cholestral decreased by homeo treatment? ஹோமியோபதி சிகிச்சை முறையால் உடலிலுள்ள கொழுப்பைக் குறைக்க முடியுமா?....படிங்க....

cholestral  decreased by homeo treatment?  ஹோமியோபதி சிகிச்சை  முறையால்  உடலிலுள்ள   கொழுப்பைக் குறைக்க முடியுமா?....படிங்க....

கொலஸ்ட்ராலைக் குறைக்க ஹோமியோபதி சிகிச்சையை மேற்கொள்ளலாம் (கோப்பு படம்)

cholestral decreased by homeo treatment? கொழுப்புச்சத்து என்பது பால்,முட்டை, கொழுப்பு, மிகுந்த மாமிசவகைகள் ஆகியவற்றிலும் அதிகம் உள்ளது.கொழுப்பு மற்றும் டிரைகிளிசரைட்ஸ் நாம் உண்ணும் கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் உணவு வகைகளிலிருந்து பெறப்படும்.இவையிரண்டுமே நமது ஆரோக்யத்திற்கு தேவையானதுதான். டிரைகிளிசரைட்ஸ் நமக்கு தேவையான சக்தியினை அளிப்பதற்கும் கொலஸ்ட்ரால் சீரணத்திற்கும் உதவுகிறது.

cholestral decreased by homeo treatment?

மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய நோய் வகைகளை விரல் விட்டு எண்ண முடியவில்லை. அந்த அளவிற்கு மாறி வரும் நாகரிக உலகில் பல காரணிகளால் நோய்கள் ஊற்றுக்கண்ணாக பெருக்கெடுக்கின்றன. பல நோய்களுக்கு பரிசோதனைகளை வைத்தே இனங்காண முடிகிறது. டாக்டர்களாலேயே என்ன நோய் என உடனடியாக கண்டுபிடிக்க முடியாத நிலையில் புதுப்புது நோய்கள் அவதாரமெடுத்து நம்மை ஆட்டிப்படைக்கிறது. கொழுப்பு நம் உடலில் அதிகமானால் அதனைக் குறைக்க வேண்டியது அவசியம். இதனை ஹோமியோ சிகிச்சை முறை மூலம் குறைக்க முடியுமா? என்பதைப் பற்றி விரிவாக காண்போமா....வாங்க....

cholestral decreased by homeo treatment?


cholestral decreased by homeo treatment?

இன்றைய நாகரிக வாழ்க்கைத் தரத்தில் ஹார்ட் அட்டாக், கொலஸ்ட்ரால், ரத்தக்கொதிப்பு, சர்க்கரைவியாதி, போன்றவை சர்வ சாதாரணமாகிவிட்டன. பீஸா, பர்க்கர், மற்றும் விதவிதமான மாமிச உணவுகள், செயற்கை உணவுகள், சைனீஸ் புட் என்று எங்குமே தற்போதைய நாகரிக உலகில் கொடி கட்டிப்பறக்கிறது.

இவையனைத்துமே நம்முடைய உடல் நலத்தினைப் பாதிப்படையச் செய்வதோடு கொழுப்புச்சத்தினை தேவைக்கதிகமாக உடலில் சேர்த்து வைக்கும்போது உயிருக்கு உலை வைக்கும்போது உயிருக்கு உலை வைக்கும் நிகழ்ச்சியிலும் இது பெரும்பங்கு வகிக்கிறது என்பதே மறுக்க முடியாத உண்மை.

cholestral decreased by homeo treatment?


கொலஸ்ட்ரால் என்பது கெட்டியான மெழுகு போன்ற ஒரு பொருள். கொழுப்புச்சத்து, ஏ.டி.இ.எப். கே போன்ற வைட்டமின்களை உட்கிரகிக்கச் செய்வதற்கு உதவுகிறது. அதுமட்டுமன்றி இது பாலுணர்வு ஹார்மோன்கள், ஸ்டீராய்டு மற்றும் பிட்யூட்டரி ஹார்மோன்களைத் தயாரிக்க உதவுகிறது. கொழுப்புச்சத்து என்பது உண்ணும் உணவினைப் பொறுத்து மாறுபடும் என்பது உண்மை. நீங்கள் ஒல்லியோ, குண்டோ கொழுப்புச்சத்து யாருக்கு வேண்டுமானாலும் அதிகமாக இருக்கலாம். ஏனென்றால் இது பல சமயம் பரம்பரைத் தன்மையைப் பொறுத்து அமைகிறது.

