/* */

நாம் அன்றாடம் அருந்தும் தேநீரின் பிறப்பிடம் சீனா: இது தேயிலையின் வரலாறு

நாம் அன்றாடம் அருந்தும் தேநீரின் பிறப்பிடம் சீனாவாகும். தேயிலையின் வரலாறு பற்றி அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

HIGHLIGHTS

நாம் அன்றாடம் அருந்தும் தேநீரின் பிறப்பிடம் சீனா: இது தேயிலையின் வரலாறு
X

நாம் அன்றாடம் அருந்தும் பாணங்களில் பிரதானமாக இருப்பது டீ என அழைக்கப்படும் தேநீர் ஆகும். தேநீர் தேயிலையில் இருந்து தயாரிக்கப்படுகிறது. அந்த வகையில் தேயிலை குறித்தும் அதில் உள்ள வகைகள் குறித்தும் உணவு பாதுகாப்புத் துறையின் தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலரான மருத்துவர் மாரியப்பன் விளக்கம் அளித்துள்ளார்.

கி.மு. 2600 ஆண்டுகளுக்கு முன்னரே தேயிலை குறித்த பதிவுகள் சீனாவில் காணப்பட்டாலும், கி.மு. 59-இல் தேயிலைப் பயன்படுத்தப்பட்டது மட்டும் தான் உறுதி செய்யப்ட்டுள்ளது. தேயிலையின் பிறப்பிடம் சீனா தான். அங்கிருந்து தான் ஐரோப்பிய நாடுகளுக்கு 1600-களில் தேயிலை சென்றுள்ளது.

அவர்கள் இங்கு வந்து ‘கிழக்கிந்தியக் கம்பெனியை’ நிறுவி, அவர்களின் தேவைக்கு, 1800-களில், அந்தத் தேயிலையை விளைவிக்க வேண்டி, அஸ்ஸாமில் ஆரம்பித்து, நமது நாட்டின் பல பகுதிகளில் நம் மக்களை துன்புறுத்தி தேயிலைத் தோட்டத்தினை அமைத்தனர்.

தேயிலையில் தேயிலை, கங்க்ரா தேயிலை, பச்சைத் தேயிலை (Green Tea) என மூன்று வகைகள் உள்ளன. தேயிலை என்பது ‘Camellia Sinensis (L) O.Kuntze' என்ற தாவரத்தின் இலைக்குருத்து, இலை மற்றும் இளம் தண்டு ஆகும் என்று FSSAI வரையறுத்து உள்ளது.


தேயிலையில் எவ்விதமான அயற்சுவையோ, கெட்டுப்போன சுவையோ அல்லது விரும்பத்தகாத மனமோ இருத்தல் கூடாது என்று FSSAI வரையறுத்துள்ளது. தேயிலையில் பூஞ்சைகள், இறந்து போன அல்லது உயிருள்ள பூச்சிகள், அதன் துகள்கள், எலி எச்சங்கள், மண் துகள்கள் படிந்து இருக்கக் கூடாது என்று FSSAI வரையறுத்துள்ளது.

தேயிலையில் எந்த செயற்கை நிறமியும், உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்கள் ஏதும் இருத்தல் கூடாது என்று FSSAI வரையறுத்துள்ளது. தேயிலையில் நீர்ச்சத்து 32 சதவீதத்திற்கும் மேற்பட்டு இருக்கக் கூடாது என்று FSSAI வரையறுத்துள்ளது.

தேயிலையில் நார்ச்சத்து 16.5%-ற்கு மேல் இருத்தல் கூடாது என்று FSSAI வரையறுத்துள்ளது. தேயிலையில் இரும்புத் துகள்கள் 250 மிகி/கிகி என்ற அளவிற்கு மேற்பட்டு இருக்கக்கூடாது என்று FSSAI வரையறுத்துள்ளது. தேயிலையில் அதற்கென்று இயற்கையாக உள்ள மணமும் சுவையும் இருக்க வேண்டும் என்று FSSAI வரையறுத்துள்ளது.

தேயிலையில் மணமூட்டிகள் (அ) சுவையூட்டிகள் சேர்த்து, “Flavoured Tea” (Eg. Masala Tea) என்று உற்பத்தி செய்வதாக இருப்பின், அதனை அப்பொட்டலத்தின் லேபிளில் பதிவு செய்ய வேண்டும் என்றும், Flavoured Tea தயாரிப்பாளர்கள் “தேயிலை வாரியத்திடம்” அதன் தயாரிப்பிற்கு முன்னரே பதிவு செய்து, அனுமதி பெற வேண்டும் என்று FSSAI வரையறுத்துள்ளது. தேயிலையில் Flavoured Tea தயாரிக்க, பெக்ட்டினேஸ் என்சைம் (Pectinase Enzyme) என்ற நொதிப்பானை 0.2% வரைப் பயன்படுத்தலாம் என்று FSSAI வரையறுத்துள்ளது.

கங்க்ரா தேயிலை என்பது ஹிமாச்சலப் பிரதேசத்தின் கங்க்ரா மற்றும் மண்டி பள்ளத்தாக்கில் விளையும் “Camellia Sinensis” என்ற தாவரத்தில் இருந்துப் பெறப்படும் தேயிலை ஆகும் என்று FSSAI வரையறுத்துள்ளது. கங்க்ரா தேயிலையைக் கொதிக்க வைத்த பின்னர் கிடைக்கக்கூடிய சாறு 23 சதவீதத்திற்கும் குறையாமல் இருக்க வேண்டும் என்று FSSAI வரையறுத்துள்ளது.

கங்க்ரா தேயிலையில் நார்ச்சத்து 18.5%-ற்கும் மேற்பட்டு இருத்தல் கூடாது என்று FSSAI வரையறுத்து உள்ளது. கங்க்ரா தேயிலையின் மற்ற தரங்கள், சாதாரணத் தேயிலையின் தரங்களை ஒட்டியே இருக்க வேண்டும். பச்சைத் தேயிலை என்பது, “Camellia Sinensis (L) O.Kuntze” என்ற தாவரத்திலிருந்து மட்டும் பெறப்பட்டு, பிரத்தியோக முறையில் செயலிழக்கப்பட்டு, பொடியாக்கி உலர்த்திய பின்னர் பெறப்படுவதாகும் என்று FSSAI வரையறுத்துள்ளது.

கருப்புத் தேயிலைக்கும் பச்சைத் தேயிலைக்கும் உள்ள வித்தியாசம் ஆக்ஸிஜனேற்றம் தான். பச்சைத் தேயிலை ஆக்ஸிஜனேற்றமில்லாமல் தயாரிக்கப்படுவது ஆகும். பச்சைத் தேயிலையில் மொத்த ‘கேட்டச்சின்ஸ்’ (Total Catechins) 9-19% என்ற அளவிற்குள் மட்டுமே இருக்க வேண்டும் என்று FSSAI வரையறுத்துள்ளது. பச்சைத் தேயிலையின் மற்ற தரங்கள், சாதாரணத் தேயிலையின் தரங்களை ஒட்டியே இருக்க வேண்டும்.

பச்சைத் தேயிலையில் உள்ள ‘கேட்டச்சின்ஸ்’ என்பது, ஈரல் உறுப்பை பாதிக்கக்கூடிய ஒரு காரணி ஆகும். ஐரோப்பிய உணவு பாதுகாப்பு அமைப்பு ‘கேட்டச்சின்ஸை’ ஒரு நாளைக்கு 800 மிகி-க்கு மிகாமல் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வரையறுத்துள்ளது.

‘டிப் டீ பேக்’-ல் ஸ்டாப்ளர் பின் (Stapler Pins) பயன்படுத்தக்கூடாது என்று FSSI வரையறுத்துள்ளது. தேயிலைப் பொட்டலத்தில் ஊட்டச்சத்து விபரங்கள் குறிப்பிடத் தேவையில்லை என்று FSSAI விலக்களித்துள்ளது. நூறு கிராம் தேயிலையில் 1 Kcal எரிசக்தி உள்ளது. வேறு எந்தவொரு ஊட்டச்சத்தும் குறிப்பிடும் வகையில் இல்லை. நூறு கிராம் தேயிலையில் 12 மிகி காஃபின் உள்ளது.

கருப்பு தேயிலையை உணவு தர டின் (அ) செராமிக் (அ) ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கொள்கலன்களில் காற்றுப் போகாமல் இருக்க மூடி, குளிர்வான சூழலில், ஈரப்பதமற்ற, உலர்ந்த மற்றும் வெளிச்சம் குறைவான இடத்தில் வைத்து பாதுகாத்து வந்தால், 3 ஆண்டுகள் வரை அதைப் பயன்படுத்தலாம்.

பச்சைத் தேயிலையை உணவு தர அலுமினியம் ஃபாயில் அல்லது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கொள்கலன்களில் காற்றுப் போகாமல் இருக்க மூடி, குளிர்பதனப்பெட்டியில் வைத்து பாதுகாத்தால், 18 மாதங்கள் வரை அதைப் பயன்படுத்தலாம் என மருத்துவர் மாரியப்பன் விளக்கம் அளித்துள்ளார்.

Updated On: 12 April 2023 7:25 AM GMT

Related News

Latest News

 1. லைஃப்ஸ்டைல்
  தமிழக கிராம உணவின் சிறப்புகள்
 2. குமாரபாளையம்
  மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
 3. லைஃப்ஸ்டைல்
  வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
 4. லைஃப்ஸ்டைல்
  மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
 5. லைஃப்ஸ்டைல்
  இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
 6. இந்தியா
  5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
 7. கடையநல்லூர்
  கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
 8. லைஃப்ஸ்டைல்
  கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
 9. லைஃப்ஸ்டைல்
  இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
 10. தென்காசி
  கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி