நோயற்ற வாழ்வுக்கு, குறைவற்ற செல்வமாய் விளங்கும் 'செவ்வாழை பழம்'
Red Banana Benefits Tamil
Red Banana Benefits Tamil-இப்போது பழக்கடைகளில், ரோட்டோரங்களில் அதிகமாக செவ்வாழை பழங்கள், விற்பனைக்கு வருகிறது. மக்கள் மத்தியில் செவ்வாழை பழம் விரும்பி சாப்பிடுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சாதாரணமாக ரூ.8 முதல் ரூ.12 வரை விற்கப்படுகிறது.
பொட்டாசியம், மக்னீஷியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் சி, தையமின், போலிக் ஆசிட், பீட்டா கரோட்டின் என மனித உடலுக்கு தினசரி தேவைப்படும் வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் நிறைந்த பழம் செவ்வாழைதான்.
மூளையின் செயல்பாடு, இதயத்தின் செயல்பாடு, ரத்த ஓட்டம், ரத்த உற்பத்தி, சிறுநீரகத்தின் இயக்கம், கல்லீரலின் இயக்கம், குடலின் இயக்கம் ஆகியவற்றுக்குத் தேவையான சத்துகள் நிறைந்தது செவ்வாழை. ஒவ்வொரு தாவரத்துக்கும் தனித்துவமான தாவர வேதிப்பொருள்கள் இருக்கும். அந்த அடிப்படையில் உடம்பை வலுவாக்கும் காயகல்பமாக மருத்துவத்தில் செவ்வாழைப் பழமும் பயன்படுத்தப்படுகிறது என்று கூறினால் அது மிகையாகாது.
செவ்வாழையின் பயன்கள்
நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவர வேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும்.
மாலைக்கண்நோய் கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு, செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினமும் செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.
பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல் வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.
சொரி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணம் தரும். சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும், செவ்வாழைப் பழத்தை தொடர்ந்து ஏழுநாட்களுக்கு சாப்பிட்டு வர சருமநோய் குணமடையும்.
முந்தைய தினம் சாப்பிட்ட சில உணவுகளால் மறுநாள் காலையில் மலம் வெளியேற முடியாமல் இருக்கும். காலையில் ஒரு செவ்வாழைப்பழத்தை சாப்பிட அது குடலைத் தூண்டி கழிவை வெளியேற்ற வைக்கும்.
உடல் ஆரோகிகியமாக இருக்க ஊட்டச்சத்து மிகுந்த உணவு மட்டுமல்லாது பழங்களும் முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுவாக தினமும் பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ளும்போது உடல் ஆரோக்கியத்திற்கு எவ்வித குறைகளும் வராது. அந்த வகையில் செவ்வாழைப்பழம் உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத பலனை கொடுக்கிறது.
அதிலும் குறிப்பாக செவ்வாழை உடல் ஆரோக்கியத்திற்கும், சொறி சிரங்கு தோலில் ஏற்படும் வெடிப்பு மற்றும் சரும பாதிப்பு என எண்ணற்ற வியாதிகளுக்கு தீர்வாக அமைகிறது. செவ்வாழை வழக்கமாக எடுத்துக்கொள்ளும்போது தமனிகளில் இரத்தம் உறைவதை தடுக்கிறது. புற்றுநோய் மற்றும் இதயநோய் தொடர்பான பாதிப்புகளை குறைக்கிறது.
மேலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்குமு் செவ்வாழையில் வைட்டமின் சி பி6 உள்ளிட்ட சத்துக்க்ள அடங்கியுள்ளன. இந்த செவ்வாழையை தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். அதேபோல் நீரிழிவு நோயாளிகள் செவ்வாழைப்பழம் சாப்பிடுவது உடல் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவும்.
இந்த செவ்வாழை பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால் சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்க உதவுகிறது. எலும்புகள் வலுவடையவும், இதயம் மற்றும் புற்றுநோய் தாக்குதல்களை தடுக்கவும் உதவுகிறது. மேலும் செவ்வாழை பல நோய் தாக்குதல்களை தடுக்கவும், நோய் தாக்கத்தின் வீரியத்தை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
இவ்வளவு நன்மைகள் நிறைந்த செவ்வாழை பழத்தை தினமும் சாப்பிட்டால், ஆரோக்கியமாக வாழலாம்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu