காபி, சிக்கிரி காபி, உடனடி காபி.. அடடே! காபியில் இத்தனை வகைகளா?

காபி, சிக்கிரி காபி, உடனடி காபி.. அடடே! காபியில் இத்தனை வகைகளா?
X

பைல் படம்.

காபியில் உள்ள வகைகள், தரங்கள் குறித்து உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்.

ஒரு காபி சாப்பிடலமா? என்ற அறிமுக வசனத்தை பல இடங்களில் நாம் கேட்டு இருப்போம். அப்படிபட்ட காபியை மனிதன் கண்டுபிடித்தது, ஆட்டில் இருந்துதான் என்பதைச் சொன்னால், நம்ப முடிகின்றதா? ஆம், 9 ஆம் நூற்றாண்டில், எத்தியோப்பாவில் உள்ள ஒரு பகுதியில் ஆடு மேய்ப்பவர்கள், ஆடுகள் ஆடிக்கொண்டே வந்ததையும், அதிக நேரம் தூங்காமல் சுற்றியதையும் கண்டறிந்துள்ளனர்.

காபி செடியின் இலையையும், காயையும் சாப்பிட்டதினால் தான், அந்த ஆடுகள் சுறுசுறுப்பாக இருந்துள்ளன என்பதை உறுதிசெய்து, பின்னர் மனிதர்கள் உட்கொள்ள ஆரம்பித்து உள்ளனர். பின்னர் அங்கிருந்து, 15 ஆவது நூற்றாண்டில் ஏமனிற்குச் சென்று, அங்கிருந்து 1670-இல் தற்போதைய கர்நாடகாவின் சிக்மகளூருக்கு கொண்டுவரப்பட்டது. எனவேதான், இந்த இடம் இந்தியாவைப் பொறுத்தவரை காபியின் பிறப்பிடமாகும்.

அப்படிபட்ட காபியில் உள்ள வகைகள், தரங்கள் மற்ற விவரங்கள் குறித்து உணவு பாதுகாப்புத் துறையின் தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலரான மருத்துவர் மாரியப்பன் அளித்துள்ள விளக்கத்தை தொடர்ந்து காண்போம்:

சிக்கரி கலக்காத சுத்த காஃபி பொடியை பில்டரில் போட்டு, சுடுதண்ணீர் ஊற்றி, காஃபி டிக்காஷனை இறக்கி, அதிலிருந்து இரண்டு மேஜைகரண்டிகள் எடுத்து, அரை கப் நன்கு காய்ச்சிய நிறைகொழுப்பு பசும்பாலில் அதனைக் கலந்து, நமக்குத் தேவையான அளவு சக்கரை சேர்த்து, டபாரா செட்டில் நுரை ததும்ப ஆற்றி, குடித்தால், பேஷ்.. பேஷ்..!

காஃபியின் தமிழ் பெயர் ‘குழம்பி’ என்பதாகும். காபியில் பச்சை முழு காஃபி, கரையும் காஃபி பொடி, காஃபி சிக்கரி மிக்ஸ், உடனடி காஃபி சிக்கரி மிக்ஸ் என தரங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முழு பச்சை காஃபி என்பது Coffea Arabica, Coffea Liberica, Coffea Excelsa/Canephora என்ற தாவரங்களின் தோல் நீக்கப்பட்ட உலர்ந்த விதைகள் என்று FSSAI வரையறுத்துள்ளது.

வறுக்கப்பட்ட முழு காஃபி என்பது பச்சை காஃபி விதைகளை பழுப்பு நிறமாகவும், காஃபிக்கானத் தனித்துவமான மணம் வரும் வரை வறுத்தது என்று FSSAI வரையறுத்துள்ளது. அரைக்கப்பட்ட முழு காஃபி என்பது, தோல் நீக்கி வறுக்கப்பட்ட பச்சை காஃபியின் பொடியாகும் என்று FSSAI வரையறுத்துள்ளது. பச்சை காஃபி, வறுத்த பச்சை காஃபி மற்றும் அதன் அரைக்கப்பட்ட பொடியில் 1%-ற்கும் குறையாமல் காஃபைன் இருக்க வேண்டும் என்று FSSAI வரையறுத்துள்ளது.

