/* */

விஷச்செடி,பூச்சிக்கடி அரிப்புக்கான சிறந்த மருந்து காலமைன் லோஷன் முதல்ல படிச்சு பாருங்க..

Lacto Calamine Uses In Tamil-மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய சாதாரண நோய்கள் அல்லாமல் விஷச்செடிகள் மூலம் ஏற்படும் அரிப்பு, நமைச்சல். அதேபோல் பூச்சிகளால் ஏற்படும் அரிப்புகளை குணப்படுத்தும் மருந்து காலமைன் லோஷன் ஆகும். அதனைப் பற்றி பார்ப்போமா?

HIGHLIGHTS

Calamine Lotion ip Uses in Tamil
X

Calamine Lotion ip Uses in Tamil

Lacto Calamine Uses In Tamil

மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய நோய்களில் தொற்றுக்களினால் பரவும் நோய் ஒரு வகையாகும். சாதாரண நோய்களை விட தொற்றுக்களால் வரும் நோயைக்குணப்படுத்த பல நாட்கள் ஆகும். இது பெரும்பாலும் தோல் சம்பந்தப்பட்ட நோய்களாக இருப்பதால் குணமடைய அதிக நாட்களாகிறது.

தொடர்சிகிச்சை, உணவு கட்டுப்பாடு, பத்தியம், மற்றும் தொடர்ந்து டாக்டர்கள் உங்களுக்கு பரிந்துரைத்த மருந்துகளை நீங்கள் சரியான கால அளவில் எடுத்துக்கொண்டால்தான் இதுபோன்ற தொற்று நோயால் பாதித்தவர்கள் சீக்கிரம் குணமடைகின்றனர். டாக்டர் அறிவுறுத்தலை எந்த சூழ்நிலையிலாவது தொற்றுபாதிக்கப்பட்ட நபர் மீறினால் நோயின் குணமாகும் கால அளவு நீட்டிப்பாகிவிடுகிறது.அந்த வகையில் தொற்று நோய் உட்பட பல நோய்களுக்கு பயன்படும் காலமைன் லோஷன் பயன்பாடு பற்றி பார்ப்போமா? வாங்க...

காலமைன் லோஷன் மருந்தானது துத்தநாக ஆக்ஸைடு மற்றும் 0.5 சதவீதம் இரும்பு ஆக்ஸைடு கொண்ட மருந்து கலவையால் தயாரிக்கப்படுகிறது. இந்த அயர்ன் ஆக்ஸைடுதான் பிங்க் கலரை தருகிறது

காலமைன்லோஷன் விஷசெடிகள், வண்டுபூச்சி கடி, சின்னம்மை, கொப்புள புண்களை உண்டாக்கும் ஒரு வகை தோல்நோய், நீச்சல் வீரர்களுக்கான அரிப்பு, சிரங்கு பூச்சிகடி, சிறிய தீக்காயம் உள்ளிட்டவைகளை குணப்படுத்த இந்த லோஷன் பயனளிக்கிறது.

உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின்சார்பில் விஷச்செடிகளினால் ஏற்படும் அரிப்புகளுக்கு இந்த காலமைன் லோஷனைப் பயன்படுத்தலாம் என பரிந்துரைத்துள்ளது. இந்த லோஷனை நாம் அப்ளை செய்வதால் தோல் சம்பந்தமான பிரச்னைகள் கட்டுப்படுத்தப்படுகிறது.

வண்டுகடி

calamine lotion uses in tamilவண்டு பூச்சி கடி மற்றும் கொடுக்குகளினால் கடிபட்ட தோல்பகுதிக்கு டாக்டர்கள் பரிந்துரைத்த அளவிற்கு தினந்தோறும் இந்த லோஷனை தடவி வரவேண்டும். ஒருநாளில் எத்தனை முறை பரிந்துரைக்கிறாரோ அத்தனை தடவை கட்டாயம் தடவி வந்தால்தான் அந்த கடி அறிகுறிகளிலிருந்து பாதிக்கப்பட்டவர்கள் மீள முடியும்.

மேலும் இதற்கு மாற்று மருந்தாக பேக்கிங் சோடா பேஸ்ட் அல்லது 0.5 முதல் 1 சதவீதம் கொண்ட ஹைட்ரோகார்டிசோன் கிரீம் தடவலாம். இந்த சிகிச்சையும் சரியான ரிசல்ட்டை தராத பட்சத்தில் வாய்வழிமருந்தான ஆன்டிஹிஸ்டமைனான பெனட்ரில் எடுத்துக்கொள்ளலாம்.

சின்னம்மை

நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் சார்பில் தோலில் ஏற்படும் சின்னம்மை அறிகுறிகளுக்கு காலமைன் லோஷனை பயன்படுத்தி அதன் அறிகுறிகளை கட்டுப்படுத்தலாம் என பரிந்துரைத்துள்ளது. மேலும் சின்னம்மையின் அரிப்பிலிருந்து மீள, பேகிங் சோடா சிறிது கலந்த குளிர்ச்சியான தண்ணீரில் ஒரு குளியல் போட்டுவிட்டு பின்னர் இந்த காலமைன் லோஷனை பயன்படுத்தலாம் எனவும் நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் பரிந்துரைத்துள்ளது.

