காய்ச்சல், ரத்தசோகைக்கான கோல்டாக்ட் மாத்திரையின் பயன்கள்..

Coldact Tablet Uses in Tamil
X

Coldact Tablet Uses in Tamil

Coldact Tablet Uses in Tamil-நம் ஆரோக்ய குறைவால் ஏற்படும் நோய்களுக்குடாக்டரிடம் சென்ற பின் மருந்து , மாத்திரைகளை பரிந்துரைப்பார். அதனை அளவுக்கு மீறி எடுத்து கொண்டால் பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

Coldact Tablet Uses in Tamil

நம் உடல் ஆரோக்யம் பாதிக்கப்படும்போது நாம் டாக்டர்களிடம் சென்று உரிய சிகிச்சை மேற்கொள்கிறோம்.அவர் சிகிச்சை அளித்துவிட்டு நமக்கானமருந்துகளை பரிந்துரைப்பார். ஒரு சிலர் அந்த மருந்துகளை உடல் நலம் குணமாகும் வரை மட்டுமே தொடர்ந்து சாப்பிடுவர்.மீதியை வீணாக்குவர். அப்படி செய்யகூடாது. டாக்டர்கள் பரிந்துரைக்கும் கால அளவிற்கு நாம் முழுமையாக மாத்திரைகளை உட்கொண்டால்தான் உடல் நலம் குணமாகும்.

கோல்டாக்ட் மாத்திரையானது வலி நிவாரணி மாத்திரை ஆகும். இது காய்ச்சலால் பாதிப்படையும் நோயாளிகளுக்கு டாக்டர்கள் பரிந்துரைப்பர். ஆனால் இந்த மாத்திரையானது பொதுவாக பயன்படுத்தப்படும் வலி நிவாரணியாகவும் கருதப்படுகிறது.

நம்மில் பலருக்கு அவ்வப்போது முதுகுவலி, தலைவலி, மூட்டுவலி , பல்வலி போன்ற பிரச்னைகள் வரும்போது டாக்டர்களிடம்சென்றால் அவர்கள் இந்த மாத்திரையினையே பரிந்துரைப்பார்கள். இந்த வலிகளை காய்ச்சல் குறைக்கிறது.

புற்று நோயால் பாதிப்படைந்தவர்களுக்கு மற்றும் ஆபரேஷன் செய்யப்பட்டு அதனால் ஏற்படும் வலிகளை சமாளிக்க வும் இது அளிக்கப்படுகிறது. கோல்டாக்ட் மாத்திரையானது வாய்வழியாகவும் , பின்னர் மலக்குடல் வழியாகவும் நோயாளிகளுக்கு தரப்படுகிறது.

பக்கவிளைவு

Coldact Tablet Uses in Tamil

கோல்டாக்ட் மாத்திரையானது பக்கவிளைவுகள் அற்றது. கர்ப்பகாலத்தில் பெண்களும், தாய்ப்பால் கொடுக்கும் பெண்மணிகளும் இந்த மருந்தை பயன்படுத்தலாம். பாதுகாப்பானதும்கூட. ஒரு சில நேரங்களில் ஒரு சிலருக்கு இந்த மாத்திரையை சாப்பிடுவதால் ஏதாவது ஒரு நேரத்தில் வயிற்றுவலி, பசியின்மை ,சரும அரிப்பு குமட்டல் ஆகியவை ஏற்படும்.

கோல்டாக்ட் மாத்திரையினை பயன்படுத்தி பக்கவிளைவுகள் அதாவது அலர்ஜி ஏற்படுவதை நாமே நம் உடலில் ஏற்படக்கூடிய தற்காலிக மாற்றங்களை கொண்டு கண்டுணரலாம். அடர்நிற சிறுநீர், களிமண்-நிற மலம் அல்லது மஞ்சள் காமாலை போன்றதீவிரமான அறிகுறிகளை கவனித்தால் நீங்கள் பயன்படுத்துவதை நிறுத்தவேண்டும். இந்த மருந்தினை டாக்டர்கள் பரிந்துரைத்த அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ள செய்வதால் கல்லீரல் செயலிழப்பு ஏற்படும்.

எந்தெந்த நேரத்தில் எடுத்துக்கொள்ளகூடாது

Coldact Tablet Uses in Tamil

அலர்ஜி உங்களுக்கு ஏற்படும் பட்சத்தில் நீங்கள் இந்த மாத்திரையை உட்கொள்ள கூடாது. மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களும் இதனை எடுத்துக்கொள்ளக்கூடாது. கல்லீரல் சம்பந்தமான நோயால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவராக இருக்கும் பட்சத்தில் இதனை உட்கொள்ள கூடாது.

கோல்டாக்ட் மாத்திரையானது ஏற்கனே நீங்கள் வேறு நோய்களுக்கு மாத்திரை, மருந்து சாப்பிடுபவராக இருந்தால் அம்மருந்துகளுடன் இடைவினை புரிய வாய்ப்புள்ளது. எனவே இதுகுறித்து முன்னதாகவே உங்களுக்கு சிகிச்சையளிக்கும் டாக்டரிடம் தெரிவித்து விடுவது நல்லது.

வைட்டமின் மற்றும் தாது உப்புகள் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள், எதிர்மருந்துகள், மற்றும் ஹெர்பல் தயாரிப்புகள் உள்ளிட்டவைகளை டாக்டர்களிடம் தெரிவித்தால் அதற்கு தகுந்தாற்போல் அவர் உங்களுக்கான மருந்தினை பரிந்துரைப்பார்.

