/* */

பல நோய்களுக்கு அருமருந்தாகும் ஏலக்காய்...உங்களுக்கு தெரியுமா?...படிங்க...

Elakai in Tamil- உடலில் உள்ள பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வாக இருப்பதால், ஏலக்காய் இனி, எப்போதும் உங்கள் மருத்துவ தோழனாய் இருக்கட்டும்.

HIGHLIGHTS

பல நோய்களுக்கு அருமருந்தாகும்  ஏலக்காய்...உங்களுக்கு தெரியுமா?...படிங்க...
X

cardamom in tamil - இனிமேல், ஏலக்காய் எப்போதும் உங்கள் வசம் இருக்கட்டும்.

Elakai in Tamil-பொதுவாக ஏலக்காயை பிரியாணியில் சுவைக்காகவும் மணத்திற்காகவும் பயன்படுத்துவதுண்டு. இதிலுள்ள நற்குணங்கள் தெரிந்து கொண்டால், பல்வேறு ஆரோக்கிய குணங்கள் கொண்டுள்ள இந்த ஏலக்காயை எப்போதும் தவிர்க்க கூடாது என்பது தெளிவாகி விடும்.


சுவையான ஏலக்காயில், மருத்துவ குணங்களும், நறுமணமும் நிறைந்திருக்கிறது. ஆயுர்வேதத்தின்படி, ஏலக்காய் ஒரு பணக்கார காய். நமது பாட்டி அல்லது அம்மா அவர்களது பணப்பையில் அல்லது பயணப் பையில் இந்த ஏலக்காயை வைத்திருப்பது வழக்கம்.

ஏலக்காயின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

​ஊட்டச்சத்துக்கள்

ஏலக்காய், அதன் நறுமணம் மற்றும் சுவைக்காக அறியப்படுகிறது. இது பிரியாணி போன்ற உணவுகளில் மணம் மற்றும் சுவைக்காக பயன்படுத்தப்படுகிறது. இனிப்பு உணவுகளில் இதன் நறுமணம் மற்றும் சுவைக்காக அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இது பல ஆண்டுகளாக பாரம்பரிய மருத்துவத்தில் மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏலக்காய் விதைகளில் நமது உடலுக்குத் தேவையான அத்தியாவசிய எண்ணெய் உள்ளது. இது ஆல்பா-டெர்பினோல் 45 சதவீதம், மைர்சீன் 27 சதவீதம், லிமோனீன் 8 சதவீதம் மற்றும் மென்டோன் 6 சதவீதம் போன்ற பைட்டோ கெமிக்கல்களால் ஆனது.


செரிமானம்

ஏலக்காயில் உள்ள அத்தியாவசிய எண்ணெய்களான மென்டோன் அமிலத்தன்மையானது, உடலில் ஏற்படும் வாய்வு, அஜீரணம் மற்றும் வயிற்று வலி போன்ற இரைப்பை குடல் பிரச்சினைகளைப் சரிசெய்ய உதவுகிறது. இதனால் உடலில் உணவு ஜீரணமாவதை எளிதாக்குகிறது. வயிற்றில் எரிச்சல் போன்ற பிரச்சினை இருப்பதாக உணர்ந்தால், ஏலக்காய் ஒரு சிறந்த மருந்து ஆக இருக்கும்.

வாந்தி மற்றும் குமட்டல்

வாந்தி மற்றும் குமட்டல் பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க, ஏலக்காய் பயன்படுத்தலாம். ஏலக்காயில் உள்ள ஆண்டிமெடிக் பண்புகள், லேசான வாந்தி மற்றும் குமட்டல் பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. சிலருக்கு பயணப்படும் போது வாந்தி போன்ற பிரச்சனைகள் பொதுவாக ஏற்படுவது உண்டு. இதன் காரணமாகத்தான் பயணப்படும் அவர்களின் பைகளில் ஏலக்காய் இருக்க வேண்டும் என்று பெரியவர்கள் கூறுகிறார்கள்.


பல் பராமரிப்பு

ஏலக்காயில் உள்ள சக்திவாய்ந்த ஆண்டிமைக்ரோபையல் பண்புகள், பல் சுகாதாரத்தை பேணி காக்க பயன்படுகிறது. மேலும் இது வாயில் ஏற்படும் கெட்ட வாசனையை எப்போதும் அகற்ற உதவுமகிறது. ஏலக்காய் எண்ணெயில் உள்ள பைட்டோ கெமிக்கல், சினியோல், கெட்ட சுவாசத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களைக் அழிப்பதற்கும், பல் துவாரங்கள் மற்றும் பல் சிதைவைத் தடுப்பதற்கும் பயன்படுகிறது. ஏலக்காய் பழத்திலுள்ள ஆரோக்கிய நன்மைகள், அவற்றின் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு எதிரான சிகிச்சை அளிக்கும் காரணிகளாக ஆகும்.

​இருமல் மற்றும் சளி

ஏலக்காயில் ஆன்டிடூசிவ் மற்றும் மியூகோலிடிக் ஆகிய பண்புகள் உள்ளன. இது சளி அதிகமாவதை குறைக்க உதவுகிறது. மேலும், உடலில் இருந்து இருமல் மற்றும் சளி ஆகியவற்றை வெளியேற்றுகிறது. இது நுரையீரலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம், சுவாச செயல்பாடுகளை மேம்படுத்த உதவுகிறது.

நச்சுத்தன்மையை நீக்க

ஏலக்காய், உடலுக்கு ஒரு சிறந்த நச்சுநீக்கியாக செயல்படுகிறது. இது இரத்தத்தில் உள்ள நச்சுக்களைக் குறைக்க உதவுகிறது. இது லேசான டையூரிசிஸைத் தூண்டுவதன் மூலம் உடலில் இருந்து நச்சுகள் நீக்கத்தை அதிகரிக்கிறது. ஏலக்காயில் உள்ள அத்தியாவசிய எண்ணெய்கள் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் நச்சுத்தன்மையை நீக்கும் பண்புகளை கொண்டுள்ளன.


​புகைப்பழக்கம்

புகைப்பழக்கத்தை நிறுத்த விரும்பும் மக்களுக்கு ஏலக்காய் ஒரு இயற்கை சிகிச்சையாக உள்ளது. ஏலக்காயை ஒரு நாளைக்கு 4 முதல் 6 முறை மெல்லுவது நிகோடின், அமைதியின்மை, எரிச்சல், பொறுமையின்மை மற்றும் பதட்டம் போன்ற பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது. மேலும் இது தூக்கத்தின் தரத்தையும் மேம்படுத்துவதன் மூலம் மன அழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது.

வளர்சிதை மாற்றக் கோளாறுகள்

உணவு, உடற்பயிற்சி, தூக்கம் மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு தேவைப்படும் வாழ்க்கை முறை திருத்தங்களை செய்வதுடன், ஏலக்காய் போன்ற மூலிகைகள் நோய்களை எதிர்த்துப் போராட உதவும் ஒரு காரணியாக செயல்படுகின்றன. இதில் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. பச்சை ஏலக்காய் சாப்பிடுவதன் மூலம் ட்ரைகிளிசரைடுகளின் அளவு குறைகிறது என்று ஒரு ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது வளர்சிதை மாற்றக் கோளாறுகள் உள்ள நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சையில் உதவுகிறது. நீரிழிவு நோயாளிகள் ஏலக்காயை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்த ஆய்வுகள் மிகவும் குறைவாகவே உள்ளன.

இன்று முதல், ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ள இந்த ஏலக்காயை அன்றாட உணவில் பயன்படுத்த வேண்டும்.

ஏலக்காயை உணவில் பயன்படுத்துவதற்கான சில வழிகள்

1. பெருஞ்சீரகதுடன் ஏலக்காயை வெறும் வாயில் மெல்லலாம். இதை உணவு அருந்திய பிறகு ஒரு வாய்-புத்துணர்ச்சியாக பயன்படுத்தலாம்.

2. சிறந்த தூக்கத்திற்கு, தூங்குவதற்கு முன் குடிக்கும் பாலில், ஜாதிக்காய் அல்லது மஞ்சள் மற்றும் கருப்பு மிளகுடன் ஒரு சிட்டிகை ஏலக்காயைச் சேர்க்கவும்.

3. வீட்டில் தயாரிக்கப்படும் கிரானோலா தானியத்தில் ஏலக்காய் பொடியைச் சேர்க்கலாம்.

4. கொதிக்கும் நீரில் ஏலக்காயை சேர்த்து செய்யும் புலாவ் , பிரியாணி, ஹல்வா மற்றும் ஷீராவில் சுவை அதிகரிக்கிறது.

5. அசைவ உணவுகளில் ஏலக்காயை பயன்படுத்தலாம்.

என்ன, இனி எப்பவும் ஏலக்காய் உங்கள் 'மருத்துவ தோழன்'தானே?


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 20 April 2024 11:08 AM GMT

Related News

Latest News

 1. விளையாட்டு
  மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி முதல் கிளாசிக்கல் செஸ் வெற்றி பெற்ற...
 2. வீடியோ
  😧கிடு கிடுவென உயரும் விலை | வெள்ளிக்கு விலை இவ்வளவா? #gold #silver...
 3. ஈரோடு
  மேட்டூர் அணையின் நீர்வரத்து 389 கன அடியாக சரிவு
 4. ஈரோடு
  பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 982 கன அடியாக அதிகரிப்பு
 5. இந்தியா
  பாஜக வெற்றி பெற்றால் கர்தவ்யா பாதையில் ஜூன் 9 பதவியேற்பு விழா
 6. திருவண்ணாமலை
  சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய ஆர் ஐ கைது
 7. திருவண்ணாமலை
  இலங்கை தமிழ் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிக்காட்டுதல் பயிற்சி
 8. தொழில்நுட்பம்
  கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணை 'ருத்ரம்-II: இந்தியா வெற்றிகரமாக சோதித்த...
 9. ஆன்மீகம்
  Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
 10. ஈரோடு
  பெருந்துறை அருகே பதுக்கி வைத்திருந்த 150 கிலோ கஞ்சா பறிமுதல்: மூவர்...