கொப்புள புண்கள்

ஆன்டி வைரல் மருந்துகளான அசைக்ளோவிர், மற்றும் பாம்சிக்ளோவிர் மருந்துகள் எடுத்துக்கொள்வதன் மூலம் கொப்புளங்களை கட்டுப்படுத்தலாம். மத்திய நோய்க்கட்டுப்பாடு தடுப்பு மையம் பரிந்துரைத்தலின் பேரில் இதனை பயன்படுத்தினால் வலி மற்றும் அரிப்புகளை குணப்படுத்தலாம்.

மேலும் நீச்சல் வீரர்களுக்கு அடிக்கடி அவர்கள் தண்ணீரில் இருப்பதால் ஒரு சில குறிப்பிட்டபாரசைட்டுகளினால் ஏற்படக்கூடிய தடிப்பு , அரிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இதுபோன்ற பாதிப்பு உள்ளவர்கள் இதனை பயன்படுத்தலாம்.

சிரங்கு பூச்சி கடி

ஒருசிலருக்கு ஒரு வகையான சிறிய பூச்சி கடியினால் அரிப்பு தொடர்ந்து ஏற்படும். இது போல் பாதிப்படைந்தவர்கள் உடனடியாக குளிர்ச்சியான தண்ணீரில்நன்கு குளித்துவிட்டு இந்த காலமைன் லோஷனை அப்ளை செய்ய வேண்டும். மேலும் இந்த காலமைன் லோஷனானது சிரங்கு பூச்சிகடியின் அறிகுறிகளை குணப்படுத்துமே ஒழிய , பூச்சிகளைக்கொல்லும் தன்மையோ அல்லது அப்பூச்சியின் முட்டையினை அழிக்காது.

மேலும் இதனால் பாதிப்படைந்தவர்களுக்கு அரிப்பு பிரச்னை அதிகம் இருக்கும் பட்சத்தில் உங்களுடைய டாக்டரின் பரிந்துரையின் பேரில் வாய்வழி மருந்துகளை கேட்டு அதனை உட்கொள்ளலாம்.

மேலும் பூச்சிக்கடியால் பாதிப்படைந்தவர்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்.

இந்நோயால் பாதிப்படைந்தவர்கள் உடுத்திய துணிகள், துண்டுகள், மற்றும் படுக்கை விரிப்புகள் அனைத்தையுமே சூடான தண்ணீரில் நனைத்து துவைக்க வேண்டும். மேலும் இதுபோன்ற துணிகளை துவைக்க வெப்பநிலையானது 140 டிகிரிக்கு மேல் இருக்க வேண்டும்.

அறுவடை சிலந்தி கடி

இவ்வகையான பூச்சியானது நம் உடலிலுள்ள தோல்களை பாதிக்கும். அரிப்பு, நமைச்சல் போன்றவைகள் உண்டாக்கும். மேலும் இது போன்ற பூச்சிகளால் கடிபட்டு பாதிப்படைந்தவர்கள் உடனடியாக அக்கடிவாயை சோப் போட்டு அலம்பி கொண்டு அந்த இடத்தில் இந்த காலமைன் லோஷனை தடவி வந்தால் அரிப்பு, நமைச்சலில் இருந்து விடுபடலாம்.மேலும் காலமைன் லோஷன் சிறிய வகையான தீக்காயங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

மருந்தை பயன்படுத்துவது எப்படி?

காலமைன் லோஷன் என்பது உடலின் வெளிப்பாகத்திற்கானது மட்டுமே. இதனை விழுங்க கூடாது. மேலும் இம் மருந்தானது கண்களில் படவே கூடாது. சுவாசிக்கும் பகுதியான மூக்கு, வாய், உள்ளிட்டவைகளில் படவே கூடாது. இம்மருந்துகளை உபயோகிப்போர் குழந்தைகளின் கையில் இதனை கொடுக்கவே கூடாது. அவர்களிடம் இருந்து தொலைதுாரத்தில் வைத்து பயன்படுத்த வேண்டும். தெரியாமல் கண்கள், வாய், அல்லது மற்ற உடலின் உட்பாகத்தில் பட்டுவிட்டால் தயவு செய்து அதிகப்படியான தண்ணீரைக்கொண்டு கழுவிவிடவேண்டும். தப்பித் தவறி யாராவது விழுங்கி விட்டால் உடனடியாக விஷமுறிவு சிகிச்சை மையத்திற்கு சிகிச்சைக்காக சென்றுவிடவும்.

இந்த மருந்தினை உபயோகிக்கும் முன்னதாக நன்கு பாட்டிலை குலுக்க வேண்டும். ஒருசிறிய பஞ்சால் மருந்தினை பாட்டிலில் இருந்து ஒற்றி எடுத்து தேவையான இடத்தில் தடவி வரலாம்.

பக்க விளைவுகள்

ஒரு சிலருக்கு இதனால் ஒவ்வாமை ஏற்படலாம். அதுபோன்றவர்கள் உடனடியாக இதனை அவர்கள் சிகி்சசை மேற்கொள்ளும் டாக்டரிடம் தெரிவித்துவிடவேண்டும.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 20 March 2024 6:03 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...