கரையும் காஃபி என்பது, புதிதாக வறுக்கப்பட்டு, மையாக அரைக்கப்பட்டு, காஃபிக்குரிய நிறம் மற்றும் மணத்துடன் இருக்க வேண்டும் என்றும், இந்த காஃபியில் அசுத்தங்கள், சிக்கரி மற்றும் இதர வெளிபொருட்கள் சேர்க்கக்கூடாது என்றும் FSSAI வரையறுத்துள்ளது. கரையும் கரையும் காஃபியில் காஃபைன் 2.8 சதவீதத்திற்கும் குறைவில்லாமல் இருக்க வேண்டும் என்று FSSAI வரையறுத்துள்ளது.

காஃபி - சிக்கரி மிக்ஸ் என்பது வறுத்து அரைக்கப்பட்ட காஃபி மற்றும் வறுத்து அரைக்கப்பட்ட சிக்கரி ஆகியவற்றின் கலவையாகும் என்று FSSAI வரையறுத்துள்ளது. காஃபி - சிக்கரி மிக்ஸ் தூசிகள் ஏதுமின்றி உலர்ந்து, எந்தவிதமான அருவருக்கத்த (அ) கெட்ட மணமின்றி இருக்க வேண்டும் என்று FSSAI வரையறுத்துள்ளது. காஃபி - சிக்கரி மிக்ஸ் மையாக அரைக்கப்பட்ட பொடியாகவும், காஃபி - சிக்கரி மிக்ஸிற்கு உரிய மணம் மற்றும் சுவையுடன் இருக்க வேண்டும் என்று FSSAI வரையறுத்துள்ளது.

காஃபி - சிக்கரி மிக்ஸில் 51 சதவீதத்திற்கும் குறைவில்லாமல் காஃபி இருக்க வேண்டும் என்றும், காஃபி - சிக்கரி மிக்ஸின் கலவை குறித்து அதன் பொட்டலத்தில் காட்சிபடுத்திடல் வேண்டும் என்றும் FSSAI வரையறுத்துள்ளது. காஃபி - சிக்கரி மிக்ஸினை “தூய்மையான காஃபி” (Pure Coffee) என்று லேபிளில் குறிப்பிட்டு, விற்பனை செய்யக்கூடாது என்று FSSAI வரையறுத்துள்ளது.

காஃபி - சிக்கரி மிக்ஸில் காஃபைன் 0.6%-ற்கும் குறைவில்லாமல் இருக்க வேண்டும் என்று FSSAI வரையறுத்துள்ளது. காஃபி - சிக்கரி மிக்ஸில் அசுத்தங்களும், எந்தவொரு வெளிப்புறப் பொருட்களும் இருக்கக்கூடாது என்று FSSAI வரையறுத்துள்ளது. உடனடி காஃபி - சிக்கரி மிக்ஸ் ஆனது, காஃபி - சிக்கரி மிக்ஸிற்கு உரிய தரங்களுடன், சிறு சிறு உருண்டைத் துகள்களாக உடனடி காஃபி - சிக்கரி மிக்ஸை தயாரிக்கலாம் என்றும், காஃபைன் 1.4% சதவீதத்திற்கும் குறைவில்லாமல் இருக்க வேண்டும் என்றும் கூடுதல் தரங்களாக FSSAI வரையறுத்துள்ளது.

உடனடி காஃபி - சிக்கரி மிக்ஸ் கொதிக்கும் தண்ணீரில் 30 விநாடிகளுக்குள் மிதமான கிளறிலேயேக் கரைந்துவிட வேண்டும் என்றும், 2 முதல் 16 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையில் உள்ள குளிர்ந்த தண்ணீரில், 3 நிமிடங்களுக்குள் மிதமான கிளறிலேயேக் கரைந்துவிட வேண்டும் என்றும் FSSAI வரையறுத்துள்ளது என மருத்துவர் மாரியப்பன் விளக்கம் அளித்துள்ளார்.

Tags

Next Story