/* */

நீங்க ....ஆரோக்யமாக வாழணுமா?....அவசியம் தவிர்க்க வேண்டிய உணவு என்னென்ன?.......

avoided food items for good health வாய்க்கு ருசியான உணவுகளை சாப்பிடலாம்னு நினைச்சாலும் முடியறதில்லை. அவ்வளவு ஆபத்து அதில் உள்ளதுன்னு டாக்டர்கள் சொல்றாங்க... எதைத்தான் சாப்பிடுவது...போங்க? ...படிங்க...

HIGHLIGHTS

நீங்க ....ஆரோக்யமாக வாழணுமா?....அவசியம்  தவிர்க்க வேண்டிய உணவு என்னென்ன?.......
X

வகை வகையான ஊறுகாய்கள்...பல டேஸ்டுகளில்....சாப்பிட்டோம் அவ்வளவுதான் (கோப்பு படம்)  படிச்சு பாருங்க...

avoided food items for good health

நாகரிக மோகத்தில் இன்றளவில் இயற்கை உணவுகள் எல்லாம் இடம் தெரியாமல் போய்விட்டதால் நோய்களை காசு கொடுத்து மக்கள் விலைக்கு வாங்கி வருகின்றனர் என்று கூட சொல்லலாம். அந்த வகையில் எல்லாமே ரெடிமேட் மயம்தான்.காசுமட்டும் நம்மிடம் இருந்தா போதும். நீங்க எல்லாத்தையும் வாங்கிக்கலாம். அப்புறம் ஆஸ்பத்திரிக்கு நடையா நடக்கலாம். அப்படித்தாங்க... ஆமாங்க ... ஆமா.. முன்பெல்லாம் உடல் உழைப்பு குடும்ப பெண்கள் முதல் வீட்டில் உள்ள அனைவரிடமும் இருந்தது. இப்ப பாருங்க... எல்லாவற்றுக்கும் மெஷின் வந்ததால் இவர்களுக்கு வேலை ரொம்ப ஈசி.சரி வீட்டிலாவது செய்யறாங்களா? அதுவும் இல்லைங்க...

avoided food items for good health


காசிருந்தா போதும்... மேற்கண்ட படத்தில் உள்ளதுபோல் பரோட்டா பீடா ரெடிமேடாக கிடைக்கிறது (கோப்பு படம்)

ரெடிமேட் மயம்

பரோட்டா உங்களுக்கு செய்யணுமா? கடையில் பீடா சுற்றிய மாவு விக்கிறாங்க.. கூடவே குருமாவும் பிளாஸ்டிக் கவர்ல ரெடியா இருக்குதுங்க.. நீங்க வாங்கிட்டுவந்து ஒரே ஒரு பூரி பலகையில் இட்டு கல்லிலபோடணுங்க.. அவ்வளவுதான் நிமிஷத்தில நீங்க பரோட்டா சாப்பிடலாம். இதேபோல் சப்பாத்தி விக்கிறாங்க. ஏங்க... முன்பெல்லாம் இருபெண்கள் எதிரெதிரே உட்கார்ந்து கொண்டு ஒருவர் ஆட்ட ஒருவர் தள்ள அங்க தமிழ்நாடு,இந்தியா என பல கதைகள் ஓடும். மாவும் அரைச்சிருவாங்க... இந்த டிவி வந்துச்சுங்க... எல்லாம் போச்சு... கிரைண்டரில் அரைக்க போய் தற்போது மாவு விற்க ஆரம்பிச்சதனால அந்த வேலையும் இல்லை.

avoided food items for good health


அந்த பீடாவை சப்பாத்தி பலகையில் இடப்பட்டும் ரெடிமேடா விற்கிறாங்க.... வசதி பாருங்க (கோப்பு படம்)

சாதம் மட்டும் சமைச்சா போதும்.தற்போது எல்லாமே வீடுகளிலும் ஓட்டல் கடைகளில் சாம்பார், ரசம், கறிக்குழம்பு, பொறியல், கூட்டு என சகல அயிட்டமும் விக்கிறாங்க..எதுக்குங்க வேலை செய்யணும்? அப்புறம் ஏங்க நோய் வராது நமக்கு...வருமா? வராதா? நீங்களே முடிவு பண்ணிக்குங்க...

சரி நாம தலைப்புக்குவருவோம்.நாம் சாப்பிடக்கூடாத உணவுகள் என்னென்னன்னு சொல்றோம் கேளுங்க...

சீனி அஸ்கா என்ற வெள்ளைச் சர்க்கரையை தயாரிக்கும்போது அவை வெண்மையாக்குவதற்காக ரசயானப் பொருள்களை உபயோகித்து சுத்தம் செய்கின்றனர். மேலும் இயற்கையான கரும்புச்சாற்றில் உள்ள வைட்டமின்களும், தாதுப்பொருட்களும், சர்க்கரை ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் மொலாசஸ்சில் சென்று விடுகின்றன.

avoided food items for good health


சாதம் மட்டும் சமைச்சா போதும்.... மற்ற சைடு டிஷ் அனைத்தும் ரெடிமேடாக கிடைக்கிறது... (கோப்பு படம்)

avoided food items for good health

அதிலிருந்துதான் சாராயம் காய்ச்சுகின்றனர். ஒரு இயற்கையான உணவை மனிதன் சாப்பிட்டால் அதைச் சீரணிப்பதற்குத் தேவைப்படுகின்ற வைட்டமின்களும் தாதுப் பொருள்களும் அந்த உணவிலேயே இயற்கை படைத்துள்ளது. சுத்தம் செய்வதற்காக அந்த உணவிலிருந்து வைட்டமின்களையும் , தாதுப்பொருட்களையும் வெளியேற்றிவிட்டால் அந்த சுத்திகரிக்கப்பட்ட உணவைச் சாப்பிட்டால் அதைச் சீரணிப்பதற்குத் தேவையான சத்துக்கள் நம் உடலிலிருந்து திருடப்படுகின்றது.

