பல நோய்களை தீர்க்கும் நிவாரணி கருஞ்சீரகம்..... முதல்ல படியுங்க.

பல நோய்களுக்கு அருமருந்தாகும் கருஞ்சீரகம்.
Black Seeds in Tamil -
தலைமுடியில் ஏற்படும் பிரச்னைகளை கருஞ்சீரகம் தீர்க்கிறது.
மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய நோய்கள் ஒவ்வொரு நாளும் புதியது புதியதாக தோன்றுகின்றன. எதனால் நோய்கள் உண்டாகிறது என்பதே புரியாத நிலையும் ஒருசில நேரத்தில் உருவாகி விடுகிறது. மருத்துவ உலகிற்கே சவால் விடும் நிலையில் நோய்களின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மாறிவரும் உணவுப்பழக்கம், உடலுழைப்பின்மை, உடற்பயிற்சியின்மை என பல காரணிகள் சொல்லப்பட்டாலும் இவைகளையும் மீறி நோய்கள் புது புது அவதாரங்களாக உருவெடுத்து வருவது பொதுமக்களை அதிர்ச்சியடைய வைக்கிறது. சொல்லப்போனால் சிறுகுழந்தைகளுக்கு வரும் நோய்கள் இன்ன இனம் என தெரியாமல் ஒரு சில நேரத்தில் டாக்டர்களே விழி பிதுங்கி நிற்கின்றனர்.
காலமாற்றத்தால் நாகரிகம் என்ற போர்வையில் பல அழகு சாதனப்பொருட்கள், ரெடிமேட் உணவுகள், துரித உணவுகள் , பேக்கரி அயிட்டங்களின் பயன்பாடுகள் இவையனைத்தும் அதிகரித்து போனதால் நோய்களுக்கு ஊற்றுக்கண்ணாக மாறிவிட்டது. அதுவும் தோல் நோய்கள் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவையெல்லாம் நாகரிக மோகத்தில் நாம் போடும் மேக்அப் சாதனங்களினால் வரும் பக்கவிளைவுகளாக கூட இத்தகைய தோல்நோய்கள் வருமா? என்பது சந்தேகத்திற்கிடமாக உள்ளது.
black seeds in tamilஅலோபதி மருத்துவம் மட்டும் நம் உடல் உபாதைகளை குணப்படுத்துகிறது என்று சொல்லிவிட முடியாது. ஆயுர்வேதம், சித்தா,யுனானி, ஹோமியோ உள்ளிட்ட பல மருத்துவ முறைகள் நம் நாட்டில் உள்ளதால் அவரவர்களுக்கு ஏற்ற மருத்துவ முறையினை தேர்ந்தெடுத்து அதன் வாயிலாக சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சித்த மருத்துவத்தில் இக்கருஞ்சீரகமானது சிறப்பான பயன்களை தருகிறது என்று கூட சொல்லலாம்.
கருஞ்சீரகம்- பிளாக்சீ்ட்ஸ் என்று சொல்லக்கூடிய இது ஒரு மூலிகை தாவரம்தான். அரபு நாடுகளில் இப்பொருளானது உணவு சமைக்கவே பயன்படுத்துகிறார்கள் என குறிப்புகள் தெரிவிக்கின்றன.கருஞ்சீரக எண்ணெயானது யுனானி மருத்துவத்தில் பயன்படுகிறது.
நோய்எதிர்ப்பு குணம்
நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய வேதிப்பொருளான தைமோகுயினன் வேறு எந்த தாவரத்திலும் இல்லை. இதனால் கருஞ்சீரகமான மருந்துப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இதன் விதையில்தான் இத்தகைய வேதிப்பொருள் உள்ளது.
மேலும் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்க உதவுகிறது. மேலும் உடலுக்கு நன்மை பயக்கும்பல வேதிப்பொருட்களை இது தன்னகத்தேகொண்டுள்ளதால் மருத்துவ குணம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மேலும் நமக்கு அதிக பிரச்னைகளை தரும் சுவாச நோய்கள் நம்மை நெருங்காமல் தடுக்க இது உதவுகிறது. வலிமை மிகுந்த ஆன்டி ஆக்சிடென்ட் ஆக செயல்படுவதால் இக்கருஞ்சீரகமானது நம் உடலின் உறுப்புகளில் ஏற்படும் வீக்கத்தை தணிக்க உதவுகிறது. மேலும் மனிதர்களுக்கு ஏற்படும் புற்றுநோய், இருதய நோய் உள்ளிட்டவற்றை குணப்படுத்தவும் இது பயன்படுகிறது. எலும்பு மஜ்ஜை உற்பத்தியினை சீராக்கி புற்று நோய் கட்டிகள் ஏற்படாதவாறு பாதுகாக்கிறது. கணையத்தில் ஏற்படும் கேன்சரை கட்டுப்படுத்துவதில் இது பெரும்பங்கு வகிக்கிறது.
கருஞ்சீரகம் அரு மருந்து
black seeds in tamilநாம் அன்றாடம் குளிக்கும்போது குளியல் பொடிகளை பயன்படுத்துவோம். அதுபோன்று பயன்படுத்துபவர்கள் அப்பொடியோடு இதன் பொடியும் சேர்த்து பயன்படுத்தலாம்.
மனிதர்களுக்கு அடிக்கடி ஏற்படும் நெஞ்சு சளி, மற்றும் நுரையீரலில் உள்ள சளியினை அகற்றும் மருத்துவ குணம் வாய்ந்தது கருஞ்சீரகம் ஆகும். மேலும் இருமலுக்கு அருமருந்தாகவும் இது திகழ்கிறது. இதன் பொடியை ஒருடீஸ்பூன் அளவு எடுத்துக்கொண்டு அதோடு பூண்டினை அரைத்து அந்த விழுதை ஒரு அரை டீஸ்பூன் சேர்த்து தேனோடு கலந்து சாப்பிட்டு வந்தீர்களானால் இருமல் கட்டுப்படும்.
தோல்நோய்களான சொரியாஸிஸ், கரப்பான் தொற்றால் பாதிப்படைந்தவர்களுக்கு இது அருமருந்து. இதனை பொடியாக்கி தேய்த்துகுளித்தால் நோய் பரவல் கட்டுப்படும். மேலும் உடம்பில் ஏற்பட்டுள்ள வடுக்களும், தழும்புகளும் மறைந்துவிடும்.
மாதவிடாய் காலங்களில் பெண்கள் படும் கஷ்டங்களுக்கு நல்ல நிவாரணி இந்த கருஞ்சீரகம் ஆகும். அதாவது அடிவயிற்றில் ஏற்படும் வலியினை ரத்தப்போக்கு, சிறுநீர் கழிப்பதில் சிக்கல், அடிவயிறு கனமாதல், உள்ளிட்ட சிக்கல்களை இது சரிசெய்கிறத. அதாவது இதனை வறுத்து பொடித்து அதனுடன் தேன் அல்லது கருப்பட்டி சேர்த்து மாதவிடாய்க்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே ஒரு டேபிள் ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் இப்பிரச்னைகள் குறைய வாய்ப்புள்ளது.
மேலும் குழந்தை பெற்ற பச்சை தாய்மார்கள் தங்களுடைய கர்ப்பப்பையில் சேரும் அழுக்கினை அகற்ற இதனை ஒரு டேபிள்ஸ்பூன் பனைவெல்லம் சேர்த்து சாப்பிடவேண்டும். காலை மாலை என ஐந்து நாட்கள் குழந்தை பிறந்ததிலிருந்து சாப்பி்ட்டு வரலாம். மேலும் நம் உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை அகற்றவும் இது பயன்படுகிறத. அதாவது வெந்தயம் கால்கிலோ, ஓமம் 100 கிராம், கருஞ்சீரகம் 50 கிராம் எடுத்து கருகவிடாமல் நன்கு வறுத்து பொடியாக்கிவிட வேண்டும்.
இரவு நேரத்தில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு இதனை நன்கு வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். இதைச் சாப்பிட்டவுடன் வேறு எதுவும் சாப்பிடக்கூடாது. இதனை நாம் தொடர்ந்து சாப்பிட்டு வரும் பட்சத்தில் நம் உடல் கழிவுகள் அனைத்தும் மலம், வியர்வை சிறுநீர் மூலம் வெளியேற வாய்ப்புகள் உண்டு. மேலும் நம் உடலிலுள்ள ரத்தமானதுநன்கு சுத்தகிரிக்கப்படுவதோடு நல்ல ரத்த ஓட்டமும் கிடைக்கும். உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகள் அறவே நீங்க வாய்ப்புகள் உண்டு.
பித்தபை கற்கள்
கருஞ்சீரகப் பொடியை 50 மி.லி தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து சூடாக்கி இரண்டு சொட்டு மூக்கில்விட்டால் மூக்கடைப்பு நீங்கும். சிறுநீரக மற்றும் பித்தப்பை கற்களும் ஒரு டீஸ்பூன் கருஞ்சீரக பொடியை நன்கு ஆறவைத்த தண்ணீரில் தேன் கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் குடித்து வந்தால் சிறுநீரக மற்றும் பித்தப்பை கற்கள் கரையும்.
முன்னெச்செரிக்கை
black seeds in tamilஇத்தகைய அரு மருத்துவ குணம் கொண்ட கருஞ்சீரகத்தினை கடைகளில்வ ாங்கி பயன்படுத்தும் முன் ஒரு சித்த மருத்துவரை கலந்து ஆலோசியுங்கள். அவர் வழிநடத்துதலின் பேரில் நீங்கள் இதனை மருந்தாக உட்கொள்ளுங்கள். காரணம் உங்கள் உடம்பில் வேறு என்ன நோய்கள் இருக்கிறது என்பது உங்களுக்கே ஒரு சில நேரங்களில் தெரிய வாய்ப்பில்லை. ஒருசில நோய்கள் சைலன்டாக இருந்துகொண்டு பின்னர் திடீரென விஸ்வரூபமாகிவிடும்.
எனவே நீங்கள் சாப்பிடும் எந்த மருந்தாயினும் அந்த மருத்துவ துறை சம்பந்தப்பட்ட டாக்டரை கலந்து ஆலோசித்த பின்னரே நீங்கள் மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். எல்லாம் எனக்கு தெரியும் என இறங்கினால் விபரீத விளைவுகளை சந்திக்க நேரிடும்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu