அத்திப்பழத்திலுள்ள மருத்துவ குணங்கள் என்னென்ன தெரியுமா, உங்களுக்கு..?

athi fruit medicinal uses இயல்பாகவே அனைத்து பழ வகைகளிலும் தாதுச்சத்துகள் தனித்தனியே அடங்கியுள்ளன. அந்த வகையில் அத்திக்காய், அத்திப்பழத்தின் மருத்துவகுணங்களைப் பற்றி காண்போம்.

HIGHLIGHTS

அத்திப்பழத்திலுள்ள மருத்துவ குணங்கள் என்னென்ன தெரியுமா, உங்களுக்கு..?
X

அத்திமரத்தில் காணப்படும் அத்திப்பழம்,, அத்திக்காய்...

athi fruit medicinal uses


athi fruit medicinal uses

நாம் சாப்பிடக்கூடிய பழ வகைகள் அனைத்திலும் ஒரு மருத்துவ குணமானது தனித்தனியே காணப்படும். அந்த வகையில் அத்திக்காய், அத்திப்பழம் ஆகியவற்றிலுள்ள மருத்துவ குணங்களைப் பற்றி விரிவாக காண்போமா?

அத்திக்காய் தமிழகத்தில் சர்வ சாதாரணமாக கிடைக்கும் காயாகும். அத்திக்காய் பூக்காமலே காய் காய்க்கக்கூடியதாகும்.இது மர வகையைச் சார்ந்தது. இதில் நாட்டு அத்தி, சீமை அத்தி, என இரு வகையுண்டு. நாட்டு அத்தியின் இலை சிறியதாக இருக்கும். சீமை அத்தியின் இலை பெரிய அளவுள்ளதாக இருக்கும். இரண்டுவகையாக இருந்தாலும் இதன் பலன் ஒன்றுதான். அத்திக்காயை சமையலில் பயன்படுத்திக்கொண்டால் நோயற்று இருக்கலாம். அத்திப்பிஞ்சியை துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, இவைகளில் சேர்த்து, கூட்டு செய்து சாப்பிடலாம்.

அத்திக்காயை வேகவைத்து நன்றாக அரைத்து அதில் உப்பு, கடுகு, பெருங்காயம், சேர்ந்து நல்லெண்ணெயில் தாளித்து தயிர் சேர்த்து கலக்கி பச்சடியாகவும் சாப்பிடலாம். அத்திக்காயை வேகவைத்து நன்றாக நசுக்கி அரைத்து, அதனுடன் வறுத்து கடலைப்பருப்பு, வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய், கொத்தமல்லி. இவைகளைச் சேர்த்து அரைத்து நெய்யில் வடையாகச் சுட்டு சாப்பிடலாம். இதுபோன்று பொரியல் வறுவல் செய்தும் சாப்பிடலாம். இது போன்று சமையலின் வாயிலாக நமது உடலுக்கு ஊட்டத்தை அளித்து நோயில்லாது வாழ வைக்கும் ஆற்றல் உள்ளது அத்திக்காயாகும்.

ரத்த பேதிக்கு

ரத்த பேதியினால் கஷ்டப்படுகின்றவர்கள் அத்தி மரத்தைக் குத்தினால் பால்வரும். அந்த பாலைக்கொண்டு வந்து ஒரு ஸ்பூன் பாலுக்கு ஒரு ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து சாப்பிட்டு வரவேண்டும். இது போன்று தொடர்ந்து சாப்பிட்டால் ரத்தப் பேதியை விரைவில்குணமாக்கி விடும்.

நரம்பு தளர்ச்சிக்கு

மேற்கண்ட நோயினால் சிரமப்படுகின்றவர்கள் அத்திப்பழத்தைச் சுத்தம் செய்து ஒரு நாளைக்கு இரண்டு பழம் வீதம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நரம்புத்தளர்ச்சி நலமாகும்.

