்காலத்தில் பெண்கள் கரு கலைப்பதற்காக சீரகத்தினை அதிகமாக சாப்பிடுவார்களாம். கரு உண்டாகியிருக்கும் பெண்கள் அளவோடு சீரகத்தினை சாப்பிடுவது கருவுக்கு பாதுகாப்பாக அமையும்.