சுவை மிகுந்த சாக்லேட்டில் இவ்வளவு ஆபத்தா?- புரிஞ்சுக்கோங்க பாஸ்!

சுவை மிகுந்த சாக்லேட்டில் இவ்வளவு ஆபத்தா?- புரிஞ்சுக்கோங்க பாஸ்!

Chocolate induces migraine - சுவை மிகுந்த சாக்லேட்டில் இவ்வளவு ஆபத்தா?- புரிஞ்சுக்கோங்க பாஸ்!

Chocolate induces migraine - இன்றைய இளைய தலைமுறையினர் டார்க் சாக்லேட்டின் அடிமைகளாக விளங்கி வருகின்றனர் என்று சொன்னால் அது மிகையல்ல.

Chocolate induces migraine - சாக்லேட், வயது வித்தியாசம் இல்லாமல் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் பொருள் ஆகும். எந்தவித கொண்டாட்டம் ஆனாலும், அங்கு சாக்லேட் இடம்பெற்றிருக்கும். அந்தளவிற்கு, சாக்லேட், நம் வாழ்வில் நீக்கமற நிறைந்துவிட்டது என்றே சொல்லலாம்.

அதிலும், இன்றைய இளைய தலைமுறையினர் டார்க் சாக்லேட்டின் அடிமைகளாக விளங்கி வருகின்றனர் என்று சொன்னால் அது மிகையல்ல.

Chocolate induces migraine - இனிப்புச் சுவை கொண்ட சாக்லேட்டின் பின்னால், ஒரு அபாயம் உள்ளது என்று சொன்னால், அதை நம்ப முடிகிறதா? நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.

தலைவலி என்றாலே மிகவும் வேதனை தரக்கூடிய விசயம். இதிலும், இந்த மைக்ரைன் எனப்படும் ஒற்றைத் தலைவலியால் படும் அவஸ்தை குறித்து சொல்லி மாளாது.

Chocolate induces migraine - ஒருவரின் உணவுப் பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறை உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையிலேயே, தலைவலி, ஒற்றைத் தலைவலி ஏற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். டார்க் சாக்லேட், மைக்ரைன் எனப்படும் ஒற்றைத் தலைவலியை தூண்டுவதாக உள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்து உள்ளது.

சாக்லேட் தயாரிக்கப்படும் மூலப்பொருளான கோகோ பீன் இயற்கையாகவே கோகோ பவுடர் மற்றும் கோகோ வெண்ணெய் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. எனவே, இந்த கூறுகள் கொண்ட பொருட்களை ஒன்றிணைக்கும்போது, அவை கோகோ மாஸ் என்பதை உருவாக்குகின்றன. கூடுதலாக, கோகோவில் பீட்டா-ஃபைனிலெதிலமைன் மற்றும் காஃபின் ஆகியவையும் உள்ளன. இவை இரண்டும் சிலருக்கு தலைவலி ஏற்படக் காரணமாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Chocolate induces migraine -இவைமட்டுமல்லாது, ரெட் ஒயின் காபி, பாலாடை, சீஸ், வைட்டமின் சி அதிகம் உள்ள பழங்கள், பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுகள், செறிவூட்டப்பட்ட மற்றும் செயற்கை சுவையூட்டப்பட்ட உணவுகள் ஆகியவை ஒற்றைத் தலைவலியை தூண்டுவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

Tags

Next Story