மேகரோகம் இருந்தால்

மேக ரோகம் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் கஷாயம் செய்து அருந்தினால் குணமாகும். அத்திமரத்தின் வேர்ப்பட்டையை 50 கிராம் கொண்டு வந்து சுத்தம் செய்து நைந்து ஒரு மட்பாண்டத்தில் போட்டு நீர்விட்டுக்காய்ச்சவும். நீர் சுண்டி பாதியாக ஆனதும் கீழே இறக்கி ஆறவிட்டு வடித்து பத்திரப்படுத்திக்கொள்ளவும். இந்த கஷாயத்தை தினசரி இரண்டு வேளை குடித்து வந்தால் மேக ரோகம் குணமாகும்.

athi fruit medicinal uses


athi fruit medicinal uses

கால் ஆணிக்கு

ஒருசிலருக்கு பாதங்களின் அடியில் கால் ஆணிகள் ஏற்பட்டு தரையில் சரியாக பாதத்தை ஊன்றி நடப்பதற்கு சிரமப்படுவார்கள். இதனால் வெகு துாரம் நடக்க முடியாமல் கஷ்டப்படுவதுடன் கால் ஆணியில் ஏதாவது பட்டுவிட்டாலோ துடிதுடித்து போய்விடுவார்கள்.இதுபோன்று கஷ்டப்படுகின்றவர்களுக்கு அத்திஇலை கஷாயம் கைக்கண்ட மருந்தாக பயனளிக்கிறது.

அத்தி இலை 30 கிராம், துளசி இலை 30கிராம், வில்வஇலை 30 கிராம், வேப்பிலை 30 கிராம்இவைகளைக் கொண்டு வந்து சுத்தமாக கழுவி ஒரு மட்பாண்டத்தில் போட்டுக்கொள்ளவும். மட்பாண்டத்தில் 2 லிட்டர் சுத்தமான தண்ணீர் விட்டு அடுப்பிலேற்றி சுண்ட பாதியாகக் காய்ச்சவும். காய்ச்சியதும் கீழே இறக்கி வடிகட்டி ஆறியதும் ஒரு பாட்டிலில் பத்திரப்படுத்திக்கொள்ளவும். இந்த கஷாயத்தை தினசரி காலை உணவுக்கு ஒரு மணி நேரம் முன்னர் 50 மில்லியும், இரவு உணவுக்கு ஒரு மணி நேரம் முன்னர் 50 மில்லியும் குடிக்கவும். இதுபோன்று 48 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் கால் ஆணி நீங்கிவிடும்.

விந்து கெட்டிப்பட

ஒரு சில ஆண்களுக்கு விந்து நீர்த்து வெளிப்படுவதுண்டு. இது போன்ற குறைபாடுகளையுடையவர்கள் நலமடைய அத்தி இலையை தினசரி மென்று சாப்பிட்டு வ ந்தால் நாடளடைவில் விந்து இறுகி கெட்டிப்படும்.

கை, கால்வீக்கங்களுக்கு

கை, கால்களில் வீக்கம் கண்டு கஷ்டப்படுகிறவர்கள் கீழ்க்காணும் முறையைக் கையாண்டு நலம்பெறலாம். அத்திமரத்தின் பால் கொஞ்சம் கொண்டு வந்து அத்துடன் செம்மண் கலந்து குழைத்து வீக்கம் உள்ள இடங்களில் 3 நாட்கள் பூசினால் வீக்கம் குறைந்து குணமாகும்.

athi fruit medicinal uses


athi fruit medicinal uses

கருப்பையில் இரணம்

அத்திப்பட்டையைக் கொண்டு வந்து நன்றாக இடித்து துாள்செய்து கொண்டு கார் அரிசியுடன் கலந்து புட்டு செய்து சாப்பிட்டு வரவும் . இதனால் கருப்பையில் உள்ள ரணம் நீங்கிவிடும்.

அத்திபழம் போக்கும் நோய்கள்

கீழ்க்காணும் முறையில் செய்முறையைக் கையாண்டு பல வியாதிகளிலிருந்து நிவாரணம் பெறலாம். நாட்டு அத்திப்பழத்தைக்கொண்டு வந்து நீர்விட்டு அரைத்து வடிகட்டி, குழம்பான பாகத்தில் கல்சுண்ணாம்பு நீர் சிறிதளவு சேர்த்து அப்படியே 12 மணி நேரம் வைத்துவிடவும்.