Coldact Tablet Uses in Tamil

டாக்டர்கள் பரிந்துரைக்கும் அளவை எந்த நேரத்திலும் நோயாளியானவர் மீறக்கூடாது. அவர் என்ன அளவு சொல்கிறாரோ அந்த அளவும் அந்த கால நேரத்தில் மட்டுமே இந்த மாத்திரையினை உட்கொள்ளவேண்டும். கோல்ட் ஆக்ட் மாத்திரையானது பெரியவர்களுக்கு வலி மற்றும் காய்ச்சலுக்கான மருந்தின் அளவு 325-650 மி.கி. மாத்திரைகளாக 4 முதல் 6மணி நேரங்கள் அல்லது 1000 மி.கி. மாத்திரைகளாக ஒவ்வொரு 6 முதல் 8 மணி நேரத்திற்கு ஒரு முறை எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.

காய்ச்சலினால் பாதிப்படைந்த நோயாளிகளுக்கு இம்மாத்திரையானது தற்காலிக நிவாரணத்தினை அளிக்க பயன்படுகிறது. மேலும் ஒற்றைத்தலைவலி, உட்பட கடுமையான தலைவலிகளைத் தீர்க்க இம்மாத்திரை பயன்படுகிறது.

நம் உடலில் ஏற்படும் தசைகளில் லேசானது முதல் மிதமான வலியை தணிக்க கோல்ட் ஆக்ட் மாத்திரை பயன்படுவதோடு,பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் சுழற்சியுடன் தொடர்புடைய வலியையும் , தசைப்பிடிப்புகளையும், தணிக்க கோல்ட் ஆக்ட் மாத்திரையானது பயன்படுகிறது.

தடுப்பூசிகள் போட்ட பிறகு நமக்கு ஏற்படும் வலி மற்றும் காய்ச்சலுக்கான சிகிச்சையில் கோல்ட் ஆக்ட் காப்ஸ்யூல் பயன்படுகிறது. கீல்வாதம் உள்ளபோது லேசானது முதல் சாதாரண வலியுடன் கூடிய மூட்டு வலியை தணிக்க கோல்டாக்ட் மாத்திரையானது பயன்படுகிறது.

இந்த மாத்திரையானது குமட்டல் மற்றும் வாந்தி , அடிவயிற்றில் ஏற்படும் வலி, பேதி, மேலும் உலர்ந்த வாய் உள்ளிட்டவைகளையும் ஏற்படுத்தும். மேலும் அளவுக்கு அதிகமாக உண்டால் சரும வியாதிகளான தோலில் சிவப்பு புள்ளிகளை தோற்றுவிக்கும். அதேபோல் அரிப்புகள் உண்டாகும். இரைப்பை, வாய்ப்புண் ஏற்பட வாய்ப்புண்டு. மேலும் திடீரென சிறுநீரின் அளவு குறைந்து சிறுநீரின் கலரில் மாற்றம் தோன்றும். ஒரு சிலருக்கு இது அனிமீயாவுக்கான அறிகுறிகளை தோற்றுவிக்கும் பண்புடையது. மேலும் ஒரு சிலருக்கு இம்மாத்திரையானது சோர்வு, சத்தில்லாமை , தசைகளில் வலிகள் ஆகிய எதிர்வினைகளை ஏற்படுத்தும்.

ஒரு சிலருக்கு இம்மாத்திரையினை டாக்டர்கள் பரிந்துரைத்த அளவிற்கு மேல் உட்கொண்டதால் அலர்ஜியினை ஏற்படுத்தும் . இதுபோன்ற நிலையில் உள்ளவர்கள் இதற்கான உடனடி சிகிச்சையினை மேற்கொள்வது நலம் பயக்கும்.

வாகனங்களை இயக்கலாமா?

இம்மாத்திரையினை உட்கொண்டவர்கள் தொடர்ந்து வாகனத்தினை இயக்க முடியுமா? என்ற கேள்விக்கு டாக்டர் பதிலளிக்கையில், இம்மாத்திரையினை உட்கொண்ட பின் உங்களுக்கு சோர்வு, தலைச்சுற்று, உயர் ரத்த அழுத்தம் அல்லது தலைவலி உள்ளிட்ட பிரச்னைகளை சந்திக்க நேர்ந்தால் உங்களால் வாகனத்தினை பாதுகாப்பாக இயக்கமுடியாது. எனவே டாக்டர்கள் பரிந்துரைப்படி இதனை செய்யவும்.

டோஸ்தவறினால்

டாக்டர் பரிந்துரைத்த கால நேரத்தில் இந்த மருந்தினை உட்கொள்ள முடியவி்ல்லை . அதற்குள் அடுத்த டோஸீக்கான நேரம் வந்துவிட்டால் என்ன செய்வது? அதுபோன்ற நேரத்தில் தவறவிட்டதை தவிர்த்துவிடுங்கள். உங்களுடைய முறையான கால நேரத்திற்கான மாத்திரையை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்.

அதிக டோஸ்

டாக்டர்கள் பரிந்துரைத்த அளவிற்கு மேல் தெரியாமல் உட்கொண்டுவிட்டால் என்ன செய்வது?அதுபோன்ற நேரங்களில் நீங்கள் அதிகமான மருந்து எடுத்ததற்கான அறிகுறியை உடனே அறியமுடியாது. இதனால் உங்களுக்கு தீவிர பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதுபோன்ற நேரத்தில் நீங்கள் அருகிலுள்ள டாக்டர்களிடம் சென்று தகவலை சொல்லிவிடுவது நல்லது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story