வெள்ளைச் சர்க்கரை ஒரு தேக்கரண்டியை ஜீரணிக்க உடலிலிருந்து வைட்டமின்கள் அதிகமாகத் தேவைப்படுகிறது. சர்க்கரை ஒரு வைட்டமின் திருடன் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். எனவே இதற்கு பதிலாக வெல்லாம், கருப்பட்டி, தேன் போன்ற இனிப்புகளைச் சேர்த்துக்கொள்ளலாம். அவற்றில் இனிப்புடன் வைட்டமின்களும் தாதுப்பொருட்களுிம் நிறைந்துள்ளன. எனவே இன்று முதல் சர்க்கரையும், சர்க்கரை கலந்த இனிப்புப் பொருள்கள், ஜாம், ஐஸ்கிரீம், முதலியவற்றை நிறுத்திவிட ஆரோக்யம் அதிகரிக்கத் தொடங்கிவிடும்.

avoided food items for good health


வெள்ளைச்சர்க்கரையே சாப்பிடக் கூடாதுங்களாம்... அவ்வளவு தீமை இருக்காம் (கோப்பு படம்)

ஊறுகாய்... எச்சில் ஊறுகிறதா?...படிங்க...

நாம் ஒரு மாதத்திற்கு சமையலில் பயன்படுத்தும் உப்பை விட அதிகமான உப்பு ஒரு பாட்டில் ஊறுகாயில் உள்ளது. கிரேக்க நாட்டில் ஒரு சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு சிறிது சிறிதாக உணவில் உப்பை அதிகரித்துக்கொண்டே வந்ததில் ஒரு சில மாதங்களிலேயே எல்லா கைதிகளும் இறந்துவிட்டனர். அவ்வளவு கெடுதி உப்பில் உள்ளது.

உப்பில் ஊறவைத்து காயவைத்த வற்றல்,கருவாடு, போன்ற எல்லா உணவுப் பொருள்களும் சிறுநீரகம் போன்ற உடலுறுப்புகளைச் சித்திரவதை செய்கின்றன. சிறுநீரகம் முழுவதும் பழுதடையும் வரை வெளியே தெரிவதில்லை. பழுதடைந்தபின் கோடிக்கணக்கில் ரூபாய் செலவு செய்து அமெரிக்காவில் ஆபரேஷன் செய்தும் ஒரு சிலஆண்டுகள் தான் உயிர் வாழ்கின்றனர்.

avoided food items for good health


ஆசையே துன்பத்துக்கு காரணம்... வாயில் எச்சில் ஊறுகிறதா?...இதிலுள்ள உப்புதாங்க நமக்கு தீங்கு (கோப்பு படம்)

avoided food items for good health

எனவே நோய் வரும்முன் உடல் நலம் காக்க ஊறுகாயை உடனே நிறுத்துங்க. ஹைட்ரஜன் செலுத்தப்பட்ட எண்ணெய்கள், வனஸ்பதி முதலியவற்றை ஜீரணிக்க முடியாது. இவை ரத்தக்குழாய்களில் படிந்து ஆபத்தினை உண்டாக்குகின்றன. ஓட்டல்களில் பிரியாணி, இனிப்புகள், முதலியவற்றில் வனஸ்பதியை அதிகமாகச் சேர்த்து விடுகின்றனர். பாம்பின் விஷத்திற்குச் சமமான வனஸ்பதி உபயோகித்த உணவினை உடனே நிறுத்துக. தலைவலி, துாக்க மி்ன்மை போன்ற சின்ன சின்ன உடல் நலக்குறைகளுக்குக்கூட மாத்திரைகளைச்சாப்பிடும் பழக்கத்தினை உடனே நிறுத்தி அந்த சமயத்தில் தண்ணீர் மட்டும் அருந்தி உண்ணா நோன்பு இருக்க உடல் துாய்மை அடையும்.

குறைத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்

காபி,டீ, எண்ணெயில் பொரித்து எடுத்த உணவுகள் டின்களில் அடைக்கப்பட்ட உணவுகள் ,ஊறுகாய்கள், செயற்கையான குளிர் பானங்கள், போன்ற உணவுகளைச் சாப்பிடுவதினால் ஆரோக்யம் அழிந்துவிடும். எனவே முடிந்த அளவு இந்த உணவுகளைச் சாப்பிடாதீர்கள்.

நன்றி:டாக்டர். எ.வி.ஜி. ரெட்டி

Updated On: 18 Nov 2022 11:47 AM GMT

Related News

Latest News

 1. லைஃப்ஸ்டைல்
  தமிழக கிராம உணவின் சிறப்புகள்
 2. குமாரபாளையம்
  மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
 3. லைஃப்ஸ்டைல்
  வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
 4. லைஃப்ஸ்டைல்
  மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
 5. லைஃப்ஸ்டைல்
  இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
 6. இந்தியா
  5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
 7. கடையநல்லூர்
  கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
 8. லைஃப்ஸ்டைல்
  கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
 9. லைஃப்ஸ்டைல்
  இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
 10. தென்காசி
  கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி