மூளைக்காய்ச்சல் நோய் எப்படி வருகிறது? உங்களுக்கு தெரியுமா? :தீர்வு தான் என்ன.....படிங்க...
causes of brain fever,and solution நாகரிக காலத்தில் ஏற்படும் நோய்களுக்கு அளவே இல்லை. மூளைக்காய்ச்சல் நோய் எப்படி வருகிறது? அதற்கான தீர்வு என்ன என்பதைப்பற்றிப் பார்ப்போமா?
HIGHLIGHTS

மூளைக்காய்ச்சல் நோயால் பாதிப்பவர்கள் படும் மனவேதனையைச் சித்தரிக்கும் படம்(கோப்பு படம்)
causes of brain fever,and solution
மூளைக்காய்ச்சல் நோய்க்கான அறிகுறிகள் என்னென்ன? என்பதை விளக்கும் படம் (கோப்பு படம்)
causes of brain fever,and solution
மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய நோய்களானது ஒரு சில நேரத்தில் டாக்டர்களாலேயே இனங்காணமுடிவதில்லை. பல கட்ட பரிசோதனைகளுக்குபின்னர் தான் என்ன நோய்? என்பதையே டாக்டர்களாலேயே கண்டுபிடிக்க முடிகிறது.அந்த வகையில் புதுப்புது நோய்கள் உருவெடுத்து வருகின்றன.
மாறிவரும் உணவுப்பழக்கம், உடலுழைப்பின்மை, உடற்பயிற்சியின்மை, டென்ஷனான பரபரப்பான வாழ்க்கை முறை ஆகியவற்றினால் பல நோய்கள் வாயிற்கதவை வந்து தட்டுகின்றன. அதேபோல் எந்த நோயாகிலும் அது ஆரம்பத்திலேயே ஒரு சில சமிக்ஞைகளை நமக்கு தருகிறது. ஆனால் அதனை நாம் பொருட்படுத்தாமல் அலட்சியப்படுத்துவதால் நோய் முற்றிய பின் அலறி அடித்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு செல்வதால் நமக்கு நன்மைகள் குறைவுதான். எனவே நம் உடலில் எந்த வித சிறு மாறுபாடுகள் தெரிந்தாலும் நாம் தாமதிக்காமல் உடனடியாக டாக்டரிடம் சென்று பரிசோதித்துக்கொள்வது நம் ஆரோக்யத்துக்கு பாதுகாப்பு.
causes of brain fever,and solution
என்சைபாலிட்டிஸ் என்றால் என்ன? என்பதை விளக்கும் படம் (கோப்பு படம்)
causes of brain fever,and solution
மூளைக்காய்ச்சல் நோய் குறித்து விழிப்புணர்வு தற்போது மக்களிடம் அதிகரித்து வருகின்றது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை பொழியும் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான பருவ காலத்தில் இந்நோய் அதிகம் காணப்படுகிறது. மூளைக்காய்ச்சலை மூளைவீக்கம் என்னும் பொருள்பட என்சிபாலைடிஸ் என அழைக்கின்றோம்.
நோய்க்காரணம், அதன் தடுப்பு முறைகள்
மூளைக்காய்ச்சல் ஒரு வகை நுண்ணுயிரியால் ஏற்படும் நோய் பறவைகள் குறிப்பாக கொக்கு, போன்ற நல்லநீர்நிலையில் வாழும் பறவைகள் பன்றிகள் ஆகியவற்றின் மூலம் இந்நோய் பரவி இந்நோய்க் கிருமிகள் மனிதர்களின் உடலில் வந்தடைகின்றன. நீர்ப்பறவைகள், பன்றிகள் ஆகியவை நன்னீரில் குளிக்கும்போது, அவற்றின் வைரஸ் கிருமிகள் நீரின் மேற்பகுதியில் வசிக்கும் கொசுக்களை அடைகின்றன. அக்கொசுக்கள் கிருமிகளை மனிதர்களுக்கு பரப்புகின்றன.
causes of brain fever,and solution
மூளைக்காய்ச்சல் நோயால் பாதிப்படைபவர் மண்டை வலியினால் படும் அவஸ்தையை விளக்கும் படம் (கோப்புபடம்)
causes of brain fever,and solution
ஜப்பானில் கொக்கு இனத்தைச் சேர்ந்த பறவைகளின் உடலிலும் இந்நோய்க் கிருமிகள் காணப்படுகின்றன. அவற்றின் ரத்தத்தை உறிஞ்சும் கொசுக்கள், பன்றி போன்ற விலங்குகளைக் கடிக்கும்போது , இந்நோய்க்கிருமிகள் அவ்விலங்குகளின் உடலை அடைந்தும் மிகுதியாக பெருகுகின்றன. இத்தகைய விலங்குகளிடமிருந்து பறவைகளிடமிருந்தும் மனிதர்களுக்கு கொசுக்கள் மூலம் இந்நோய்க்கிருமிகள் பரவுகின்றன.
பன்றிகள் மிகுதியாக இருக்கும் இடங்களில் மூளைக்காய்ச்சல் மிகுதியாக பெருகுகின்றன. பன்றிகள் இல்லாத பிரதேசத்திலும் இந்நோய் காணப்படுவதிலிருந்து வேறு வகை வீட்டு விலங்குகள், வீட்டு புறா,வீட்டுப்பறவைகள் ஆகியவற்றின் உடலிலும் இந்நோய் கிருமிகள் பெருகி வருகின்றன. கொசுக்கள் முட்டையிட்டு பெருக வசதியான நெல்வயல்கள் நிறைந்த பகுதிகளில் இந்நோய் அதிகமாக காணப்படுகிறது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட இடங்களில் நோயின் தாக்குதல் அதிகமாக இருக்கிறது. வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வடிந்த நிலப்பகுதிகளில் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாவதாலும், இடம் பெயர்ந்து செல்லும் பறவைகளாலும் இந்நோய் பரவுகிறது.
causes of brain fever,and solution
மூளைக்காய்ச்சல் நோய் ஏற்பட்டால் நமக்கு என்னென்ன அறிகுறிகள் உடலில் ஏற்படுமென விளக்கும் படம் (கோப்பு படம்)
causes of brain fever,and solution
சில சமயங்களில் வேதியியல் பொருட்கள் கூட இந்நோயை பரவச்செய்வதாகவும், கண்டறியப்பட்டுள்ளது. வர்ணங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் ஈயம், எலிகளைக் கொல்ல பயன்படுத்தப்படும் பாதரசம், பானங்களில் பயன்படுத்தப்படும் எதில்ஆல்கஹால், வீடுகளைச் சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் கார்பன் டெட்ராகுளோரைடு, டிடிடி , போன்றவைகளாலும் இந்நோய் ஏற்படலாம் என கருதப்படுகிறது. உடலின் ஊட்டக்குறைவினாலும் ரத்தசோகை, பெரிபெரி, நீரிழிவு, போன்ற நோய்களினால் உடல் வளர்ச்சி பாதிக்கப்படும்போதும் மூளைக்காய்ச்சல் நோய் உண்டாகலாம்.
நோய்க்கான அறிகுறிகள்
*மூளைக்காய்ச்சல் நோய் முக்கியமாக மூளையைப் பாதிக்கிறது.மூளையிலுள்ள நரம்பு செல்கள் சிதைவுற்று ரத்தக்குழாய்களைச் சுற்றியுள்ள செல்கள் வீக்கமடைகின்றன. குறிப்பாக சிறு மூளையிலுள்ள பார்கின்செல்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றன. சில சமயங்களில் மூளை உறைகளில் வீக்கம் ஏற்படுவது உண்டு. தண்டுவடமும், மூளை உறைகளும் பாதிக்கப்படும்போது, இளம்பிள்ளை வாத நோய்க்கான அறிகுறிகளும் மூளை உறை நோய்க்கான அறிகுறிகளும் (மூளைக்காய்ச்சலின் போது ) காணப்படும்.
causes of brain fever,and solution
causes of brain fever,and solution
*தாங்க இயலாத தலைவலி கடும் காய்ச்சல், பாதி உறக்க நிலை, ஊக்கமின்மை, நினைவற்ற நிலை, சித்தபிரமை, மனதில் திடீர் திடீரென ஏற்படும் அதிர்ச்சி, நடுக்கம், உடலில் ஒழுங்கற்ற அசைவுகள் ஆகியவை இந்நோயின் முக்கிய அறிகுறிகள் ஆகும்.
