நோய்களைக் குணப்படுத்தும் அகத்திக்கீரையின் அற்புதம்
நோய்களைக் குணப்படுத்தும் அகத்திக்கீரையின் அற்புதம்
நாம் அன்றாடம் சாப்பிடு்ம் உணவு வகைகளில் காய்கறிகளை சேர்த்துக்கொள்வது அவசியம். ஆனால் ஒரு சிலர் சாதமும் சாம்பாரும்இருந்தால் போதும் என காய்கறிகளை புறக்கணித்துவிடுகின்றனர். இது உடல் நலத்துக்கு ஆரோக்யமான விஷயம் அல்ல. தற்போது நோய்கள் வரிந்து கட்டிக்கொண்டு வரும் வேளையில் நாம் அனைவருமே வாரத்திற்கு இரண்டு வகையான கீரை வகைகளை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது மிக மிக அவசியமாகிறது. அதுவும் இக்கால குழந்தைகளைப் பற்றி சொல்லவே தேவையில்லை.காய்கறி, தயிர், மோர் என்றால் ஓட்டமெடுக்கும் குழந்தைகள் அதிகம். இவர்களுக்கு ஜங்க் புட் இருந்தால் போதும்.பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவு பொருட்கள்தான்இவர்களுடைய சாய்ஸாக உள்ளது. கீரை வகைகளில் பிரதான இடம்பெறும் அகத்திக்கீரையில் என்னென்ன மருத்துவகுணங்கள் அடங்கியுள்ளது என்பதைப் பற்றி விரிவாக காண்போம்.
கீரைகளை நாம் வாரந்தோறும் சாப்பிடும் பட்சத்தில் நமக்கு வரக்கூடிய நோய்கள் விலகி சென்றுவிடும்.அந்த அளவிற்கு தாது சத்துகள் கீரைகளில் உள்ளது. அனைத்து கீரைகளும் தங்களுடைய வகைகளுக்கு ஏற்ப மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. அகத்திக்கீரை, இது பெயரிலேயே இதனுடைய குணம் என்னவென்று அறிந்து கொள்ளலாம். அகம்-தீ அதாவது மனித உடலில் ஏற்படக்கூடிய உஷ்ண சம்பந்தமான அனைத்து நோய்களையும் குணப்படு த்தும் வல்லமை கொண்ட கீரை இது.
குணங்கள்
பழங்காலத்தில் இருந்து இன்று வரை சித்த மருத்துவதுறையில் பிரதான இடம் வகிப்பது இந்த அகத்திக்கீரை. பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் சத்துணவாக பயன்படுவதோடு நோய் தீர்க்கும் மருந்தாக பயன்படுகிறது. அகத்தியில் காணப்படும் இலை, காய், பூ , பட்டை , வேர் ஆகிய அனைத்துமே மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன.
தீரும் நோய்கள்
பித்த உஷ்ணம், தோல்நோய், சொறிசிரங்கு, அரிப்பு, குடல் ரணம், தொண்டையில் ரணம், ரத்தப்பித்தம், ரத்த கொதிப்பு, ஜலதோஷம், மலச்சிக்கல், மூளைக்கோளதறு,கண்கோளாறு, ஐம்பொறிநோய், அடிபட்ட வீக்கம், தலைவலி,சிறுநீர் நோய் ஆகிய நோய்கள் தீரும். அகத்திக்கீரையினை வேக வைத்து கடைந்து தேங்காய்த் துருவல் சேர்த்து பருப்புடன் சேர்த்தும் சாப்பிடுவார்கள். தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு இக்கீரையைத் தாய்மார்கள் சாப்பிட நன்கு பால் சுரக்கும். மூளை சம்பந்தமான நோய்களுக்கும் அகத்திக்கீரையை சாப்பிட்டு பயன் பெறலாம்.
அகத்திக்கீரை சூரணம்
அகத்திக்கீரையை கொண்டு வந்து சுத்தம் செய்து வெயில் காய வைக்க வேண்டும். நன்றாக காய்ந்து முறுவலாக இருக்கும்போது எடுத்துஅம்மியில்வைத்து லேசாக அரைத்து மெல்லிய துணியால் வடிகட்டி எடுத்தால் இக்கீரையினுடைய சூரணம் ஆகும். இதனை காலை மாலை என இருவேளையும் சாப்பிட்டுபின் இளஞ்சூடான தண்ணீர் அருந்த வேண்டும். தொடர்ந்து 3 நாட்கள் சாப்பி்ட்டு வந்தால் மார்பு வலி நலமடையும். வாயில்போட்டு சுடுதண்ணீர் அருந்த (இருவேளை)வாந்தி, வயிற்று வலி, குணமடையும்.