கொழுப்புச்த்து என்பது பால்,முட்டை, கொழுப்பு, மிகுந்த மாமிசவகைகள் ஆகியவற்றிலும் அதிகம் உள்ளது.கொழுப்பு மற்றும் டிரைகிளிசரைட்ஸ் நாம் உண்ணும் கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் உணவு வகைகளிலிருந்து பெறப்படும்.இவையிரண்டுமே நமது ஆரோக்யத்திற்கு தேவையானதுதான். டிரைகிளிசரைட்ஸ் நமக்கு தேவையான சக்தியினை அளிப்பதற்கும் கொலஸ்ட்ரால் சீரணத்திற்கும் உதவுகிறது. பிரச்னை எங்கே வருகிறது என்றால் நமக்கு தேவைக்கு அதிகமாக இவை உடலில் சேரும்போது ரத்த ஓட்டத்தினைத் தடைப்படுத்தி இருதய கோளாறுகளுக்கு வழிவகுக்கும்.

cholestral decreased by homeo treatment?


எவ்வாறு சேகரிக்கப்படுகிறது?

மாமிசம், மஞ்சள் கரு, மற்றும் பால் உணவுகளிலிருந்து கொலஸ்ட்ரால் மற்றும் டிரைகிளிசரைட்ஸ் அதிகம் உருவாகின்றன. நமக்கு தேவைக்கும் அதிகமாக கார்போஹைட்ரேட் உணவு உட்கொள்ளும் போது அளவுக்கு அதிகமானவற்றை கொழுப்பாக மாற்றி சேகரித்து வைக்கிறது நமது உடல். இந்த கொழுப்பிலிருந்து தான் டிரை கிளிசரைட்ஸ் உற்பத்தியாகிறது. இதிலுள்ள கொழுப்பு சேடுரேட்டட் எனப்படுகிறது. அதாவது அறையின் சீதோஷ்ண நிலையில் இது திடப்பொருளாக இருக்கும் என்பது பொருள். தானியங்கள், சோளம், மீன், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றிலிருந்து பெறப்படும் கொழுப்பானது நமது ரத்தத்தில் எளிதாக கலந்து செல்லும். ஆனால் மாமிச கொழுப்புகள் ரத்த ஓட்டத்தில் மிதந்து செல்லும். இதனை எடுத்துச்செல்ல சில புரோட்டீன்கள் என்ற உதவியாளர்கள் தேவை. இதனை லிபோபுரோட்டீன்கள் என்கிறோம்.

cholestral decreased by homeo treatment?


நல்ல மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால்

கொழுப்பினை எடுத்துச்செல்ல உதவும் புரோட்டீன்களை ஹெச்டிஎல் மற்றும் எல்டிஎல் என்று பிரிக்கலாம். அடர்த்தி அதிகமான ஹெச்டிஎல் என்பது கொழுப்பினை அப்புறப்படுத்தி மிகவும் உதவுகிறது. அதனால் இதனை நல்ல கொலஸ்ட்ரால் என்று கூறுவர். ஆனால் அடர்த்தி குறைவான எல்டிஎல் கொழுப்பினை எடுத்துச்செல்ல மட்டும் உதவுகிறது. அவ்வாறு ரத்த ஓட்டத்தில் செல்லும்போது இந்த கொழுப்பு இதிலிருந்து பிரிந்து ரத்தக்குழாய்களின் சுவரில் படிந்து அடைத்துக்கொள்ளும் நிலையினை அடையும். இதனை இத் தெரோஸ்கிரோசிஸ் என்கிறோம். இந்த அடைப்பு இருதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாய்களில் ஏற்படும்போது நெஞ்சுவலி அல்லது ஹார்ட் அட்டாக் ஏற்படுகிறது.அதனால் எல்டிஎல் கெட்ட கொலஸ்ட்ரால் எனப்படுகிறது.

நாம் உட்கொள்ளும் உணவின் கலோரிகளில் 30 சதவீதம் மட்டும் கொழுப்புச் சத்திலிருந்து கிடைக்க வேண்டும். அதிலும் சாடுரேட்டட் ஃபேட்லிருந்து சுமார் 10 சதவீதம் மட்டுமே தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். எல்டிஎல் அதிகம் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் இவர்களுக்கு இருதய பாதிப்பு வரும் வாய்ப்பு மிக அதிகம். நல்ல உடற்பயிற்சி மற்றும் இயற்கையான சைவ உணவுகளை உட்கொள்பவர்களுக்கு ஹெச்டிஎல் (நன்மைபயப்பவை)இயல்பாக அதிகமாகவும், எல்டிஎல் (கெடுதல் செய்பவை)குறைவாகவும் உள்ளது. ஆகவே கொழுப்புச்சத்து என்பதை பயந்து ஒதுக்க வேண்டியது கிடையாது. ஆனால் குறைவான அல்லது தேவையான அளவு அதுவும் குறிப்பாக அன்சேடுரேட்டட் கொழுப்பு உணவுவகைகளை தேர்ந்தெடுத்தல் நலம்.

பிரச்னையைத் துாண்டும் காரணங்கள்

பரம்பரையில் இருதயக்கோளாறு,ரத்தத்தில் அதிக கொலஸ்ட்ரால் அளவு, உடல் பருமன் அதிகம். ஆண்கள் 45 வயதுக்குமேல் , பெண்கள் 50 வயதுக்கு மேல் சர்க்கரை வியாதி, ஹெச்டிஎல் குறைவாக இருப்பது ,எல்டிஎல் டிரைக்ளைசெடிரிஸ்அளவுக்கு அதிகமாக இருப்பது , புகை பிடிக்கும் பழக்கம், மருத்தும் மற்றும் கட்டுப்பாடுகள் நீங்கள் குறைக்கும் ஒவ்வொரு சதவீத கொழுப்பிற்கு உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஹார்ட் அட்டாக் வரும் வாய்ப்பு 2 சதவீதமாக குறைகிறது என்றால் இதனுடைய முக்கியத்துவத்தினைப் புரிந்து கொள்ளவேண்டும். கொழுப்புச்சத்தினைக் குறைக்க வேண்டுமானால் நீங்கள் சேடுரேட்டட் கொழுப்பு மிகுந்த உணவுகளைத் தவிர்க்கவேண்டும் அல்லது குறைக்க வேண்டும்.

cholestral decreased by homeo treatment?


மிருகக் கொழுப்பு, ஈரல், சிறுநீரகம், முதலியவற்றை தவிர்க்கவேண்டும். அசைவ உணவு உண்பவர்கள் கோழியில் தோல் இல்லாமல் சாப்பிடுவது மற்றும் வறுத்த மாமிச உணவைவிட குழம்பு மாமிசம் சாப்பிடுவது பரவாயில்லை. பொதுவாக மீன்களில் கொழுப்பு மிகவும் குறைவு. ஐஸ்கிரீம் கூடாது. தானியங்கள், பழங்கள், காய்கறிகள், நார்ச்சத்து உணவுகளை அதிகம் உட்கொண்டால் கொழுப்பு உங்களிடம் சேராமல் பாதுகாக்கும். பூண்டு, ஆப்பிள், சோயாபீன்ஸ், நார்ச்சத்து உணவுகள் முதலிய கொழுப்பினைக் குறைக்க உதவுகின்றன.

ஹோமியோபதியில் கொழுப்பினைக் குறைக்க மிகச்சிறந்த மருந்துகள் உள்ளன. இம்மருந்துகள் கொழுப்புச்சத்துள்ள உணவுகளையும், நல்ல உடற்பயிற்சியையும் உங்கள் டாக்டரின் ஆலோசனைப்படி மேற்கொண்டால் கொலஸ்ட்ராலை எளிதாக கட்டுப்படுத்தி உடல் பருமனையும் குறைத்து உங்களை முழுமையாக குணப்படுத்திக்கொள்ள முடியும் என ஹோமியோபதி டாக்டர் முகுந்தன் கருத்து தெரிவித்துள்ளார்.

நன்றி:டாக்டர் .முகுந்தன், சேலம்.

Tags

Next Story