அதன் பின்னர் பார்த்தால் அது அல்வா போன்று ஆகிவிடும். அதனை எடுத்து கத்தியினால்துண்டுகளாக்கி சர்க்கரையில் தொட்டுச் சாப்பிடவும். இதனால் குடல் எரிச்சல் ,சிறுநீர் மஞ்சள் நிறத்துடன் போகுதல், உடல் உஷ்ணம், பெரும்பாடு ஆகிய வியாதிகள் குணமாகும்.

வயதானவர்களுக்கு அத்திப்பழம்

வயதாகிவிட்டால் உடலில் தெம்பில்லாமல் சோர்வாக இருக்கும். இவர்களுக்கு அத்திப்பழம் ஒரு டானிக்காக இருந்து போஷாக்கு அளிக்கிறது. இரவில் அத்திப்பழத்தினை ஒரு டம்ளர் சுத்தமாக நீரில் ஊறவைத்து காலையில் பார்த்தால் மெத்துமெத்தென்று மிருதுவாக இருக்கும். காலையில் இந்தப்பழத்தினைத் தின்று அந்நீரைக்குடித்து வந்தால் வயதானவர்கள் வாலிபர்களைப் போன்று மிடுக்குடன் இருக்கச் செய்யும்.

ஜீரண சக்தி மலச்சிக்கல் ரத்தவிருத்திக்கு

ஜீரண சக்தி சரியாக இல்லையென்றால் இரவு பசும்பாலில் அத்திப்பழத்தை துண்டு துண்டுகளாக நறுக்கிப் போட்டுக் காய்ச்சி சிறிது சர்க்கரை சேர்த்து இரவு படுக்கப் போகும்முன் குடித்து வந்தால் ஜீரண சக்தி அதிகமாகும்.

மலச்சிக்கலினால் கஷ்டப்படுகின்றவர்கள் -இந்த அத்திப்பழத்தைச் சாப்பிட்டால் குடலில் தேங்கியிருக்கும் கழிவுகளை வெளியேற்றி மலச்சிக்கல் இல்லாமல் வைத்துக்கொள்ளும். நோய்வாய்ப்பட்டு குணமானவர்களுக்கு ரத்தம் அபிவிருத்தியாவதற்கு தினமும் அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால் ரத்தம் அபிவிருத்தியாகும்.

நீரிழிவு நோய்க்கு

நீரிழிவு நோயாளிகள் அத்திப்பழத்தின் விதைகளைத் தனியாக எடுத்து உலர்த்தி இடித்து பொடியாக்கிக் கொள்ளவும் . இந்த பொடியிலிருந்து சிட்டிகை அளவு எடுத்து தேனில் குழைத்து காலை மாலை இருவேளை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு குணமாகும்.

நன்றி:சூர்யநாத்

Updated On: 22 Oct 2022 11:41 AM GMT

Related News

Latest News

 1. ஆன்மீகம்
  Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
 2. நாமக்கல்
  நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
 3. கீழ்பெண்ணாத்தூர்‎
  புதிய நீதிமன்றம் அமைய உள்ள கட்டிடம்; துணை சபாநாயகர் ஆய்வு
 4. திருவண்ணாமலை
  கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்களுக்கு பால் வழக்கும் திட்டம், ஆட்சியர்...
 5. திருவண்ணாமலை
  பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா்களுக்கான மாநாடு
 6. காஞ்சிபுரம்
  தங்க கிளி வாகனத்தில் கிளிநடை போட்டு வந்த காமாட்சி அம்மன்.
 7. திருச்சிராப்பள்ளி மாநகர்
  அனைவருக்கும் நிலம் வழங்க பிரதமர் மோடிக்கு எச்எம்கேபி மாநில செயலாளர்...
 8. திருச்சிராப்பள்ளி மாநகர்
  தமிழ்நாடு பட்டதாரி முதல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில...
 9. லைஃப்ஸ்டைல்
  Variation Of Washing Soap And Powder கடின நீரில் சோப்புகள் கரையாது......
 10. அரசியல்
  மத்திய மந்திரி எல். முருகன் ராஜ்ய சபா எம்.பி. ஆக போட்டியின்றி தேர்வு