*பெண்களைவிட ஆண்களே இந்நோயால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். பெரியவர்களைவிட குழந்தைகளையே இந்நோய் கடுமையாகத் தாக்குகிறது. இந்நோயால் ஏற்படும் இறப்பு விகிதம் இடத்திற்கு இடம் அது பெருவாரியாகத் தோன்றும் விதத்திற்கு ஏற்பவும் மாறுபடும்.
*இந்நோய் கண்டவர்கள் கண்பார்வையை இழக்க நேருவதும் உண்டு. நோயிலிருந்து விடுபட்டவர்கள் அபூர்வமாக வாதம். மூளைத்தாக்கு, ஆகியவற்றிற்கும் ஆளாவதும் உண்டு.
நோய்த்தடுப்பு , சிகிச்சை முறைகள்
மூளைக்காய்ச்சல் பரவாமல் தடுக்க தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தற்போது இந்தியாவில் பயன்படுத்தப்படும் மூளைக்காய்ச்சலுக்கான மருந்து வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்நோய்க்கிருமிகள் எளிதில் பரவுவதற்கு ஏற்ற வகையில் வயல்வெளிகளும், கால்நடைகளும், கொசுக்களும், நிறைந்த ஒரு நாட்டில் அனைவருக்கும் விலை மதிப்பு மிக்க தடுப்பு ஊசியைப் போடுவதும், அதுவும் இறக்குமதி செய்யப்படும் மருந்தினை மட்டும் நம்பி இருக்கும் நிலையில் நோய் பரவுதலைத் தடுப்பது என்பதும் எளிதான காரியம் அல்ல. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் அந்நாட்டின் சீதோஷ்ணத்திற்கு ஏற்ற வகையில் தான் மருந்துகளை உற்பத்தி செய்திருப்பர். இது நம் நாட்டு மக்களுக்கு ஏற்றுக்கொள்ளுமா? என்பதும் ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது. எனவே நம்முடைய நாட்டில்இதற்கான தடுப்புமருந்தினை தயாரிப்பதுதான் உத்தமம்.
causes of brain fever,and solution
causes of brain fever,and solution
மேலும் இந்நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக டாக்டரிடம் செல்லவேண்டும். இந்நோய் வந்தவரின் தங்குமிடம் மிகவும் துாய்மையானதாக , காற்றோட்டமாக இருக்க வேண்டும். நோயாளி எப்போதும் படுக்கையிலேயே இருக்க வேண்டும் என்பதால் உடலில் புண்கள் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்வது அவசியம் . நோயாளிக்கு தேவையான உணவினை கொடுக்க வேண்டும். சிறுநீர், மலம், ஒழுங்காக கழிக்கப்பட வேண்டும். நோயாளிக்கு 104 டிகிரி வரை காய்ச்சல் அடிக்கலாம். காய்ச்சலை கட்டுப்படுத்த சிகிச்சையளிக்க வேண்டும்.
மூளைக்காய்ச்சலும் வேப்ப இலையும்
நம் நாட்டில் எளிதில் கிடைக்கும் பொருளைக் கொண்டே இந்நோய் பரவுவதைத்தடுக்கும் முறைகளை உருவாக்குவது அவசியம். இத்தகைய நோய் பரவுதலைத் தடுக்கும் முறை ஒன்றை ஆந்திராவில் ஹோமியோபதி மற்றும் இந்தியமுறை மருத்துவக்கல்லுாரி ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மூளைக்காய்ச்சல்கிருமிகளால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ள 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வேப்ப இலையை இடித்து தயாரிக்கப்பட்ட சாற்றை தினமும் ஒரு வேளை வீதம் ஒரு மாதக்காலம் கொடுப்பதன் மூலம் இந்நோய்க்கிருமிகள் தாக்குதலைத் தடுக்க இயலும் என கண்டறியப்பட்டுள்ளது.