கீரையை எடுத்து சுத்தம் செய்து சமையலில் தேங்காய் துருவல், மிளகு இவைகளைச் சேர்த்து பொரியல் செய்து தொடர்ந்து 3 நாள்சாப்பிட வாய்ரணம் குணமாகும். அடிபட்ட வீக்கங்களுக்கு அகத்திக்கீரையை அரைத்து சூடு பண்ணி பற்றாக போட்டால் குணம் காணலாம். இலையினுடைய சாற்றை நெற்றியில் தடவி, ஆவிபிடிக்கும் பட்சம் தலைவலி நீங்கும்.
அகத்திக்கீரையை இரண்டு வாரத்துக்கு ஒருமுறை பொரியல் செய்து சாப்பிடலாம். ஆனால் அடிக்கடி உண்ணும் பட்சத்தில் வாயு உண்டாகும். இதனால் வாயு கோளாறு உள்ளவர்கள் கண்டிப்பாக இக்கீரையைச் சாப்பிடாமல் இருப்பது நலம். மூளைக்கோளாறு உள்ளவர்கள் அடிக்கடி இந்த கீரையை உண்டு வந்தால் கோளாறு குணமாகும். மேலும் இது பத்தியத்தை முறிக்க வல்லது. எனவே மருந்துண்ணும் காலங்களிலோ பத்தியம் இருக்கும் போதோ அகத்திக்கீரையை சாப்பிடக்கூடாது.
இந்த கீரையில் இரும்பு சுணணாம்பு சத்து, உயிர்ச்சத்து, வைட்டமின் ஏ , ஆகியவை இருக்கின்றன. உடலின் எலும்புகளும் பற்களும் உறுதிப்படவும், வளர்ச்சி அடையவும், இது ஏதுவாகிறது. மலச்சிக்கலினால் அவதிப்படுபவர்கள் இந்த கீரையை உபயோகிப்பதன் மூலம் நன்மை பெறலாம்.
கண் பார்வை
அகத்திப் பூவினுடைய சாற்றை உபயோகப்பவர்களுக்கு அகத்தியின் இளம்பூவும், மொட்டுகளும், உணவாக சமைக்க உதவுகின்றன. ஆனால் தமிழகத்தில் இந்த முறை கடைபிடிப்பதாக தெரியவில்லை. வடமாநிலத்தவர் இல்லங்களில் பூவை சமைத்து சாப்பிடுகின்றனர்.
வைசூரி நோய் எனும் பெரியம்மை நோயின் வேகத்தினை தணிப்பதற்கு அகத்திக்கீரைப்பட்டையை பயன்படுத்தி மருத்துவம் செய்வதுண்டு. அகத்தி வேர் ஒரு சிறப்பு மிக்க மருந்தாக பயன்படுகிறது. அகத்தி வேரையும் இதன் பட்டையையும்கிரமப்பிரகாரம் குடிநீர் செய்து அருந்த ஐம்பொறிகளிலுள்ள எரிவு நீங்கும்.
ஐம்பொறி எரிவு எவை?
மெய்எரிவு,தாகம், மேகம், கை எரிவு, ஆண்குறியின் உள் எரிவு என்பவை.
கோவில்களில் பெரும்பாலானோர் பசுக்களைக் கொண்டு வருவர். அப்போது சிலர் பசுக்களுக்கு இந்த அகத்திக்கீரையைக்கொடுப்பதுண்டு. காரணம்பூர்வ கர்ம வினைகள் யாவும் நீங்கும் என்ப து அவர்களுடைய நம்பிக்கை. இக்கீரையைச் சாப்பிடும் மாட்டின் பால் நம் உடலுக்கு நன்மை தரும் என்பதில் ஐயமில்லை. மேலும் இப்பாலை அருந்துவதால் அகத்திக்கீரையை சாப்பிடுவதால் உண்டாகும் பலன் யாவும் கிடைக்கும்.
அகத்திக்கீரையினுடைய தன்மை என்னவெனில், சிறு கசப்பு, ருசியுடையது. இந்த கசப்பு சுவை குடலில் உண்டாகும் விஷ நீர்களை முறித்து அப்புறப்படுத்தும் தன்மை பெற்றது. மேலும் குடலில் காணப்படும் மலம், நீர், ஆகிய நாற்றங்களைச் சுத்தம் செய்து ஒழுங்குபடுத்துகிறது. நல்ல ஜூரண சக்தியைத் தரவல்லது.பித்த சம்பந்தமான அனைத்து பிணிகளும் நலமாகும். நீண்ட நாட்கள் அகத்திக்கீரை சாப்பிடாமல் இருந்து சாப்பிட்டால் அவர்களுக்கு பேதியாகும் என்பது அனுபவத்தில் கண்ட உண்மை.
அகத்தி அறிவியல் பெயர்
அகத்தி என்னும் சிறுமரம் தாவரவியலில் செஸ்பேனியா (Sesbania) இனத்தைச் சேர்ந்ததாகும். இதன் தாவரவியல் பெயர் செஸ்பேனியா கிராண்டிஃவுளோரா என்பதாகும். இது கெட்டித்தன்மை இல்லாதது, சுமார் 6. மீட்டரிலிருந்து 10 மீட்டர் வரை வளரக்கூடியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu